Это видео недоступно.
Сожалеем об этом.

தொடர் கொலைகள்:கூலிப் படைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - Dr. கிருஷ்ணசாமி.

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 июл 2024
  • புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மாஞ்சோலை பகுதியில் வசிக்கும் மக்களுக்கான வசிப்பிடத்தை அங்கேயே ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கின் விசாரணை நடைபெறுகிறது. நேரடியாக நானே ஆஜர் ஆகி வாதாடுவதற்கான அனுமதி நீதிமன்றத்தில் கேட்கப்பட்டுள்ளது. பிபிடிசி நிறுவனத்தின் ஒப்பந்த காலம் முடிந்த பின்னர் நேரடியாக அரசின் கட்டுப்பாட்டில் தேயிலைத் தோட்டங்கள் வந்துவிடும்.அதனை அரசு கையகப்படுத்தி அங்குள்ள தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கலாம். அசாம் உள்ளிட்ட இந்தியாவின் பல மாநில தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை கொடுக்கும் வகையில் அங்குள்ள நிலங்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டு வாழ்வாதாரம் காக்கப்பட்டுள்ளது.கடந்த ஒரு மாத காலமாக வேலைவாய்ப்பு இல்லாமல் ஊதியம் இல்லாமல் மாஞ்சோலை மக்கள் பட்டினி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் இழந்த சூழலையும் பட்டினி கிடந்து வேதனைப்படுவதையும் அரசு சகித்துக் கொள்ளக் கூடாது மாஞ்சோலை விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் செயல் முழுக்க முழுக்க சட்டவிரோதமானது. மாஞ்சோலை விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் உரிய முறையில் ஆய்வு மேற்கொண்டு நல்ல அறிக்கையை அரசுக்கு வழங்கினால் அரசு நல்ல நடவடிக்கையை எடுக்கும் சிரமமே இல்லாத விஷயத்தை மாஞ்சோலை விவகாரத்தில் பெரிதாக்குகிறார்கள். தமிழக அரசு மாஞ்சோலை விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பிரதமர் ,குடியரசுத் தலைவர் உள்ளிட்ட வரை நேரில் சந்திக்க நேரிடும் ஆயிரக்கணக்கான மாஞ்சோலை மக்களின் வாழ்வாதார பிரச்சனையில் தமிழக அரசு நியாயமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் படுகொலை சம்பவம் வேதனைக்குரியது. கூலிப்படையால் படுகொலைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை முன் விரோதத்தால் நடந்ததாக காவல்துறை கூறியிருந்தாலும் கூலிப்படை காரணமாகவே அந்தக் கொலை நடந்துள்ளது.அண்மை காலமாக தொடர்ந்து கூலிப்படையால் கொலைகள் நடந்து வருகிறது. தமிழகத்தில் கூலிப்படை கலாச்சாரம் அதிகரித்து வருகிறது கூலிப்படையின் வேர் எங்கிருந்து வருகிறது என்று கண்டறிந்து சட்டம் ஒழுங்கை சரி செய்ய வேண்டும் காவல்துறை நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பது அரசியல் அழுத்தம் காரணமாக இருக்கிறதா என்ற கேள்வியின் எழுகிறது தமிழகத்தில் அதிகரித்து வரும் கூலிப்படை கலாச்சாரத்திற்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்கள் தான் கூலிப்படை உருவாகும் இடங்களாக உள்ளது கொலை குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஆதரவாக அரசியல் அமைப்புகள் செயல்படுவதால் தான் பொதுமக்கள் அச்சப்படும் நிலை உருவாகி வருகிறது கூலிப்படையினர் யாராக இருந்தாலும் அவர்களை வேரோடு அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். பேட்டியின் போது மாநில இளைஞரணி செயலாளர் டாக்டர் சியாம், மாநில பொதுச் செயலாளர் அய்யர், பொருளாளர் செல்லத்துரை, நெல்லை மாவட்ட செயலாளர் முத்தையா ராமர், நிர்வாகிகள் தங்கராமகிருஷ்ணன், செல்லப்பா, சிவகுமார், குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Комментарии •