சர்க்கரை நோயாளிகளுக்கான உணவு முறை / Dietary management for diabetes
HTML-код
- Опубликовано: 16 окт 2024
- நீரிழிவு நோய் என்றால் என்ன? உணவை எவ்வாறு மாற்றி அமைத்தால் சர்க்கரையைக் குறைக்கலாம்?
The first line management for sugar control is modifying the diet. This video explains how to achieve that.
ப்ளீஸ் sir
give food chart
its very use ful
காலை - இரண்டு முட்டை மற்றும் பால் அல்லது பழங்கள் அல்லது முளை விட்ட பயறு அல்லது கட்டித் தயிர் அல்லது கைப்பிடி அளவு பாதாம். எப்பொழுதாவது இட்லி சாப்பிட்டால், நெய் சேர்க்கவும்.
மதியம் - காய் கறிகள், கீரை, தயிர். சோறு வேண்டாம் அல்லது கொஞ்சம் போல எடுக்கலாம். அவரை, வெண்டை, கத்திரி, பூசணி, முருங்கை, சௌ சௌ, முள்ளங்கி என்று அல்ல காய்களையும் சுழற்சி முறையில் எடுக்க வேண்டும். ஒரு காய், ஒரு கீரை, தயிர் மட்டுமே உணவாக எடுக்கலாம். நெய்யும் பருப்பும், தயிர் மட்டுமே முழு மதிய உணவாக எடுக்கலாம்.
இரவு - ஒரு கப் சுண்டல், மொச்சை, பட்டர் பீன்ஸ், காளான், பன்னீர், காய்கறிகள். அசைவம் வேண்டும் என்றால், முட்டை, கோழி, மீன், மட்டன் என்று ஏதாவது எடுக்கலாம். உடன் வெங்காயம் அல்லது தயிர் தான், சோறோ, சப்பாத்தியோ இல்லை.
எந்த உணவையும் எந்த நேரத்திற்கும் உங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளலாம்.
இடையில் பசித்தால், வெள்ளரி, காரட், தேங்காய் ஆகியவற்றை கொரிக்கிற உணவாக எடுக்கலாம்.
முடிந்த அளவு கலொரி இல்லாத ப்ளாக் டீ, ப்ளாக் காபி, மோர், எலுமிச்சை நீர், இள நீர் போன்றவைகளை எடுக்கலாம்.
உணவில் வேண்டிய அளவு நெய், வெண்ணை, எண்ணெய் சேர்க்க தயங்க வேண்டாம்.
@@DrBRJKannan is this can be translated in english pls?
@@DrBRJKannan Dr i'm type 1 diabetes can i follow this diet or do need to eat carbs thanks
Really it's given good result for me. Good luck!!!!
Pls give your Mp no. Sir I want to speak to you sir/ Requested Sir
Really good before my sugar level is fasting 295 I have follow this diet my sugar level is fasting 110 after food 136. Thanking you doctor
Sir Thank you. தமிழில் நன்கு ௭லலோ௫க்கும் புரியும் வகையில் சொல்லி இருக்கிறீர்கள். நன்றி. தொடர்ந்து பார்த்து வருகிறேன். மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
Thank you doctor.. This was the same way.. My doctor told me.. And I don't have diabetes but doctor said because I am getting old.. ..Now I am 74 years old.. So they check my blood sugar test and told to me to less rice very important because of my sugar level is in slightly under the border line.. So I am happy to hear from you.. The ways how to take my daily food.. Thank you again doctor..
டாக்டர் சார் ... உங்களோட இந்த சேவை மகத்தானது... இன்றைய உலகில் நிறைய பேருக்கு உதவக்கூடியது... உங்களுடைய இந்த சேவை தொடரட்டும் ...வாழ்த்துக்கள்....
thank you sir
மிகத்தெளிவான விளக்கம். நிச்சயம் இது வெற்றியை நோக்கி தான் பயணிக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. உங்களின் நல்ல முயற்சிக்கு என் வணக்கமும், வாழ்த்துகளையும் முன் வைக்கிறேன்.
மிக்க நன்றி ..
........nattumaruthu
மிக்க நன்றி டாக்டர்...முக்கியமாக சந்தேகம் கேட்டால் அதற்கு உங்களின் பதில் பதிவிற்கு...மீண்டும் நன்றி....
Thanks you so much. It's worked out for me. I got a very good result. Some of my friends started following the same diet after my master health check-up report came
Thanks for your informative video!Both my husband and i started following your diet for the past one week! Though it is difficult to leave our old practice of eating cereals we feel our body became light and my husband sugar level have come down! I’m trying lot of recipes without rice and wheat! I tried green gram idli, horse gram idli, dhokla,Dhal Adai, vegetable egg Bhurjee for breakfast.And for lunch instead of rice I use cooked bottlegourd for mixing sambhar or any gravy. I make white pumpkin curd rice! Dinner every day different soups. Why I’m writing all this is to give idea for others to follow!
Thank you very much
தெளிவான விளக்கம்
Thankq sir
God bless you abundantly...
Thank you very much doctor,
For the past 10 days, I had been following and giving the diet as said by you doctor and today my husband told me that his sugar level is on an average of 110 which he checked a couple of days and he also said that insoite of having the tablets and aurvedic liquids, after changing to this diet his sugar level average reduced from 200 to 110. Once again thank you doctor for bringing smile and relief both in the faces of the people and in the health of the people. Keep rocking doctor,👍🙏
மகிழ்ச்சி
Very difficult sir. Rice small bowl should be there. Body requires it. Your giving large protein diet. Kidney may be affected. In tamilnadu people take more rice quantity than north Indians. I would like to speak to you. Paleo
Sir, I am wondering when I see your videos any other doctors shareing like you. . I am very proud as a tamilan... You are doing wonderdul service. Thank you sir
🙏
Thank you doctor.மகிழ்ச்சியான பிரயோசனமான விளக்கம்.❤
Sir Today onwards I follow ur food chart and it is very understandable for me.
