தாங்கள் நீண்ட ஆயுள் பெற்று நலமுடன் வாழ பரம்பொருளை வேண்டுகிறேன் ஐயா... பதிவுகளை தொடர்ந்து வெளியிடுங்கள்.. 🙏🏻.. தங்களைப் போன்ற பெரியவர்களின் வழிகாட்டல் இளைய தலைமுறைக்கு தேவை.. 🙏🏻 🙏🏻 🙏🏻
ஐயா ... நாங்கள் பார்ப்பது முடியயோ முகத்தையோ அல்ல மாறாக நாங்கள் பார்ப்பது கேட்பது உங்கள் அழகிய அறிவும்,உயரிய சிந்தனை மட்டுமே.... நீங்கள் பல்லாண்டு வாழ இறைவனை பிராத்திக்கிறேன்..... இப்படிக்கு உங்கள் மீது அன்பு கொண்ட, முகமது ஜாசீம்
உங்கள் பேச்சுக்கள் அத்தனையும் கணீர் கணீர் என்று இருக்கும் ஆனால் அதில் ஒன்றில் கூட நான் என்ற ஆணவம் தெரியாது. அது இப்போது உள்ள பேச்சாளர்களிடம் இல்லாத ஒரு பண்பு.
வாழ்க வளமுடன் அப்பா.....சிறு வயது முதல் உங்கள் கருத்தை கேட்டு வளர்ந்தவள் நான்....பல மாற்றங்கள் என்னுள் அனுபவித்து இருக்கிறேன்.... நல்ல எண்ணங்களும் சிந்தனைகளும் வளர அப்பா நீங்களே காரணம் ......நல்ல மனிதனாக எப்படி வாழவேண்டும் என்று உங்கள் அறிவுரை கேட்டு வளர்த்தேன். நன்றிகள் பல அப்பா.....
You r great and like ur speeches.which is motivating all in all fields. Continue ur speeches always whenever possible. Hope u will act according to ur ambition with health factor. Thank u sir once again
வணக்கம் ! உங்கள் பேச்சுப் சமூகத்திர்க்குகிடைத்த மிக பெரிய வரம் பொக்கிஷம் !அறம் சார்ந்த வாழ்க்கை எவ்வளவு மன வலிக்கு உள்ளாக நேரிடும் என்பதை நன்கு அறிவேன்! கடவுள் ஆரோக்கிய வாழ்வு நல்க வேண்டும் எல்ல வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏!
At the darkest period of my life, I started listening to your speech everyday and grew stronger. I still listen to your RUclips every single day. Thank you sir.
புதுக்கடைபுதுக்கடை புது கட்ட போறேன்னாபுது கெட்டப்பு நைனாசூப்பரா இருக்குதுாப்பிட வாநான் மட்டும் சாப்பிட வாசுகி சுகிஐ லவ் யூ சுகிஆத்துக்குவா ஆத்துக்குவா ஒரு நாள்ஆத்துக்கு பக்கம் வரணும்லஇது தப்பா தப்பா சொல்லுதுஒரு நாளைக்கு வீட்டுக்கு வாங்கசுகி சார் நன்றிஎன்ன வாழ்த்துக்கள்உங்கள் தீவிர ரசிகன் நான்நன்றி ஐயா நன்றிகோடான கோடி நன்றிமீண்டும் சந்திப்போம்நீங்கள் சுகமா இருக்கிறது எங்களுக்கு கூடநீங்கள் சுகமா இருக்கிறது எங்களுக்கு கூடி சந்தோசம்வார்த்தைகள் இல்லைநன்றி ஐயா நன்றி நன்றி நன்றி நன்றி கோடான கோடின கோடி நன்றி
சுகிக்கு வாசுகி சொல்வது என்னவெனில், "கடைவிரித்தேன் கொள்வாரில்லை" என்று வள்ளளாரை ஓரங்கட்டியது தமிழ்நாடு. பாரதி வாழும் போதே வறுமைக்குள் வீழ்த்தியது தமிழகம். தமிழருக்கு என்றுமே நிழலின் அருமை வெய்யிலில் தான் புரியும். உங்கள் பணி குன்றின் நீர்வீழ்ச்சி போன்று தொடரட்டும். வாழ்க வளமுடன்! வாழ்க தமிழுடன்!
வணக்கங்கள் ஐயா 🙏... முதுமை என்பது இந்த உடலுக்கு தானே... உங்களின் சிந்தனைக்கும்,ஆன்மீக பயணத்திற்குப் அல்லவே..,அவை என்றுமே புதிதாக மலரும் ரோஜா பூக்கள் போன்றவை, கோடை காலத்தில் தவிக்கும் உயிரினங்களுக்கு இறைவன் கருணை உள்ளத்தோடு கொடுத்த மழைத்துளி நீங்கள்... எங்களின் எண்ணங்களிலும் சிந்தனைகளிலும் என்றுமே நிறைந்து வாழ்பவர்.. பல சமயங்களில் தங்களின் வழிக்காட்டுதல்கள் எங்களை வழிநடத்துகின்றன... நன்றிகள் ஐயா.... பல்லாண்டு வாழ்க வளமுடன்.....❤
அய்யா முற்றிலுமாக மாறுபட்ட வேடம்...ஆனால் இதுதான் உண்மை ...நிரந்தரம் 😊😊❤...உண்மை என்று நினைத்தது வேஷம்...😊😊.ஆனால் இந்த நிலையில் நேரில் பார்த்தால் இவர் அய்யா சுகிசிவம் இல்லை என்று நினைத்திருப்பேன்..😂😂நன்றி அய்யா..உங்கள் ஆசி ....எங்களுக்கு தொடர வேண்டுகிறேன்....🙏🙏
உமது வாழ்வும், வாக்கும், வழிகாட்டலும் இத்தலைமுறைக்கு கிடைத்த கொடை. காலத்தால் அழியாத பொக்கிஷம் ஐயா நீர்!!! இன்னும் பல்லாண்டு காலம் பேச வேண்டும் ஐயா நீர்!!! வாழ்க வளமுடன்!!! அனுபவங்களால் முதிர்ந்து கனிந்த பழம் ஐயா நீர்!!! இது முடிவல்ல!!! இனிதான் ஆரம்பம்!!! அனுபவ முதிர்ச்சி பெற்றவரிடம் இருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் வேதம் எமக்கு!!!
