“தமிழருடைய அறிவும் புத்திக்கூர்மையும் எவராலும் தீர்மானிக்க முடியாது” - கல்வி ஆளுமை புனிதா கணேசன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 мар 2021
  • நம் வீட்டு விசேஷங்களில் வாழைமரமும், மாவிலை தோரணமும் கட்டுவதற்கான காரணங்கள் என்ன, நாத்தனார் என்ற சொல்லின் அர்த்தம் என்ன, வைத்தியனுக்கு கொடுப்பதை ஏன் வாணிபனுக்கு கொடுக்க வேண்டும் போன்ற இதுவரை நமக்குத் தெரியாத பல சுவாரசியத் தகவல்களைக் கூறுகிறார் கல்வியாளர் எழுத்தாளர் பெண் ஆளுமை திருமதி புனிதா கணேசன் அவர்கள்!! #TheneerIdaivelai #Punithaganesan #Interview
    Chief Guest : Punitha Ganesan
    Host : Pragadeesh
    Shot & Edited by Shyam
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
    Follows on Sharechat : sharechat.com/profile/theneer...
  • РазвлеченияРазвлечения

Комментарии • 1,2 тыс.

  • @shanmugarajrajendran1416
    @shanmugarajrajendran1416 3 года назад +471

    ஒன்றுக்கும் உதவாத சினிமா கூத்துக்களை பதிவிட்டு நிறைய வாசகர் பார்வைகளை அள்ளும் யூடியூப் சேனல்கள் மத்தியில் நல்ல விசயங்களை தரும் சகோதரரே உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @suvadugal8
      @suvadugal8 2 года назад +4

      நல்ல விமர்சனம்

    • @thangaveluraj5366
      @thangaveluraj5366 2 года назад +13

      மிகவும் சரி... தமிழ் மக்கள் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு பெரிய அளவில் ஆதரவு தர வேண்டும், பயனடைய வேண்டும்...

    • @saraswathyloganathan9618
      @saraswathyloganathan9618 2 года назад +6

      பயன் உள்ள பகிர்வு

    • @SAIUDHIARPUTHANGAL123
      @SAIUDHIARPUTHANGAL123 2 года назад +3

      உண்மை

    • @rajut1273
      @rajut1273 2 года назад

      உண்மை....

  • @crafts4fans421
    @crafts4fans421 3 года назад +126

    தமிழ் பேச்சாளர்களுக்கு உள்ள ஒரு ஆற்றலே
    பெருமைக்குரியது.மிகவும் சிறப்புக்குரியது.

  • @preethis2381
    @preethis2381 3 года назад +194

    . இப்படி நிறைய அறிஞர்களோட திட்டமிடப்படாத இயல்பான உரையாடல்கள் நடத்துங்க. ரொம்ப நல்லா இருக்கு.

    • @rexpaulraj5804
      @rexpaulraj5804 3 года назад +7

      இதே மாதிரி நிறைய தகவல்களை மக்கக்களுக்கு தாருங்கள்

    • @antonysamy9056
      @antonysamy9056 2 года назад +1

      கககாகக் கககய 7A sensex mom l main nylon nahin hai NY chic CC xx PS duct bujhini to b

    • @RaviChandran-ij1gl
      @RaviChandran-ij1gl 2 года назад

      🙏👍

    • @srisuganyadevi8470
      @srisuganyadevi8470 2 года назад

      @@antonysamy9056 hi I I hui I juju I juju I

  • @ranjith.r9535
    @ranjith.r9535 3 года назад +36

    அண்ணா, உங்கள் முயற்சிகளுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். ❤️
    என் நாளில் சிறப்பாக கழிக்கும் இடைவேளை, தேநீர் இடைவேளை மட்டுமே, என் அறிவுக்கும் தமிழுக்கும் இரை சேர்த்து...🙏🙏🙏 ❤️❤️❤️

  • @user-sf9sk4ih4s
    @user-sf9sk4ih4s 3 года назад +96

    உங்கள் சேனலை இன்றைக்கு தான் முதன்முதலாக பார்க்கிறேன் அருமை இத்துனை நாட்களாக பார்க்கவில்லையே என்று சின்ன வருத்தம்

    • @theneeridaivelai
      @theneeridaivelai  3 года назад +15

      தேநீர் இடைவேளை தங்களை வருக வருக என்று அன்புடன் வரவேற்கிறது சகோ!!