100% உண்மை .ரொம்ப நன்றி Dr.உங்கள் Vidio வை பார்த்து நானும் அப்படியே பின்பற்றினேன்.இப்போது Sugar Normal ஆகி விட்டது மருத்துவர் 90% மாத்திரையை குறைக்க சொல்லி விட்டார் . நானும் குடும்பத்தினரும் சந்தோசமாக இருக்கிறோம்.உடனுக்குடன் Commend ல் பொறுமையாக பதில் சொல்லுகிறீர்கள்.Thank you Dr God Bless you& your family
Dear Dr. The menu given by you was taken by my uncle and he is now sugar free. His Diabetologist doesn't know the menu. Now he is asking how it's possible as he is having no sugar like a normal person. He is now giving g this free advise to many and they too got good results. They forgot rice, chapati, idly dosa etc etc. Thankyou so much as nowadays medical field especially diabetes is the no1 revenu1. But if everyone follows this our country will have healthy people.
Nice to hear. Please spread the news.
Doctor your suggestion is super
Thank u sir
முதல் முறையாக தெளிவாக அறிவியல் முறையில் , நோய்க்கான காரணம் மற்றும் நோய்க்கான தீர்வு தரும் தங்களுக்கு கோடான நன்றிகள் சார். உங்கள் சேவை தொடர விரும்புகிறேன்.
Excellent Dr. Multiple advices,colourful presentation in RUclips but mostly written by yahoo news readers. Instead of helping the people it confuses them ! Thanks for your presentation Dr.
Romba theliva நிதானம் aka pesuringa doctor thank you
நன்றி
டாக்டர் நீங்கள் சொன்னது போல் உணவுமுறை மேற்கொண்டேன் மிகுந்த பயனுள்ளதாக இருந்தது எனக்கு இரண்டு மாதங்களுக்கு முன் சுகர் 420 இருந்தது நான் மிகவும் பயந்து விட்டேன் உங்கள் video வை பார்த்து அதன்படி உணவு முறை மேற்கொண்டு அத்துடன் உடற்பயிற்சி செய்தேன் மாத்திரை எதுவும் சாப்பிடவில்லை இன்று 08.12.2018 பரிசோதனை செய்து பார்த்தேன் சுகர் 140 ஆக இருந்தது. மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி டாக்டர்.
மற்றவர்களுக்கு நீங்கள் முன்னுதாரணமாகத் திகழ்கிறீர்கள். நான் தான் உங்களுக்கு நன்றி கூற வேண்டும். உங்கள் இந்தப் பதிவைப் பார்த்து மேலும் மாறுவார்கள்.
உங்கள் ஏஜ் என்ன சார்
பதினாறு முடிந்து பதினேழு நடக்கின்றது! :-0 :-) :-)
Kadaul Madiri time la help pannieirkinga thq sir.. en Amma save pannieirkinga thq so much sir
சிங்கார வேலன் சார் உங்களின் ஒரு வார டயட்டை நீங்கள் கூறினால் மிகவும் உதவியாக இருக்கும்.
உங்களின் தகவல் மிக அருமை , பின்பற்றினால் கண்டிப்பாக நலமுடன் வாழலாம் நன்றி
.
Dear Dr. Kannan, Very good useful advice. People usually forget about the intake of carbs.
நாங்க நல்ல இருக்கனும்னு நெனைக்கற நீங்களும் உங்க குடும்பமும் என்னைக்கும் நல்லா இருக்கனும் Dr..
டாக்டர் ரொம்ப ரொம்ப தெளிவாக நடுத்தரமக்களும் புரிந்துகொள்ளும்படி உயிர்கொல்லிநோய்களைக்கண்டு பயந்துசாகாமால் நம்பிக்கையோடு தைரியமாக வாழ்வதற்கு கற்றுக்கொடுத்துவருகிறீர்கள் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக இன்னும் தொடரட்டும் உங்கள் பணி
உண்மையில் அருமையான சரியானவிளக்கம் தொடரட்டும்
Thank you Super sir excellent explained,once again thank you for your dedication.
Thanks doctor. Definitely I will follow this. Under terrific pressure you have answered. I must honour this. Thanks
வணக்கம் சார் இதுவரை கேட்டிராத நல்ல மருத்துவ பதிவு நன்றி
உங்கள் சேவை நிச்சயம் பாராட்டுக்குறியது
மிகவும் அழகான பதிவு இது.மிக்க நன்றி சார்.சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்.
நன்றி
உண்மையான மருத்துவரை என் வாழ்நாளில் இந்த வீடியோவில் தான் பார்த்துள்ளேன் போல!!!
நன்றிகளுடன் வாழ்த்துக்கள் சார் முதலில் நீங்கள் நீண்ட ஆயுலோடு வாழ்வதற்க்கு நான் வணங்கும் இறைவனை பிராத்திக்கின்றேன்
நன்றி
மூத்தோர் சொல் அமிர்தம் என்பார்கள். அது போலவே உங்களின் இந்த சொற்களும் உள்ளன. " உடம்பு ஈசியா ஏத்துக்கும், மனசுதான் ஏத்துக்காது"👍👍👍
Arumaiyana urai. Dr sir. Porumaiyaga purigindra madhiri uraitheergal nandri.
Hi Dr. I am Karthick and I'm 21, First of all I thank u for your wonderful explaination of diabetes and its root cause, I have a doubt, you said that Insulin hormone needs to consume all the glucose which produced from the food which we consume, do we have anything to improve the insulin secreation hormone in pancreas, because it will also help to get rid of this diabetes.
