யக்ஷ ப்ரஷ்னம் - கேள்வி 2/124 - சூரியனுடன் யார் வருகிறார்கள்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 авг 2020
  • யக்ஷ பிரஷ்னம் இரண்டாவது கேள்வி..
    சூரியனுடன் யார் வருகிறார்கள்?
    தேவர்கள் சூரியனுடன் வருகிறார்கள் என்று பதில் அளிக்கிறார்
    இதில், சூரியனை ஆத்மா என்றும், தேவர்களை இந்திரியங்கள் என்றும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏன்?
    சூரியனுக்கு சம்ஸ்கிருதத்தில் ஆதித்யா என்று பெயர். “ஆதத்தே இதி ஆதித்ய:” என்று கூறும் வழக்கம் உண்டு.
    அதாவது ஆதத்தே என்றால் கிரஹிக்கும் தன்மை.
    ஆத்மா, ஒரு உடலை எடுத்து கொண்டு, இந்திரியங்கள் வாயிலாக, தன்னை சுற்றி இருக்கும் அனைத்தையும் கிரஹிக்கும்படியால், அதை ஆதித்யா என்றும் அழைக்கலாம்.
    சரி, தேவர்களுக்கும் இந்திரியங்களுக்கும் என்ன சம்பந்தம்.?
    நம் உடலானது, பஞ்சபூதங்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது.
    நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம். அதனால் தான், அதற்கு பூத உடல் என்ற பெயரும் உண்டு. இந்த பஞ்ச பூதங்கள், தனித்தனியாக இயங்கும் போது, இதற்கு எண்ணிலடங்கா ஆயுட்காலம். ஆனால் கலவையாகிவிட்டால், ஆயுட்காலம் பல மடங்கு குறைந்து விடும்.
    எந்த கலவைக்கும் சூத்திரம் அப்படித்தான்.
    உதாரணத்திற்கு,
    சாதாரணமாக நாம் சாப்பிடும் தோசையை எடுத்துக்கொள்ளுங்கள்.
    தோசை மாவிற்கு அடிப்படைத்தேவை என்ன? அரிசி, உளுந்து, நீர், உப்பு.
    ஒரு பேச்சிற்கு, அரிசியின் ஆயுட்காலம், இரண்டு வருடம் என்று வைத்துக்கொள்ளுவோம்.
    உளுந்து? ஆறு மாதம்
    உப்பு? ஐந்து வருடம்
    நீர்? கணக்கற்றது. ஆனால் இவை அனைத்தையும் ஒன்றாக அரைத்து மாவாக்கி விட்டால், அதிகபட்சம் அதன் ஆயுட்காலம் ஒரே வாரம் தான்.
    அதே போல் தான், பஞ்ச பூதங்களுக்கு எண்ணிலடங்கா ஆயுட்காலம், ஆனால்அவைகள் சேர்ந்து, சரீரமாக மாறி விட்டால், வெறும் 100 வருடமாக குறைந்து விடுகிறது. அந்த ஆயுட்காலம் முடிந்த பிறகு, எரித்தாலும் சரி, புதைத்தாலும் சரி, ஒரு திவலை கூட மீதி இல்லாமல், சிதைந்து, பிரிந்து, முறையே இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் பஞ்ச பூதங்களுடன், இணைந்து விடும்.
    மற்றும் ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த பஞ்ச பூதங்கள், நம் உடம்பின் இந்திரியங்களுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது. எப்படி?
    இந்திரியங்களை கொண்டு நாம் கேட்க முடியும், உணர முடியும், பார்க்க முடியும், சுவைக்க முடியும், முகர முடியும் அல்லவா?
    இந்த பூதங்களை ஒவ்வொன்றாக பார்த்தோமே ஆனால், அதை உணரும் முறையும், ஒவ்வொன்றாக அதிகரிக்கும்,
    அதாவது
    ஆகாயத்தை எடுத்து கொள்ளுவோம். ஆகாயத்தில் இருந்து, நாம் கேட்க மட்டும் தான் முடியும். அதில் இருக்கும் மின்காந்த அதிர்வுகளை, நாசா கூட பதிவு செய்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    மற்றபடி விண்வெளி என்பது வெற்றிடம். அதை உணரவோ, பார்க்கவோ, சுவைக்கவோ, முகரவோ முடியாது.
    காற்று? காற்று வீசுவதின் ஒலியை கேட்க முடியும், தென்றல் காற்றை உணரவும் முடியும். ஆனால், காற்றை, பார்க்கவோ, சுவைக்கவோ, முடியாது.
    முகருதல்? பொருளை பொறுத்து வாசனை முகர முடியுமே தவிர, காற்றிற்கு வாசனை கிடையாது.
    நெருப்பு? பொருளுக்கு தகுர்ந்தாற்போல், எரியும் சத்தத்தை கேட்க முடியும்.
    நெருப்பை உணரவும் முடியும், பார்க்கவும் முடியும், ஆனால் சுவைக்கவோ, முகரவோ முடியாது.
    நீர்?
    நீர்வீழ்ச்சி சத்தத்தை கேட்டிருப்போம், நீரை உணரவும் முடியும், பார்க்கவும் முடியும், சுவைக்கவும் முடியும், ஆனால் அதற்கு வாசனை கிடையாது.
    நிலம்? நில நடுக்கத்தின் அளவிற்கு ஏற்றாற்போல், நில அதிர்வுகளை கேட்க முடியும், நிலத்தை உணரவும் முடியும், பார்க்கவும் முடியும், சுவை? இடத்திற்கு ஏற்றார் போல் கிணற்று நீரின் சுவையே மாறி விடும். வாசனை? கண்டிப்பாக உண்டு. தூறலுக்கு பின்பு வரும் மண் வாசனை எல்லோரும் அறிந்ததே.
    அது மட்டுமில்லாமல், நம் உடம்பில் இருக்கும் பஞ்ச பூதங்கள், ஒவ்வொரு விரலுடன் தொடர்புடையது.
    நிலம் - மோதிர விரல்
    நீர் - சிறு விரல்
    நெருப்பு - கட்டை விரல்
    காற்று - ஆள் காட்டி விரல்
    ஆகாயம் - நடு விரல்
    விரல்களின் வாயிலாக நம் உடலின் சீரான செயல்பாட்டிற்காக, அதில் இருக்கும் பஞ்ச பூதங்களை சம நிலையில் வைத்து கொள்வது தான், யோக முத்திரை பயிற்சி.
    எந்த பஞ்ச பூதங்களால் நம் சரீரம் உருவாக்கப்பட்டிருக்கிறதோ, அதை இயக்குவது பிரதானமான தேவர்கள்.
    பிரபாசதேவன், வாயு தேவன், அக்னி தேவன், வருண தேவன், பூமி தேவி. இப்படித்தான், நம் இந்திரியங்கள், தேவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பஞ்ச பூதங்களுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது.
    ஒருங்கிணைந்து படித்தால், ஆத்மா, சரீரத்தில் இருக்கும் இந்திரியங்களுடன் இணைந்து வருகிறது.
    விளக்கம், நம் சனாதன தர்மத்தின் அடிப்படை சித்தாந்தம்,
    ஆத்மா உடலுடன் சேர்ந்தால் பிறப்பு, பிரிந்தால் இறப்பு. அவ்வளவுதான்.
    அதாவது “யார் நீ?” று கேட்டால், நம் பெயரை சொல்வோம். எடுத்துக்காட்டாக,
    “நான் சேஷகோபாலன்” என்று சொல்வேன், இதில் நான் என்பது என் ஆத்மாவையும், சேஷகோபாலன் என்பது என் உடலையும் குறிக்கும்.
    தெளிவாக கூற வேண்டும் என்றால்,
    “ஒரு பெயர் இல்லாத ஆத்மா, இந்த
    ஜென்மத்தில், அதன் கர்ம வினையால்,
    ஒரு உடலை எடுத்துக் கொண்டிருக்கிறது.
    அந்த உடலுக்கு பெயர் தான் சேஷகோபாலன்”.
    இது தான் ஆன்மீக ரீதியான விளக்கம் ஆகும்.
    எப்போதும், உடலுக்குத்தான் பெயர் உண்டு.
    அந்த உடலில் அடங்கும் இந்திரியங்களில் இரண்டு வகை, வெளி மற்றும் உள் . வெளி இந்திரியங்கள், கண் காது, நாசி, வாய், தோல், உள் இந்திரியம் மனம்.
    வெளி, இந்திரியங்களை கட்டுக்குள் கொண்டு வருவதன் பெயர் சமம்
    உள் இந்திரியங்களை கட்டுக்குள் கொண்டு வருவதன் பெயர் தமம்
    சம தமங்களை வளர்த்து கொள்வது தான், நாம் முக்திக்காக எடுத்து வைக்கும் முதல் முயற்சி.
    இந்த முக்தியை எட்டும் வரை ஒவ்வொரு முறையும், இந்திரியங்களை கொண்ட சரீரத்துடன் ஆத்மா பிறப்பு எடுத்துக் கொண்டே இருக்கும்
    என்பதை வலியுறுத்துவது தான், யக்ஷ ப்ரஷ்னத்தின் இரண்டாவது கேள்வியும் பதிலும் ஆகும்.
    மூன்றாவது கேள்வி பதில் விளக்கத்தை அடுத்த பதிவில் பார்க்கலாம். இதே போன்ற பதிவுகளை காண, Palm Leaf Writings என்கிற நம் Channel ஐ அவசியம் subscribe செய்யவும். நன்றி.

