இந்தக் கோவிலுக்கு நிகரான கோவில் உலகத்திலேயே வேற கோவில் இல்லை

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • தல வரலாறு : முற்காலத்தில் இந்தப் பகுதி கடம்ப மரங்கள் நிறைந்த, கடம்ப வனமாக இருந்திருக்கிறது. இந்தக் கடம்ப வனத்தில் தினமும் நள்ளிரவு வேளையில் தீம்பிழம்பு தோன்றுவது வாடிக்கையாக இருந்துள்ளது. ஒரு முறை நள்ளிரவு நேரத்தில் இந்தக் கடம்ப வனம் வழியாக வணிகன் ஒருவன் சென்று கொண்டிருந்தான். அப்போது திடீரென்று அங்கு ஒரு தீம்பிழம்பு தோன்றி, அதில் இருந்து சிவலிங்கம் வெளிப்பட்டது. அந்த சிவலிங்கத்தை தேவர் களும், முனிவர்களும் வழிபட்டனர். இந்தக் காட்சியைக் கண்ட வணிகன் பரவசம் அடைந்தான்.
    தான் கண்ட காட்சியைப் பற்றி, அந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்த பராந்தகச் சோழ மன்னனிடம் போய் கூறினான் வணிகன். அந்த நேரத்தில் சோழ மன்னனின் அரண்மனையில் குலசேகர பாண்டியன் விருந்தினராக தங்கியிருந்தார். வணிகன் கூறியதைக் கேட்டு ஆச்சரியம் கொண்ட சோழ மன்னனும், பாண்டிய மன்னனும் தங்கள் பரிவாரங்களுடன் கடம்பவனப் பகுதிக்கு வந்தனர். பின்னர் அந்த வனத்திற்குள் சிவலிங்கத்தைத் தேடி அலைந்தனர்.
    செல்வம் அருளும் ஏகாம்பரேஸ்வரர் கோவில் - செட்டிக்குளம்
    பெரம்பலூரில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது செட்டிக்குளம் என்ற ஊர். இங்கு இரண்டு முக்கிய ஆலயங்கள் உள்ளன. வடபழனி என்று அழைக்கப்படும் மலைக்குன்றின் மீது ஞானம் அருளும் தண்டாயுதபாணி திருக்கோவிலும், ஊருக்குள் ஏகாம்பரேஸ்வரர் ஆலயமும் இருக்கின்றன. இதில் ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் செல்வம் வழங்கும் குபேரனுக்கு தனிச் சன்னிதி அமைந்துள்ளது.

Комментарии • 7