    • @rakavismeet1536
      @rakavismeet1536 3 года назад +8

      நானும் இத்தனை நாட்களாய் தவறவிட்டேன் இனி விடேன் 👍

    • @vasanthakokila4440
      @vasanthakokila4440 Год назад

      Om namah shivaya namah Om Shanti

  • @MuraliArunagiriRedhillschennai
    @MuraliArunagiriRedhillschennai 3 года назад +38

    தமிழ் மொழி பற்றிய இது போன்ற காணொளிகள் சிறப்பு.... என்னுடைய வாழ்த்துக்கள் 💐💐💐

  • @jayaseelan3766
    @jayaseelan3766 3 года назад +1

    பண்டைய தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், மதிநுட்பம் இவைகளையெல்லாம் பற்றிய செய்திகளை தேடும் போது மிகவும் பிரமிக்க வைக்கும் அளவில் உள்ளது. தஞ்சாவூர் பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் திருமதி புனிதா கணேசன் அவர்களின் பேச்சாற்றல் மூலம் நாம் மறந்து போன பல வாழ்வியல் சிந்தனைகள், கோட்பாடுகள் நமக்கு தெரிகிறது. புரிய வருகிறது. வாழ்த்துக்கள் அம்மா. நானும் தஞ்சாவூர் மாவட்டம்.

  • @punithasubramaniyan5049
    @punithasubramaniyan5049 3 года назад +106

    பெண்கள் யாரிடமும் அழ வேண்டாம்,யாரையும் தொழ வேண்டாம்......super madam

  • @sharmiraj5151
    @sharmiraj5151 3 года назад +31

    வாழ்க்கையை வாழுங்கள்..👍 வெகுநாட்களுக்கு பிறகு அருமையான காணொளி...😍

  • @KarthiKeyan-zh8us
    @KarthiKeyan-zh8us 3 года назад +41

    நண்பரே மீண்டும் அம்மாவின் பேச்சு கேட்க மிகவும் ஆவலாக இருக்கிறது. இந்த காணொலிக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏

    • @louishelda781
      @louishelda781 2 года назад

      Nagas media RUclips channel la intha mam pesurathu iruku, search panni parunga

  • @sathishkannan8091
    @sathishkannan8091 3 года назад +22

    இந்த கடை தேநீர் அருமை அண்ணா மெய் சிலிர்த்து விட்டேன்

  • @srinivassagit2573
    @srinivassagit2573 3 года назад +112

    இவர்களை போல பல தமிழ் அறிஞர்களை ஒன்று திரட்டி அடுத்த தலைமுறைக்கு கற்றுத் குடுக்க வேண்டும்!

    • @thilagamdevanathan7110
      @thilagamdevanathan7110 3 года назад +1

      Vazhga valamudan amma migaum arumai

    • @chandrababur2605
      @chandrababur2605 3 года назад

      உங்கள் தமிழ் உஃ

    • @srinivassagit2573
      @srinivassagit2573 3 года назад

      @@chandrababur2605 பிழை இருப்பின் பொருத்தருள்க!!

  • @palani9073
    @palani9073 3 года назад +165

    வாழ்வில் தெரிந்து கொள்ளவேண்டி விஷயம் நா இன்றைக்கு நெறய கத்துக்கிட்டன் நன்றி நண்பா

  • @vijayaraghavan1481
    @vijayaraghavan1481 3 года назад +32

    நடைமுறையில் மறந்ததை எச்சரிக்கவும்,அசைபோடவும் செய்தது ஏதோ என்னுள் தொலைந்ததை நினைவூட்டியது..ஆயிரமாயிரம் புத்தகம் சொல்வதை இந்த அம்மா சொல்வதாய் உணர்கிறேன்..விவரிக்க வார்த்தையில்லை என்னிடம் ,ஆனந்தம். நீடுழி வாழ்க ..

  • @karthiselvaraj3642
    @karthiselvaraj3642 3 года назад +59

    பொழுதை ஆக்குபவர்களுக்கு மிக்க நன்றி மென்மேலும் இந்த பணி தொடர வாழ்த்துகள் 🙏

    • @anbuselvam2233
      @anbuselvam2233 3 года назад

      வணக்கம் அம்மா உங்களுடைய தேநீர் இடைவேளை நி்கழ்ச்சியின் உரையாடலின் பல அர்த்தங்கள் என்னை கவர்ந்தது வாழ்த்துக்கள்

  • @raghavn9398
    @raghavn9398 3 года назад +18

    பொழுதை ஆக்கப்பூர்வமாக செலவிட ஒரு நல்ல பதிவை காண்பித்துள்ளீர்கள் அருமை நண்பா!!!!

