1228.Jannat Ka Mahal...!

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024
  • தமிழ் மொழி பெயர்ப்பு (Tamil Translation).1228
    (Jannat Ka Mahal...!)
    சுவனத்து மாளிகை...!
    ஒரு சம்பவத்தைக் கேளுங்கள். மேலும், இது மிகவும் மகிழ்ச்சிகரமான சம்பவமாகும். பெரும்பாலும் நான் அதிகமான சம்பவங்களைக் கூறுவதில்லை. ஆனால், இந்த சம்பவத்தை உங்களிடம் கூறுவதை மிக அவசியமாக நான் கருதுகிறேன். இந்த சம்பவத்தை மறந்துவிடாதீர்கள். இந்த சம்பவமானது அஹ்லே சுன்னத்தின் அடையாளமாகும். ஆமிரிகளான நம் அடையாளமாகும். இந்த சம்பவமானது சம்பவம் அல்ல. மாறாக, இது நம்முடைய செல்வமாகும். இது நம்முடைய கொள்கைக்கான சான்றிதழாகும். இது ஹழ்ரத் புஹ்லூல் தானா (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களின் மிக முக்கியமான சம்பவமாகும். இவர்கள் கலீஃபா ஹாரூன் ரஷீத் காலத்தில் வாழ்ந்த ஒரு நிறைவான (மஜ்தூப்) தீவிர இறைநேசர் ஆவார்கள்.
    2. ஒரு முறை ஹழ்ரத் புஹ்லூல் தானா (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் ஈரமான ஆற்று மண்ணில் மணல் வீடு கட்டிக் கொண்டிருந்தார்கள். சிறுவர்கள் மணல் வீடு கட்டுவார்கள் அல்லவா!. அது போன்று இவர்கள் மண்ணில் ஒன்று முதல் ஐந்து வரை மணல் வீடு கட்டிக் கொண்டிருந்தார்கள். கலீஃபா ஹாரூன் ரஷீத் தன்னுடைய மனைவி ஜுபைதா காத்தூனுடன் சென்று கொண்டிருந்தார்கள். ஜுபைதா காத்தூன் என்பவர் இறை அச்சமுள்ள பெண்மணியாகவும், ஷரீஅத்தைப் பேணி நடக்கின்ற பெண்மணியாகவும் இருந்தார்கள். அரசியாகவும் இருந்தார்கள். ஆனால், அவர்களின் உள்ளமோ ஃபக்கீரைப் (ஏழையைப்) போன்று மிக பணிவுடையதாக இருந்தது.
    3. தன்னுடைய கணவருடன் ஜுபைதா சென்றுக் கொண்டிருக்கும் போது புஹ்லூல் தானா (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் மணல் வீடு கட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்தார்கள். உடனே அவர்கள் அருகில் இருவரும் சென்று ஜுபைதா இறைநேசரிடம், "ஹழ்ரத் அவர்களே! தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள்?" என்றுக் கேட்டார். அதற்கு ஹழ்ரத் அவர்கள், "நான் வீடு கட்டிக் கொண்டிருக்கின்றேன்" என்றார்கள். ஜுபைதா, "இது என்ன வீடு?" என்று வினவினார்கள். அதற்கு ஹழ்ரத் அவர்கள், "இவை சுவனத்தின் மாளிகைகளாகும்" என்றார்கள். ஜுபைதா அவர்கள், "இந்த வீடுகளை தாங்கள் விற்பனை செய்வீர்களா?" என்றுக் கேட்டார்கள். ஹழ்ரத் அவர்கள், "ஆமாம். இவற்றை விற்பதற்காகவே கட்டிக் கொண்டிருக்கின்றேன். இந்த வீட்டிற்கான விலையை நீங்கள் கொடுத்தால் உங்களுக்கு விற்பனை செய்வேன்" என்றார்கள்.
    4. அன்பர்களே! இறைநேசர்களுடனான தொடர்பை நினைத்து மகிழ்ச்சியடையுங்கள். இறைநேசர்களின் உயர்வு என்ன என்பதைப் பாருங்கள். சுவனத்து மாளிகையை இந்த துன்யாவிலேயே விற்பனை செய்கின்றார்கள். எதனடிப்படையில் விற்பனை செய்கிறார்கள்.
    مَنْ لَهُ الْمَوْلَي فَلَهُ الْكُلُّ
    "மல்லஹுல் மௌவ்லா ஃபலஹுல் குல் - இறைவன் யாருக்கு சொந்தமாகிவிட்டானோ, அவருக்கு எல்லாமே சொந்தம்".