ஐயா உங்களின் பேச்சை நான் கேட்டது 1996 ல் Oman நாட்டுல, (இப்பொழுது இலங்கை யில்) தொடர்ந்து இன்று வரை கேட்கும் வாய்ப்பளித்த இறைவனுக்கு நன்றி, மேலும் உங்கள் பணி தொடர இறைவனை பிராத்திக்கிறேன்.
உங்களது மாற்றத்திற்கு யாரும் வருந்த மாட்டார்கள், மாறாக சந்தோஷம் அடைவார்கள். உங்கள் உண்மை தன்மையை நாங்கள் வாழ்துகிறோம். உங்கள் சமுதாய கண்ணோட்டம் வாழ்க. வளர்க.. நெடுநாள் சுகத்தோடும் வளத்தோடும் வாழ வேண்டும் என இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்..
உருவத்தில் நீர் முதுமை என்ன..? உள்ளத்தில் நீர் இளமைதானய்யா..! காண்பதற்க்கு உமக்கு கருமை எதற்கு.? உமது கருத்திலே எப்போதும் வெண்மை இருக்கு..! நோய் நொடி வந்தாலும் அவை வாடி போய் நீர் வாழிய பல்லாண்டு..! நட்போடு ரசிகன் நசீர். பஹ்ரைன்
மாண்புமிகு சுகிசிவம் ஐயா அவர்களே, பிடரி இருந்தாலும் இல்லாவிடினும் சிங்கம் சிங்கம் தான். அது போல் உங்கள் ஏற்றம் தோற்றத்தால் அல்ல. சமூக அக்கறை கொண்ட தங்கள் பேச்சாற்றலால் எண்ணிலடங்கா மக்களின் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றமேயென்பதை நாங்கள் அறிவோம். உங்களின் உடல் நலம் பெற இறையை வேண்டுகிறோம்.
കഴിഞ്ഞ നാൽപത് വർഷത്തോളമായി താങ്കളെ ശ്രവിക്കുന്നു. ജീവിതത്തിന് ആവശ്യമായ എത്രയെത്ര നല്ല കാര്യങ്ങൾ താങ്കളിൽ നിന്നും മനസ്സിലാക്കി ..... എത്ര കാലങ്ങൾ കഴിഞ്ഞാലും താങ്കളുടെ ശബ്ദവും രൂപവും എല്ലാവരുടെ മനസ്സിലും നിറഞ്ഞ് നിൽക്കും. സർവ്വേശ്വരൻ താങ്കളെ അനുഗ്രഹിക്കട്ടെ🙏🙏🙏🙏
"மனதளவில் ஓர் விடுதலை உணர்வு" இந்த தலைப்பே மிகவும் வித்தியாசம். தங்கள் அனுபவங்களை தொகுத்து புத்தகமாக வெளியிட்டால், 50+ வயதினருக்கு மிகவும் உபகாரமாக/உபயோகமாக இருக்கும். நன்றிகள் ஐயா 🙏
வணக்கம் அய்யா எந்த ஒரு தலைப்பும் மக்களுக்கு பயன்படும் வகையில் தான் இருக்கும்... உங்களின் இந்த தலைப்பும் மிகவும் பயனுள்ளதாக உண்மையான சத்தியமான பதிவு. உங்களின் தோற்றம் முன்பை விட அழகாகவும் உங்கள் அறிவு ஆளுமையை மிக மதிப்புள்ளதாக காட்டுகிறது. இளமைக்கு நடைஅழகு முதுமைக்கு நறைஅழகு...நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் சிறப்பான நாள் அனைவருக்கும் 🙏❤.
I stopped eating non-veg after listening to your talk, it has been over 8 years and I'm still a vegetarian! Can understand you wanting to limit your travel, this looks like your path to retirement/salvation. Thank you very much for everything you have given us in the last 50 years!
Great decision made by you, every action causes an after effect on karma. Being vegetarian will of course reduce the hardships of life and creates love and compassion towards all of our fellow beings.
,iyya வணக்கம் உங்கள் வயது நீங்கள் சொல்லியபிறகு தான் தெரிந்தது நான் உங்களுக்கு 60 என்று தான் நினைத்தேன் இயற்கை யோடு இயந்து இன்னும் பல. வருடங்கள் உங்கள் தொண்டுதமிழ் உலகத்திற்கு கிடைக்க இறைவன் அருள் புரியட்டும்
கடவுள் போல் தோன்றியது என் வாழ்நாளில் நான் உங்கள் வீடியோ பார்க்கும்போது திடீரென திடீரென எனக்கு ஒரு விதமான உணர்ச்சி வந்தது உங்களை முன்னால் விடியல் பார்க்கும் போது இப்பொழுது தாங்கள் வயதாகி இருப்பது போல் தெரிகிறது அதனால் எனக்கு உங்களை நேரில் பார்க்க வேண்டும் என்று நான் பெரிய பாக்கியம் உங்களை பார்த்துவிட்டால் ஆந்தை நம்பிக்கையும் எனக்கு இருக்கின்றத 7:187:187:18 என்று ஆசைப்படுகிறேன் நேரில்
வணக்கம் ஐயா ஒரு வித்தியாசமான கம்பிரமான ஆண் சிங்கம் போல் உள்ளிர்கள். உலகில் எல்லோரும் உங்களை ஒரு சிறந்த பேச்சாளராகவெ பார்ப்பார் ஆனால் நான் உங்களை ஒரு மகானக தான் அறிந்தென் இதை எனது குரு ஒருவர் அறியத்ததந்தார் நன்றி ஐயா,
எங்கள் மதிப்பு மிக்க சொல்வேந்தர் எப்படி இருந்தாலும் சர்வலோக வேந்தர் நீங்கள் உங்கள் தாய் தந்தை யையும் எல்லா வல்ல இறைவனை யும் நன்றி உடன் வணங்குகிறேன் நன்றி
என் கணவர் 35வரடங்களாக தலைமுடி சாயம் உபயோகிப்பவர். சமீபத்தில் வயிற்று புற்று நோய் கண்டறியப்பட்டு சிகிச்சை எடுத்தோம். உங்கள் பேச்சை கேட்டபின் இதுவும் காரணமாக இருந்திருக்கலாம். என தோன்றுகிறது. ஐயா உங்கள் உருவத்தை தாண்டி உங்கள் பேச்சுதான் எங்களை சந்தோஷப்படுத்தியது. எப்போதும்போல உங்கள் உரையை கேட்க ஆசைபடுகிறோம்
தங்களின் வெற்றி நிச்சயம் பேச்சால் கவரப்பட்டு நிறைய உரைகள் கேட்டவன். தாங்கள் மனித குலத்திற்கு வரப்பிரசாதம்.. தாங்களின் வழிகாட்டுதலை முடிந்தவரை பின்பற்றி நடப்பவன் என்ற முறையில் நாளை டை அடிக்க நினைத்திருந் தேன் இனி மாற்றிக் கொள்கிறேன்... அய்யா..