  • @vavinthiranshobha8356
    @vavinthiranshobha8356 3 года назад +168

    அம்மாவின் பேச்சைக்கேட்டுக்கொண்டே இருக்கலாம் அவ்வளவு அருமை இன்னும் இது போன்ற காணோளிகளைத்தாருங்கள்

    • @SasiKala-fh4qk
      @SasiKala-fh4qk 3 года назад +4

      SuperAmma

    • @punithaganesan1488
      @punithaganesan1488 3 года назад +2

      வாழ்த்துகள்

    • @sindhujasuresh7730
      @sindhujasuresh7730 3 года назад +1

      Superb madam

    • @rajasekaran2086
      @rajasekaran2086 2 года назад

      தேனீரை நண்பர்களுடன் பருகுவது அதன்சுவையை கூட்டுவதோடு இல்லாமல் ஒரு சுவையான அனுபவமாகவும் இருக்கும்!

  • @arunpandian8503
    @arunpandian8503 3 года назад +31

    தேநீர் இடைவேளை நீங்களும் மா மனிதர் உங்கள் தமிழ் பதிவு மேலும் மேலும் எங்களுக்கு வேண்டும்❤️❤️❤️❤️❤️❤️

  • @saravanananandan4181
    @saravanananandan4181 2 года назад

    அருமையான காணொளி அனைவரிடமும் சேர வேண்டும். மிக்க நன்றி. உங்கள் பயணமும், உங்கள் குழுவும் மென்மேலும் வளர வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன். இப்படிக்கு ச.ஆனந்தன் - பரங்கிப்பேட்டை.

  • @janani481
    @janani481 2 года назад

    மிகவும் அற்புதமான பேச்சு அம்மா நிறைய பழமொழிகளின் விளக்கத்தை தெரிந்து கொண்டேன் என்னோட அம்மாவின் அம்மாவை அம்மாயி சொல்லி கொடுத்தங்க இப்போது தான் அம்மாக்கு நிகர் என்று அழகா சொல்றீங்க அம்மா மிக்க நன்றி😊🔥🙏

  • @mohanmohan852
    @mohanmohan852 3 года назад +21

    அண்ணா உன்னை பிரித்து பார்க்க முடியவில்லை நம் இருவருடைய ருசிகரமும் ஒரே நேர்கோட்டில் உள்ளது. இன்றுதான் நம் தளத்தில் முதல் கருத்தை பதிவிடுகிறேன். இந்த காணொளி(லி) யின் நொடி வெள்ளத்தில் ஒரு துளியை கூட தவறவிடமுடியாது. அம்மாவை அடயாளம் கண்டு எங்களிடம் பகிர்ந்ததே பெரிய தொண்டு. உங்களின் பொறுப்பு கூடிவிடது அண்ணா. இன்னும் எத்தனை காணொளி பதிவிட்டு இதை முறியடிக்க போரானு தெரியவில்லை. பெண்ணின் துனிச்சளை இவ்வளவு அடக்கமான தெளிவான பேச்சில் எவ்வளவு பேரழகாக இருக்கிறார் அம்மா அவர்கள். நான் ரசித்து இளைப்பாறிய 36.31நி நீக்கமற நிறைந்த நினைவு அம்மாவின் பேச்சு. தமிழினத்தின் வற்றா ஊற்று.... அள்ளிப்பருகியும் வார்த்தை கிடைக்கவில்லை எனக்கு. ஒரு நாள் நாம் தேநீர் பருகுவோம்.....

  • @vickyneethiraj3089
    @vickyneethiraj3089 2 года назад +2

    மிகவும் எதார்த்தமான உரையாடல்..... வாழ்தல், வாழ்கின்ற வரை... என்னே சொற்கள்!... இது போன்ற இனிய உரையாடல்கள் தொடர வேண்டும் என்பதே எனது அவா..... இது தேநீர் இடைவேளை அல்ல.. தேன் போன்ற வார்த்தைகளை நீர் இடும் வேளை... வாழ்த்துகள்....❤️🙏🙏

  • @vandhanaramkumar
    @vandhanaramkumar Год назад

    இந்த காணொளியை இன்றே காண கிடைக்கப் பெற்றேன்... மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது... என்றும் தேநீர் இடைவேளையின் ரசிகை நான்..

  • @prabavathit6934
    @prabavathit6934 3 года назад +2

    புனிதா கணேசன் அம்மா, வணக்கம்,
    தேனீர் இடைவேளைக்கு மிக்க நன்றி, மிக அருமையாக உள்ளது பதிவு.
    நான் தங்களின் கல்லூரியில் பயின்ற மாணவி, அன்று கிடைக்காதா தங்களின் சொற்பொழிவு இன்று கேட்டு மகிழ்ந்தேன். வணங்குகிறேன்

    • @sparipoornam263
      @sparipoornam263 3 года назад

      என்றும் திகட்டாத இனிய பதிவு

  • @Ganesh_61
    @Ganesh_61 3 года назад +17

    பல நூல்களை படித்த அனுபவம் அம்மா உங்கள் பேச்சை கேட்டதில்🙏🙏🙏🙏

  • @udhayajai3385
    @udhayajai3385 3 года назад +35

    நீண்ட நாட்களுக்கு பிறகு பழமொழிகளின் உள் கருத்தை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தந்தமைக்கு தேநீர் இடைவெளிக்கு மிக நன்றி....!😍