    சுவனத்தின் மாளிகை என்ன பெரிய விஷயம்!. அல்லாஹ்வே இவர்களுக்கு சொந்தமாகிவிட்டான், முஸ்தஃபா (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களே இவர்களுக்கு சொந்தமாகிவிட்டார்கள். ஹழ்ரத் புஹ்லூல் தானா (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களுக்கு சொந்தமாகிவிட்டார்கள்.
    5. ஜுபைதா அவர்கள், "ஒரு வீட்டின் விலை என்ன?" என்றுக் கேட்டார்கள். ஹழ்ரத் அவர்கள், "ஒரு வீட்டின் விலை நாலணா. நீங்கள் எத்தனை வேண்டுமானாலும் விலை கொடுத்து வாங்கிக் கொள்ளலாம்" என்றார்கள். ஜுபைதா அவர்கள் நாலணாவை ஹழ்ரத்திடம் கொடுத்தார்கள். ஹழ்ரத் அவர்கள் நாலணாவைப் பெற்றுக் கொண்டு, ஒரு மணல் வீட்டின் மீது "ஹாதா லி ஜுபைதா சவ்ஜி ஹாரூன் ரஷீத் - இது ஹாரூன் ரஷீதின் மனைவி ஜுபைதாவிற்கு சொந்தமானது" என்று எழுதினார்கள். இதனைக் கண்டு கலீஃபா ஹாரூன் ரஷீத் அவர்கள் இது சுவனத்தின் மாளிகையா! என்று எண்ணி சிரித்தார்கள். பின்னர் கலீஃபா ஹாரூன் ரஷீத் மற்றும் அவருடைய மனைவி ஜுபைதா இருவரும் தங்களுடைய இல்லத்திற்கு சென்றார்கள். அன்றைய இரவு நேரம் வந்தது, இருவரும் உறங்கிவிட்டார்கள்.
    6. கலீஃபா ஹாரூன் ரஷீத் அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது கனவு கண்டார்கள். கலீஃபா ஹாரூன் ரஷீத் அவர்கள் சுவனத்தில் உலாவிக் கொண்டிருந்தார். சுவனத்தில் உலாவிக் கொண்டிருக்கும் போது, சுவனத்து மாளிகைகள் பலவற்றைப் பார்த்தார்கள். அவற்றில் ஒரு மாளிகையானது தங்கத்தால் செய்யப்பட்டிருந்தது. மேலும், அந்த சுவனத்து மாளிகையின் முகப்பில் "ஹாதா லி ஜுபைதா சவ்ஜி ஹாரூன் ரஷீத் - இது ஹாரூன் ரஷீதின் மனைவி ஜுபைதாவிற்கு சொந்தமானது" என்று எழுதப்பட்டிருந்தது. கலீஃபா ஹாரூன் ரஷீத் அவர்கள் சுவனத்து காவலர்களாகிய வானவர்களிடம், "நான் இந்த மாளிகையினுள் செல்லலாமா?" என்று அனுமதி கேட்டார்கள். அதற்கு வானவர்கள், "இந்த மாளிகையினுள் நுழைவதற்கு ஜுபைதாவிடம் அனுமதி பெற வேண்டும்" என்றுக் கூறி அனுமதி மறுத்துவிட்டார்கள். பின்னர் சுவனத்திலிருந்து வந்துவிட்டார்கள்.
    7. கலீஃபா ஹாரூன் ரஷீத் அவர்கள் உறக்கத்திலிருந்து கண் விழித்தார்கள். ஃபஜ்ர் நேரம் வந்தது. ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு கலீஃபா ஹாரூன் ரஷீத் அவர்கள் ஜுபைதாவிடம், "ஜுபைதா! நான் நேற்றிரவு வித்தியாசமான கனவு ஒன்றைக் கண்டேன்" என்றார்கள். அதற்கு ஜுபைதா, "என்ன கனவு கண்டீர்கள்?" என்று வினவினார்கள். அதற்கு கலீஃபா ஹாரூன் ரஷீத் அவர்கள், "கனவில் நான் சுவனம் சென்றேன். அங்கு சுவனத்து மாளிகைகள் பலவற்றைப் பார்த்தேன். அப்போது தங்கத்தால் அமைக்கப்பட்ட ஒரு சுவனத்து மாளிகையைக் கண்டேன். அதன் முகப்பில் 'இது ஹாரூன் ரஷீதின் மனைவி ஜுபைதாவிற்கு சொந்தமானது' என்று எழுதப்பட்டிருந்தது. நான் வானவர்களிடம் அந்த சுவனத்து மாளிகையினுள் நுழைவதற்கு அனுமதி கேட்ட போது, 'இது ஜுபைதாவிற்கு சொந்தமானது. எனவே அவர்களிடம் அனுமதி பெறாமல் நீங்கள் உள்ளே நுழைய முடியாது' என்று அனுமதி மறுத்துவிட்டார்கள்" என்றுக் கூறினார்கள்.
    மீதமுள்ள தமிழாக்க தொடர்ச்சியை இதே பதிவின் Comment Box ல் முதல் Comment - ஐ பார்க்கவும்.

