'என்னை ஒதுக்கியவர்களும் அவமானப்படுத்தியவர்களும் தான் என் இலக்கிய ஆசான்கள்' - Writer Imayam

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • #imayam #novels #motivationalstory #writer #literature
    பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகள் தங்கள் வாழ்க்கையை மாற்றிய ஒரு மனிதர், ஒரு வாசகம், ஒரு சம்பவம் பற்றி மனம் திறந்து பகிர்ந்து கொள்ளும் வீடியோ தொடர் இது!
    'Oru Vaasagam Oru Manithar Oru Sambavam' is a weekly show on Ananda Vikatan where personalities from various fields share their life-changing experiences, memorable incidents, influential people, books, and significant moments. In this week's episode, writer Imayam shares the life-changing moments and people who inspired his stories. He highlights his college professor Albert and Ramakrishnan from Kriya Publications as key influences, along with others he met throughout his journey. Tune in to hear how these connections shaped his writing and life.
    To Download Vikatan App 👉- bit.ly/2Sks6FG
    Vikatan News Portal - vikatanmobile....
    Video Credits:
    ###
    Camera : Hariharan T
    Editor : Punithan
    Video Producer: Ve. Neelakandan
    Video Coordinator: Na.Kathirvelan
    Executive Producer: Ve. Neelakandan
    Thumbnail Artist: Santhosh.C
    Channel Manager : Vasanth Prabakaran
    Deputy chief Channel Manager : Shivakumar M R
    Asst Channel Head: Hassan Hafeez K.M
    ###
    Subscribe👉 : / anandavikatantv
    Ananda Vikatan Twitter👉: #!...
    Ananda Vikatan FB👉: / vikatanweb
    Website👉: www.vikatan.com
    Vikatan Podcast👉: linktr.ee/hell...
    Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3yFz3c9

Комментарии • 14

  • @Ilakiyamarivomprema
    @Ilakiyamarivomprema День назад +1

    Had there not been any encounter between Mr. Albert and this writer and between Mr. Ramakrishnan and this writer, we would not have this down-to-earth writer Imayam. His canon in all the novels and short stories weaves around the real happenings in society. This makes him the writer of today. This only enabled him to get many accolades from many quarters. We wish him many more laurels in the days to come. 🙏
    Dr. A.S.Prema, MSU College, Govinthaperi.

  • @ThangaJayaraman
    @ThangaJayaraman 17 часов назад +1

    வணக்கம். மிகுந்த ஈ டுபாட்டுடன் கேட்டேன். எழுத்தில் உண்மை எப்படி, எங்கிருந்து பிறக்கிறது என்று இதைவிட அருமையாகச் சொல்ல இயலாது. தன் அனுபவத்தின் உண்மை எழுத்தின் மகத்துவம். அது இமையத்திற்கு இயல்பாக வருவது. அவர் எழுத்தைத் தூண்டுவதும் அதுவே, துலக்குவதும் அதுவே.

  • @senthilvelan8307
    @senthilvelan8307 День назад +1

    அருமைங்க அய்யா..!
    தங்களின் உரையாடலில், மிகச் சிறந்த உரையாடலாக இந்தக் காணொலி உரையாடலைச் சொல்லும் வகையில் உண்மையும் - அறமும் - ஈரம் கசியும் சொற்களும் கண்ணீரைப் போல் தளும்பிக் கிடக்கிறது.
    # அ.செந்தில் வேலன்.

  • @vibrantcanada1542
    @vibrantcanada1542 День назад +2

    பாசமிகு சகோதரன், வார்த்தைகளின் நாயகன், விளிம்புநிலை மக்களின் பிரதிபளிப்பாளன், மனிதம் பேசுபவன் என் இனிய இமையம் அவர்களின் எழுத்தும், மனதை தொடும் சொற்களும், உமது காணொளியும், ஒரு எழுத்தாளனின் உண்மை பயணம், அவன் வாழ்வை பக்குவபடுத்திய நிகழ்வுகள் என கேட்பவர்களின் உள்ளத்தை தொடும். தமிழ் உலகம் நித்தம் கொண்டாடும் உங்கள் படைப்புகளை.
    அன்புடன்
    சுதர்சன்
    டொரோண்டோ அரசு மருத்துவமனை கனடா

  • @kathirkathiresan9270
    @kathirkathiresan9270 День назад +1

    Peyaril mattumalla . Unmaoyil, arivil, aatralil, anvil, panbil, paasathil, neengal imayam. Ungalai aasaiyodu annan endru azhikka manasu yengudu. Annan neengal nalla maguzhchiyodu pallandu vaazhanum. Anbudanim pasamudanum ungal thambi Kathiresan❤❤❤❤❤

  • @senthamilkannu
    @senthamilkannu 13 часов назад

    மிகவும் சிறப்பான உரையாடல் !
    நெகிழ்வும் மகிழ்வும் தான் வாழ்க்கை!