    • @punithaganesan1488
      @punithaganesan1488 3 года назад +1

      வாழ்த்துகள்

    • @udhayajai3385
      @udhayajai3385 3 года назад +1

      @@punithaganesan1488 தமிழரின் வாழ்வியல் முறை பற்றிய விரிவான விளக்கம் உள்ள புத்தகம் கூறுங்கள் தோழரே நான் படிக்க ஆர்வமாக உள்ளேன்.

    • @udhayajai3385
      @udhayajai3385 3 года назад

      @@g.poongodig.poongodi4281 தாங்கள் கூற விரும்புவது புரியவில்லை

  • @sjenisdavid5772
    @sjenisdavid5772 2 года назад +2

    அருமையான பதிவு. தமிழ் மக்கள் உறவுகளை மேம்படுத்தும் பண்பும், அறிவியல் அறிவு உடையவர்கள் என்பதை கூறிய கல்வியாளர் அம்மாவிற்கும் தேநீர் இடைவேளையின் தொகுப்பாளர்க்கும் நன்றி. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @ganeshamoorthy6669
    @ganeshamoorthy6669 3 года назад +16

    கோடான கோடி நன்றி சகோதரரே🙏🏻

  • @tamilarasithooyamani9143
    @tamilarasithooyamani9143 3 года назад +11

    வெகு நாட்களுக்கு பிறகு அருமையான பதிவை கவனித்த மகிழ்ச்சி😁 நன்றிகள் 🙏

  • @deepakkumarnatarajan5116
    @deepakkumarnatarajan5116 3 года назад +7

    நீங்கள் நல்ல காணொளி செய்கிறீர்கள் . உங்கள் குழுவினர் அனைவருக்கும் நன்றி

  • @bas3995
    @bas3995 2 года назад

    மிக சிறப்பான ஒரு காணொளி. சகோதரி சொல்லிய ஒவ்வொன்றும் சீரிய கருத்துகளை உள்ளடக்கி இருக்கின்றன. தெரியாத பல சொல்லாடல் இன்று தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. அம்மையாரின் சிறந்த பணி தொடர்ந்து நடக்க எல்லாம் வல்ல அண்ணாமலையாரை வேண்டுகிறேன். நன்றி நண்பரே

  • @lakladies
    @lakladies 3 года назад +14

    தமிழில் இல்லாத விசயங்களே இல்லை நன்றி தொடர்ந்து சிறந்த பணி தொடர வாழ்த்துக்கள் 🙏

  • @schoolbreeze8021
    @schoolbreeze8021 3 года назад +29

    தமிழை தமிழில் பேசியதற்கு மிக்க மிக்க நன்றி.

  • @Ambalakaravamsam
    @Ambalakaravamsam 3 года назад +2

    உங்களால் பல தொழிலதிபர்கள் உருவாக்கப்பட்டு இருக்கிறார்கள்! என் வாழ்க்கையை மட்டுமல்ல பல இளைஞர்களின் வாழ்க்கையை மாற்றிய கல்வி பெருந்தகை வாழ்க அம்மா கணேசன் ஐயா என்றும் உங்களின் கல்வி புகழ் .........
    என்றும் நன்றியுடன் சத்யபாலன் நெய்வாசல் அமெரிக்கா

  • @appleofeye
    @appleofeye 3 года назад

    வணக்கம் திருமதி புனிதா கணேசன்! அருமையான விளக்கம். உங்கள் பேச்சு நமது பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் நடைமுறைகளைப் பற்றி இளைய தலைமுறையினருக்கு ஒரு விழிப்புணர்ச்சியாகும். நன்றி!

  • @geethamahendrakumar7800
    @geethamahendrakumar7800 3 года назад +8

    வாழும் வரை மறக்க முடியாத அனுபவம் இந்த காணொளியில் நிறைந்துள்ளது. மிக்க நன்றி 🙏🙏🙏💐💐💐

  • @jeyakumarjk5265
    @jeyakumarjk5265 3 года назад +24

    இருதய அடைப்பு ஏற்பட்டு விட்டால் சரி செய்ய நல்லா யோசனை மிகவும் நன்றி ஆத்தா

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 3 года назад +2

    அம்மாவிற்கு வாழ்த்துக்கள்! உங்களுடைய இந்த கணொளிக்கு நன்றி!!!🙏🙏🙏🇨🇦🇨🇦🇨🇦 அம்மா மண் குதிரையல்ல மண்குதிர் என்பது தான் சரியானது, மன்னிக்கவும்👏🏼👏🏼👏🏼