Unfortunately, you can't do much to improve the function of the pancreas. It is scientific and logical to reduce the sugar load to match the body's insulin secretion.
Ok sir, Thanks for you reply🤗
Please do more videos.
Thanks
கடவுள் சார் நீங்க. நான் வணங்கும் சாய்பாபா உங்கள் ரூபத்தில் வந்து எனக்கு அறிவுரை கூறியதைப் போல உணர்கிறேன். கோடி நன்றி உங்களுக்கு. உடம்பு இப்போ ரொம்ப லைட்டா இருக்கிறது. நன்றாக குனிந்து நிமிர முடிகிறது. உங்கள் காலில் விழுந்து வணங்குகிறேன். நீங்கள் நூறு ஆண்டுகள் வாழ்ந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். என் மனதில் இருந்து வரும் வார்த்தைகள் இவை. நன்றி சார்.
மிக்க நன்றி
Super
தந்தையே உங்கள் சொற்பொழிவு மிகவும் அருமை உன் நலம் காக்கவிடும் பிறர் நலம் காக்க வாழ்க வளமுடன்
Very useful information Dr. Let’s start this type of food.
டாக்டர் அப்படினா அது நீங்க தான் சார் வாழ்த்துகள்
உங்களது விளக்கம் அற்புதம்
This diet is working like miracle. I reduced the dependency of insulin and medications. My problem was I was losing weight and now I am recovering. My thirst and weakness has come down drastically. Thank you doctor, but I am frustrated that all the doctors who treated me just increased the dosage of medicines. Thanks a lot doctor.
Nice to hear. Please spread the word.
பழங்கள் சாப்பிடலாம் என்று கூறியதற்கு நன்றி!
இதுவரை பழங்களை தவிர்த்து வந்தேன்!
நன்றி டாக்டர்.
நீங்க நல்லா இருக்கனும்
நாடு முன்னேற!
இந்த நாட்டில் உள்ள
சுகர் பேஷன்ட் வாழ்வு முன்னேற!
நன்றி ஐயா
மிக மிக உண்மை. இந்த காணொளியை பார்ப்தற்கு முன்பே அரிசி உணவை நிறுத்தி, அதனால் 15 கிலோ எடை குறைத்துவிட்டேன். அது மட்டுமல்ல 7 - 8 வரை சென்ற A1c அளவை 5.7 க்கு குறைத்துவிட்டேன். அரிசியை தவிர்க்கமுடியாதவர்கள் காலிஃபளவர் ரைஸ் சாப்பிடலாம், கிட்டதட்ட அரிசி போலவே இருக்கும்...
Sambath venkatesan pls say about காலிஃபிளவர் ரைஸ், please sir
dear dr.kannan, I really appreciate your advice on Mavuu items. i used to watch several sites on this issue. 1st time I came to know about you and your the Excellent. I used to take Kambuu, Raggi etc.. and now I learned out even they are also bad to my diabetic. I will follow your diet food and please give me balance food dear dr.
thank you. god bless you.
Hello sir, last month ungaloda indha video va parthu diet follow panninen enakku sugar 240/357 irundhadhu ippo 137/118 irukku cholesterol HDL 31 irundhadhu ippo 51 irukku LDL kuraindhu irukku ungaludaiya payanulla video virkaga nanrigal pala...
Thyroid free t3 and free t4 normal TSH 100 irukku doctor... So inna sapidalam inna sapida koodadhunu sollunga sir please
ithe balanced diet thodaravum vaalkai pooraavum
DR. Thank you so much for this vedio.now I am in Saudi my sugar level control sir. But how to increase my weight I little afraid for sugar any better solution pls suggest me sir.
எடை பற்றி பயம் வேண்டாம். அது முக்கியம் இலை. சர்க்கரை கட்டுக்கள் உள்ளதா என்பது தான் முக்கியம்.
@@DrBRJKannan sugar on control Dr.but weight is not gained any better solution . give tips for that Dr pls
Vanakkam sir... I am following the diet suggested by you...Great change I found sir.. Hat's of u...I have one doubt sir....when is the right time to take sugar tablet... immediate food r before food...U r real human being...thx sir..
Thank you very much for a good advice regarding diabetes. Please give a suggestion for toes and fingers numbness from which I am suffering a lot .srilanka
Kindly control your diabetes. That is the first step. Then, there are some drugs available for the same. If you are not a diabetic, it definitely needs to be evaluated by a neurologist.
Consider fasting or atleast skip your breakfast and shun away from milk. Do it for atleast 3 months if you are ailing you will see the result for sure
@@hariharanmanohar385 Agree with intermittent fasting. But why blame milk?
@@DrBRJKannan i do have my doubts about abstaining from milk but there's others(dr/mr vishwaroop) who strongly say that you don't need to become 400 kgs by consuming cow's milk, no other animal does in this world.
@@hariharanmanohar385 Viswaroop is a cheat. Just disregard whatever he has said. You will never gain weight just because you are drinking milk. Man has been drinking milk for the past several thousand years.
உண்மைதான் ஐயா...இந்த பருப்பு வகைகள்...பச்சை காப்கறிகள் முட்டை...கீரை வகைகளை சாப்பிட்டு என்கணவரின் சர்க்கரை அளவு சரியான அளவுக்கு குறைத்திருக்கிறோம்....இதை சர்க்கரை நோயாளிகள் மட்டுமல்ல எல்லோரும் செயல் படுத்தினால் ஆரோக்யமாக வாழலாம்...
Arputhamana vivarangal romba romba nandri doctor
Thank you so much Doctor.
டாக்டர் உணவு பழக்கம் பற்றி சரியான தீர்வு சொல்ரீங்க அனைவருக்கும் பயனாக இருக்கும். ஏனா சரிவிகித உணவு பற்றின புரிதல் நம்மில் எத்தனை இருக்கும். நீங்க நல்லா சொல்ரீங்க டாக்டர்.