  • @ThangaJayaraman
    @ThangaJayaraman 17 часов назад +1

    வணக்கம். மிகுந்த ஈடுபாட்டுடன் கேட்டேன். எழுத்தில் உண்மை எப்படி, எங்கிருந்து பிறக்கிறது என்பதை இதைவிட அருமையா கச் சொல்ல இயலாது. அந்த உண்மை இமையத்துக்கு இயல்பாக வருவது. அவர் எழுத்தைத் தூண்டுவதும் அதுவே , துலக்குவதும் அதுவே

  • @MAJITHATALKIES
    @MAJITHATALKIES День назад +2

    ஒரு வாசகம் ஒரு மனிதர் ஒரு சம்பவம்
    என்ற தலைப்பில் விகடனுக்கு அளித்த பேட்டியைப் பார்த்தேன். அதில் பேசியவர் எழுத்தாளர் இமயம் அவர்கள். எண்ணங்களுக்கு உயிர் கொடுப்பவர் எழுத்தாளர் என்று சொல்வார்கள். ஆனால் இமயம் என்ற எழுத்தாளர் சொற்களுக்கு உயிர் கொடுப்பவர். சொற்களை கடத்துபவனே சிறந்த எழுத்தாளன் என்பார். செத்துப் போன சொற்களை பயன்படுத்தக் கூடாது என்பதுதான் அவருடைய தாரக மந்திரம். அவருடைய எட்டு நாவல்களையும் எட்டு சிறுகதைத் தொகுப்புகளையும் ஒரு நெடுங்கதையையும் முழுமையாக படித்தவள் நான். அவருடைய படைப்புகளுக்கு அவரிடமே விமர்சனம் சொல்வேன். வாதிடுவேன். பாராட்டுவேன். சிலாகித்து சொல்வேன். கண்ணீர் விடுவேன். அதற்கும் மேலாக அவருடைய படைப்புகள் என்னை வெகுவாக பாதித்திருக்கிறது.
    ஒருமுறை கோவேறு கழுதை நாவலை படித்து முடிக்கையில் மாலை நேரம் ஆகிவிட்டது. என் வீட்டைப் பெருக்குவதற்காக வாரியலை எடுத்துக் கொண்டு முற்றத்திற்கு சென்று, அதனைப் பெருக்கிக் கொண்டிருக்கையில்
    அம்மா வண்ணாத்தி வந்திருக்கேன் சோறுபோடுங்க? என்று கேட்டு ஆரோக்கியம் வந்து விடுவாள் என்று எண்ணி அவளுக்காக சாப்பாடு எடுக்க வீட்டிற்குள் சென்றேன். தட்டில் சாப்பாட்டையும் எடுத்து விட்டேன். அதற்குப் பின்பு தான் ஞாபகம் வந்தது ஆரோக்கியம் கதையில் படித்த கதாபாத்திரம் என்று. அப்போதுதான் உணர்ந்தேன் நான் நாவலை படிக்கவில்லை நாவலுக்குள்ளேயே வாழ்ந்திருக்கிறேன் என்பதை.
    பெத்தவன் என்னும் நாவலை கண்ணீரின்றி நான் படித்தது இல்லை. எத்தனையோ மனிதர்கள் கதாபாத்திரங்களாக கதைகளில் உலாவலாம் ஆனால் எழுத்தாளர் இமயத்தின் கதாபாத்திரங்கள் வாழ்வியலின் ஊடாக அந்தப் பாத்திரங்கள் வாழ்ந்து கொண்டிருப்பதை நம்மால் உணர முடியும்.
    எங்கதெ நாவலில் வரும் கமலாவையும் விநாயகத்தையும் எவராலும் மறக்க முடியாது. மறுக்க முடியாது. அவர்கள் கதாபாத்திரங்கள் அல்ல பலருக்கும் காவியங்களாக உலாவிக் கொண்டிருப்பவர்கள்.
    இமயம் என்ற எழுத்தாளர் உருவாவதற்கு ராபர்ட் என்பவர் கிடைத்தது பலருக்கும் அதிசயமாக இருக்கலாம். அதுதான் தமிழ்நாடு என்பதை பறைசாற்றிக் கொண்டே இருக்கிறது. தலித் சமூகத்திலிருந்து வந்தவரை வேற்றுமை பாராட்டாது, படைப்புகள் அனைத்தையும் வைரங்களாக பட்டை தீட்டி , தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக உருமாற்றிக் கொடுத்தவர் க்ரியா ராமகிருஷ்ணன் அவர்கள். இமயம் என்ற எழுத்தாளரை உருவாக்கிக் கொடுத்த இரண்டு பெருந்தகைகளுக்கும் மனமார்ந்த நன்றிகள் பல. நீங்கள் இல்லையேல் இமயம் இல்லை. எழுத்தாளர் இமயம் அவர்களை நீங்கள் எழுதியவை அனைத்துமே வைரங்களை விட மதிப்பு மிக்கவை தொடரட்டும் உங்கள் இலக்கிய பணி ... வாழ்த்துகிறோம். பெருமை கொள்கிறோம்.
    என்றும் அன்புடன்,
    முனைவர் மு.ரா.மஜிதா பர்வின், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரி, தூத்துக்குடி.

