1227.Rahmat Ka Farishta Kis Ghar Main Dakhil Nahi Hota?

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024
  • தமிழ் மொழி பெயர்ப்பு (Tamil Translation).1227
    (Rahmat Ka Farishta Kis Ghar Main Dakhil Nahi Hota?)
    ரஹ்மத்துடைய வானவர்கள் எந்த வீட்டிற்குள் நுழையமாட்டார்கள்?
    உங்களுடைய வீடுகளில் நாய் வளர்க்காதீர்கள். ரஹ்மத்துடைய வானவர்கள் வரமாட்டார்கள். வீடுகளில் நாய் வளர்ப்பது ஹராமாகும். நாயுடன் உறங்குவது ஹராமாகும். நாயை மடியில் வைத்திருப்பது ஹராமாகும். விவசாய நிலங்களின் பாதுகாப்பிற்காக நாய் வளர்க்கலாம். அதுவும் விவசாய நிலங்களுக்கு அருகிலேயே கட்டி வைக்க வேண்டும். மாறாக வீடுகளுக்குள் கொண்டு வரக்கூடாது. வீட்டின் பாதுகாப்பிற்காகவும் நாய் வளர்க்கலாம். ஆனால் அவற்றை வீட்டிற்குள் கொண்டு வரக்கூடாது. வீட்டிற்கு வெளியே அதற்கான கூண்டில் அடைத்து வைக்க வேண்டும் அல்லது கயிற்றால் கட்டி வைக்க வேண்டும். நாயின் எச்சி அசுத்தமாகும். எச்சி தவிர நாயின் மற்ற உடல் சுத்தமாகும்.
    2. நாயானது எப்போதும் எச்சி வடித்துக் கொண்டே இருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே, நீங்கள் நாயை வீட்டினுள் வளர்க்கும் போது, அது வீடு முழுவதும் எச்சி வடித்துக் கொண்டே இருக்கும்.
    عن أبي طلحة رضي الله عنه قال: قال رسول الله ﷺ: لا تَدْخُلُ المَلائِكَةُ بَيْتًا فيه كَلْبٌ ولا صُورَةٌ. [أخرجه البخاري]
    பெருமானார் ரஸூலுல்லாஹி (ﷺ) அவர்கள் கூறினார்கள்: நாயும், உருவப் படங்களும் உள்ள வீட்டினுள் வானவர்கள் நுழைய மாட்டார்கள்.
    அறிவிப்பாளர்: அபூ தல்ஹா (ரலியல்லாஹு அன்ஹு)
    நூல்: ஸஹீஹுல் புகாரி
    ரஹ்மத்துடைய வானவர்கள் உங்கள் வீடுகளுக்குள் வரவில்லையென்றால், உங்களுடைய வீட்டில் ரஹ்மத் எவ்வாறு வரும்?.
    3. ப்பீர் சாபின் (ஷைக்மார்களின்) புகைப்படங்கள், தாதா ப்பீரின் புகைப்படங்கள், சஜ்ஜா ப்பீரின் புகைப்படங்கள் என வீட்டில் போட்டோக்களை மாட்டி வைத்துக் கொண்டிருக்கின்றீர்கள். என்ன இது?. தரீக்கத்தில் உள்ளவர்களுக்கு ஷரீஅத் (சட்டங்கள்) இல்லையா என்ன!. உங்களுடைய வீடுகளில் படங்கள் இருந்தால், உடனே எடுத்துவிடுங்கள்.
    عبدالله بن مسعود رضي الله عنه قال: قال رسول الله ﷺ: إنَّ أشَدَّ النّاسِ عَذابًا عِنْدَ اللَّهِ يَومَ القِيامَةِ المُصَوِّرُونَ.[أخرجه البخاري]
    பெருமானார் ரஸூலுல்லாஹி (ﷺ) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்விடம் மறுமை நாளில் மிகக் கடுமையான வேதனைக்கு உள்ளாவோர் உருவங்களைப் படைப்போர்.
    அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலியல்லாஹு அன்ஹு)
    நூல்: ஸஹீஹுல் புகாரி
    டீவியில் நீங்கள் ஷைக்மார்களின் பயான்களைப் பார்ப்பது பிரதிபலிப்பாகும். மாறாக புகைப்படம் அல்ல.
    - அல்லாமா பெஹ்ருல் உலூம் மு(f)பஸ்ஸிரே குர்ஆன், ஷாரிஹே மஸ்னவி, அபுல் இஹ்சான், மௌலானா பீர்(z)ஸாதா செய்யத் முஹம்மத் ர(z)ஸாவுல் ஹக் ஆமிர் அலீமி ஷா ஆமிரி ஹஸனி வல் ஹுஸைனி சிஷ்திய்யுல் காதிரி, ஜாஃபரிய்யுல் ஜீலானி (தாமத் பரக்காதுஹூ) - ராயப்பேட்டை, சென்னை

Комментарии •