அரைச்சுவிட்ட சாம்பார் | Arachuvitta Sambar Recipe In tamil | Revealing the Secret to Perfect Sambar

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2023
  • அரைச்சுவிட்ட சாம்பார் | Arachuvitta Sambar Recipe In tamil | Revealing the Secret to Perfect Sambar | ‪@HomeCookingTamil‬
    #அரைச்சுவிட்டசாம்பார் #ArachuvittaSambarRecipeIntamil #RevealingtheSecrettoPerfectSambar #sambar #homecookingtamil
    Other recipes
    Arisi Paruppu Sadam - • அரிசி பருப்பு சாதம் | ...
    Chettinad Rangoon Puttu - • செட்டிநாடு ரங்கூன் புட...
    Kovakkai Poriyal - • கோவக்காய் பொரியல் | Ko...
    Cabbage Kottu - • முட்டைகோஸ் கூட்டு | Ca...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/shop/homecookin...
    அரைச்சுவிட்ட சாம்பார்
    தேவையான பொருட்கள்
    பருப்பை வேகவைக்க
    துவரம் பருப்பு - 1 கப்
    வெங்காயம் - 2 நறுக்கியது
    தக்காளி - 3 நறுக்கியது
    மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
    உப்பு - 1 தேக்கரண்டி
    பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி
    தண்ணீர்
    மசாலா விழுது அரைக்க
    கடலை பருப்பு - 1 மேசைக்கரண்டி
    உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
    முழு தனியா - 2 மேசைக்கரண்டி
    காய்ந்த மிளகாய் - 12
    தேங்காய் - 1/2 கப் துருவியது
    பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி
    தண்ணீர்
    சாம்பார் செய்ய
    நெய் - 3 மேசைக்கரண்டி
    உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
    கடுகு - 1 தேக்கரண்டி
    சீரகம் - 1 தேக்கரண்டி
    காய்ந்த மிளகாய் - 2
    சின்ன வெங்காயம் - 300 கிராம்
    முருங்கை காய்
    புளி தண்ணீர் - 1/2 கப்
    தண்ணீர் - 1 1/2 கப்
    உப்பு - 1 தேக்கரண்டி
    கறிவேப்பிலை
    வெல்லம் - 2 தேக்கரண்டி
    கொத்தமல்லி இலை நறுக்கியது
    செய்முறை:
    1. குக்கரில் நன்கு கழுவிய துவரம் பருப்பு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள், உப்பு, பெருங்காய தூள், சேர்த்து கலந்து விடவும். பின்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு 5 விசில் வரும் வரை வேகவிடவும்.
    2. ஒரு பானில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, முழு தனியா சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும்.
    3. அடுத்து காய்ந்த மிளகாய், துருவிய தேங்காய் சேர்த்து மிதமான தீயில் வறுத்து கொள்ளவும்.
    4. பின்பு பெருங்காய தூள் சேர்த்து கலந்து விட்டு நன்கு ஆறவிடவும்.
    5. பிறகு மிக்சியில் சேர்த்து முதலில் தண்ணீர் இன்றி அரைத்து விட்டு பின்பு தண்ணீர் சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும்.
    6. ஒரு கடாயில் நெய் சேர்த்து உருகியதும் உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம் சேர்த்து கலந்து விடவும்.
    7. பின்பு காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம், முருங்கை காய் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
    8. அடுத்து அரைத்த மசாலா விழுது, மசாலா தண்ணீர், புளி தண்ணீர் ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து கலந்து விடவும்.
    8. வேகவைத்த பருப்பு, தண்ணீர், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து கலந்து விட்டு 10 நிமிடம் கொதிக்க விடவும்.
    9. இறுதியாக வெல்லம், கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விட்டு இறக்கவும்.
    10. சுவையான அரைச்சுவிட்ட சாம்பார் தயார்.
    Arachuvitta Sambar is a tasty South Indian dish. It gets its name because it's made with a special paste of spices. This paste has things like coriander seeds, cumin seeds, and coconut among the other things. For this, we cook toor dal and vegetables, then add the paste for flavor. It's a yummy and popular dish in South India, usually served with rice. You can make it mild or spicy, and it's loved by many Tamilian food fans. Watch this video till the end to get step-by-step process. Try this recipe and let me know how it turned out for you guys in the comments section below.
    You can buy our book and classes at www.21frames.in/shop
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    Website: www.21frames.in/homecooking
    Facebook: / homecookingtamil
    RUclips: / homecookingtamil
    Instagram: / home.cooking.tamil
    A Ventuno Production : www.ventunotech.com

Комментарии • 659

  • @pradeepa_a281

    14:52

  • @user-ue9jr4ro1v

    நீங்க சமையல் எல்லாம் எவ்வளவோ செய்றீங்க இந்த சாம்பார் எல்லாம் உங்களுக்கு ஒரு பெருசா மேம் ஆனா இப்ப வந்து சமீபத்தில் நீங்க நிறைய சிரிச்சு பேசுறது நிறைய பேசுறது நல்லா இருக்கு மேடம் பாக்குறதுக்கு தப்பா நினைச்சுக்காதீங்க முன்ன வந்து லிமிடெட் ஏதாவது சொல்லிட்டு பண்ணுவீங்க இப்ப நல்ல அதிக நேரம் பேசுறது நல்லா இருக்கு