குருவின் பாதம் பனிக்கிறேன்🙏 ஆன்மாக்கள் பரம்பொருளை அறிந்து கொள்ள வேண்டும்! மற்றும் மூட நம்பிக்கை விடுத்து அறம் சார்ந்த வாழ்க்கை மூலம் கடவுளை அடையலாம் என்பதை நிறைய விளக்கி பேசியுள்ளார் ! குருவின் வழி வாழ்வது அவருக்கு தரும் சமர்ப்பனம்! 🙏
ஐயா வணக்கம். தங்களின் கருத்து உண்மையே. தங்களின் உயரிய எதார்த்தமான கருத்துக்களுக்கும் அழகான ஆழமான தமிழ் பற்றுக்கும் வெளிபடையான சுபாவம் இப்படி எத்தனையோ நல்ல சிறந்த வாழ்க்கை முறையை கொண்ட மரியாதைக்குரியவர் நீங்கள். சாயம் பூசாத தங்களின் ஆத்மார்த்தமான பணிக்கு இயற்கை அளித்த உயரிய அன்பளிப்பு தலைக்கணமில்லா தலைக்கு என்றுமே தமிழுக்கு மட்டுமே தலைக்கு வணங்கும் தங்களுக்கு இயற்கை அளித்த "வெள்ளி கிரீடம்" 💐 🙏வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். 🙏
நீங்கள் என்னுடைய பல வருட ஆதர்சம். என்னுடைய பள்ளி நாட்களிலிருந்தே மதுரையில் நீங்கள் எங்கே பேசினாலும் வந்து கேட்டவன். மதுரை லஷ்மி சபாவில் 10 நாடகள் நீங்கள் ஆற்றிய அபிராமி அந்தாதி விளக்கவுரை இன்னும் என் செவிகளில். ராஜா முத்தையா மன்றத்தில் கேட்ட கம்ப ராமாயணம்,ஒலி நாடாக்களில் கேட்ட மகாபாரதம், பகவத்கீதை தான் என்னை இன்றும் வழி நடத்துகிறது. உங்களைப் போல நானும் ஒரு பேச்சாளனாகி நல்ல விஷயங்களை நாடெங்கும் சென்று பேச வேண்டும் என்று நினைப்பேன். உங்கள் தலைமையில் ஒரே ஒரு பட்டிமன்றம் பேச வேண்டும் என்பது என்னுடைய பல வருடக் கனவு. வேலை நிமித்தம் வெளிநாட்டில் வசிக்கிறேன். நான் வாழும் பஹ்ரைன் நாட்டுக்கு நீங்கள் உரையாற்ற வந்த போதும் முதல் வரிசையில் அமர்ந்து கேட்டு, உங்களின் கேள்வி நேரம் பகுதியில் கேள்வியும் கேட்டேன். உங்களுக்கு வயதாகி விட்டது என்பதையே என்னால் ஏற்க முடியவில்லை. இன்னுமொரு நூற்றாண்டிருந்து என்னைப் போல பலரையும் உங்கள் தீந்தமிழால், செந்நாவால் வழி நடத்த வேண்டும். அதற்கு இறையருள் துணை நிற்கும்...
இனிமையான அன்பு அண்ணா அவர்களே வணங்கி அமைகிறேன், தாங்கள் தொடர்ந்து நிறையா பேச வேண்டும், நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகாலம் தங்கள் பணி சிறக்க வேண்டும், 🙏🙏🙏
ஐயா வணக்கம் அருமை அருமை உங்கள பார்க்கிற போதே தோணுச்சு ஐயா என்ன நம்ம ஐயா இப்படி இருக்கிறார் என்று என் மனதில் உள்ள எண்ணங்களை பார்த்து அற்புதமான தகவலை கூறியதற்கு நன்றி
ஐயா, உங்கள் அச்சம் தவிர் மற்றம் வாழ்தல் ஒரு கலை என்ற நூல்கள் படிக்க வாயப்பு singaporeல் கிடைத்தது. மிக அருமையாக உள்ளது. உங்கள் சொற்பொழிவு மற்றம் நூல்கள் என்றும் என் குடம்ப மனதில் இருக்கம். நன்றி ஐயா.
வாழ்கையில் வாழ் வாங்கு வாழ்ந்து ஒய்வு எடுக்க வேண்டும் என்று எண்ணம் நல்ல எண்ணம்! நாங்கள் உங்கள் கருத்துகளை கேட்க்க RUclips இருக்கிறது, ஆனால் சமாதன வாதிகள் உங்கள் இடத்தில் வந்து மீண்டும் மடமையை கற்பிக்க நினைக்கும் போது தாங்கள் எதிர் குரல் கொடுத்து உண்மையான கருத்துக்களை மக்களுக்கு விளக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்
ஐயா தங்கள் சிறந்த பேச்சை என் பதினாறு வயதில் இருந்து கேட்டுக்கொண்டுள்ளேன். பாரதியின் நரைகூடிக் கிழப்பருவம் எய்தி கொடுங்கூற்றுக்கு இரையெனப் பின்மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல் நான் வீழ்வேனென்று நினைத்தாயோ தங்களுக்கு மட்டுமே எழுதப்பட்ட வரிகள். வாழ்வீர் பேச்சு மூலம் வீச்சு மூலம்....
ஐயா இப்போது தான் நீங்கள் அழகுக்கு அழகு. உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் அழகு. உங்கள் ஒவ்வொரு அசைவும் அழகு. உங்களின் ஒவ்வொரு கருத்துக்களும் இந்த கலியுகம் முடியும் வரை தொடரும் ஐயா. நீங்கள் உடல் நலம் பெற்றும் நீண்ட ஆயுளும் நிறைவான அமைதியும் பெற வாழ்த்துக்கள்
நல்லது மகிழ்ச்சி ஐயா! "ஞானம் பிறந்த கதை" எல்லாம் ஊழ்வினைப்படியே நடக்கும்! ஆனால், ஊழ் உண்டு இல்லை என்பதும் ஊழ் தரும் புரிந்துணர்வில் அடங்கிக் கிடக்கிறது. எங்கும் நல்லூழ் ஞானம் பிறக்கவேண்டும்.. மனிதம் தழைக்க வேண்டும்..! உங்களுக்கு என்னூழ் தரும் நன்றிகள்!!!