டாக்டர் நீங்க நிரையா நாள் ஆரோக்கிமா இருந்து இதுபோல பல நல்ல செய்திகளை எங்களுக்கு எளிமையா சொல்லனும்.
Sun news
Ragu Nathan
Thank you Dr
Last three days after angiogram.I am following your diest ,my suger level drastically reduced to 83 fasting,It's very new to me last 25 yrs I never see this level
Thank you very much dr
முதலில் பலகோடி நன்றிகள் ஐயா .. பலரும் எந்த மருத்துவ அறிவும் இல்லாமல் அத சாப்பிடுங்க சாப்பிடாதீங்க என்று மக்களை தவறான வழிகளில் திருப்புகிறார்கள் ... நீங்கள் சொல்லுகின்ற உணவு முறை மிக பொருத்தமாக உள்ளது இன்று முதல் இதை பின்பற்ற போகின்றேன் ...👍🏻👍🏻👍🏻👍🏻நன்றி நன்றி❤️❤️❤️❤️
எளிமையான விளக்கம் நன்றி ஐயா..
sir, i followed your balanced diet for my husband , he is diabetes more than 5 years. with out medicines we are trying to control sugar with normal carbs diet. bt its not coming to control.. for the past 1 month we have followed this balanced diet . really thank you soooo much sir .... it really works for my husband. now his sugar level is normal with out any medicines. and also we did an implant removal surgery for him with out taking any sugar medicines. continue your service to people like us. god bless you sir.
Nice to hear, thank you so much. Please spread the word so that others also benefit.
Dr BRJ Kannan yes sir, i already told all my friends nd relatives to watch dr. BRJ kannan sir video in you tube to get knowledge about carbs diet and balanced diet. i also shared this video link to them.🙏🙏🙏
Sugar patients usually coret then coconut sapta koodadhu... Ana nenga sapdalamnu soningle sir..
சூப்பர் யோசனை நானும் காய் கறிகள் மட்டுமே உணவாக எடுத்துக் கொள்கிறேன்
அதனால் நோய் கட்டுக் குள் உள்ளது
முதன் முதலில்
ஆரம்பம் பரங்கிக்காய் சாப்பிட வேண்டும் ஏன் என்றால் பரங்கிக்காய் இனிப்பு சுவை கொண்டது ஆனால் இரண்டு மணி நேரம் கழித்து சக்கரை அளவு 140 இருக்கும்
சக்கரை அளவு எவ்வளவு இருந்தாலும் பரவாயில்லை ஆனால் சாப்பிட்ட பிறகு சக்கரை மேலே குறிப்பிட்ட அளவு தான் இருக்கும் அத்துடன்
4 மாதத்திற்கு ஒரு முறை
வெறும் வயிற்றில் 15நாள் வெள்ளரிக்காய் . சுரைக்காய்.முள்ளங்கி
பச்சையாக சாப்பிடவும்
கிட்ணி பழுது அடையாமல் இருக்க
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
காலை வெறும் வயிற்றில் தினசரி சக்கரை இல்லாத தரமான டீ தூள் உபயோகித்து பிளாக் டீ குடிக்கவும் அதாவது டிக்காசன் டீ
சக்கரை அளவு குறைத்து சுறுசுறுப்பாக இருக்க உதவும்
இன்னும் நாலு பேருக்கு சொல்லுங்கள் சார்
என் குடும்பமத்தாரை மூன்று பேர் நிரந்தர குணமாகிவிட்டார்கள்
காரணம் மருத்துவரிடம் சென்று வைத்தியம் பார்க்க வில்லை
சுயமாக வைத்தியம் செய்தோம்
இது உண்மை
நான் மருத்துவரிடம் சென்றதால் நிரந்தர நோயாளி ஆகி விட்டேன்
16வருடம் ஆகி விட்டது
Sir arisi serkama payarugal, parupugal matum serthu adai seithu sapidalam( kondai kadalai,kadalai paruppu, thuvaram paruppu, ulunthu, paasi payaru, oru spoon maapillai samba rice.) Sapidalama
Sir sugar below 6.5 irunthalum weight loss aguma. But nenga sona diet follow panitu iruken one month ah.
@@susinskitchen9953 Avoid Samba rice. Remaining all good
Sir - Thank you got your detailed information. We will start following and change the diet from tomorrow.
நன்றிங்க அய்யா
நன்றி
சார் 🙏 சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருந்தாலும் உடல் மெலிவது ஏன் இதை பற்றி ஒரு வீடியோ போடுங்கள் சார்..... நன்றி 🙏
Replay pannuhg sir
சாப்பிட வேண்டிய உணவுகள் விபரம் குறிப்பிட வேண்டுகிறேன். நன்றி
Sir, Thank You.
Sir how to manage diabetes during pregnancy kindly advise
Same, primarily diet, if needed short term insulin therapy
ரொம்ப நன்றி டாக்டர். இந்த video very usful. இந்த உணவு முறைகளில் எவ்வளவு (அளவு) சாப்பிட வேண்டும். பொரி கடலையும் பசிக்கும் போது எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாமா? Please Dr
அளவு முக்கியமில்லை. வேண்டும் அளவிற்கு எடுக்கவும். பொறிக்கடலை மட்டும் இல்லை, கடலை சுண்டல் என்று எல்லாவற்றையும் மாறி மாறி உண்ணவும்.
Very clear and explicit advice. Good job, Sir.
Hi CT
மிக அருமையான விளக்கம்.
