242. சீதள வாரிஜ பாதா நமோநம (திருப்புகழ்) - Seethala Varija Patha Namonama (Thirupugazh)

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025
  • 242. சீதள வாரிஜ பாதா நமோநம (திருப்புகழ்) - Seethala Varija Patha Namonama (Thirupugazh)
    (பாடல் வரிசை எண் 725 தலம் : சிறுவை)
    சீதள வாரிஜ பாதா நமோநம
    நாரத கீத விநோதா நமோநம
    சேவல மாமயில் ப்ரீதா நமோநம
    மறைதேடும் (2)
    சேகரமானப்ர தாபா நமோநம
    ஆகம சார சொரூபா நமோநம
    தேவர்கள் சேனை மகீபா நமோநம
    கதிதோய (2)
    பாதக நீவு குடாரா நமோநம
    மா அசுரேச கடோரா நமோநம
    பாரினிலே ஜய வீரா நமோநம
    மலைமாது (2)
    பார்வதியாள் தரு பாலா நமோநம,
    நாவல ஞான மனஉலா நமோநம
    பாலகுமாரசுவாமீ நமோநம
    அருள்தாராய் (2)
    போதக மாமுக நேரான சோதர
    நீறணி வேணியர் நேயா ப்ரபாகர
    பூமகளார் மருகேசா மகோததி
    யிகல்சூரா (2)
    போதக மாமறை ஞானா தயாகர
    தேனவிழ் நீப நறாவாரு மார்பக
    பூரண மாமதி போலாறு மாமுக
    முருகேசா (2)
    மாதவர் தேவர்களோடே முராரியும்
    மாமலர் மீதுறை வேதாவுமே புகழ்
    மாநிலம் ஏழினு மேலான நாயக
    வடிவேலா (2)
    வானவ ரூரினும் வீறாகி வீறள
    காபுரி வாழ்வினு மேலாகவே திரு
    வாழ் சிறுவாபுரி வாழ்வே சுராதிபர்
    பெருமாளே (2)
    வாழ் சிறுவாபுரி வாழ்வே சுராதிபர்
    பெருமாளே!
    பெருமாளே!
    பெருமாளே!!

Комментарии •