நீங்க என் குரு சார்.. உங்க வழியாக இன்னும் நிறைய குருக்களை கண்டடைந்தேன்.. முக்கியமாக ஓஷோ.. ரமண மகரிஷி போன்ற ஞானிகளை உங்கள் வழியாக அறிந்து பின் அவர்கள் என் வாழ்வில் நிகழ்த்திய மாற்றம் என்பது இன்னும் அற்புதமானது.. காலத்துக்கும் மறக்காத உதவி செய்துள்ளீர்கள் நன்றி சார்.. ❤️
ஐயா தாங்கள் கூறிய தோல் சம்பந்தப்பட்ட குறைகள் எனக்கு 2000 ஆண்டு ஏற்பட்ட தீ.அது சமயம் நான் ஒரு பத்தாண்டு காலம் டை போட்டு வந்திருந்தேன்.தோலில் ஏற்பட்ட மாற்றங்களை சரி செய்ய அன்று முதல் 22 ஆண்டு காலம் டை போடாமல் வாழ்ந்து வருகிறேன்.இப்போது எந்த தொந்தரவும் இல்லை.நீங்கள் கூறிய வை முற்றிலும் சரி. வாழ்த்துக்கள்
சூப்பர் ஐயா நீங்கள் எடுத்திருக்க முடிவு நல்ல முடிவு நீங்கள் மேடைகள் தோறும் பேசினீர்கள் நல்ல நல்ல அறக்கருத்துக்களாக பேசினீர்கள் பேசிய போதெல்லாம் வியந்தேன் இப்பொழுது உங்களையே பார்த்து வியக்கின்றன ஐயா (உங்களது தோற்றம்) உங்களது முடிவு
சிறப்பான கருத்து!நல்ல முடிவு !!ஆன்மீகம் பேசிய உங்களுக்கு die தான் வரக்கூடாதே தவிர நரைவரலாம் .அதை அப்படியேவும் காட்டலாம் .நாங்கள் உங்கள் குரலைத் தான் நேசித்தோம் முடியை அல்ல!!வாழ்க வளமுடன் .பரபத வாசலில் உங்கள் உயிர் பத்திரமாக பாதுகாக்கப்படும் .
ஐயா, அவ்வாறு செய்ய வேண்டாம். தங்களது சொல் ஆற்றலையும், முக அசைவுகளையும் காணாது இனி நான் என் செய்ய போகிறேன்... இருப்பினும், ஐயாவின் வார்த்தைகளை தெய்வ வாக்காக பின்பற்றும் எனக்கு, உங்களின் முடிவை எதிர்க்க துணிவில்லை அய்யா. இப்படிக்கு, என்றும் உங்களின் அடியேன்.
Sir, you are my best inspiration . You did a fantabulous job to this society..God will knows who you are.. எனக்கு உங்களை வாழ்த்த வயதில்லை ஆனால் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன் நீங்கள் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற வேண்டும் என்று. நீங்கள் இவ்வளவு நாட்களாக எங்களுக்கு கூறிய ஒவ்வொரு கருத்துகளையும் எடுத்து கொண்டு வாழ்ந்தாலே நாங்கள் சிறப்பாக இந்த சமுதாயத்தில் திகழ முடியும். நன்றி ஐயா
ஒரு எளிமையான சிந்தனை. வாழ்க்கை உண்மையில் முரண்பாடுகள் மற்றும் இருமைகள் நிறைந்தது என்பதை நீங்கள் உணர்ந்தால், அனைத்தும் அர்த்தமுள்ளதாக இருக்கும். நான் தண்ணீர் கொடுப்பது போல் நடிக்காததால் எனது பிளாஸ்டிக் செடிகள் இறந்துவிட்டன 🙃
அய்யா...உங்களின் அழகு தோற்றத்தில் இல்லை... உங்கள் பேச்சினில் உள்ளது. அது நாளுக்கு நாள் உங்களை மெருகேற்றி மெருகேற்றி புடம் போட்ட தங்கமாக வைத்துள்ளது. த்ற்போது அந்த தங்கத்தின் மீது கொஞ்சம் வெள்ளியை அள்ளி பூசினாற்போல மேலும் அழகுக்கு அழகு சேரப் போகிறது... அவ்வளவுதான்... நீங்கள் நீண்ட ஆயுளோடு நிறைவான ஆரோக்யம் பெற்று என்றும் எங்களுக்கு அறத்தை போதிக்கும் ஆசானாக, கருத்தை அள்ளித்தரும் கர்ணனாக நிலைக்க வேண்டுமென எல்லாம் வல்ல பிரபஞ்ச பேரருளினை பிரார்த்திக்கிறேன்.
தங்களின் கம்பீரக்குரல் அந்தக்குரலில் வரும் சொல் தான் தங்களின் அடையாளம். வெளிப்பற அடையாளமும் மிகப்பலருக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் ஐயா.என்றும் எங்களுடன் இருக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் ஐயா.
வயசுக்கு ஏற்ற அழகு இப்ப உங்களுக்கு இருக்கு அப்பா
உனக்கென்ன குறைச்சல்......நீ ஒரு
ராஜா.....
வந்தால் வரட்டும்
முதுமை
தாங்கள் நீண்ட ஆயுள் பெற்று நலமுடன் வாழ பரம்பொருளை வேண்டுகிறேன் ஐயா... பதிவுகளை தொடர்ந்து வெளியிடுங்கள்.. 🙏🏻.. தங்களைப் போன்ற பெரியவர்களின் வழிகாட்டல் இளைய தலைமுறைக்கு தேவை.. 🙏🏻 🙏🏻 🙏🏻
True
@@A.Thangadurai_vaniya_chettiar. 🙏🏻 🙏🏻 🙏🏻
நரை,திரை,மூப்பு,பிணி சாக்காடு மனிதப்பிறவி க்கு இயற்கை.
