1191.Islam Me Mukammal Dakhil Ho Jao...! (Part.01 of 02)

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024
  • தமிழ் மொழி பெயர்ப்பு (Tamil Translation).1191
    [Islam Me Mukammal Dakhil Ho Jao...! (Part.01 of 02)]
    இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்...! (Part.01 of 02)
    என்னுடைய தந்தை (ஆமிரி சர்க்கார் கிப்லா ரஹ்மத்துல்லாஹி அலைஹி) பின்வரும் உதாரணத்தைக் கூறினார்கள், நீங்கள் ரெயிலில் பயணம் செய்கின்றீர்கள். ரெயிலின் கதவுக்கு அருகில் நின்றுக் கொண்டு, உங்கள் கையை வெளியே நீட்டுகின்றீர்கள். உங்கள் உடல் முழுவதும் ரெயிலில் இருக்கின்றது. ஆனால், கை மட்டும் ரெயிலுக்கு வெளியே உள்ளது. இப்போது என்ன நிகழும்?. வெளியே ஏதாவதொரு இரும்பு கம்பம் வந்தால், கையை உடைத்துத் துண்டாக்கிச் சென்றுவிடும் அல்லவா!. இது போன்றே இஸ்லாத்தில் நீங்கள் முழுமையாக நுழைந்துவிடுங்கள். இதனால் எல்லாவிதமான முஸீபத்திலிருந்தும், எல்லாவிதமான ஆபத்துகளிலிருந்தும் தப்பித்துக் கொள்வீர்கள்.
    يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا ادْخُلُوْا فِى السِّلْمِ کَآفَّةً  وَلَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّيْطٰنِ‌ اِنَّهٗ لَـکُمْ عَدُوٌّ مُّبِيْنٌ‏
    நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்; தவிர ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான்,
    (அல்குர்ஆன் : 2:208)
    2. உங்களுக்கு நலம் நாடுவதில் இறைவனை விட மேலாக வேறு யாரும் இருக்கமாட்டார்கள். எவன் உங்களுக்கு உஜுதை வழங்கினானோ, Existence (உள்ளமையை) வழங்கினானோ, எவன் உங்களுக்கு ஹயாத்தை (உயிரை) வழங்கினானோ, எவன் உங்களுக்கு இல்மை (கல்வி ஞானத்தை) வழங்கினானோ, எவன் உங்களுக்கு இராதாவை (நாட்டத்தை) வழங்கினானோ, எவன் உங்களுக்கு குத்ரத்தை (ஆற்றலை) வழங்கினானோ, எவன் உங்களுக்கு ஸமாஅத்தை (கேட்கும் திறனை) வழங்கினானோ, எவன் உங்களுக்கு பஸாரத்தை (பார்க்கும் திறனை) வழங்கினானோ, எவன் உங்களுக்கு கலாமை (பேச்சாற்றலை) வழங்கினானோ, எவன் உங்களுக்கு தாய், தந்தையரை வழங்கினானோ, எவன் தாய் தந்தையரை உங்கள் மீது கருணை கொண்டவர்களாக ஆக்கினானோ, எவன் உங்களுக்கு ஆரோக்கியத்தை வழங்கினானோ, அப்படிப்பட்ட இறைவன் கூறுகின்றான், "நான் உன்னை என்னுடைய நிஃமத்துகளைக் கொண்டு அலங்கரித்துள்ளேன். தலை முதல் பாதம் வரை நீ என்னுடைய நிஃமத்துக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளாய் மனிதா! (ஆனால் நீயோ) என்னுடைய நிஃமத்துகளை வீணாக்குகின்றாய்! தொழுகை தொழாமல் என்னுடைய நிஃமத்துகளை வீணாக்குகின்றாய்! தவறான பார்வைகளால், பொய் கூறுவதால், புறம் பேசுவதினால் என்னுடைய நிஃமத்துகளை வீணாக்குகின்றாயே! நீ இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடு!".
    3. இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள் என்பதன் பொருள் என்ன, எந்தெந்த காரியங்களையெல்லாம் அல்லாஹு தஆலா செய்யக்கூடாதென்று தடுத்தானோ, அப்படிப்பட்ட ஹராமான காரியங்களை, மக்ரூஹே தஹ்ரீமி காரியங்களை, இஸாஅத் காரியங்களை நிரந்தரமாக விட்டுவிட வேண்டும். மேலும், அல்லாஹு தஆலா நம்மை செய்யக் கட்டளையிட்ட அனைத்து காரியங்களையும், (அதாவது) எந்தெந்த காரியங்களெல்லாம் ஃபர்ள் என்று அழைக்கப்படுகிறதோ, எந்தெந்த காரியங்களெல்லாம் வாஜிப் என்று அழைக்கப்படுகிறதோ, எந்தெந்த காரியங்களெல்லாம் சுன்னத்தே முஅக்கதா என்று அழைக்கப்படுகிறதோ, அவற்றையெல்லாம் தொடர்ந்து செய்து வர வேண்டும். இவற்றை நிரந்தரமாக செய்து வருபவராக நீங்கள் ஆகிவிட்டீர்கள் என்றால் நீங்கள் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்தவராக ஆகிவிடுவீர்கள்.
    4. இப்போது ஆபத்துகளை கண்டு நீங்கள் வெருண்டொடுகிறீர்கள். அப்போது ஆபத்தானது உங்களைக் கண்டு வெருண்டொடும். ஆபத்திற்கே நீங்கள் ஆபத்தாகிவிடுவீர்கள். இப்போது முஸீபத்துகளை கண்டு நீங்கள் வெருண்டொடுகிறீர்கள். அப்போது முஸீபத்தானது உங்களைக் கண்டு வெருண்டொடும். இப்போது ஷைத்தானைக் கண்டு நீங்கள் பயந்து வெருண்டொடுகிறீர்கள். அப்போது ஷைத்தான் உங்களைக் கண்டு பயந்து வெருண்டொடுவான். ஹழ்ரத் உமரே ஃபாரூக் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களைக் கண்டு ஷைத்தான் வெருண்டோடினான். குறைந்தபட்சம் நீங்கள் ஹழ்ரத் உமரே ஃபாரூக் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் குலாமாகவாவது ஆகுங்கள்.
    - அல்லாமா பெஹ்ருல் உலூம் மு(f)பஸ்ஸிரே குர்ஆன், ஷாரிஹே மஸ்னவி, அபுல் இஹ்சான், மௌலானா பீர்(z)ஸாதா செய்யத் முஹம்மத் ர(z)ஸாவுல் ஹக் ஆமிர் அலீமி ஷா ஆமிரி ஹஸனி வல் ஹுஸைனி சிஷ்திய்யுல் காதிரி, ஜாஃபரிய்யுல் ஜீலானி (தாமத் பரக்காதுஹூ) - ராயப்பேட்டை, சென்னை
    Click below link to watch Part.02
    • 1192.Islam Me Mukammal...

Комментарии • 1

  • @SaadiaSultana-fy7og
    @SaadiaSultana-fy7og 2 месяца назад +1

    Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.
    Beshak,.
    InshaAllah