Комментарии • 7

  • @aamirishortclips
    @aamirishortclips  5 месяцев назад +3

    8. இதனைக் கேட்ட ஜுபைதாவின் கண்கள் ஈரமானது. ஜுபைதா அவர்கள், "அப்படியா! பார்த்தீர்களா! இறைநேசரான புஹ்லூல் தானா (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களிடம் மாலை நேரத்தில் நான் வியாபாரம் செய்தேன். விலை கொடுத்து சுவனத்து மாளிகையை வாங்கினேன். இரவு நேரம் தாண்டுவதற்குள் தாங்கள் சுவனத்தில் (என் பெயர் பதிக்கப்பட்ட) அந்த மாளிகையைப் பார்த்துவிட்டீர்கள்." என்றுக் கூறினார்கள். கலீஃபா ஹாரூன் ரஷீத் அவர்கள், "ஜுபைதா! நீ அவர்களிடம் வியாபாரம் செய்த போது நான் கேலி செய்தேன். ஆனால் இப்போது அதன் ஹக்கீகத்தை (உண்மை நிலையை)க் கண்டு கொண்டேன். உன்னுடைய மாளிகை சுவனத்தில் உண்மையாகவே அமைந்துவிட்டதே" என்றுக் கூறி தானும் சுவனத்து மாளிகையை வாங்க நாட்டம் கொண்டார்கள்.
    9. கலீஃபா ஹாரூன் ரஷீத் அவர்கள், ஹழ்ரத் புஹ்லூல் தானா (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களிடம் சென்றார்கள். மறுநாளும் ஹழ்ரத் அவர்கள் அதே வேலையை செய்துக் கொண்டிருந்தார்கள். மணல் வீடு கட்டிக் கொண்டிருந்தார்கள். கலீஃபா ஹாரூன் ரஷீத் அவர்கள், ஹழ்ரத் அவர்களிடம், "ஹழ்ரத் அவர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்! தாங்கள் என்ன செய்கின்றீர்கள்?" என்றுக் கேட்டார்கள். அதற்கு ஹழ்ரத் அவர்கள், "வா அலைக்கும் ஸலாம்! நான் சுவனத்து மாளிகைகளைக் கட்டிக் கொண்டிருக்கிறேன்" என்றார்கள். கலீஃபா அவர்கள், "எனக்கு விற்பனை செய்வீர்களா?" என்றுக் கேட்க, "நிச்சியம் தங்களுக்கு விற்பனை செய்வேன். நான் விற்பதற்காகவே கட்டிக் கொண்டிருக்கின்றேன். நீங்கள் இதற்கான விலையைக் கொடுத்தால் நான் உங்களுக்கு விற்பேன்" என்றார்கள். கலீஃபா அவர்கள், "ஒரு வீட்டின் விலை என்ன?" என்றுக் கேட்டார்கள்.
    10. அதற்கு ஹழ்ரத் அவர்கள், "சுவனத்து மாளிகையான இந்த வீட்டை நீங்கள் வாங்க வேண்டுமென்றால், இதன் விலை உங்களுடைய ஆட்சி அதிகாரம் சொத்து முழுவதுமாகும்" என்றார்கள். அதற்கு கலீஃபா அவர்கள், "என்னுடைய ஆட்சி அதிகாரம் சொத்து முழுவதையும் கொடுத்துவிட்டால் பின்னர் துன்யாவில் எனக்கென்று என்ன மிஞ்சியிருக்கும்!" என்றார்கள். அதற்கு ஹழ்ரத் அவர்கள், "சுவனத்து மாளிகை உங்களுக்குக் கிடைக்கும் அல்லவா!" என்றுப் பதிலளித்தார்கள். அதற்கு கலீஃபா அவர்கள், "இது சாத்தியமல்ல! (அதாவது தன்னுடைய