Комментарии • 12

  • @anbarasu10
    @anbarasu10 2 года назад +1

    அருமையான விளக்கம் ஐயா.

  • @astrologersathyasundari4515
    @astrologersathyasundari4515 3 года назад

    🙏

  • @saminathan.v418
    @saminathan.v418 3 года назад

    Super

  • @nirmalkumar1795
    @nirmalkumar1795 3 года назад

    Nice

  • @kavithas6403
    @kavithas6403 3 года назад

    👌

  • @KadambariMurugan14
    @KadambariMurugan14 3 года назад

    Great explanation amazing work👍

  • @harikrishnan532
    @harikrishnan532 3 года назад +1

    Great explanation sir. I am amazed. I am eagerly waiting for your next video pls upload soon sir thank you so much

  • @rajaraco9299

    Neenda thedalukku pin ungalathu kanoli kannil pattathu miga sirappagavum ealimaiyagum ungal kanoli vilakkiyathu miga arputham

  • @a314
    @a314 3 года назад

    Good one. திருமூலரின் திருமந்திரத்தின்படி ஆகாயம் என்பது காட்டற்ற vacuum space ஐ குறிக்கும். We can't listen anything in vacuum.

  • @ramadasrao1594
    @ramadasrao1594 3 года назад

    If you translate into English,everyone will be benefitted..

  • @harekrsna2010
    @harekrsna2010 2 года назад

    Kindly send more videos and enlighten us.