இனிமேல் பொதுமேடையில் வராமல் இருந்தால் இந்துமதம் வாழும்
P,, 0,o,,,,
"நீதியின் வழியில் உண்டாகும் நரை முடியானது
மகிமையான கிரீடம்" - நீதிமொழிகள் 16:31
ஐயா ... நாங்கள் பார்ப்பது முடியயோ முகத்தையோ அல்ல மாறாக நாங்கள் பார்ப்பது கேட்பது உங்கள் அழகிய அறிவும்,உயரிய சிந்தனை மட்டுமே....
நீங்கள் பல்லாண்டு வாழ இறைவனை பிராத்திக்கிறேன்.....
இப்படிக்கு உங்கள் மீது அன்பு கொண்ட, முகமது ஜாசீம்
உங்கள் பேச்சுக்கள் அத்தனையும் கணீர் கணீர் என்று இருக்கும் ஆனால் அதில் ஒன்றில் கூட நான் என்ற ஆணவம் தெரியாது. அது இப்போது உள்ள பேச்சாளர்களிடம் இல்லாத ஒரு பண்பு.
வாழ்க வளமுடன் அப்பா.....சிறு வயது முதல் உங்கள் கருத்தை கேட்டு வளர்ந்தவள் நான்....பல மாற்றங்கள் என்னுள் அனுபவித்து இருக்கிறேன்.... நல்ல எண்ணங்களும் சிந்தனைகளும் வளர அப்பா நீங்களே காரணம் ......நல்ல மனிதனாக எப்படி வாழவேண்டும் என்று உங்கள் அறிவுரை கேட்டு வளர்த்தேன். நன்றிகள் பல அப்பா.....
Your sevice to society is uncomparable the decision now you have taken is wise i wish you a happy and peaceful life ❤
You r great and like ur speeches.which is motivating all in all fields. Continue ur speeches always whenever possible. Hope u will act according to ur ambition with health factor. Thank u sir once again
My reply should come to the comments
அய்யா தங்களை பார்க்கும் போது மனதிற்கு நிறைவாக இருக்கிறது தாங்கள் ஆயிரம் பிறை காண இறைவன் அருள்வார்
நீங்கள் எப்படி இருந்தாலும் என்றுமே உங்கள் தமிழ் அழகு ஐயா 🙏🙏🙏
வணக்கம் ! உங்கள் பேச்சுப் சமூகத்திர்க்குகிடைத்த மிக பெரிய வரம் பொக்கிஷம் !அறம் சார்ந்த வாழ்க்கை எவ்வளவு மன வலிக்கு உள்ளாக நேரிடும் என்பதை நன்கு அறிவேன்! கடவுள் ஆரோக்கிய வாழ்வு நல்க வேண்டும் எல்ல வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏!
At the darkest period of my life, I started listening to your speech everyday and grew stronger. I still listen to your RUclips every single day. Thank you sir.
you are the man
வாழ்த்த வயது இல்லை.உங்கள் சேவைக்கு தலை வணங்குகிறேன்.
புதுக்கடைபுதுக்கடை புது கட்ட போறேன்னாபுது கெட்டப்பு நைனாசூப்பரா இருக்குதுாப்பிட வாநான் மட்டும் சாப்பிட வாசுகி சுகிஐ லவ் யூ சுகிஆத்துக்குவா ஆத்துக்குவா ஒரு நாள்ஆத்துக்கு பக்கம் வரணும்லஇது தப்பா தப்பா சொல்லுதுஒரு நாளைக்கு வீட்டுக்கு வாங்கசுகி சார் நன்றிஎன்ன வாழ்த்துக்கள்உங்கள் தீவிர ரசிகன் நான்நன்றி ஐயா நன்றிகோடான கோடி நன்றிமீண்டும் சந்திப்போம்நீங்கள் சுகமா இருக்கிறது எங்களுக்கு கூடநீங்கள் சுகமா இருக்கிறது எங்களுக்கு கூடி சந்தோசம்வார்த்தைகள் இல்லைநன்றி ஐயா நன்றி நன்றி நன்றி நன்றி கோடான கோடின கோடி நன்றி
சுகிக்கு வாசுகி சொல்வது என்னவெனில்,
"கடைவிரித்தேன் கொள்வாரில்லை" என்று வள்ளளாரை ஓரங்கட்டியது தமிழ்நாடு.
பாரதி வாழும் போதே வறுமைக்குள் வீழ்த்தியது தமிழகம்.
தமிழருக்கு என்றுமே நிழலின் அருமை வெய்யிலில் தான் புரியும்.
உங்கள் பணி குன்றின் நீர்வீழ்ச்சி போன்று தொடரட்டும்.
வாழ்க வளமுடன்!
வாழ்க தமிழுடன்!
இளமை தோற்றம் என்ற மாய வேசம் கலைத்து உண்மை என்ற யதார்த்தத்துக்கு மாறிய ஐயாவிற்கு வாழ்த்துகள். மாற்றம் ஒன்றே நிலையானது
வணக்கங்கள் ஐயா 🙏... முதுமை என்பது இந்த உடலுக்கு தானே... உங்களின் சிந்தனைக்கும்,ஆன்மீக பயணத்திற்குப் அல்லவே..,அவை என்றுமே புதிதாக மலரும் ரோஜா பூக்கள் போன்றவை, கோடை காலத்தில் தவிக்கும் உயிரினங்களுக்கு இறைவன் கருணை உள்ளத்தோடு கொடுத்த மழைத்துளி நீங்கள்... எங்களின் எண்ணங்களிலும் சிந்தனைகளிலும் என்றுமே நிறைந்து வாழ்பவர்.. பல சமயங்களில் தங்களின் வழிக்காட்டுதல்கள் எங்களை வழிநடத்துகின்றன... நன்றிகள் ஐயா.... பல்லாண்டு வாழ்க வளமுடன்.....❤
மிகவும் தாமதமான முடிவு. ஆன்மீக வாழ்க்கையில் தீவிரமாக இருந்திருந்தால் என்றோ இந்த முடிவு எடுத்திருப்பீர்கள்.
உங்கள் பேச்சில் என்றும் இளமை உள்ளது. அது தான் ஐயா எங்களுக்கு என்றும் தேவை.. உங்கள் தோற்றம் எப்படி இருந்தாலும் உங்கள் பேச்சை போல ஏற்றுக்கொள்வோம்...