  • @kaladevi5975
    @kaladevi5975 3 года назад +1

    தெவிட்டாத சுவை புனிதா அம்மாவின் பேச்சு. என் பனிவான வேண்டுகோள். இன்னும் நாங்கள் நிறைய தெரிந்து கொள்ள நிறைய நீங்கள் சொல்ல வேண்டும் அம்மா🙏 உங்களிடம் படித்தவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்

  • @anjallakshmi111
    @anjallakshmi111 3 года назад +12

    கொட்டு பட்டாலும் மோதிரை கையால் கொட்டு படவேண்டும் இது தான் சரி. இந்த காணொளிக்கு மிகவும் நன்றி

  • @tamilhits5000
    @tamilhits5000 3 года назад +33

    நாதுணை பற்றின விளக்கம் அருமை

  • @sampath8630
    @sampath8630 Год назад

    பெருமதிப்பிற்குரிய திருமதி புனிதா கணேசன் அம்மா அவர்களுக்கு வணக்கம் தங்களுடைய பேச்சு அருமை. தொகுத்து வழங்கிய அண்ணாவுக்கு வணக்கம் தேநீர் இடைவேளை அருமையிலும் அருமை. தங்களுடைய சேலத்து ரசிகர்.

  • @selvarajk3838
    @selvarajk3838 2 года назад

    5 நிமிட காணொளிகளை இப்பதிவில், பார்த்து பார்த்து, நீண்ட காணொளியை முழுவதுவும் பார்த்துவோடுவோமா என்றிருந்தேன்.
    இறுதியில் நன்றி சொன்ன தருவாயில், இன்னும் இப்பதிவு நீண்டு இருக்க கூடாதா என்றிருந்தேன்! அருமை

  • @AC-ok8mn
    @AC-ok8mn 3 года назад +6

    மிக்க நன்றி இதுபோல் நிறைய மனிதர்களை எங்களுக்கு அறிமுகப்படுத்து வீர்கள் என்று நம்புகிறேன்

  • @user-om6vg5co1q
    @user-om6vg5co1q 3 года назад +41

    தமிழ் ஆசிரியர் என்பதில் பெருமை.

  • @karthikm5133
    @karthikm5133 2 года назад

    மிக சிறந்த பதிவு நண்பரே...இன்று நான் தேநீர் இடைவேளை காணொளிவுடன் தேநீர் அருந்தியது மிக்க மகிழ்ச்சி நண்பரே... வாழ்த்துக்கள் 🌼🌻🌺

  • @drdyarns7149
    @drdyarns7149 3 года назад +2

    என் அரை மணி நேர பொழுது போக்கை
    பொழுது ஆக்குதல் ஆக மாற்றிய
    கல்வியாளரும் மற்றும் எழுத்தாளரும் ஆகிய திருமதி புனிதா கணேஷ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி
    இந்த தருணத்தை உருவாக்கிக் கொடுத்த தேநீர் இடைவெளிக்கும் என் மனமார்ந்த நன்றி 🙏🙏

  • @crafts4fans421
    @crafts4fans421 3 года назад +6

    தங்கள் பேச்சாற்றலைக் கேட்க வாய்ப்பு அளித்த
    தேநீர் இடைவேளைக்கு நன்றி🙏🏻மற்றும் எழுத்தாளர் அவர்களுக்கும் எனது நன்றியை
    மிகவும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்🙏🏻

  • @ramachanthiran9559
    @ramachanthiran9559 3 года назад +12

    அறிவூட்டும் செய்திகள் 💙

  • @dhaksha3250
    @dhaksha3250 3 года назад

    தேநீர் இடைவேளை , இடைவேளை இல்லாமல் உங்கள் பயணம் தொடர வாழ்த்துகள் , அருமையான பதிவு. அழகான புன்னகை😊 நன்றி.

  • @user-piraiezhili
    @user-piraiezhili 3 года назад +2

    தமிழ் இன்றும் இளமையோடு துள்ளித் திரிவதற்கு இவர்கள் போன்ற தமிழ் பேராசான்கள் காரணமோ.....
    மிகவும் ரசித்து பார்த்த காணொளி.... எவ்வளவு அழகான தமிழ் உச்சரிப்பு.... அவ்வளவு அழகு தமிழ்தாயும் , இவரும்....🥰🥰🥰