The final word by Dr. really thoughtful that's family partner (lady) should realise.The key word by Dr. THANKS THANKS THANKS
நன்றி
சார் நான் நீங்கள் சொல்வது போல் நான் கடந்த பத்து நாட்கள் கடைபிடிக்கிறேன் நான் இப்போது நான் டைட்டு மற்றும் இன்சுலின் மாத்திரை சுகரின் அளவை பரிசோதித்ததில் 4:7 காட்டுகிறது இப்போது நான் இன்சுலின் மற்றும் மாத்திரை போடமல் பரிசோதனை செய்யாலாமா இல்லை நான் டாக்டரிடம் சென்று இன்சுலின் மற்றும் மாத்திரையின் அளவை குறைக்க கேக்கலாமா சார்
Kindly meet your doctor and reduce the medications under his supervision.
பிறர்நலன் நலன் நாடும் உங்கள் என்னத்திற்க்கு நன்றி.
Great sir.. Well said doctor.. You explained well .. Thank you so much doctor.. surely will follow👍
Nala pathivuu sir
சார்
நீங்கள் சொல்வது சரிதான்
இது பணக்காரர்கள் உணவு பட்டியல்
எங்களுக்கு எப்படி சார் சாத்தியமாகும்
கீரை, முட்டை, நவதானியங்கள் ஏழைகளும் வாங்க முடியுமே
thengaai, nila kadalai
Thanks Dr. We learnt a lot through your speech. Please give us a article regarding hypoglycemia. Thanks in advance Dr.
குடும்ப தலைவி இத உணரனும், நெத்தியடி 👍
Good PM ,Dr , I tried your food plan for 4 months my Hba1c reduced from 9.9 to 5.99. initially it was difficult without carbohydrates like rice and chappati extra.but I adopted to it.thanks for your guidance.
சந்தோஷம்.
Madam, My HbA1C is 9.4, could you tell me what food diet you had ? Please send your email id
Plese your phone Number
உங்கள் மாதரி நல்உல்லம் இருக்கும் வறை யாருக்கும் நொயே வாராது சார்
நீங்கள் தான் கண் முன்னே வந்த கடவள் ஐயா
Well explained...you give the best advice.. most patience doctor bless your heart 🙏
நீங்கள் டாக்டர் அல்ல, தெய்வம்.....
Instead of white rice can take brown rice sir
Super advice. Even though it's bit difficult to avoid rice every day, I am going to try it humanly possible. Thank you so much doctor Kannan
சமூக அக்கறை கொண்டு, சர்க்கரை நோயாளிகளின் பெருக்கத்தை தவிர்க்க நினைக்கும் நல்ல உள்ளம்கொண்ட உங்களைபோன்ற டாக்டர் அனைவருக்கும் கடவுளின் அருள் கிடைக்க வேண்டுகிறேன். மாத்திரை இல்லாமல் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும் நான் எனது உணவுபழக்கவழக்கங்களை இவ்வளைதளம் வாயிலாக தெரியப்படுத்த விரும்புகிறேன். இது அனைவருக்கும்பொருந்துமா என தெரியவில்லை. இருந்தாலும் பதிவிடுகிறேன்.
உணவு முறை
-------------
காலை 9 மணிக்கு
இட்டிலி 2, இஞ்சி பூண்டு வெங்காயம் மிளகு கறிவேப்பிலை புதினா அல்லது கொத்தமல்லி கீரை இரண்டு முட்டை மஞ்சள்கருவுடன் இவையனைத்தும் கலந்த ஆம்லெட். ஞாயிறு மட்டும் அரிசிரவை உப்புமா.
12 மணிக்கு
-------------------------
நொறுக்குதீனியாக பொரிகடலை அல்லது சீசனில் கிடைக்கும் ஏதவது ஒரு பழவகை.
மதிய உணவு
-----------------------------
100 கிராம் அரிசி சாதம் பருப்பு சேர்த்த குழம்பு அல்லது ஏதாவது ஒரு காய்சேர்த்த குழம்பு அல்லது கீரை வகை இதனுடன் ஏதாவது ஒரு நீர்க்காய்பொரியல் 150 கிராம் பிறகு 50 கிராம் சாதம் ரசத்திற்காக. சாப்பாட்டுடன் இதுதவிர வேறெதுவும் கூட்டாக எடுத்துக்கொள்வதில்லை. ஞாயிறு மட்டும் மதிய உணவாக மட்டன் 150 கிராம் அல்லது சிக்கன் 250 கிராம் அல்லது 3 துண்டு மீன் இதனுடன் சாதம் 100 கிராம் ரசத்திற்காக. பால் சார்ந்த பொருட்கள் எனக்கு ஜீரணம் ஆகாது என்பதால் அதை நான் பயன்படுத்துவது இல்லை. டீ காபி குடிக்கமாட்டேன்.
மாலை 5 மணிக்கு
-------------------------
தேங்காய் சிறிது அல்லது பட்டாணி அல்லது நிலக்கடலை அல்லது பொட்டுக்கடலை அல்லது ஏதவது ஓரு பழவகை இவற்றினுல் தேவைஎனில் சர்க்கரை சேர்க்காத ஒரு லெமன் பழ டீ.
இரவு 9 மணிக்கு
-------------------------
உடைத்த கோதுமை ரவை 1கப்
அவல் 1கப் உளுத்தம் பருப்பு 1/2கப் சிறிது வெந்தயம் இவையனைத்தும் கலந்த மாவினால் செய்த தோசை 3. 45 நிமிடம் கழித்து 1 பூவன் வாழை பழம் காலையில் இலகுவான காலைகடனிற்காக.
இவையனைத்தும் பசி எடுத்தால் மட்டுமே சாப்பிடவேன். தாகம் எடுத்தால்மட்டும் தண்ணீர் அருந்துகிறேன். உணவை நன்றாக மென்றே உண்கிறேன். உணவுக்கு 1/2 மணிநேரம் முன்பும் 45 நிமிடம் பின்பும் தண்ணீர் அருந்தமாட்டேன்.