    • @manoharanrajan824
      @manoharanrajan824 9 часов назад

      அன்பு சகோதரி, ஒரு சிறிய திருத்தம்: இமயம்
      அவர்கள் உருவாக அடி
      கோலியவருள் இமயம் அவர்களே கூறியதுபோல முதன்மையானவர் திருச்சி
      ஜமால் முகமது கல்லூரி
      ஆங்கிலத் துறைப்
      பேராசிரியர் எஸ்.ஆல்பர்ட்
      ஆவார். தங்களது பதவில்
      உள்ள 'ராபர்ட்' என்பதற்கு
      தயவுசெய்து திருத்தம்
      தாருங்கள். அன்புடன் மனோகரன் திருச்சி.

  • @education6643
    @education6643 День назад +1

    ஐயா வணக்கம். தங்களை 1986லிருந்து நன்கு தெரியும். என் திருமணத்தில் பங்கேற்க சிதம்பரம் வந்தபோது மார்க்ஸிய சிந்தனையாளர் தோழர் ஜான்சி ராணி அவர்களை சந்தித்து பேசினீர்கள். இமயம் என்ற பெயரை வைத்து இமயமாகவே உயர்ந்து நிற்கின்றீர்கள். அந்த அளவிலேதான் தங்களை இதுவரை பார்த்து வந்துள்ளேன். இந்த பேட்டி மூலம்தான் தங்களின் வளர்ச்சி எளிமையானதல்ல என்பதை புரிந்துகொண்டேன். எத்தனை வலிகளின் மூலம் இமயம் என்ற மலை உருவாகி உயிர்பெற்று நிற்கிறது என்பதை இந்த நேர்காணல் மூலம் உணர்ந்துகொண்டேன். இந்த பேட்டியும் ஒரு நாவலாகத்தான் உள்ளது. மகிழ்ச்சி அய்யா!

  • @pavithranvignesh328
    @pavithranvignesh328 День назад +1

    ஒரு வீடு ~ ஒரு மனிதன் ~ ஒரு சம்பவம்
    ஐயா S. ஆல்பர்ட் மற்றும் ஐயா க்ரியா ராமகிருஷ்ணன் மறைவின் போது இமையம் சார் எழுதிய இரங்கல் மடல்கள் மிக முக்கியமானது. மேலே ஏறிய பின் ஏணியை யாரும் நினைவு கொள்வதில்லை, இமயத்தை அடைந்த போதிலும் ஏணியை ஏந்தி செல்கிறார் இமயம். இலக்கிய ஆளுமைகள் தங்களது எழுத்தும், சொல்லின் பாங்கும் செறிவானதற்கு இவர் காரணம் என மனம் திறந்து சொல்வதென்பது அரிது.
    17 நிமிடங்கள் வரும் இக்காணொளி இமயம் அவர்களின் ஒட்டுமொத்த வாழ்வின் வெயிலை, மழையை எழுத்தினூடாக உருமாற்றியதன் தன்மையை சொல்லியிருக்கிறார்.
    சமூகம் வீசிய கற்களை எழுத்தாகக் கட்டி எழுப்பிய இமயமாவது எளிதல்ல. இதுவரை இமயம் அவர்கள் நா தழுக்க பேசி பார்த்ததில்லை. ஏனோ மனம் கனக்கிறது. அவர் எழுதிய 'வீடியோ மாரியம்மன்' சிறுகதைத் தொகுப்பில் அவர் சொன்ன சம்பவம் சிறுகதையாக வந்திருக்கும். அடைந்த வலிகளை கதையின் வழியாக மருந்து போடுவது அசாத்திய எழுத்து. அது பலரின் ரணத்தை ஆற்றும் வல்லமைப் படைத்தது.
    எழுத வேண்டும் நினைப்போர் அவசியம் பார்க்க வேண்டிய 17 நிமிடங்கள்.

  • @aavibabu7519
    @aavibabu7519 День назад +1

    ஐயா உங்களைச் செதுக்கிய மனிதர்களையும் செதுக்கிய சூழல்களையும் உணர்வுப்பூர்வமாக கூறுகிறீர்கள். ஒவ்வொரு சூழலும் ஒரு பெருங்காவியமாகும் அளவு வலியும் வேதனையும் நிறைந்தது. கேட்போருக்கும் அந்த சூழல் கண்முன் தோன்றி இயல்பாக கண்ணீர் துளிர்க்கிறது. வார்த்தைகள் வரமறுக்கின்றன.

  • @azhagiriudayan
    @azhagiriudayan 18 часов назад

    சிறப்பு அண்ணா,
    கலைஞரைப் பற்றியும் கட்சிகாரனாக உங்களை திமுக உறுப்பினர் அட்டை வாங்கி குடுத்தவரைப் பற்றியும் பேசுவீங்கன்னு நினைத்தேன் அண்ணா

  • @muthu_kumar.m
    @muthu_kumar.m 8 часов назад

    🥰