தங்களின் இந்த மாற்றத்தை மனதார ஏற்கிறேன்... வணக்கம் ஐயா... எங்களை வாழ்த்துங்கள்
அய்யா முற்றிலுமாக மாறுபட்ட வேடம்...ஆனால் இதுதான் உண்மை ...நிரந்தரம் 😊😊❤...உண்மை என்று நினைத்தது வேஷம்...😊😊.ஆனால் இந்த நிலையில் நேரில் பார்த்தால் இவர் அய்யா சுகிசிவம் இல்லை என்று நினைத்திருப்பேன்..😂😂நன்றி அய்யா..உங்கள் ஆசி ....எங்களுக்கு தொடர வேண்டுகிறேன்....🙏🙏
உமது வாழ்வும், வாக்கும், வழிகாட்டலும் இத்தலைமுறைக்கு கிடைத்த கொடை. காலத்தால் அழியாத பொக்கிஷம் ஐயா நீர்!!! இன்னும் பல்லாண்டு காலம் பேச வேண்டும் ஐயா நீர்!!! வாழ்க வளமுடன்!!! அனுபவங்களால் முதிர்ந்து கனிந்த பழம் ஐயா நீர்!!! இது முடிவல்ல!!! இனிதான் ஆரம்பம்!!! அனுபவ முதிர்ச்சி பெற்றவரிடம் இருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் வேதம் எமக்கு!!!
நான் உங்கள் அன்பான ரசிகன். தாங்கள் பல்லாண்டு நலமுடன் வளமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன். கவி கண்ணன்.
வணக்கம் ஐயா இறையருள் நிறைந்து
வாழ்க வளமுடன்
ஐயா, உங்கள் ஆரோக்கியத்திற்கு இறைவனிடம் வேண்டுகிறேன். உங்கள் சொற்பொழிவு பலரின் வாழ்க்கை வழிகாட்டி. நீர் நீண்ட காலம் நலமுடன் வாழ வேண்டுகிறேன்.
ஐயா உங்களின் பேச்சை நான் கேட்டது 1996 ல் Oman நாட்டுல, (இப்பொழுது இலங்கை யில்) தொடர்ந்து இன்று வரை கேட்கும் வாய்ப்பளித்த இறைவனுக்கு நன்றி,
மேலும் உங்கள் பணி தொடர இறைவனை பிராத்திக்கிறேன்.
தங்கள் ஆரோக்கியமே எங்களுக்கு முக்கியம் ஐயா.... உங்களது தோற்றம் எங்களுக்கு முக்கியமானது அல்ல நீங்கள் நீங்கள் மட்டுமே❤
நீங்கள் பல்லாண்டு வாழ பிரார்த்திப்போம், வாழ்க வளமுடன்
உங்களது மாற்றத்திற்கு யாரும் வருந்த மாட்டார்கள், மாறாக சந்தோஷம் அடைவார்கள். உங்கள் உண்மை தன்மையை நாங்கள் வாழ்துகிறோம். உங்கள் சமுதாய கண்ணோட்டம் வாழ்க. வளர்க.. நெடுநாள் சுகத்தோடும் வளத்தோடும் வாழ வேண்டும் என இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்..
தெளிவான உண்மையான உபதேசம் ஐயா நன்றி
உருவத்தில் நீர் முதுமை என்ன..?
உள்ளத்தில் நீர் இளமைதானய்யா..!
காண்பதற்க்கு உமக்கு கருமை எதற்கு.?
உமது கருத்திலே எப்போதும் வெண்மை இருக்கு..!
நோய் நொடி வந்தாலும் அவை வாடி போய் நீர்
வாழிய பல்லாண்டு..!
நட்போடு ரசிகன்
நசீர்.
பஹ்ரைன்
Super super good👍
மனதளவில் விடுதலை உணர்வோடு இருப்பதற்காகத்தான்..... உங்களை பாராட்டுகிறேன்.
மாண்புமிகு சுகிசிவம் ஐயா அவர்களே,
பிடரி இருந்தாலும் இல்லாவிடினும் சிங்கம் சிங்கம் தான். அது போல் உங்கள் ஏற்றம் தோற்றத்தால் அல்ல. சமூக அக்கறை கொண்ட தங்கள் பேச்சாற்றலால் எண்ணிலடங்கா மக்களின் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றமேயென்பதை நாங்கள் அறிவோம். உங்களின் உடல் நலம் பெற இறையை வேண்டுகிறோம்.
ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்கும்.
കഴിഞ്ഞ നാൽപത് വർഷത്തോളമായി താങ്കളെ ശ്രവിക്കുന്നു. ജീവിതത്തിന് ആവശ്യമായ എത്രയെത്ര നല്ല കാര്യങ്ങൾ താങ്കളിൽ നിന്നും മനസ്സിലാക്കി ..... എത്ര കാലങ്ങൾ കഴിഞ്ഞാലും താങ്കളുടെ ശബ്ദവും രൂപവും എല്ലാവരുടെ മനസ്സിലും നിറഞ്ഞ് നിൽക്കും. സർവ്വേശ്വരൻ താങ്കളെ അനുഗ്രഹിക്കട്ടെ🙏🙏🙏🙏
ஐயா, தங்கள் புரட்சிகரமான கருத்துக்கள் இந்த சமுதாயத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
விட்டு விடுதலையாகி நிற்பார் ஒரு சிட்டுக்குருவியைப் போலே... யாதெனின் யாதெனின் நீங்கி நீங்கள் வாழ்க வளமுடன் ஆசானே....
"மனதளவில் ஓர் விடுதலை உணர்வு" இந்த தலைப்பே மிகவும் வித்தியாசம். தங்கள் அனுபவங்களை தொகுத்து புத்தகமாக வெளியிட்டால், 50+ வயதினருக்கு மிகவும் உபகாரமாக/உபயோகமாக இருக்கும். நன்றிகள் ஐயா 🙏
ஐயா உங்களுடைய சொற்பொழிவு கேட்டு எண்ணங்கள் பக்குவ பட தொடங்குகிறது. வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்
எஎதோ இணைபிரியாத வலி..ஆனால் என்றென்றும் நீங்கள் அறிவுறுத்திய வழி.. அற வழி...அய்யா வாழ்க வளமுடன் 🙏
நான் என் வாழ்க்கையில் மேம்பட ஐயாவின் கருத்துக்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.நன்றி ஐயா
தங்களுக்கு எனது குடும்ப உறுப்பினர் ஐவரின் தலா பத்தாண்டுகள் பெற்று மென்மேலும் சொற்பொழிவாற்றிட இறையருள் புரியட்டும்
வணக்கம் அய்யா
எந்த ஒரு தலைப்பும் மக்களுக்கு பயன்படும் வகையில் தான் இருக்கும்... உங்களின் இந்த தலைப்பும் மிகவும் பயனுள்ளதாக உண்மையான சத்தியமான பதிவு.