உடற்பயிற்சி வகை
--------------------------
தினமும் காலை 6.30 முதல் 7.30 மணிவரை 1 மணி நேரம் கண்டிப்பாக நடைபயிற்சி அல்லது சைக்கிள் ஓட்டுவது என்று செய்கிறேன். சூரியசக்தி உடம்பிற்கு தேவை என்பதால் இவைகளை காலை இளம் வெய்யிலில் செய்கிறேன். இதோடில்லாமல் பகலில் வாகனம் தவிர்த்து முடிந்த வரையில் நடந்தேசெல்வேன். 2 வருடத்திற்கு முன்பு வெறும் வயிற்றில் 175 சாப்பிட்ட பிறகு 356, hba1c 8.00 Total cholestrol: 236, hdl: 34, Ldl: 171, Triglycerides 155 டெஸ்ட் எடுத்த தேதி: 17/03/2017 என்ற அளவில் இருந்த சர்க்கரையின் அளவு இப்போது F105, pp 137, hba1c 6.00 என்ற அளவில் உள்ளது. Metformin 1 gram அளவில் எடுத்துவந்த நான் மேற்கூறிய உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி மூலம் மாத்திரையின் பவரை சிறிதுசிறிதாக குறைத்து இப்போது 6 மாதமாக மாத்திரையை நிறுத்தியுள்ளேன்(F105, pp 137, hba1c 6.00. Total cholestrol : 138, hdl: 45, Ldl: 76, Triglycerides: 86, vldl: 17 தேதி: 24/11/2019 ). இப்போதும் fas:102, pp: 135 Hba1c 6.00 என்ற அளவில் உள்ளது. இதுதான் நான் சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்து மாத்திரையை நிறுத்த உதவியது. இப்போது எந்தவிதமான இனிப்பு பொருட்கள் நான் சாப்பிடுவது இல்லை குறிப்பாக பேக்கரி மற்றும் பலகாரக்கடை பதார்த்தம் ஏதும் சாப்பிடுவது இல்லை. வீட்டிலேயே ஆட்டிய எண்ணையின்மூலம்(இதற்கான எண்ணைபிழியும் மெசின் ஆன்லைனில் கிடைக்கிறது) செய்த வடைபோண்டாவாக இருந்தால் ஓரிரண்டு எடுத்துகொள்கிறேன். சமையலிற்கு 1 லிட்டர் கடலைஎண்ணைக்கு 1/2 லிட்டர் நல்லெண்ணெய் கலந்து பயண்படுத்துகிறேன்.
எனக்கு இருந்த சர்க்கரை பிரச்சினை இன்சுலின் குறைபாடல்ல இன்சுலின் எதிர்ப்பு தன்மைதான் என்பதை தங்களின் வீடியோபதிவுகளின் மூலம் தெளிவாக தெரிந்துகொண்டேன். அதற்காக எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். மேலே கூறப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் என் அனுபவங்களே. 50 வயதாகிய நான் இரண்டு வருடங்களுக்கு முன்பு 92 கிலோ எடையிருந்தேன். இப்பொழுது 76 கிலோவிற்கு குறைத்துள்ளேன். . இது ஓருவருக்கொருவர் மாறுபடலாம். டாக்டரின் ஆலோசனைபெற்றே பயண்படுத்துங்கள். நன்றி.
மிக்க நன்றி. மகிழ்ச்சி. உங்கள் அனுபவம் பல பேருக்கு ஊக்குவிப்பாய் அமையும்.
@@DrBRJKannan பதில் கூறியமைக்கு நன்றி டாக்டர்.
மிக முக்கியம் உடற்பயிற்சி...அதுதான் சாப்பிட்டதை ஜிரணிக்க வைக்கிறது
காலை 9மணி வரைக்கும் எதுவும் சாப்பிட மாட்டிர்களா?
வெறும் வயிற்றில் தான் walking போவீர்களா? Pls
Thank you Doctor for your clear message i vowed to follow
இங்கு சில மேதாவிகள் முட்டாள்தனமா இந்த மருத்துவர் சொல்லுவதுக்கு எதிரான பதிவுகளை எழுதி இருக்கீங்க .அதில் முக்கியமானது எங்க தாத்தாக்கள் வண்டி வண்டியா சாப்பிடுங்க சோறுன்னு...எவண்டா சொன்னது இப்படி ..அவுங்க அதிகம் சாப்பிட்டது நல்ல காய் கறிகள் அதிகமான மாமிசம் ..நிறைய உழைப்பு எதை சாப்பிட்டாலும் செரித்துப் போகும் ..நீங்க இப்போ மணிக் கணக்கில் மொபைல் போன் வைத்து கொண்டு எந்த உழைப்பும் இல்லாமல் இருக்கும் சோம்பேறிகள் ... அவர் என்ன உங்களை ஆங்கில மருந்தை சாப்பிட சொல்லுகிறாரா ?? உணவு பழக்கத்தை மாற்றினால் உடல் சீராகும் என்று சொல்லுகிறார் ..இதில் என்ன தப்பு கண்டு பிடித்து இப்படி தாறு மாறாக இவரை புண்படுத்தி எழுதுகிறீர்கள் ..இஷ்டம் இருந்தால் கடைப்பிடி இல்லாட்டி போ ..உன்னை யாரு கட்டாயப் படுத்தினார்கள்
மிக்க நன்றி ஐயா. முழுவதுமாக காணொளியைக் காணாமலும் புரிந்து கொள்ளாமலும் இருக்கிறார்கள். உங்கள் ஆதரவிற்கு நன்றி.
Dr Kannan
You are doing a great job to the society! Pls continue and ignore who say some non sense!!
Good answer to the dislikes great sir!!!
@@DrBRJKannan sir I am a Dermatologist . Please do continue your awesome work. Do not bother about haters...