  • @kavyaprabhakb7463
    @kavyaprabhakb7463 3 года назад +20

    நீங்கள் செய்யும் இந்த அரும்செயல் நிச்சயமாக பொழுதை ஆக்கும் செயலே.
    நன்றி

  • @selvamselvaraj8226
    @selvamselvaraj8226 3 года назад +14

    நம் கலாச்சரத்தை மீட்டெடுக்க இதுபோன்ற காணொலிகள் அவசியம்
    வாழும்வரை நன்றிகள்

  • @ashokvelkarthikvel7121
    @ashokvelkarthikvel7121 3 года назад +9

    அருமையான பதிவு மற்றும் அணைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் 👍👍👍👍

  • @letriciyagnanaraj5011
    @letriciyagnanaraj5011 3 года назад +3

    நல்ல விஷயங்கள் புனிதா கணேசன் அம்மா இயற்கையை ரசிப்பது எனக்கும் பிடிக்கும் உங்கள் கருந்துகள் அருமை அருமை தங்கள் பணி இனிதே சிறக்க ஆசிரும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் 👌👌👌🌹🌹🌹

  • @vsselvam4012
    @vsselvam4012 3 года назад +4

    தல மிக அருமையான
    காணொளி❤❤
    இதுமாதிரி மேலும் காணொளிகள் வேண்டும்

  • @sandeepmathewj
    @sandeepmathewj 3 года назад +24

    Ada Enga College correspondence Wonderful✨😍 mam.... Bharat college of science and management ... Thanjavur...

  • @krishindira9234
    @krishindira9234 3 года назад

    நெஞ்சு வலி வைத்தியம் மிக்க நன்றி எங்களது பாராட்டுகள். நன்றிகள் நண்பரே தாங்கள் தினமும் நலமுடன் வாழ்வோம்

  • @Jaivihaa36
    @Jaivihaa36 3 года назад +2

    மிக்க நல்ல பதிவு .... அவர் ஒரு வாழும் பல்கலைக்கழகம்.... குணத்தால் உயர்ந்தவர்.....
    வாழ்வும் சொல்லும் ஒன்றே என வாழ்பவர்... நல்ல மனோதிடம் மிக்கவர்.... அவர் உதவும் கரங்கள் வாழ்க ....

  • @manibell2565
    @manibell2565 3 года назад +11

    குழந்தை வளர்ப்பைப் பற்றி அருமையாக கூறிய திருமதி புனிதா கணேசன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி

  • @balajikn2188
    @balajikn2188 3 года назад +13

    நம் முன்னோர்கள் மருத்துவர்களுக்கு சமம்...
    அன்றைய வாழ்வியலை அழகாக சொல்லித் தந்தனர்..

  • @MuhizinisTamilgarden
    @MuhizinisTamilgarden 2 года назад +1

    என் பேரும் புனிதா தான்...உங்க முன்னாடி நான்லாம் சும்மா....நன்றி அக்கா

  • @mayar6275
    @mayar6275 2 года назад

    அண்ணா உங்களுடைய எல்லா பதிவுகளும் நல்ல செய்திகளையும் நற்பண்புகளை வளர்க்கவும் உதவுகின்றன . இது போல் நல்ல புத்தகங்கள் பற்றி ஒரு பதிவை எதிர்பார்க்கிறோம். உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @vsselvam4012
    @vsselvam4012 3 года назад +7

    9:06 எப்பொழுதும்
    தேனீர் இடைவேளை🕗🕓
    பொழுதை ஆக்கும் சேனல்❤❤

  • @2vaalu_kids
    @2vaalu_kids 3 года назад +15

    ஆமை சுடுறது மல்லாக்க
    அதுவும் சொன்னா பொல்லாப்பு
    அருமை அம்மா

  • @madhusaravanan7883
    @madhusaravanan7883 3 года назад +1

    ஓரிரு இடங்களில் மட்டும் ஆங்கில பதிவுகளை கண்டேன். வாழ்த்துகள் என் தமிழ் இனமே.

  • @AbdulRasheed-yx3vm
    @AbdulRasheed-yx3vm 2 года назад

    குயில் பேச கண்டேன்,
    தமிழ் குயிலுக்கு என் அன்பு வணக்கமும்🙏 நன்றியும்.
    தே(இலை) நீர் அல்ல இந்த ( நீ குழல்) வலை ஓளி.
    தேன் நீர் மருந்தாக இனிக்கின்றது.
    வாழ்க நலமுடன் வாழ்த்துகள் ரவி.

  • @solomons8415
    @solomons8415 3 года назад +13

    அறுமை அம்மா கொடுப்பவரை விட பெற்றுக்கொள்பவரே உயர்ந்தவர்

  • @sathyapk8240
    @sathyapk8240 3 года назад +4

    மிக்க நன்றி சகோதரரே இந்த காணொளிக்கு..