உங்களின் தோற்றம் முன்பை விட அழகாகவும் உங்கள் அறிவு ஆளுமையை மிக மதிப்புள்ளதாக காட்டுகிறது.
இளமைக்கு நடைஅழகு
முதுமைக்கு நறைஅழகு...நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் சிறப்பான நாள் அனைவருக்கும் 🙏❤.
I stopped eating non-veg after listening to your talk, it has been over 8 years and I'm still a vegetarian! Can understand you wanting to limit your travel, this looks like your path to retirement/salvation. Thank you very much for everything you have given us in the last 50 years!
Great decision made by you, every action causes an after effect on karma. Being vegetarian will of course reduce the hardships of life and creates love and compassion towards all of our fellow beings.
,iyya வணக்கம் உங்கள் வயது நீங்கள் சொல்லியபிறகு தான் தெரிந்தது நான் உங்களுக்கு 60 என்று தான் நினைத்தேன் இயற்கை யோடு இயந்து இன்னும் பல. வருடங்கள் உங்கள் தொண்டுதமிழ் உலகத்திற்கு கிடைக்க இறைவன் அருள் புரியட்டும்
கடவுள் போல் தோன்றியது என் வாழ்நாளில் நான் உங்கள் வீடியோ பார்க்கும்போது திடீரென திடீரென எனக்கு ஒரு விதமான உணர்ச்சி வந்தது உங்களை முன்னால் விடியல் பார்க்கும் போது இப்பொழுது தாங்கள் வயதாகி இருப்பது போல் தெரிகிறது அதனால் எனக்கு உங்களை நேரில் பார்க்க வேண்டும் என்று நான் பெரிய பாக்கியம் உங்களை பார்த்துவிட்டால் ஆந்தை நம்பிக்கையும் எனக்கு இருக்கின்றத 7:18 7:18 7:18 என்று ஆசைப்படுகிறேன் நேரில்
நல்ல கருத்து, உண்மையான பேச்சு ஐயா, நீடுழி வாழ்க.
மூட்டு வலியும் முன்னூறு அன்பும்
🌺💐
நீதியின் வழியில் உண்டாகும் நரை முடியானது
மகிமையான கிரீடம்" - நீதிமொழிகள்
இவ்வளவு நாள் தங்களை எனது மைத்துனரை பார்பதுபோல் பார்த்தேன். இப்போதுதான் எனது அன்பு தாத்தாவை பார்ப்பதுபோல் பார்க்கிறேன், இதுவும் மிக அழகே.
நன்றி நன்றி
என் ஆயுளை உங்களுக்கு சேர்த்து உங்களுக்கு இறைவன் கொடுக்க வேண்டும் என்று பிரார்த்தனை
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
சார் உங்கள் பேச்சு கேட்டு ரெம்ப நாள் ஆகிவிட்டது. ரெம்ப நன்றி
ஐய்யா வாழ்க வளமுடன் ❤🙏
அய்யா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் அருட் பேராற்றல் கருணையினால் உடல்நலம் நீண்ட ஆயுள் நிறைச்செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன்🙏
அருமை ஐயா.. ரொம்ப அனுபவம் மிக்க அழகனாக தோற்றம் அளிக்கின்றீர்கள்.. வாழ்க நலமுடன் வளமுடன் என்றும் மகிழ்வுடன்.. நன்றி
வணக்கம் ஐயா ஒரு வித்தியாசமான கம்பிரமான ஆண் சிங்கம் போல் உள்ளிர்கள்.
உலகில் எல்லோரும் உங்களை ஒரு சிறந்த பேச்சாளராகவெ பார்ப்பார் ஆனால் நான் உங்களை ஒரு மகானக தான் அறிந்தென் இதை எனது குரு ஒருவர் அறியத்ததந்தார் நன்றி ஐயா,
வணக்கம் சார். தாங்கள் சொன்னது போல் இனி நானும் டை போட மாட்டேன் எனக்கும் தாங்கள் வயதுதான். தங்களது நல்ல உரைக்கு நன்றி.
எங்கள் மதிப்பு மிக்க சொல்வேந்தர் எப்படி இருந்தாலும் சர்வலோக வேந்தர் நீங்கள் உங்கள் தாய் தந்தை யையும் எல்லா வல்ல இறைவனை யும் நன்றி உடன் வணங்குகிறேன் நன்றி
என் கணவர் 35வரடங்களாக தலைமுடி சாயம் உபயோகிப்பவர். சமீபத்தில் வயிற்று புற்று நோய் கண்டறியப்பட்டு சிகிச்சை எடுத்தோம். உங்கள் பேச்சை கேட்டபின் இதுவும் காரணமாக இருந்திருக்கலாம். என தோன்றுகிறது. ஐயா உங்கள் உருவத்தை தாண்டி உங்கள் பேச்சுதான் எங்களை சந்தோஷப்படுத்தியது. எப்போதும்போல உங்கள் உரையை கேட்க ஆசைபடுகிறோம்
தங்களின் வெற்றி நிச்சயம் பேச்சால் கவரப்பட்டு நிறைய உரைகள் கேட்டவன். தாங்கள் மனித குலத்திற்கு வரப்பிரசாதம்.. தாங்களின் வழிகாட்டுதலை முடிந்தவரை பின்பற்றி நடப்பவன் என்ற முறையில் நாளை டை அடிக்க நினைத்திருந்
தேன் இனி மாற்றிக் கொள்கிறேன்... அய்யா..
குருவின் பாதம் பனிக்கிறேன்🙏 ஆன்மாக்கள் பரம்பொருளை அறிந்து கொள்ள வேண்டும்! மற்றும் மூட நம்பிக்கை விடுத்து அறம் சார்ந்த வாழ்க்கை மூலம் கடவுளை அடையலாம் என்பதை நிறைய விளக்கி பேசியுள்ளார் ! குருவின் வழி வாழ்வது அவருக்கு தரும் சமர்ப்பனம்!
🙏
உங்கள் ஆணித்தரமான வார்த்தைகள் என்றுமே எங்கள் மனதை விட்டு நீங்காது...நீங்கள் என்றும் நலமுடம் வளமுடன் இருக்க இறைவனை வேண்டி கொள்கிறோம்....
