யக்ஷ ப்ரஷ்னம் - கேள்வி 1/124 - சூரியனை எது உதிக்கச்செய்கிறது? - Yaksha Prashna Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 авг 2020
  • யக்ஷ ப்ரஷ்னம் - முதல் கேள்வி /
    சூரியனை எது உதிக்கச்செய்கிறது?
    இதற்கு என்ன பதில் இருக்கும் என்று ஒரு வினாடி சிந்தியுங்கள்.
    சாதாரணமாக வரும் பதில், இது இயற்கையாக நடக்கும் சம்பவம்.
    எப்படி இந்த பூமியில் நீர், நிலம், காற்று அமைந்திருக்கிறதோ, அதே போல், சூரியனும் உதிக்கிறது, அஸ்தமிக்கிறது….. சரி.
    அறிவியல் ரீதியாக பார்த்தால்?, சூரியன் உதிப்பதே கிடையாது. ஒரே இடத்தில் தான் நிலைத்து நிற்கிறது. பூமி தான் சூரியனை சுற்றி சுற்றி வந்து காலங்களை நிர்ணயிக்கிறது.
    ஓரளவுக்கு சரி.
    ஏன் என்றால் இயற்பியல் ரீதியாக, இந்த பிரபஞ்சம் ஒவ்வொரு நொடியும் விரிவடைந்து கொண்டே இருக்கிறது.
    அதனால் நம் பிரபஞ்சத்தில் இருக்கும் எந்தப்பொருளும் ஒரே இடத்தில் நிலைத்து நிற்கவே இயலாது.
    ஒரே கேள்விக்கு நிறைய பதில்கள். அனைத்தும் ஒரு வகையில் சரியான பதில் தான்.
    இருந்தும் இதே கேள்விக்கு மகாபாரதத்தில் இருக்கும் யக்ஷ பிரஷணத்தில் என்ன பதில் இருக்கிறது என்பதை பார்ப்போம்.
    முதலில் யக்ஷ ப்ரஷ்னம் என்பது என்ன? அது மகாபாரதத்தில் இருக்கும் வன பர்வத்தில் வரும் ஒரு அறிவுசார் உரையாடல்.
    அதில் 124 கேள்விகள், அதற்கு 124 பதில்கள்.
    கேட்பவர் யக்ஷ ரூபத்தில் இருக்கும் யமன். பதில் அளிப்பவர், பாண்டவர்களின் மூத்த சகோதரனான யுதிஷ்டிரன் என்று அழைக்கப்படும் தர்மபுத்திரன்.
    இந்த யக்ஷ ப்ரஷ்னம், கதையில் எந்த தருணத்தில் வருகிறது என்பதை நாம் பார்க்கப்போவதில்லை, வெறும் கேள்வி பதிலை மட்டுமே பார்க்கப்போகிறோம்.
    முதல் கேள்வி - கிம் ஸ்வித் ஆதித்யம் உன்னயதி?
    கிம் - எது
    ஆதித்யா - சூரியன்
    உன்னயதி - உதிக்க செய்கிறது அல்லது உயர்த்துகிறது.
    பதில் - பிரம்மம் ஆதித்ய உன்னயதி.
    பிரம்மம் சூரியனை உதிக்கச்செய்கிறது.
    இது படைக்கும் கடவுளான பிரம்மா அல்ல. பிரம்மம்.
    பிரம்மம் என்கிற வார்த்தையை மேலே வரும் வரிகளை வைத்து புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.
    நம் சாஸ்திரம், எதுவும் இயற்கையாக நடக்கிறது என்பதை ஒற்றுக்கொள்ளாது.
    மலையும் கடலும் சேர்ந்தா இயற்கையை படைத்தது?
    மரமும் செடியுமா இயற்கையில் நடக்கும் சமபவங்களுக்கும் மாறுதலுக்கும் காரணம்?
    நிச்சியமாக இல்லை.
    அவைகளே இயற்கையின் ஒரு பகுதி தானே. அப்படி என்றால் இயற்கையில் நடக்கும் மாறுதலுக்கு யார் காரணம்?
    சாதாரணமாக, ஒரு விஷயம் மாற வேண்டும் என்றால், அதற்கு ஞானம் தேவை என்கிறது சாஸ்திரம். அதாவது
    மணல் சுயமாக பானையாக மாற இயலாது
    மரம் சுயமாக மேஜையாக மாற இயலாது.
    ஒருவரின் ஞானம் இடையில் கண்டிப்பாக தேவைப்படுகிறது அல்லவா ?
    ஒரு குயவனின் ஞானம் எப்பொழுது மணலுடன் சேர்கிறதோ, அப்பொழுதான் பானை உருவாகிறது.
    தச்சரின் ஞானம் மரத்துடன் சேரும் போது தான் மேஜை உருவாகிறது.
    அதே போல் இயற்கையில் நடக்கும் சம்பவங்களுக்கு ஒரு ஞானம் தேவை அல்லவா?. அந்த ஞானத்திற்கு தான் பிரம்மம் என்று பெயர்.
    இந்த ஞானமாகிய பிரம்மம் தான் சூரியனை உதிக்கச்செய்கிறது.
    இதை உபநிஷத் வாக்கியங்களை வைத்து மேலும் புரிந்து கொள்ளலாம்.
    உபநிஷத் என்பதை வேதாந்தம் என்றும் அழைப்பர்.
    அவைகள், நம் சனாதன தர்மத்தில் இருக்கும் தத்துவங்களுக்கு ஆணி வேராக அமைந்திருக்கிறது
    அதில் தைத்திரீய உபநிஷத்தில் இருக்கும் பிரபல வாக்கியம்.
    பீஷாஸ்மாத் வாத: பவதே || பீஷோதேதி சூர்ய : || பீஷாஸ்மா தக்நிஸ் சேந்த்ரஸ்ச | ம்ருத்யுர் தாவதி பஞ்சம இதி |
    பீஷா - பயம்
    அஸ்மாத் - பிரம்மம்
    வாத: பவதே - காற்று வீசுகிறது
    உதேதி - உதிக்கிறது
    சூர்ய : - சூரியன்
    .அதாவது பிரம்மத்திற்கு பயந்து சூரியன் உதிக்கிறான்.
    இதில் மற்றும் ஒரு உள்ளார்ந்த அர்த்தம்.
    பிரம்மத்தை வேதம் என்றும், ஆதித்யாவை ஆத்மா என்றும் எடுத்துக்கொள்ளலாம். அதாவது வேதம் என்பது, ஜீவாத்மாவை உயர்த்தும் என்று பொருள்.
    சரி இது ஒரு பக்கம் இருக்கட்டும்.
    இதே கேள்வியை விஞ்ஞான ரீதியாக பார்த்தால்?
    புவியீர்ப்பு விசை தான் அனைத்தையும் நிர்வகிக்கிறது, அல்லவா?.
    பூமி சூரியனை சுற்றுவதற்கும் அதான் காரணம். சரி. அதற்கு காரணம்?
    பெருவெடிப்பு அல்லது பிக் பேங் என்று சொல்லலாம்.. அதற்கு முன்?
    விஞ்ஞானத்திற்கு பதில் இல்லை.
    பிக் பாங்கின் ஆராய்ச்சி தலைவர், “ஜார்ஜ் ஸ்மூட்” என்பவர், கூறுகையில்,
    ‘எங்கள் கண்டுபிடிப்புகள் உறுதிப்படுத்துவது என்னவென்றால், இந்த பிரபஞ்சம், ஒரு பிரம்மிக்க தக்க கைவண்ணமாக அமைந்திருக்கிறது, நீங்கள் ஆத்திகவாதியாக இருந்தால், கடவுளை பார்ப்பது போல் இருக்கும்’
    (மொழிபெயர்க்கப்பட்டுள்ளது)
    கடவுள் என்பதை, ஆன்மீகம், பிரம்மம் என்கிற வார்த்தையை வைத்து வர்ணிக்கிறது.
    இந்த பிரம்மத்தை வேதங்கள் புரிய வைக்க முயற்சிக்கிறது. ரிஷிகளும் ஞானிகளும் அறிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள்.
    அப்படிப்பட்ட சக்தியான பிரம்மம் தான், சூரியனை உதிக்கச்செய்கிறது என்கிறார், தர்மத்தில் ஸ்ரேஷ்டமான யுதிஷ்டிரன்.
    நன்றி
    இரண்டாவது கேள்வி பதிலின் விளக்கத்தை அடுத்த பதிவில் பார்க்கலாம்.
    “இந்த பிரபஞ்சம் சில விதிமுறைகளுக்கு
    அடிபணிவதை தெளிவாக பார்க்க முடிகிறது.
    ஆனால் நம் சிறு மூளையால் இந்த
    நட்சத்திர கூட்டங்களை இயக்க வைக்கும்
    சக்தியை அறிந்து கொள்ள இயலாது”
    ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

