1221.Allah Apnay Bandon Ko Har Haal Mein Dekhta Hai...!

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024
  • தமிழ் மொழி பெயர்ப்பு (Tamil Translation).1221
    (Allah Apnay Bandon Ko Har Haal Mein Dekhta Hai...!)
    அல்லாஹ் தன் அடியார்களை எல்லா நிலைகளிலும் பார்க்கின்றான்...!
    இந்த துன்யாவின் வாழ்க்கையில் (என் கண்களால்) நான் அல்லாஹ்வை பார்க்க முடியாது. ஆனால், அல்லாஹு தஆலா என்னைப் பார்க்கின்றான். அவன் என்னைப் பார்க்கின்றான், நான் பேசுவதைக் கேட்கின்றான். எனவே, இந்த இன்பத்திலேயே நான் இபாதத் செய்வேன். நான் அவனைப் பார்க்க முடியாது. ஆனால் அவனோ என்னைப் பார்க்கின்றான். நான் அவனைப் பார்ப்பது என்பது என்ன பெரிய விஷயமா?. அவன் என்னைப் பார்ப்பதே பெரிய விஷயமாகும் அல்லவா!. ஏழையான மனிதன் அரசனைப் பார்ப்பது என்பது என்ன பெரிய விஷயமா?. ஆனால் அரசன் ஏழையான மனிதனைப் பார்ப்பது என்பது பெரிய விஷயமாகும். எனவே இபாதத்தில் என்ன இருக்க வேண்டும்?. ரப்பு என்னைப் பார்க்கின்றான். ரப்பு நான் கூறுவதை கேட்கின்றான் என்கிற எண்ணம் ஏற்பட வேண்டும்.
    2. (சூராயே ஃபாத்திஹாவில்) இபாதத்தைப் பற்றி கூறும் போது Third person சென்று Second person வந்துவிட்டது.
    اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُ‏
    (அல்லாஹ்வே!) நாங்கள் உன்னையே வணங்குகிறோம்; உன்னிடமே உதவி தேடுகிறோம்.
    (அல்குர்ஆன் : 1:5)
    அடியான் அல்லாஹ்வுடன் உரையாடுகின்றான். எனவே அல்லாஹு தஆலா நம்மைப் பார்க்கின்றான், நாம் கூறுவதைக் கேட்கின்றான் என்கிற உறுதியான நம்பிக்கையுடன் நாம் இபாதத் செய்ய வேண்டும். நம்முடைய இபாதத்தை அல்லாஹ் பார்க்கின்றான். நாம் செய்கின்ற இபாதத்தில் நாம் கூறுவதை அல்லாஹ் செவியேற்கின்றான். இது தொழுகை என்ற இபாதத்தில் மட்டும் நடப்பதில்லை. நீங்கள் நோன்பு நோற்கும் போதும் அல்லாஹ் உங்களைப் பார்க்கின்றான் என்கிற எண்ணத்தில் நோன்பு வையுங்கள். இவ்வாறே நாம் தொழும் போதும் அல்லாஹ் நம்மைப் பார்க்கின்றான். நாம் ஜகாத் வழங்கும் நிலையிலும் அல்லாஹ் நம்மைப் பார்க்கின்றான். நாம் ஹஜ் செய்யும் போதும் அல்லாஹ் நம்மைப் பார்க்கின்றான். நாம் உம்ரா செய்யும் போதும் அல்லாஹ் நம்மைப் பார்க்கின்றான். நாம் ஷஃபா மர்வா இடையே சைய்யு செய்யும் போதும் அல்லாஹ் நம்மைப் பார்க்கின்றான். நாம் கஃபாவை தவாஃப் செய்யும் போதும் அல்லாஹ் நம்மைப் பார்க்கின்றான்.
    3. இந்த எண்ணம் உங்கள் மனதில் உறுதியாக பதிந்துவிட்டால், இதன் இன்பத்தை நீங்கள் அனுபவிக்க ஆரம்பித்துவிட்டால் நீங்கள் மனிதர்களுக்குக் காட்டுவதற்காக இபாதத் செய்யமாட்டீர்கள். (உங்கள் உள்ளத்திலிருந்து) முகஸ்துதியானது வேறோடு நீங்கிவிடும். தொழுங்கள் ஆனால் முகஸ்துதிக்காக தொழாதீர்கள். உங்களுடைய மஃபூத் உங்களை தொழுகையில் பார்க்கின்றான். இந்த எண்ணத்தில் தொழுங்கள். அவனுக்குக் காட்டுவதற்காக தொழுங்கள். அவனுடைய பொருத்தத்தைப் பெறுவதற்காக தொழுங்கள்.
    اِنَّ اللّٰهَ بَصِيْرٌ بِالْعِبَادِ‏
    "நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்கினவனாக இருக்கின்றான்".
    (அல்குர்ஆன் : 40:44)
    அல்லாஹ் தன் அடியார்களை எல்லா நிலைகளிலும் பார்க்கின்றான். நீங்கள் நல்அமல்கள் செய்கின்ற போதும் அல்லாஹ் உங்களைப் பார்க்கின்றான். (மாஆதல்லாஹ்) நீங்கள் பாவம் செய்கின்ற போதும் அல்லாஹ் உங்களைப் பார்க்கின்றான். நீங்கள் கவலையில் இருக்கின்ற போதும் அல்லாஹ் உங்களைப் பார்க்கின்றான். நீங்கள் மகிழ்ச்சியில் இருக்கின்ற போதும் அல்லாஹ் உங்களைப் பார்க்கின்றான்.
    - அல்லாமா பெஹ்ருல் உலூம் மு(f)பஸ்ஸிரே குர்ஆன், ஷாரிஹே மஸ்னவி, அபுல் இஹ்சான், மௌலானா பீர்(z)ஸாதா செய்யத் முஹம்மத் ர(z)ஸாவுல் ஹக் ஆமிர் அலீமி ஷா ஆமிரி ஹஸனி வல் ஹுஸைனி சிஷ்திய்யுல் காதிரி, ஜாஃபரிய்யுல் ஜீலானி (தாமத் பரக்காதுஹூ) - ராயப்பேட்டை, சென்னை

Комментарии • 1