இந்து மதத்தின் தெளிவான விளக்கம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2020
  • இந்து மதத்தின் சிறப்பு அம்சங்கள்
    இந்து மதத்தின் தனித்துவத்தை அதன் நான்கு சிறப்பம்சங்களை வைத்து புரிந்து கொள்ள முடியும்.,
    முதலாவதாக கர்மா
    வினை விதைத்தவன், வினை அறுப்பான் திணை விதைத்தவன் தினை அறுப்பான்
    ஆனால், நடைமுறையில் அப்படியா நடக்கிறது?
    ஏமாற்றுபவன் தானே முன்னேறுகிறான். நேர்மையாக இருப்பவன் கஷ்டத்தை தானே சந்திக்கிறான்.
    தோன்றலாம், ஆனால் இதை சாஸ்திரம் ஒருபொழுதும் ஒப்புக்கொள்ளாது.
    பாவம் செய்தவன், இந்த ஜென்மத்தில் தப்பி விட்டாலும், அடுத்த ஜென்மத்தில், இந்த பூலோகத்திலோ, அல்லது கீழ் லோகத்திலோ பிறந்து, விளைவை அனுபவித்தே தீருவான் என்று, நம் சாஸ்திரம் ஆணித்தரமாக வலியுறுத்துகிறது.
    ஆக, இந்து மதத்தின் படி, பிறப்பின் காரணமே கர்மா தான்.
    இரண்டாவது அம்சம்
    அபௌருஷேயம். அப்படி என்றால் மனிதனால் இயற்றப்படாதது.
    இந்து மதத்தின் ஆணி வேர் வேதங்கள். அப்படிப்பட்ட வேதங்களை உருவாக்கியவர் இவர் தான் என்று யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவே முடியாது. வியாசர் வேதங்களை தொகுத்து வழங்கினாரே தவிர அவர் அதை இயற்றவில்லை. எந்த ரிஷியும் இயற்றவில்லை. ஏன் இறைவன் கூட அதற்கு உரிமை கொண்டாட முடியாது.
    ஏன் என்றால் வேதங்கள் அனாதி காலமாக, இருக்கும் ஓசைகள், ஒலி அதிர்வுகள்,
    ஒரு அணுவில் நடப்பதும் அதிர்வு தான். கோள்கள் சுற்றுவதும் அதிர்வுதான்.
    விஞ்ஞானி Tesla சொவ்லது போல்,
    If you want to know the secrets of the universe, think in terms of energy, frequency and vibration.
    இயற்கையில் இருந்து, நம் ரிஷிகள் உணர்ந்த ஓசைகள் தான் வேதங்கள். இந்த வேதங்கள் பரம்பரை பரம்பரையாக சிஷ்யர்களின் மூலம் கேட்டுக் கேட்டு வழி வழியாக வந்தன.
    ஆக வேதங்கள், எந்த ஒரு மனிதனாலும் உருவாக்கப்படாததால் அதற்கு அபௌருஷேயம் என்று பெயர்.
    மூன்றாவது அம்சம் - சிலை வழிபாடு.
    மனித மூளைக்கு அப்பாற்ப்பட்ட இந்த பிரபஞ்சத்தை இயக்கும் சக்தியை, நம் சிற்றறவிற்கு ஏற்றார் போல் அறிந்து கொள்ள, நாம் ஏற்படுத்திய ஒன்று தான், சிலை வழிபாடு.
    ஒரு தேசிய கொடி எப்படி நாட்டை அடையாளப்படுத்துகிறதோ, அதே போல் ஒரு விக்ரகம் இறைவனின் அர்ச்சாவதாரத்தை அடையாளப்படுத்துகிறது.
    இந்த விக்ரகத்தின் மேல் கோடிக்கணக்கான மனிதர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை தான் உருவ வழிபாட்டின் அடிப்படை.
    நான்காவது அம்சம் - சனாதன தர்மம்.
    எந்த தர்மம் அனைத்து காலங்களுக்கும் உகந்ததாக இருக்கிறதோ, அது சனாதன தர்மம் என்று அழைக்கப்படுகிறது. உதாரணத்திற்கு, பகவத் கீதை எடுத்து கொள்வோம். முதல் முறையாக இதை கண்ணன் சூரியனுக்கு உபதேசித்தார். 5000 வருடங்களுக்கு முன், கண்ணன் அர்ஜுனனுக்கு உபதேசித்தார்.
    தற்பொழுது 21 ஆம் நூற்றாண்டிலும் லட்சக்கணக்கானோர் கீதையை படிக்கின்றனர்.. ஆக நம் சித்தாந்தங்கள் காலத்தை வென்று, எப்பொழுதும் நம் வாழ்க்கைக்கு பொருத்தமாக இருப்பதால், அதை சனாதன தர்மம் என்று அழைக்கிறோம்.
    இவை நான்கும் இந்து மதத்தின் சிறப்பம்சங்கள்.
    இவை தவிர புருஷார்த்தங்களான - தர்ம அர்த்த காம மோக்ஷம், முக்குணங்களான சத்வம் ரஜஸ் தமஸ், போன்ற
    , பல சிறப்பு அம்சங்களை தன்னுள் அடக்கியதே இந்து மதம்.
    ஒரு தலைசிறந்த ஆன்மீகவாதியின் வரிகள்:
    “உலகளாவிய ஏற்றுக்கொள்ளுதலும், அனைத்து மதங்களும் உண்மை என்று ஏற்று கொள்ளும் சகிப்புத்தன்மை கொண்ட இந்த மதத்தில் பிறந்ததற்கு நான் பெருமை அடைகிறேன்.,”
    - சுவாமி விவேகானந்தர்
    நன்றி

