இயற்கை எழில் கொஞ்சும் பிச்சாவரம் (அலையாத்தி காடுகள்).

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • About:
    Thillaigeetham channel cover all videos and articles in and around chidambaram.
    பற்றி:
    தில்லைகீதம் சேனல் சிதம்பரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து வீடியோக்கள் மற்றும் கட்டுரைகளை உள்ளடக்கும்.
    -----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Video details:
    தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரத்தில் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பச்சை பசேலென பச்சை போர்வை போர்த்தியதைப் போல் பரந்து விரிந்து காணப்படுகிறது பிச்சாவரம் வனப்பகுதி. சதுப்பு நிலங்களில் மட்டுமே வளரும் சுரபுன்னை என்ற அரிய வகை தாவரங்களைக் கொண்டு அடர்ந்து காணப்படுவது தான் பிச்சாவரம் அலையாத்தி காடுகள். வட இந்தியாவில் உள்ள மேற்கு வங்காளம் மாநிலத்தில் கங்கை ஆறு கடலில் கலக்கும் இடத்தில் சதுப்பு நிலத்தில் இது போன்ற சுரபுன்னை எனப்படும் மாங்குரோவ் காடு உள்ளது. அதற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய சுரபுன்னை காடு தமிழகத்தின் பிச்சாவரத்தில் தான் உள்ளது. அதனால் தான் இந்த பிச்சாவரம் மிகப்பெரிய சுற்றுலா மையமாக விளங்கி வருகிறது. தண்ணீருக்குள் ஒளிந்து கொண்ட செடிகளைப் போன்று காணப்படும் இந்த காட்டுப் பகுதிக்குள் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு,சிறு கால்வாய்கள் உள்ளன. இந்த கால்வாய்களின் வழியே படகு சவாரி செய்வது அலாதியான ஆனந்தத்தை தருகிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் படகுகள் இயக்கப்படுகின்றன. வனத்துறை சார்பிலும் சில படகுகள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
    -----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Click this below link to read more interesting articles in :
    thillaigeetham...
    thillaigeetham...

Комментарии • 1

  • @neethimani1511
    @neethimani1511 День назад

    அற்புதமான வார்த்தை கோர்வைகளுடன், அலையாத்தி காடுகளின் பெருமைகளை, பறந்து விரிந்து கிடக்கும் அதன் அழகியலையும் அற்புதமாக கூறினீர்கள்.தங்களுக்கு அன்பும் நன்றியும்