சாஸ்திரங்களின் காலக்கணக்கு - உலகம் எப்போது அழியும்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 апр 2020
  • சாஸ்திரங்களின் படி பிரபஞ்சத்தின் தற்போதைய வயது என்ன?
    நம் சாஸ்திரங்கள், குறிப்பாக பாகவத புராணமும், விஷ்ணு புராணமும் என்ன சொல்கிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
    இப்பொழுது நாம் இருப்பது 21 ம் நூற்றாண்டில் கி.பி. 2020.., பண்டைய நூல்களின் படி கலியுகத்தின் முதல் காற்பங்கு. கலியுகத்தின் மொத்த கால வரையறை 4,32,000 வருடங்கள். இதற்கு முந்தைய யுகங்கள், துவாபரயுகம், திரேதாயுகம் மற்றும் சத்திய யுகம்.
    கிருஷ்ண பரமாத்மா, பூமியை விட்டு வைகுண்டத்திற்கு திரும்பிய நிகழ்வே துவாபர யுகத்தின் முடிவாகவும், கலியுகத்தின் தொடக்கமாகவும், கருதப்படுகிறது மேலும் அறிஞர்கள் படி அந்த வருடம் கி.மு. 3102 ஆகும். கூட்டினால், நாம் கலியில் கடந்திருப்பது வெறும் 5122 வருடங்கள் மட்டுமே., அதாவது மேலும் 4,27,000 வருடங்கள் நிலுவையில் இருக்கிறது என்று அர்த்தம். கலியுகம் முடியும் அந்த நிகழ்வில் மஹாவிஷ்ணு கல்கி அவதாரம் எடுத்து, அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலை நாட்டுவார் என்கிறது பாகவதம்.
    தர்மம் ஸ்தாபித்த உடன், சத்திய யுகம் தான் மறுபடியும் தொடங்குமே தவிர, இந்த பிரபஞ்சம் முடிவை சந்திக்காது. முழு அழிவான மகாப்ரளயமும், புனர்நிர்மானமான சிருஷ்டியும், பிரம்மாவின் ஆயுட்காலமான 100 ஆண்டுகள் நிறைவடையும் பொழுதே நிகழும் என்கிறது பாகவத எழுத்துக்கள்.
    ஆனால் பிரம்மா உட்பட தேவர்களின் நேரக்கணக்கும், மானிடர்களின் நேரக்கணக்கும், வேறுபட்டது. பிரம்மாவின் 100 ஆண்டு ஆயுட்காலத்திற்கு இணையான மானிட வருடங்கள் எவ்வளவு என்பதை பார்ப்போம். அதுவே நம் நாட்காட்டி படி, இந்த பிரபஞ்சத்தின் ஆயுட்காலத்தை குறிக்கும்.
    யுகத்தில் இருந்து ஆரம்பிப்போம். கலியுகத்தின் கால வரையறை 4,32,000 வருடங்கள். துவாபரயுகம், கலியின் இரண்டு மடங்கு 8,64,000 வருடங்கள். திரேதா, கலியின் மூன்று மடங்கு 12,96,000 வருடங்கள், சத்திய யுகம் நான்கு - 17,28,000 வருடங்கள். இந்த நான்கு யுகமும் சேர்ந்தது ஒரு சதுர்யுகம் அல்லது ஒரு மகாயுகம் என்று கருதப்படுகிறது. இந்த நான்கையும் கூட்டினால், நமக்கு வருவது, ஒரு சதுர்யுகத்தில் 43,20,000 மானிட வருடங்கள்.
    இதே போல், 1௦௦௦ சதுர்யுகங்கள் சேர்ந்தால் 432 கோடி மானிட வருடங்கள். இதன் பெயர் தான் ஒரு கல்பம். ஆனால் இந்த ஒரு கல்பம் என்ன தெரியுமா பிரம்மாவின் ஒரு பகல் மட்டுமே. பிரம்மாவின் இரவு மற்றொரு கல்பம். அதாவது அவரது முழு நாள் கணக்கு 2 கல்பம். இதேபோல் அவரின் 1 வருடம், இதேபோல் அவரின் 100 வருடம்.
