உலக நன்மை வேண்டி, ஓசூரில் பிராமணர் சங்கம் சார்பில் பஞ்ச கருட சேவை

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • உலக நன்மை வேண்டி, முதன்முறையாக ஓசூரில், பிராமணர் சங்கம் சார்பில் பஞ்ச கருட சேவை. எம்.பி, எம்எல்ஏ, மேயர் உள்ளிட்டோர் சுவாமி தரிசனம்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், முதன்முறையாக தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில், உலக நன்மை வேண்டி பஞ்ச கருட சேவை வைபவம் விமர்சியாக நடைபெற்றது. இதில் எம் பி, எம் எல் ஏ, மேயர் உட்பட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஏராளமான பொதுமக்களும் பங்கேற்று திருமாலை தரிசித்து வேண்டி வழிபட்டனர்.
    உலக நன்மை வேண்டியும், சனாதன தர்மம் தழைத்தோங்க வேண்டியும், நல்ல மழை பொழிந்து மக்கள் யாவரும் சுபிட்சமாக வாழ வேண்டியும், தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் பஞ்ச கருட சேவை வைபவம் நடைபெற்றது.
    தனியார் பள்ளி வளாக அரங்கில் நடைபெற்ற இதில், ஓசூர் ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோயில், ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோயில், பார்த்தக்கோட்டா ஸ்ரீ சீதாராம ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், அகரம் ஸ்ரீ சுயம்பு அபயஹஸ்த லட்சுமி நரசிம்மர் கோவில் மற்றும் மோரனப்பள்ளி ஸ்ரீ அபயஹஸ்த நரசிம்மர் கோவில் ஆகிய திருக்கோவில்களின் உற்சவ மூர்த்திகள் கருட வாகனத்தில் சேவை சாதித்த படி திருக்காட்சி அளித்தனர்.
    முன்னதாக உற்சவமூர்த்தி சுவாமிகளை அரங்கிற்குள் அழைத்து வருவதற்கு முன்பு, வானில் கருடன் வட்டமிட்டபடி திருக்காட்சி அளித்தது அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது.
    பின்னர் ஐந்து திருக்கோயில்களில் இருந்து கருட வாகனத்தில் வீற்றிருந்த பெருமாள் உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு சாத்துமறை, வேதபாராயணம் மற்றும் மகா சங்கல்பங்கள் நிறைவேற்றப்பட்டு தீபஆராதனைகள் காண்பிக்கப்பட்டது.
    பின்னர் பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் மற்றும் துளசி பிரசாதங்கள் வழங்கி, சடாரி சேவையும் நடைபெற்றது.
    இந்த வைபவத்தில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் கே கோபிநாத், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய் பிரகாஷ், ஓசூர் மாநகர மேயர் எஸ் ஏ சத்யா, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பிஜேபி தலைவர் எம் நாகராஜ், உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும் ஏராளமான பொதுமக்களும் பங்கேற்று பெருமாளை தரிசனம் செய்து மனமுருகி வேண்டி வழிபட்டனர்.
    இதைத்தொடர்ந்து வந்திருந்த பக்தர்கள் சார்பில் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடைபெற்றது. தொடர்ந்து கர்நாடக சங்கீதம், பஜனை கீர்த்தனைகள், கோலாட்டம் ஆகிய நடைபெற்று அன்னதானமும் வழங்கப்பட்டன.
    இதுபோன்று பஞ்ச கருட சேவை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டால் உலகம் சுபிட்சம் அடைந்து அந்தப் பகுதிகளில் நல்ல மழை பொழிந்து பொதுமக்கள் மகிழ்ச்சியுடனும் நிம்மதியுடனும் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
    பேட்டி : சுதா நாகராஜன் தலைவர் தமிழ்நாடு பிராமணர் சங்கம் ஓசூர் கிளை

Комментарии • 2