9
Really superb
நன்றி
Thanks doctor, very nicely explained about the causes for diabetes and causes for it. 🙏
Thanks
50%புரோட்டீன்
30%கார்ப்ஸ்
20%கொழுப்பு
தினமும் உடற்ப்பயிற்ச்சி
இதைப் பின்பற்றினாலே நோய் என்பது வராது என்பது உண்மை.....
இதை என்னுடைய nutrition specialist சொல்லி நான் பின்பற்றி வருவது...
எளிமையாக மக்களின் மொழியில விளக்கம் கொடுக்குறிங்க சார் நன்றி.
Exactly true sir.. Thank u for your open practical topic of dia..sir
Well done man.
சுகர் இருக்கறவங்க மட்டும் இல்லை, இந்த டயட் எல்லாருமே எடுத்துக்கொள்ளலாம். உடல் எடையும் குறையும், கொலஸ்ட்ரால் தொல்லையும் இருக்காது. வரும் முன் காப்போம் 💪👍
rightly said.
Dr.. P. R. J .kannan Evarrhall Deibetic food olunku murai Kurijathatgu. Nantry.
Doctor ....எப்ப தான் சாப்பாடு சாப்பிடுவது ...இதெல்லாம் தண்டனை மாதிரி தெரிகிறது Sir. நீங்களே இப்படி சொன்னால் நாங்கள் என்ன Doctor செய்வது
மாறிப் பாருங்கள், நன்மையை உணர்வீர்கள்.
Oru murai result nalla vanthathum thangal anandam adaiveergal adhuthan engalai ponra well.wishergalin anandam( 30 varudam Diabetes). strict diet Dr'advice padi medicines, Regular walking ; vonnum pannadhu.If you want contact 8903821606.
Rice wheat is poison
சார் எனக்கு 30 வயது சுகர் இருக்கு கருப்பு கவுனி அரிசி கஞ்சி இரவு உனவுக்கும் சிவப்பு புலுங்கை அரிசி மதிய உணவாக சாப்பிட்டு வருகின்றேன் கோதுமை சாப்பிடுவதை நிருத்தி விட்டேன் பேபிசுகர் வந்தது பின் அபோசனாகிவிட்டது இன்னும் குழந்தை இல்லை டாக்டர் சுகரை கட்டுபாட்டுகுள் கொண்டு வந்த பிறகு குழந்தைக்கு ட்ரைப் பன்னுங்கனு சொல்லிட்டாரு பாதாம் பிஸ்தா சாப்பிடுவேன் சுகர் குறையுமா சிவப்பு அரிசியிலும் சுகர் உல்லதா
அரிசி எந்த ரூபத்தில் இருந்தாலும் சர்க்கரையே. முடிந்த அளவிற்கு தவிற்வும்.
Thank you sir
Very needed information for everybody
டாக்டர் சார் வணக்கம் எனக்கு பரிசோதித்த போது சக்கரை அளவு 11.8ஆக இருந்தது கொஞ்சும் உள்பயம் ஏற்பட்டது பின்பு என்ன செய்வது யாரிடம் ஆலோசனை பெறுவது என்று எனக்கு தெரியவில்லை தனியார் மருத்துவமனைக்கு சென்றால் காசு வேண்டும் அதுவும் இல்லை ஒரே குளப்பம் பின்பு யூடிப்பில் ஆய்வு செய்த போது பல வீடியோக்கள் வந்தன அதில் எல்லா வற்றையும் கேட்டேன் நீங்கள் சொன்ன குறிப்பையும் கேட்டு உங்களுடைய டையட் குறிப்பை பின்பற்ற ஆரம்பித்தேன் ஒரே வாரத்தில் மீண்டும் பரிசோதித்த போது 5.8ஆகா குறைந்தது பின்பு மீண்டும் சொத்தை பல் அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது அப்போது பரிசோதனை செய்தேன் 5.2 ஆக குறைந்து காணப்பட்டது உட்கொள்ளும் உணவு கடலைபருப்பு பபாசிபருப்பு நிலகடலை கொண்ட கடலை பசிப்பயறு முலைகட்டியது கொண்டகடலை முளை கட்டியது கொள்ளு கஞ்சி பகலிலும் இரவிலும் காய்கறிகள் சுரக்காய் கத்தரிக்காய் வெண்டக்காய் பீன்ஸ் முட்டை கோஸ் முட்டை மஞ்சள் கருநீக்கியது சிக்கன் தோல்நீக்கியது இரண்டு பீஸ் வாரத்தில் இரண்டு முறை மட்டும் இரண்டுமாதமாக அரிசி உணவு மற்றும் மாவு சத்தான உணவு எடுத்து கொள்ளவே இல்லை சார் மேலும் நடபயிற்ச்சி யும் குறைந்தது நாற்பது நிமிடம் செய்கிறேன் மாத்திரையும் உட்கொள்கிறேன் நான் மேலும் எப்படி சாப்பிடலாம் மதுரையில் உங்களை எங்கு சந்திக்களாம் என்றும் மேலும் உங்கள் வாட்சாப் நம்பரையும் கொடுத்தீர்கள் என்றால் மிகவும் பயனாக இருக்கும் நான் மாதம்ஒருமுறை உங்களை தொடர்பு கொண்டு பரிசோதனை விபரத்தை பகிர்ந்து அறிவுரை பெற இலகுவாக இருக்கும் தாங்கள் அறிவுரைக்கு நன்றி சாதாரணமாக நன்றி என்றால் மிகையாகது நோய்யால் சிக்கி தவிக்கும் தமிழ் சமூகத்துக்கு நல் வழி காட்டுங்கள் சார் உங்கள் பதிலையும் அறிவுரையையும் ஆவலோடு எதிற் பார்க்கிறேன்
இதைப் பகிர்ந்தமைக்கு நன்றி. மற்றவர்களுக்கு நல்ல ஊக்குவிப்பதாக இருக்கும்.