    பெருக்கினால், 432 கோடி x 2 x 360 x 100 = 311 லட்சம் கோடி மானிட வருடங்கள். இது தான் பிரம்மாவின் ஆயுட்காலம். சரியாக சொல்ல வேண்டும் என்றால், இது பிரம்மாவின் பதவி காலத்தை குறிக்கும். முடிந்த உடன் மற்றோரு பிரம்மா அவரின் பணியை தொடர்வார்.
    எப்பொழுது இந்த வருடங்கள் முடிவுக்கு வருகிறதோ, அப்பொழுது தான் மகாப்ரளயமும் சிருஷ்டியும் ஏற்படும் என்கிறது சாஸ்திரம்.
    இது தவிர , ஒரு கல்பம், அதாவது 1000 சதுர்யுகம் என்று பார்த்தோம் அல்லவா, அதை 14 மனுக்கள் சேர்ந்து ஆட்சி செய்கிறார்கள் என்பது ஐதீகம். வகுத்துப் பார்த்தால், ஒவ்வொரு மனுவிற்கும் ஆட்சி செய்ய 71 சதுர் யுகங்கள் கிடைக்கும். இந்த 71 சதுர் யுகத்தின் கால வரையறைக்கு ஒரு மன்வந்தரம்
    என்று பெயர்.
    எண்கள் அதிகம் பார்த்து விட்டோம்.
    சரி2020, இப்போது எங்கே இருக்கிறோம்.உபநயனமோ அல்லது எந்த சடங்காக இருந்தாலும், அதற்கு சங்கல்பம் எடுக்கும் பொழுது, அதன் நேரத்தையும் இடத்தையும் குறிப்பிடும் வழக்கும் உண்டு.
    ஆத்ய ப்ரும்மண: த்விதீய பாரார்த்தே, ஸ்வேத வராஹ கல்பே, வைவஸ்வத மன்வந்தரே, அஷ்டா விம்சதி தமே கலியுகே பிரதமேபாதே, என்று சொல்லி விட்டு, ஜம்பூ த்வீபே பாரத வர்ஷே. பரதக்கண்டே என்று நம் புவியியல் இருப்பிடத்தை சுட்டிக் காட்டுவோம்,
    அதில் ஆத்ய ப்ரும்மண: என்பது, இப்பொழுது இருக்கும் பிரம்மாவை குறிக்கும். ஏன் என்றால் அவர் பதவி தான் மாறிக் கொண்டே இருக்குமே.
    த்விதீய பாரார்த்தே, பாரார்த்தே என்றால் பாதி, த்விதீய பாரார்த்தே என்றால் இரண்டாம் பாதி
    நம் இப்போது இருப்பது, 51 வது வருடத்தின் முதல் நாள், பகல், இதற்கு ஸ்வேத வராஹ கல்பம் என்று பெயர்.
    வைவஸ்வத மன்வந்த்ரே, இப்போது அரசாளும் மனு, ஏழாவது
    மனு, சூரியன். அவரின் மற்றொரு பெயர் தான் விவஸ்வான். எனவே வைவஸ்வத மன்வந்தரே.
    அஷ்டா விம்சதி தமே. 28 வது முறையாக வரும் சதுர்யுகம்.
    மேலும் கலியுகே பிரதமேபாதே என்பது, நம் இப்போது இருக்கும் கலியுகத்தில் முதல் காற்பங்கை குறிக்கும்.
    இந்த சங்கல்பம் மேலும் தொடர, அன்றைய நட்சத்திரம் வரை சொல்லி, சங்கல்பம் எடுக்கும் வழக்கும் உண்டு
    இதுவே நம் சாஸ்திரங்கள் கூறி இருக்கும் ப்ரம்மாண்டமான கால சக்கரம். 8
    இந்த கால சக்கரம் சுழல சுழல, ஆன்மா என்கிற ஜீவனும் சம்ஸாரம் என்கிற மற்றொரு சக்கரத்தில் எண்ணற்ற பிறப்புக்கும் இறப்புக்கும் ஆளாகிறது. புனரபி ஜனனம், புனரபி மரணம் என்று மீண்டும் மீண்டும் பிறந்து அழிந்து, வட்டத்தில் சுழல்கிறது, மோக்ஷம் என்கிற நித்தியமான இலக்கை எட்டும் வரை.

