1218.Koi Bhi Amal Ko Mamuli Na Samjho...!

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024
  • தமிழ் மொழி பெயர்ப்பு (Tamil Translation).1218
    (Koi Bhi Amal Ko Mamuli Na Samjho...!)
    எந்தவொரு அமலையும் அற்பமாகக் கருதாதீர்கள்...!
    عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله ﷺ: بَيْنَما كَلْبٌ يُطِيفُ برَكِيَّةٍ ، كَادَ يَقْتُلُهُ العَطَشُ، إِذْ رَأَتْهُ بَغِيٌّ مِن بَغايَا بَنِي إِسْرَائِيلَ، فَنَزَعَتْ مُوقَها فَسَقَتْهُ فَغُفِرَ لها به. [أخرجع البخاري] .
    பெருமானார் ரஸூலுல்லாஹி (ﷺ) அவர்கள் கூறினார்கள்: (முன்னொரு காலத்தில்) நாய் ஒன்று ஒரு கிணற்றைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. அது தாகத்தால் செத்து விடும் நிலையில் இருந்தது. அப்போது, பனு இஸ்ராயீல் சமுதாயத்தின் விபசாரிகளில் ஒருத்தி அதைப் பார்த்தாள். உடனே, அவள் தன் காலுறையைக் கழற்றி (அதில் தண்ணீரை எடுத்து) அந்த நாய்க்குப் புகட்டினாள். அதன் காரணமாக அவளுக்குப் பாவ மன்னிப்பு வழங்கப்பட்டது.
    அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)
    நூல்: ஸஹீஹுல் புகாரி
    2. இந்த ஒரு நல்அமலை செய்து அந்த விபச்சார பெண்மணி அங்கிருந்து சென்றுவிட்டாள். அவள் மரணித்தப் பிறகு இந்த ஒரு அமலுக்காக அல்லாஹு தஆலா அவளை மன்னித்துவிட்டான். இந்த அமலை செய்வது ஃபர்ளோ அல்லது வாஜிபோ அல்லது சுன்னத்தே முஅக்கதாவோ அல்ல. மாறாக இது ஒரு முஸ்தஹப்பான அமலாகும். இந்த ஒரு அமலுக்காக அல்லாஹு தஆலா அவள் வாழ்நாள் முழுவதும் செய்த பாவங்கள் அனைத்தையும் மன்னித்துவிட்டான்.
    "அவன் கரீமாகவே இருக்கின்ற போது கருணைக்கு என்ன குறை இருக்கின்றது. அவன் கருணை புரிய நாடிவிட்டால், அளவின்றி கருணை பொழிந்து விடுகின்றான்".
    3. அதற்காக, நாம் நாய்க்கு தண்ணீர் புகட்டி கொண்டு மட்டும் இருந்துவிடலாம் என்று நினைக்காதீர்கள். சாதாரண முஸ்தஹப் அமலானது ஆயிரமாயிரம் பாவங்களை அழிக்கும் போது, ஒரு ஃபர்ளான தொழுகையால் என்னவெல்லாம் செய்ய இயலும். இதனை கூறுவதன் நோக்கமானது எந்தவொரு சிறிய அமலையும் கூட இது சிறிய அமல் தானே என்று அற்பமாகக் கருதி நாம் விட்டுவிடக் கூடாது. இதுபோல் சிறிய பாவத்தையும் கூட, இது சிறிய பாவம் தானே என்று கருதி நாம் செய்யக் கூடாது. அந்த ஒரு சிறிய பாவம் கூட நம்முடைய மறுமை வாழ்வையே நாசமாக்கக்கூடும், நம்மை நரகில் கொண்டு போய் சேர்க்கக்கூடும். அதுபோல் நாம் அற்பமாகக் கருதுகின்ற சிறிய நல்அமலும் கூட நம்மை ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸில் கொண்டு போய் சேர்க்கக்கூடும். இது அல்லாஹ்வின் நாட்டத்தைப் பொறுத்து உள்ளது.
    (குறிப்பு: முஸ்தஹப் என்றால் அந்த அமலை செய்தால் நன்மையுண்டு. அதனை செய்யாமல் விட்டுவிட்டால் குற்றம் ஏதும் இல்லை.)
    - அல்லாமா பெஹ்ருல் உலூம் மு(f)பஸ்ஸிரே குர்ஆன், ஷாரிஹே மஸ்னவி, அபுல் இஹ்சான், மௌலானா பீர்(z)ஸாதா செய்யத் முஹம்மத் ர(z)ஸாவுல் ஹக் ஆமிர் அலீமி ஷா ஆமிரி ஹஸனி வல் ஹுஸைனி சிஷ்திய்யுல் காதிரி, ஜாஃபரிய்யுல் ஜீலானி (தாமத் பரக்காதுஹூ) - ராயப்பேட்டை, சென்னை

Комментарии • 1