முட்டையில் மஞ்சள் கருவை நீக்க வேண்டிய அவசியம் இல்லை. அதில் உள்ள கொலெஸ்டெரால் அப்படியே நம் ரத்தத்தில் சேருவதில்லை, செரிமானம் ஆகி விடும். அது போல், வாரத்தில் ஓரிரு முறை என்றால், அசைவம் வேண்டிய அளவு எடுக்கலாம், பயம் தேவையில்லை. மாத்திரைகளை உங்கள் மருத்துவர் உதவியுடன் குறைக்கவும். உடல் பயிற்சியை இது போலவே தொடரவும்.
எல்லா சந்தேகங்களையும் இங்கேயே கேட்கலாம், விடை தருகிறேன், மற்றவர்களுக்கும் பலனாக இருக்கும்.
என்னை சந்தித்தே வேண்டும் என்றால், மருத்துவமனைக்கு அழைத்து (9994990773, 10am to 5pm) முன் பதிவு செய்யவும். நான் அடிப்படையில் ஒரு இதய நோய் நிபுணர் என்பதை நினைவிற் கொள்க.
@@DrBRJKannan நன்றி டாக்டார் சார் நான் அடுத்மாதம் பரிசோதனை செய்து அறிவுரை பெறுகிறேன் மீன் பொறித்து ஓறிரு பீஸ்சாப்பிடலாமா இரவில் கேரட் துருவியது முட்டைகோஸ் தயீர் அல்லது எலுமிச்சை மிளகுதூள் பச்சை மிளகாய் பூண்டு வெள்ளரிக்காய் உப்பூ எந்த உணவிலும் சசேர்ப்பது இல்லை ஒரு பிச் அளவுதான் சேர்க்கிறேன் அது சரியா அதில் ஏதேனும் மாற்றம் வேண்டுமா நான் இரவு பனி என்பதால் வேர்வை வருவது இல்லை மேலும் எச்சில் காரும் உவர்வப்பாக உள்ளது அதனால் நான் உப்பை குறைத்து கொண்டேன் அது சரிதானா
இங்குள்ள டாக்டர்கள் அரபியேர்கள் நம்மிடம் எந்த வித மான கேள்வியோ பதிலையோ பெற மாட்டார்கள் மாத்திரையை எழுதி உடனே அனுப்பி விடுகிறார்கள் என்ன செய்வது புரிய வில்லை நான் பரிசோதனை சீட்டை காட்டிய பின் மேலும் ஒரு மாத்திரையை இனைத்துதான் எழுதுகிறார் நீங்கள் பணி பழுவின் இடையில் பதில்தந்தது மகிழ்ச்சி அளிக்கிறது உற்சாகம் அளிக்கிறது டாக்டர் நம்பிக்கை அளிக்கிறது இந்த நோய்யிலிருந்து வெள்ளமுடியும் என்று புத்துயீர் பிறக்கிறது நீங்கள் நலமுடன் இருக்க நான் இறைவனை பிறாத்திக்கிறேன்
உப்பை மிகவும் குறைக்க வேண்டிய அவசியம் இல்லை
@@DrBRJKannan நன்றி டாக்டர் உங்கள் வேலை பழுவுக்கு இடையே எனக்கு ஆலோசனையும் பதிலும் தந்தமைக்கு நன்றி டாக்டர்
@@DrBRJKannan r u cmg to Malaysia
Dei. Edhukuda dislikes Uh? Iluminati mavangala?
Dr இதில் நீங்க பேசின அனைத்து வார்த்தை களும் முக்கியமானது.ஒன்றும் வீண் அல்ல.. tnq dr.
மிகவும் அருமை
wesly livingston vanirani
Vanirani
முட்டையின் மஞ்சள் கரு சாப்பிடலாமா சார்?
Yes, don't worry. யாராவது பயமுறுத்தினா, மஞ்ச கரு சாபிட்டதால கொலஸ்டரோல் கூடின ஆளா பாத்திருக்கீங்களான்னு கேளுங்க. 'இல்ல, சொல்லுவாங்க'ன்னு மழுப்புவார்.
Thank u very much sir .. enakum en husband kum sugar iruku. But diet and tablet la irukom. Husband alopathy koodave naatu marundhu like naaval podi , sirukurinjan podi , karunjeeraga podi , oma podi , vendhaya podi edukirar . Edukalama Dr..
jenee ffer
தகவலுக்கு மிக்க நன்றி டாக்டர்
Dear Dr. “ஈரம்” உதாரணம் சூப்பர் !! ஆனால் ஈரத்தை துடைப்போம் என்று முடிவு செய்வது நாங்கள் அல்ல!! சிகிச்சைக்காக நாங்கள் சென்று பார்க்கும் மருத்துவர்கள்தான் அந்த முடிவை எடுக்கிறார்கள்!! இதை சாப்பிடு என்று ஒரு மருந்தை எழுதி தருகிறார்கள்!! இதஐ வாங்கி சாப்பிட தொடங்குகிறோம்!! அது ஈரத்தை துடைப்பதற்கான முதல் முயற்சி!! பின் அந்த மருந்தின் அளவு கூடிக்கொண்டே இருக்கும். அதை முடிவு செய்வது Modern medicine படித்த மருத்துவர்கள்தான்!! நாங்களல்ல!! ஏன் ஈரமாகிறது என்பதை பேசும் மருத்தவர்கள் மிக மிக குறைவு!! Allopathy Doctors always try to treat the symptoms not the cause.
Is it? you are wrong. We practically cure the disease, if possible. The role of diet has not been well emphasized by doctors, whether it is modern medicine or non-modern medicine, I agree with that.