Комментарии • 56

  • @RajaRaja-wg6mt
    @RajaRaja-wg6mt 3 года назад

    யாரெல்லாம் கோரோனாவுக்கு பயந்து பாக்குரீங்க???? 2வது அலைல

  • @ganeshangtr7434
    @ganeshangtr7434 4 года назад

    எனக்கு ஒரு சந்தேகம் அப்ப மனிதன் பரிணாம வளர்ச்சிக்கான அறிவியல் ஆதாரம் கிடைத்து உள்ளது ஆனால் நீங்கள் கூறுவதற்க்கான ஆதாரம் வேதங்களை தவிர எதுவும் இல்லையே

  • @punithakumaresan6689
    @punithakumaresan6689 2 года назад +1

    வாழ்க வளமுடன் 🙏

  • @kannane.s.elayavillikannan9543
    @kannane.s.elayavillikannan9543 3 года назад +1

    Thelivana vilakkam!Mike nandri

  • @gopalakrishnangnaicker6071
    @gopalakrishnangnaicker6071 Год назад

    உங்கள் நல்ல முயற்சி வளரட்டும்...

  • @ShriGanapathi7803
    @ShriGanapathi7803 4 года назад

    சங்கள்ப்ப்பம் என்றால் என்ன

  • @actorsubash5965
    @actorsubash5965 3 года назад

    விளக்கம் அருமை வாழ்த்துக்கள் தோழரே

  • @sskrishna6716
    @sskrishna6716 2 года назад +3

    Really great job to explain kalachakra and thank you so much for your time and wonderful creation also good exploring things. Keep your enlightening work and our prayers and wishes always

  • @sowmyavema4905
    @sowmyavema4905 4 года назад +2

    One of the best videos to understand the timeline mentioned in our scriptures, please continue the good work!!

  • @paransothyparamanandhan4961
    @paransothyparamanandhan4961 3 года назад

    மிகவும் சிறந்த விளக்கம் , விளங்கியது , இவ்வளவு இருக்கிறது , அதிகம் விளக்கம் கேட்க அவா , இறைவன் இவ்வளவு , இல்லை புரிந்து கொள்ள முடியாத அளவு சக்தி .

  • @manisubramanian3443
    @manisubramanian3443 4 года назад +2

    நமஸ்காரம் ஸ்வாமிஜி.

  • @nvenkateshgpd2387
    @nvenkateshgpd2387 4 года назад +1

    Super , extraordinary, fantastic

  • @venkitesha.r.1446
    @venkitesha.r.1446 Год назад

    Sir Nothing to say Great work🙏🙏 expected more videos.

  • @sriramn167
    @sriramn167 3 года назад

    அற்புதமான விளக்கம்👏

  • @venkitesha.r.1446
    @venkitesha.r.1446 3 года назад

    Super good presentation and gives correct knowledge. Keep it up. Need more videos

  • @chandrasekaran275
    @chandrasekaran275 3 года назад

    Excellent information. God bless you sir.

  • @ramananisaikkavi3412
    @ramananisaikkavi3412 4 года назад +2

    Very neat presentation - the content, the voiceover and the visuals - all were very nice. Thank you

  • @alchemist6589
    @alchemist6589 3 года назад

    Wow great video I have ever seen best video

  • @rohitkrishna4063
    @rohitkrishna4063 4 года назад +1

    Thank u🙏🙏🙏very useful & easily understandable pls do more vedios like this