  • @ramkumarnathan7356
    @ramkumarnathan7356 2 года назад

    உங்கள் கருத்துகளை வாங்கி கொண்டு பெரியவனாக ஆகி விட்டேன். நன்றி அம்மா

  • @coolmindrelaxation
    @coolmindrelaxation 3 года назад

    அருமையான உரையாடல் . தமிழரின் வாழக்கை முறை , சிரிப்பு அழுகை இருபாலருக்கும் உகந்தது, பழமொழிகள் அர்த்தங்கள், இலக்கியம் அனைத்தும் அருமை அம்மா. இருதய வலி ஏற்படும்போது சின்னவெங்காயம் வைத்தியம் அனைவருக்கும் உதவும். நன்றி.

  • @prakanisanth5977
    @prakanisanth5977 3 года назад +11

    நான் வாழுற வரைக்கும் புனிதா அம்மா கூறிய உணர்வுகளை மறக்க மாட்டேன். அம்மாவிற்கும் நன்றி, தேநீர் இடைவேளை உங்களுக்கும் நன்றி.

  • @Dineshkumar-gy3cz
    @Dineshkumar-gy3cz 3 года назад +6

    தமிழ் எப்போதும் இளமை, இனிமை

  • @saamyshakti
    @saamyshakti 3 года назад +1

    வாழ்க்கையில் தெரிந்து கொள்ள வேண்டியவை.... அருமையான பதிவு தேநீர் இடைவேளைக்கு வாழ்த்துக்கள்.... நல்ல நேர்காணல் நல்ல மனிதர் வாழ்க வளமுடன்.....

  • @abilashmurugesan545
    @abilashmurugesan545 3 года назад

    இன்றைய தலைமுறை பார்க்க வேண்டிய தொகுப்பு . மிக மிக நன்றி அண்ணா....
    தமிழுக்கு தமிழ் இனத்திற்கு கிடைத்த பழமை மாறா பொக்கிஷம் அம்மா.
    நான் வாழும் வரை நினைவு மாறா காணொளி தொகுப்பு. மீண்டும் என் உள்ளம் நிறைந்த அன்புகள்....❤️❤️👍

  • @mr.black.2450
    @mr.black.2450 3 года назад +10

    Vera level inspection சாகும் வரை அல்ல வாழும் வரை..... ஆழமான கருத்து நல்ல அனுபவம் வாய்ந்த சொற்கள்..... 500 crores like kudukalam innum naraya information video panna அடியேனின் வாழ்த்துக்கள்....

  • @d-streetyouths9157
    @d-streetyouths9157 3 года назад +4

    மனதிற்கு இதமான ஒரு நிம்மதி உணர்வு தோழரே இக் காணொளியின்போது.... இன்னும் சற்று நேரம் இருந்திருக்கலாம் என்று தோன்றியது

  • @nelson.s718
    @nelson.s718 Год назад

    அருமையான பதிவு ....தேநீர் இடைவேளைக்கு நன்றி🥰🥰🥰🥰🥰

  • @rathinammuthu3447
    @rathinammuthu3447 2 года назад

    ஆஹா அற்புதம் அற்புதம். பெற்றுக்கொள்பவர் தான் பெரியவர் என்ற கருத்து அற்புதம்.... நன்றி

  • @mohammedfarook6291
    @mohammedfarook6291 3 года назад +26

    மிக மிக மிக அழகானதும் அர்த்தமுள்ளதும் என் தாய் மொழியாம் தங்கத்தமிழ்.

  • @user-yb8qt2qu3v
    @user-yb8qt2qu3v 3 года назад +130

    அண்ண இந்த மாதிரி காணோளி போடுங்க 🙏🙏🙏🙏

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt 3 года назад

    பல விடயங்களை சேர்த்து கோர்வையாக பேசியது மிகவும் நன்றாக இருந்தது. சுத்தமான தமிழில், கீழே இருந்து பேசியது எல்லாம் இயற்கையாக இருந்து மட்டுமல்ல எங்களையும் அந்த சூழலில் இருப்பது போல் உணர வைத்தது. மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது. பாராட்டுக்கள்

  • @periyakarruppan7832
    @periyakarruppan7832 3 года назад +1

    இதுபோன்ற உவமைகள் அழிந்து போய்விடும் என்று கவலையாக இருந்தேன் இன்று அது தீர்ந்து விட்டது மேலும் இது போன்ற உண்மைகளை சேகரித்து புத்தகமாக வெளியிட வேண்டுகிறேன் நன்றி

  • @punithasubramaniyan5049
    @punithasubramaniyan5049 3 года назад +3

    Anna neenga podra videos அனைத்தும் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையானது மற்றும் கொற்றுக்கொள்ள வேண்டியது....உங்க மேல ரொம்ப மரியாதை வருது...thank you anna

    • @theneeridaivelai
      @theneeridaivelai  3 года назад

      தங்களுடைய பேராதரவிற்கு நன்றி சகோ!!