Комментарии • 17

  • @dharanisubramanian919
    @dharanisubramanian919 3 года назад

    Super ji .. awaiting for your next video

  • @shivakamisambantham5058
    @shivakamisambantham5058 2 года назад +1

    why videos not uploaded nowadays.. please continue wonderful service

  • @parthasarathyperuru2334
    @parthasarathyperuru2334 3 года назад +1

    Dear Sir/Madam, Your videos are very informative and easy to understand the core concepts. It helps us to answer the questions raised by our kids. Thanks and appreciate your great effort. Keep Posting.

  • @muruganmurugan4489

    Supper aiya

  • @ganpat76
    @ganpat76 Год назад

    Hello Seshagopalan, why no more videos? I am eager to see more of your crisp and concise videos that explains deep knowledge in under 1 minutes. I hope all is ok with you and expecting more such videos. Hare Krishna.

  • @sridharanramanthan4976
    @sridharanramanthan4976 2 года назад +1

    Palm leaf. Writings

  • @krithikaswaminathan4722
    @krithikaswaminathan4722 3 года назад

    Very nice

  • @sumathikumara81
    @sumathikumara81 3 года назад +1

    அருமை

  • @jayabala.s8809
    @jayabala.s8809 3 года назад +2

    👍🙏♥️

  • @harikrishnan532
    @harikrishnan532 2 года назад

    Please upload next videos sir I am waiting

  • @gowrichandramouli8063
    @gowrichandramouli8063 3 года назад +1

    Sir,do you use paid version or cracked version .

  • @dhinagaranbabu9911
    @dhinagaranbabu9911 2 года назад

    நீங்கள் ஏன் தொடர்ந்து காணவில்லை வெளியிடுவதில்லை வெகு விரைவில் தொடர்ந்து காணலை வெளியிட ஆவணம் செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

  • @ahdhithya622
    @ahdhithya622 3 года назад

    அருமை நண்பா👌👌👌

  • @nirmalkumar1795
    @nirmalkumar1795 3 года назад +1

    Hi

  • @zerotoinfinite2006
    @zerotoinfinite2006 3 года назад +1

    I wish these videos would have been in English so that we could have understood it.

  • @rakeshnarayan5703
    @rakeshnarayan5703 3 года назад

    Greetings Sir

  • @krishnamoorthyvaradarajanv8994
    @krishnamoorthyvaradarajanv8994 3 года назад +2

    வாழ்க வையகம்