ஆட்சி அதிகாரம் சொத்துக்களை கொடுப்பது சாத்தியமற்று)" என்றுக் கூறிவிட்டார்கள். அதற்கு ஹழ்ரத் அவர்கள், "நீங்கள் கொடுக்க முடியாதென்றால், நானும் கொடுக்க முடியாது" என்றார்கள். அதற்கு கலீஃபா அவர்கள், "ஹழ்ரத் அவர்களே! நேற்று என் மனைவி ஜுபைதாவிடம் நாலணாவிற்கு இதே வீட்டை விற்பனை செய்தீர்கள். ஆனால், இன்று என்னிடம் இதற்கு விலையாக என்னுடைய அரசாட்சி முழுவதையும் கேட்கின்றீர்களே!" என்று வினவினார்கள்.
    11. அதற்கு ஹழ்ரத் அவர்கள், "உங்களுடைய மனைவி ஜுபைதா அவர்கள் இதனைப் பார்க்காமலேயே நம்பிக்கைக் கொண்டு வாங்கினார்கள். ஆனால், நீங்களோ நேற்றிரவு கனவில் ஜுபைதாவின் சுவனத்து மாளிகையைக் கண்களால் கண்டு விட்டு இன்று வாங்க வந்திருக்கின்றீர்கள். நேற்றைய பேச்சு வேறு, இன்றைய பேச்சு வேறு. இன்று சுவனத்து மாளிகையை வாங்க வேண்டுமென்றால் உங்களுடைய அரசாட்சி முழுவதையும் விலையாகக் கொடுக்க வேண்டும்" என்றுப் பதிலளித்தார்கள். ஜுபைதா அவர்கள் பார்க்காமலேயே இறைநேசரின் உயர்வை ஏற்றுக் கொண்டார்கள். இதனால் அவர்களுக்கு குறைந்த விலையில் சுவனத்து மாளிகை கிட்டியது. எனவே, இறைநேசர்களின் உயர்வை அவர்களின் கராமத்தை (அற்புதங்களை) கண்களால் காணாமல் ஏற்றுக் கொள்ளுங்கள். நாலணாவிற்கு சுவனத்து மாளிகையை விற்பனை செய்கின்றார்கள். இதுவே, இறைநேசர்களின் உயர்வாகும். யார் ஏற்றுக் கொண்டாலும் சரியே! ஏற்றுக் கொள்ளவில்லையென்றாலும் சரியே! நாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.
    - அல்லாமா பெஹ்ருல் உலூம் மு(f)பஸ்ஸிரே குர்ஆன், ஷாரிஹே மஸ்னவி, அபுல் இஹ்சான், மௌலானா பீர்(z)ஸாதா செய்யத் முஹம்மத் ர(z)ஸாவுல் ஹக் ஆமிர் அலீமி ஷா ஆமிரி ஹஸனி வல் ஹுஸைனி சிஷ்திய்யுல் காதிரி, ஜாஃபரிய்யுல் ஜீலானி (தாமத் பரக்காதுஹூ) - ராயப்பேட்டை, சென்னை

  • @khaleelullahyazdhaanishaht9776
    @khaleelullahyazdhaanishaht9776 5 месяцев назад

    Subhanallah subhanallah qadam bosi sarkaar ❤

  • @SaadiaSultana-fy7og
    @SaadiaSultana-fy7og 2 месяца назад

    SubhanAllah

  • @syedmohamedbuharibilali
    @syedmohamedbuharibilali 5 месяцев назад

    من له المولی فله الكل

  • @syedmohamedbuharibilali
    @syedmohamedbuharibilali 5 месяцев назад

    هذا لزبيدة زوج هارون رشيد

  • @SaadiaSultana-fy7og
    @SaadiaSultana-fy7og 2 месяца назад

    SubhanAllah