  • @steavlin0176
    @steavlin0176 3 года назад +9

    என்ன தவம் செய்தேனோ தமிழனாய் பிறப்பதற்கு....💛💛💛

  • @70719601960
    @70719601960 2 года назад

    சகோதரிக்கு நன்றி.நல்ல தெரியாத பொருள்களை அறிந்து கொண்டேன். உங்கள் ஒளி , ஒலி செய்திகளுக்கும் நன்றி

  • @bharathianand4618
    @bharathianand4618 2 года назад +1

    மிகவும் அருமையான உரையாடல், இத்தனை நாள் இந்த சேனலை பார்க்காம விட்டுட்டேனேன்னு வருத்தமாக இருக்கு. இன்று தான் subscribe செய்தேன். ரொம்ப சந்தோஷம்.

  • @PrasanthPrasanth-mi2ms
    @PrasanthPrasanth-mi2ms 3 года назад +7

    This is my collage
    An thank you for it thala ❤️❤️❤️❤️❤️
    She is great an legend ❤️❤️❤️❤️

  • @er.trichyprabakaran8240
    @er.trichyprabakaran8240 3 года назад +3

    அருமை மிகவும் நன்றி அம்மா மற்றும் அண்ணனுகளுக்கு

  • @vinayakranjith3566
    @vinayakranjith3566 3 года назад

    இது போன்ற பல கருத்துக்களை வெளி கொண்டு வந்து மக்களின் மனதில் மாற்றத்தை விதைக்கும் #தேனீர் இடைவேளை சகோதரர் அவர்களை நினைத்து பெருமை கொள்கிறேன்...... வாழ்த்துக்கள் சகோ உங்கள் சிந்தனையும் செயலும் உங்களை உயர்த்தி கொண்டே இருக்கும் வாழ்க வளமுடன்...💐💐🤝🤝🙏🙏

  • @Ashokkumar-uc4wy
    @Ashokkumar-uc4wy 3 года назад +2

    இரண்டாம் பகுதியாக நாட்டுப்புற பாடல் சொல்லொடை பற்றி விரிவாக அவர்களிடம் கேட்டு அதனையும் பதிவிடவும் இந்த காணொளி மிகவும் அருமை.....

  • @suganyasethupathy7195
    @suganyasethupathy7195 3 года назад +3

    அருமையான பதிவு.முன்னாள் மாணவி என்று பெருமை கொள்கிறேன். நாற்றனர் பற்றி கூறியது புதிய தகவல் கொண்டேன்

  • @mani67669
    @mani67669 3 года назад +3

    தேனாக சுவைத்த தேனிர் இடைவேளை. நன்றி.

  • @Pushpa-jw6rf
    @Pushpa-jw6rf 3 года назад

    மிக நல்ல கருத்து.நான் பார்த்து வியந்த உயர்ந்த மனிதர்களில் ஒருவர் கணேசன் சார்மற்றும் புனிதா கணேசன் மேடம்.
    எப்படி இருக்கீங்க madam?

  • @vinayagmuruga9344
    @vinayagmuruga9344 3 года назад

    உண்மையிலேயே நானும் தேனீர் இடைவேளை'யில் நிறைய பெற்றும், கேட்டும், ரசித்தும் கொண்டேன்👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏இந்த அழகிய தருணத்தை கொடுத்த உங்கள் (முழுகுழுவிற்கும்)அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளும், வாழ்த்துக்களும்👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @poovarasipichaindi7653
    @poovarasipichaindi7653 3 года назад +3

    மிகவும் நன்றி அண்ணா....

  • @goldking6283
    @goldking6283 3 года назад +3

    Time is 12.40 am.. but still watching.. hats off u .. v r proud to be tamilan

  • @rajaduraic1375
    @rajaduraic1375 2 года назад

    அருமை எவ்வளவு செய்திகள் அறியமுடிகிறது....

  • @vijaysarathi8367
    @vijaysarathi8367 2 года назад

    சகோ
    வார்த்தைகள் இல்லை ,
    என் உள்ளக்களிப்பை சொல்வதற்கு
    . உண்மையிலேயே உங்க காணொளிகள் அனைத்தும் பொழுதை ஆக்குவதற்கானதாக உள்ளது.
    இனியும் தொடரும் என்ற நம்பிக்கையோடு ...
    மேலும் மேலும் நீங்களும் உங்கள் youtube channel வளர வாழ்த்துக்கள் 🙏🏼👍👌

  • @ragupathiloganathan4706
    @ragupathiloganathan4706 3 года назад +3

    மிகவும் அழகான முக்கிய பதிவு👍 நேகிழ்சியானாதும்