  • @sakthivel.r587
    @sakthivel.r587 2 часа назад

    இன்னிக்கி பார்த்துட்டு நாளைக்கு தான் மேடம் செய்ய முடியும் வேலைக்கு போர வேகத்துல. உங்களுடையத கேட்டா வேலைக்கு எல்லாம் போகமுடியாது கேட்டுட்டு தூங்கிட்டு வீட்டிலேயே இருந்துர வேண்டியது தான்

  • @xavierjeganathan9162

    சமையல் என்பது குடும்பத்தின் பசியை மட்டும் தீர்ப்பதல்ல. ருசியுடன் ஆரோக்கியமும், மனநிறைவையும், மகிழ்ச்சியையும் தருவது. சமையல் மூலம் நாம் நமது குடும்பத்தின் மீது எவ்வளவு அக்கறை உள்ளவர்கள் என்பதையும் காட்டும். அதுமட்டுமின்றி, சமைத்ததை பரிமாறி பசியாற்றுவதில் கிடைக்கும் திருப்தி அலாதியானது. புண்ணியங்களில் முதன்மையானது பசித்த ஒருவருக்கு அன்னதானம் செய்வது. அப்படிப்பட்ட சமையலை ஏதோ ஒரு வேலை போல கடமைக்குச் செய்யாமல் , விருப்பமுடன் அனுபவித்து ஈடுபாட்டுடன் செய்யும் போது அதுவே கலையாக மாறுகிறது. அந்த வகையில், நீங்கள் ரசித்து ரசித்து செய்த சமையல் மீது எல்லோருக்கும் மையல் வரும் என்பதில் ஐயமில்லை. அருமையான சமையல். அழகான ஆலாபனை ( வர்ணனை) 🎉🎉🎉

  • @vidhyaprasanna2839
    @vidhyaprasanna2839 21 день назад

    Puli vendama madam

  • @kalaiyarashithangarajukala4526

    எல்லா டிஸ்ஸும் தரமாக உள்ளது.கன்டீப்பா சுவையாவும் இருக்கும் நீங்களும் சுவைப்பீங்க அப்றோ எப்டி நீங்க இவ்ளோ ஸ்லிம்மா எனர்ஜியா இருக்கீங்க தோழி

  • @user-nx1fo8xb4u

    யக்காவ் நீங்க கல்யாண வீட்டு அளவுக்கு அரைச்சுவிட்ட சாம்பார் செய்தீங்கன்னு நினைக்கின்றேன். இல்லைன்னா பக்கத்துக்கு வீட்டுக்கு பார்சல் செய்திருப்பீங்க போல. பருப்பு அளவு எத்தனை பேருக்கு என்றும் சொல்லிடுங்க. சிங்கப்பூர்ல பக்கத்துக்கு வீட்டில் சீனர் குடும்பம்தான் இருக்கு. எங்க வீட்ல நாலுபேர்தான். ஆனாலும் உங்க மறதியும் உங்க சமாளிப்பும் சூப்பர். நல்லா இருக்குது நீங்க செய்யும்போது. நாங்க செய்யும்போது தான் தெரியும். செய்து ருசித்துவிட்டு சொல்கின்றோம்.

  • @siyamalasubramanian2934

    வணக்கம் மா 🙏🏻.. நான் இதோடு 2 தடவைகள் உங்கள் சாம்பார் வழிமுறையை பின்பற்றி சமைத்து விட்டேன்.. என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது.. நன்றி 🙏🏻.. நீங்கள் புன்னகையுடன் சமைப்பதைப் பார்க்க அழகாக இருக்கீங்க 👍🏻❤

  • @divyas226

    உப்பு போட்டால் பருப்பு வேகாது.

  • @bharathikulasekaran8203

    வெந்தயம் தேவையில்லையா மேடம்

  • @vijaydinesh2675

    Epadi unga face 5 varusathukku munnadi irunthatha Vida alaga mari irukkunga

  • @thangam-cbe9056

    சாம்பார் செய்து பார்த்தேன் மிக அருமை.நன்றி.

  • @agnesfabijames6597

    ❤ love the way you explained, madam.

  • @VijjiEswaran

    She is expressing her happiness by preparing sambar as it's her favourite recipe. U can see happiness in her eyes and talk.

  • @surathiramzee9847

    Thank you very much for the video. Mam so nice to see. I will try this recipe. 🌸🌹🌹🌷🌷🌷🌹👍🏼🇱🇰

  • @user-wk6hk5tx8r

    Thank you mam

  • @rajanrajan5343

    வெரி நீங்க செய்யும்போதே சூப்பரா சூப்பரா இருக்கு நன்றி

  • @Zunaitha_akthar

    Thank u mam.... i tried it was awesome mamm....

  • @tamilarasigovindarajan-hv5oq
    @tamilarasigovindarajan-hv5oq День назад

    V veri nice mam

  • @gmthigmthi2092

    சாம்பார் செஞ்சு பார்த்தேன் மிகவும் அருமை நன்றி மேடம்❤❤👌👌👌