தமிழகம் மறந்து போன அதிசய கோவில்!! உங்கள் எதிரியின் பலத்தை தூள் தூளாக்கும் சிவாலயம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில் இந்தியாவின் தமிழ்நாட்டில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிவன் கோவில் ஆகும். இது கங்கை கொண்ட சோழபுரம் என்ற ஊரில் முதலாம் இராசேந்திர சோழனால் கட்டப்பட்டது.[1] கங்கை ஆறு வரை படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றதன் நினைவாக, கங்கை கொண்ட சோழபுரம் என்ற நகரத்தை முதலாம் இராசேந்திரன் அமைத்து அங்கு இக்கோவிலையும் கட்டினான். இக்கோவில், ஐராவதேஸ்வரர் கோயில், பெருவுடையார் கோயில் ஆகிய மூன்றும் சேர்த்து அழியாத சோழர் பெருங்கோயில்கள் எனப்படுகின்றன.[1] இத்தலம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும்.[2]
    கட்டமைப்பு
    கொடி மரம்
    560 அடி (170 m) நீளமும் 320 அடி (98 m) அகலமும் கொண்ட முற்றத்துடன் கூடிய உயர்ந்த மேடைமீது இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. நடுக் கருவறையில் இக்கோயிலின் முதன்மை இறைவனான பிரகதீசுவரர் (சிவன்) லிங்க வடிவில் உள்ளார். முற்றத்தின் முக்கியப்பகுதி கிழமேற்காக 104 m (341 அடி) by 30.5 m (100 அடி) அளவுகொண்டுள்ளது.[3] லிங்கத்தின் உயரம் 4 m (13 அடி); அடிப்பகுதியின் சுற்றளவு 18 m (59 அடி).[4] 100 sq ft (9.3 m2) அளவுள்ள கருவறைக்கு முன் அர்த்தமண்டபமும் தூண்களமைந்த முன்மண்டபமும் உள்ளன. கருவறையின் முன் இருபுறமும் 6 அடி (1.8 m) உயரமுள்ள துவாரபாலகர்கள் சிலைகள் காணப்படுகின்றன. கருவறையின் மீதுள்ள விமானத்தின் உயரம் 55 m (180 அடி); இவ்விமானம் தஞ்சாவூர் பெருவுடையார் கோவில் விமானத்தைவிட 3 m (9.8 அடி) உயரம் குறைவானது. பெருவுடையார் கோயில் விமானத்தின் அடுக்குகள் நேரானவையாகும் இக்கோயில் விமான அடுக்குகள் வளைவாகவும் உள்ளன.[3] மற்றெந்த சிவன் கோயில்களிலும் உள்ள இலிங்கங்களைவிட, 4 m (13 அடி) அடி உயரமுள்ள இக்கோயில் இலிங்கம் மிக உயரமானதாகும்.[5]
    நந்தி
    சிம்மக் கிணறு
    கருவறைக்குள் சூரிய ஒளியை எதிரொளிக்கும் வகையில் கருவறையை நோக்கியவாறு நந்தி (200 m (660 அடி)) அமைக்கப்பட்டுள்ளது.[6] கருவறை எப்பொழுதும் குளிர்ச்சியாக இருக்கும்வகையில் அங்கு சந்திரக்காந்தக் கல் பதிக்கப்பட்டுள்ளது. தெற்குநோக்கிய அம்மன் சன்னிதியிலுள்ள பெரியநாயகி அம்மன் திருஉருவச் சிலையின் உயரம் 9.5 அடி (2.9 m) ஆகும். பிரகதீசுவரர் கருவறையைச் சுற்றி ஐந்து கருவறைகளும் சிம்மக்கிணறும் உள்ளன.
    அண்மையில் இக்கோயிலில் கொடி மரம் அமைக்கப்பட்டது. கொடி மரம் அமைக்கப்பட்ட பின்னர் பிரம்மோற்சவம் நிகழ்த்தப்பட்டது.

Комментарии • 5

  • @Kaviminnalrpsamy
    @Kaviminnalrpsamy 7 месяцев назад +1

    நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை.... நான் பல வருடங்களாக முயற்சி செய்து இன்னும் இந்த கோயிலுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை...ஒருமுறை சென்ற போது இரவு நடை அடைத்து விட்டார்கள்... விரைவில் அவரது அருளால் தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்... ஓம் நமசிவாய

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  7 месяцев назад +1

      நிச்சயம் இறைவன் அருளால் மிக விரைவில் உங்களுக்கு சிறப்புமிக்க தரிசனம் கிடைக்கும் ஓம் நமசிவாய🙏

  • @nagalakshmit5219
    @nagalakshmit5219 7 месяцев назад +1

    சுற்றிப் பார்க்கவே எவ்வளவு நேரம் ஆகிறது.இதை கட்டி முடிக்க வேண்டும் என்றால் எத்தனை நாள் ஆகி இருக்கும்.

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 7 месяцев назад

    🙏🌹🌼சிவாய நம🙏❤❤❤❤🎉🎉🎉🎉