முறுக்குல இத்தன வகையா? அசத்தும் தேனிக்கடை | Theni Jallipatti murukku | 30 Types of Special Murukku

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • முறுக்குல இத்தன வகையா? அசத்தும் தேனிக்கடை | Theni Jallipatti murukku | 30 Types of Special Murukku
    #Theni #Jallipatti #Murukku
    சின்னவங்கலருந்து பெரியவங்க வரைக்கும் ஸ்னாக்ஸ் சாப்ட்ர பழக்கம் எல்லாருக்குமே இருக்கும். அதிலயும் ஒரு சில ஸ்னாக்ஸ் ஐடம்ஸ் ரொம்பவே விரும்பி சாப்டுவாங்க . அப்டி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஸ்னாக்ஸ் பிடிக்கும். ஆனா எல்லாருக்குமே பிடிக்குற ஒரு ஸ்னாக்ஸ்னா அது முறுக்குதா. என்ன முறுக்குதானேனு அவ்ளோ அசால்ட்டா நினைக்காதீங்க இதுல நம்மலோட பாரம்பரியமும் இருக்கு அதாங்க தமிழர்களின் பாரம்பரிய சிற்றுண்டி உணவுல முதண்மைச் சிற்றுண்டி உணவுனும் சொல்லுவாங்க. இந்த முறுக்கு தென்னிந்திய மாநிலங்கல்ல பெரும்பாலும் இந்தியா, இலங்கை , மலேசியா போன்ற நாடுகல்ல இருக்குர பெரும்பாலான தமிழர்கள் விரும்பி சாப்ட்ர ஒரு சிற்றுண்டி உணவு பொருள்தான் இந்த முறுக்கு. என்னப்பா ஒரு முறுக்குக்கு இப்டி கத சொல்லனும்னு கேக்குறீங்களா அப்டி ஈஸியா சொல்லிட முடியாதுங்க. இது வரைக்கும் ஏதோ ஒரு கடைல போய் ஒரு முறுக்கு குடுங்கனு கேட்டு கடைக்காரர் கொடுக்குற முறுக்க வாங்கி சாப்ட்டு இருப்போம். ஆனா இப்போலாம் ஒவ்வொன்னுக்கும் ஒவ்வொரு வெரைட்டி குடுக்க வேண்டியது இருக்கு. அப்டி முறுக்குக்கு 30 வகையான வெரைட்டியா தயாரிக்குற இடம்தான் தேனி மாவட்டத்துலருந்து பெரியகுளம் போர்ற வழில இருக்குற ஒரு கிராமத்துல இயற்கையா கிடைக்குற தக்காளி, பூண்டு, கருவேப்பிலைனு இயற்கை முறையில் தயாரிக்குற ஒரு முறுக்கு தயாரிகுற இடத்ததா நாம பாத்தது. அப்டி என்ன 30 வகையான வெரைட்டி முறுக்குனு கேக்குறீங்களா வாங்க பாக்கலாம். ஜல்லிப்பட்டிங்கர ஒரு கிராமத்துல சின்னதா ஒரு குடிசை தொழிலா ஆரம்பிச்சு இப்ப சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளி நாடுகளுக்கு இங்க இருந்து முறுக்கு ஏற்றுமதி செய்ர அளவுக்கு முறுக்கு தயாரிக்கும் தொழில் வளர்ந்துருக்குனு சொல்றாரு இந்த முறுக்கு கம்பெனியோட உரிமையாளர். இந்த சின்ன கிராமத்துல இருக்க பெண்கள் அனைவரும் பெரும்பாலும் இந்த முறுக்கு தயாரிக்கும் கம்பெனிலதா வேலை செய்றத பாக்க முடியுது. இங்க தயாரிக்கப்படும் முறுக்குல சேர்க்கப்படும் வெங்காயம் , தக்காளி , கொத்தமல்லி , கருவேப்பிலைனு தங்களோட சொந்த விவசாயத்துல இயற்கை முறையா தயாராகும் உணவு பொருட்கள கொண்டு முறுக்கு தயாரிக்குறதா இந்த கம்பெனியோட உரிமையாளர் சொல்றாரு. நாங்க இதுவரைக்கும் எந்த ஒரு கலப்பட கெமிக்கல்ஸ்ம் பயன்படுத்துரது இல்லனும் தங்களோட வெளி மாவட்டங்கல்லயும் சரி வெளி நாடுக்கு ஏற்றுமதி செய்றதுலயும் சரி எங்க முறுக்குக்கு எப்பவுமே ஒரு தனி மார்க்கெட் இருக்குனும் உரிமையாளர் பெருமையா சொல்றத பாக்க முடிஞ்சது.
    CREDITS:
    Reporter: Nagaraj
    Editing: Vivekanandan
    Voice Over: Arunmozhivarman
    வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
    உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
    Hello Tamil Nadu, we are ABP Nadu
    Our news in our language
    ABP Nadu website: tamil.abplive....
    Follow ABP Nadu on,
    / abpnadu
    / abpnadu
    / abpnadu

Комментарии • 44

  • @elanthirayan2086
    @elanthirayan2086 3 года назад +3

    சென்னையில் இந்த முறுக்கு கிடைக்கிறது. எங்கள் வீட்டருகில் உள்ள கடையில் இருக்கிறது. சுவை அருமையாக உள்ளது.