Комментарии • 15

  • @srimathivijaykumar
    @srimathivijaykumar 3 года назад

    Super, very very very very very thakks

  • @vanshika_26omisha35

    மிக்க நன்றி அய்யா. U r doing a great job

  • @anamikaabaddha1159
    @anamikaabaddha1159 Год назад

    அற்புதமான பதிவு

  • @tesoundar2008
    @tesoundar2008 2 года назад

    Excellent

  • @barathvenkatachalam7068
    @barathvenkatachalam7068 Год назад

    🙏🏼Sarvam Brahmam mayam 🙏🏼

  • @vijayalakshmiraju681
    @vijayalakshmiraju681 2 года назад

    Wonderful explanation but to understand totally we have Togo through many times Thanks thanks a lot

  • @venkataramananr1008

    திரு ஷேஷகோபாலன் அவர்களே, அற்புதமான வீடியோக்கள், ஏன் யக்ஷ பிரஸ்னம் 4 க்கு பிறகு வீடியோ போடுவதில்லை. ஏன் மேலும் வீடியோக்கள் போடவில்லை.

  • @boomanivas
    @boomanivas 3 года назад

    அருமையான விளக்கம் சேஷா.

  • @allinalltype
    @allinalltype 3 года назад +1

    Thank you very much very good explanation... About the prashna.. with including the other concepts such as Upanishads along with scientific facts....

  • @raghuveers604
    @raghuveers604 3 года назад

    மிகச் சிறப்பு ஸ்வாமின்

  • @dineshkumardevaraj7679
    @dineshkumardevaraj7679 3 года назад +1

    Nice explanation, really awesome, please continue your good work.

  • @chandrakalachandru3056
    @chandrakalachandru3056 3 года назад

    I need like this vedios this vedio is very supper

  • @sarakenny4414
    @sarakenny4414 3 года назад

    Awaiting other 120 parts of yaksha prashnam. Kindly upload 🙏🙏🙏

  • @dharanisubramanian919
    @dharanisubramanian919 3 года назад

    Super.. Awaiting for your other videos. Kindly upload other yaksha prasnas. Thank you

  • @sushmithajagadeesh
    @sushmithajagadeesh 3 года назад +1

    Please make this video in English