ஓசூர் ஸ்ரீ மரகதாம்பிகை உடனுறை ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் கோவிலில் மகா சண்டி யாகம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • ஓசூர் கிருஷ்ணகிரி மாவட்டம்
    ஓசூர் மரகதாம்பிகை சமேத ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் ஆலயத்தில் 29 ஆம் ஆண்டு மகா நவ சண்டி யாகம்
    ஓசூர் அருள்மிகு மரகதாம்பிகை உடனுறை ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் ஆலயத்தில் ஆகஸ்ட் 9 முதல் 11ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை உலக நலனுக்காக மகா நவச்சண்டி யாகம் நடைபெற்றது.
    வெள்ளிக்கிழமை காலை 10:30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கும் இந்த மகா நவ செண்டி யாகம் மாலை 4 மணிக்கு பச்சை குளத்தில் இருந்து நீர் குடம் புறப்படுதல் மாலை 6 மணிக்கு வாஸ்து சாந்தி ஏழு மணிக்கு கலச பூஜை நெய்வேத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.
    சனிக்கிழமை காலை 8 மணிக்கு கலச பூஜை ருத்ர ஹோமம் மகா நவச்சண்டி யாகம் முதல் காலம் லட்சுமி ஹோமம் ஆகியவை சனிக்கிழமை நடைபெற்றது.
    இன்று காலை 7 மணிக்கு கலச பூஜை, லட்சுமி ஹோமம், துர்கா யோகமும், கன்னியா பூஜை, தம்பதி பூஜை, மகாபூர்ணா ஹூதி, கணபதி, சிவன், அம்பாள், ஸ்ரீ சக்கரம், கலசாபிஷேகம் ஆகியவை நடைபெற்றது.
    இந்த மூன்று நாட்களும் கோவிலில் அன்னதானம் நடைபெற்றது. தேர் பேட்டை விழா குழுவினர் செய்திருந்தனர்.

Комментарии •