  • @appleofeye
    @appleofeye 3 года назад +2

    வணக்கம்! அருமையான பதிவு! பார்த்தவுடன் அனைத்து வகை முறுக்கையும் அப்படியே சாப்பிடணும் போல் இருக்கு! நன்றி

  • @kingrajacholan7982
    @kingrajacholan7982 3 года назад +1

    மிக அருமையான பதிவு...

  • @alavandank9168
    @alavandank9168 3 месяца назад +1

    தொலைபேசி எண் வேண்டும் கடை புதிதாக வைத்துக் கொள்கிறோம்

  • @selvamk3352
    @selvamk3352 Год назад +2

    Adras pliz???

  • @kingrajacholan7982
    @kingrajacholan7982 3 года назад +9

    முகவரி ..தொலைபேசி எண்...வேண்டும்..

    • @varatharajaperumal3941
      @varatharajaperumal3941 Год назад

      We need address and phone number

    • @varatharajaperumal3941
      @varatharajaperumal3941 Год назад

      I wanted to deal with you. Iam in siliguri west bengal

    • @SivaSivaRM-xj2fx
      @SivaSivaRM-xj2fx Год назад

      ஜல்லிக்கட்டு முறுக்கு தமிழ் போன் நம்பர்

  • @SuppuRaju-v8m
    @SuppuRaju-v8m 2 месяца назад

    சென்னை ககு கிடைக்குமா

  • @RajeshR-jw3vj
    @RajeshR-jw3vj Год назад

    This is our village

  • @vinothsvr5828
    @vinothsvr5828 Месяц назад

    இந்த கம்பெனி ஃபோன் நம்பர் வேண்டும்

  • @bastinbastin8672
    @bastinbastin8672 Год назад +3

    செல் நம்பரேகொடுக்காமல் எதற்கு இந்த வீண் விளம்பரம்

  • @sivababu3472
    @sivababu3472 Год назад

    I want distribution sir

  • @KabeerPm-on9dc
    @KabeerPm-on9dc Год назад

    Hello from kerala kottayam murkk vyaparam cheyyrthukku ankeyirunnu vangan phon no: kodunke

  • @rdinesh7735
    @rdinesh7735 Год назад

    Sir your company address

  • @NishalS-k6p
    @NishalS-k6p 10 месяцев назад

    Wholesale price me

  • @mambakkamananthan2553
    @mambakkamananthan2553 2 года назад

    Pl. Provide the telephone no. If saduragiri murukku vo.

  • @mykuttychellam7655
    @mykuttychellam7655 Год назад

    Number address vendum

  • @K.M.P.AUDIOSAUDIOSMmariyappanT

    Phone, nampar

  • @balakrishnan-su1wu
    @balakrishnan-su1wu 9 месяцев назад

    போன் நம்பர் வேணும்

  • @gopinath8932
    @gopinath8932 2 года назад +1

    Phone number illaye sr...???

  • @seshanaravamudhan5241
    @seshanaravamudhan5241 Год назад +1

    போன் நம்பர் கொடுத்தால் ஆர்டர் கொடுக்கலாம்.

  • @AwadheshRaja-ux3pl
    @AwadheshRaja-ux3pl 5 месяцев назад

    Karigar hu mai muruku ka

  • @mareswaranmarees-gv9fn
    @mareswaranmarees-gv9fn Год назад

    ஏங்க ஐயா நீங்க சொல்வதைப்
    பார்த்தால் யாரும்
    நம்மகடையில் கேட்க
    கூடாது எனயெண்ணுவது
    போலத்தெரிகிறது.
    எல்லோரும்வாங்கினால்
    Taxe கட்டவேண்டியது
    வரும் என்பதாலா?
    அப்படியில்லை என்றால்
    போன்நம்பரும் விலாசமும்
    தரலாமே.! எல்லோரும்
    நமதுமுயற்சிபலனளிக்க
    வேண்டுமெனயெண்ணம்
    இருக்கும்.உங்களுக்கு
    வளர்ச்சிபிடிக்கவில்லை
    என்ற எண்ணம் இருந்தால்
    போன்நம்பர்தரவேணாம்!
    நன்றி! நன்றி!!