Vanakkam.iya
எதார்த்த சிந்தனை...உங்களின் இயல்பு ... Iya..neengal sollin selver..ungalai sirappu...
ஐயா வணக்கம். தங்களின் கருத்து உண்மையே. தங்களின் உயரிய எதார்த்தமான கருத்துக்களுக்கும் அழகான ஆழமான தமிழ் பற்றுக்கும் வெளிபடையான சுபாவம் இப்படி எத்தனையோ நல்ல சிறந்த வாழ்க்கை முறையை கொண்ட மரியாதைக்குரியவர் நீங்கள். சாயம் பூசாத தங்களின் ஆத்மார்த்தமான பணிக்கு இயற்கை அளித்த உயரிய அன்பளிப்பு தலைக்கணமில்லா தலைக்கு என்றுமே தமிழுக்கு மட்டுமே தலைக்கு வணங்கும் தங்களுக்கு இயற்கை அளித்த "வெள்ளி கிரீடம்" 💐 🙏வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். 🙏
நீங்கள் என்னுடைய பல வருட ஆதர்சம். என்னுடைய பள்ளி நாட்களிலிருந்தே மதுரையில் நீங்கள் எங்கே பேசினாலும் வந்து கேட்டவன். மதுரை லஷ்மி சபாவில் 10 நாடகள் நீங்கள் ஆற்றிய அபிராமி அந்தாதி விளக்கவுரை இன்னும் என் செவிகளில்.
ராஜா முத்தையா மன்றத்தில் கேட்ட கம்ப ராமாயணம்,ஒலி நாடாக்களில் கேட்ட மகாபாரதம், பகவத்கீதை தான் என்னை இன்றும் வழி நடத்துகிறது. உங்களைப் போல நானும் ஒரு பேச்சாளனாகி நல்ல விஷயங்களை நாடெங்கும் சென்று பேச வேண்டும் என்று நினைப்பேன். உங்கள் தலைமையில் ஒரே ஒரு பட்டிமன்றம் பேச வேண்டும் என்பது என்னுடைய பல வருடக் கனவு.
வேலை நிமித்தம் வெளிநாட்டில் வசிக்கிறேன். நான் வாழும் பஹ்ரைன் நாட்டுக்கு நீங்கள் உரையாற்ற வந்த போதும் முதல் வரிசையில் அமர்ந்து கேட்டு, உங்களின் கேள்வி நேரம் பகுதியில் கேள்வியும் கேட்டேன்.
உங்களுக்கு வயதாகி விட்டது என்பதையே என்னால் ஏற்க முடியவில்லை. இன்னுமொரு நூற்றாண்டிருந்து என்னைப் போல பலரையும் உங்கள் தீந்தமிழால், செந்நாவால் வழி நடத்த வேண்டும். அதற்கு இறையருள் துணை நிற்கும்...
ஐயா நீங்கள் நீடூழி வாழ ஜெர்மனில் இருந்து வாழ்த்துகிறேன் 🇩🇪
அருமை அற்புதம் நமச்சிவாய திருச்சிற்றம்பலம்
பிரார்த்தனை செய்கின்றேன் அருணாச்சலம்
தங்களின் தோற்றம் முக்கியமல்ல. தாங்கள் இந்த சமூகத்திற்கு வழங்கும் கருத்துகள் தான் முக்கியம். அதற்கு தங்கள் உடல் நலன்தான் முக்கியம்.
இனிமையான அன்பு அண்ணா அவர்களே
வணங்கி அமைகிறேன்,
தாங்கள் தொடர்ந்து நிறையா பேச வேண்டும், நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகாலம் தங்கள் பணி சிறக்க வேண்டும், 🙏🙏🙏
ஐயா வணக்கம் அருமை அருமை உங்கள பார்க்கிற போதே தோணுச்சு ஐயா என்ன நம்ம ஐயா இப்படி இருக்கிறார் என்று என் மனதில் உள்ள எண்ணங்களை பார்த்து அற்புதமான தகவலை கூறியதற்கு நன்றி
தாங்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்
உங்களின் பேச்சு தொடரவேண்டுகிறேன் ஐயா
தாங்கள் நீண்ட ஆயுள்,ஆரோக்கியத்துடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன். 🙏🙏.. உங்கள் பதிவை நிறுத்தி விடாதீர்கள்🙏
நீதிமொழிகள் 16 - 31 நீதி வழியில் உண்டாகும் நரையானது மகிமையான கிரீடம்.... வேதாகமம்.
நன்றி வாழ்க வளமுடன் இது உன்மையான தகவல்
வாழ்க எல்லா நலமுடனும்
ஐயா, உங்கள் அச்சம் தவிர் மற்றம் வாழ்தல் ஒரு கலை என்ற நூல்கள் படிக்க வாயப்பு singaporeல் கிடைத்தது. மிக அருமையாக உள்ளது. உங்கள் சொற்பொழிவு மற்றம் நூல்கள் என்றும் என் குடம்ப மனதில் இருக்கம். நன்றி ஐயா.
வாழ்கையில் வாழ் வாங்கு வாழ்ந்து ஒய்வு எடுக்க வேண்டும் என்று எண்ணம் நல்ல எண்ணம்!
நாங்கள் உங்கள் கருத்துகளை கேட்க்க RUclips இருக்கிறது, ஆனால் சமாதன வாதிகள் உங்கள் இடத்தில் வந்து மீண்டும் மடமையை கற்பிக்க நினைக்கும் போது தாங்கள் எதிர் குரல் கொடுத்து உண்மையான கருத்துக்களை மக்களுக்கு விளக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்
Okskisupar🎉🎉
ஐயா தங்கள் சிறந்த பேச்சை என் பதினாறு வயதில் இருந்து கேட்டுக்கொண்டுள்ளேன். பாரதியின் நரைகூடிக் கிழப்பருவம் எய்தி கொடுங்கூற்றுக்கு இரையெனப் பின்மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல் நான் வீழ்வேனென்று நினைத்தாயோ தங்களுக்கு மட்டுமே எழுதப்பட்ட வரிகள். வாழ்வீர் பேச்சு மூலம் வீச்சு மூலம்....
உங்கள் காலத்தில் நாங்கள் வாழ்வது..எங்களின் பாக்கியம் ஐயா..
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.....🙏🙏🙏
போதும் என்ற மனமே பொன்னானது. எந்த நோக்கத்தில் நீங்கள் இந்த முடிவை எடுத்தீர்களோ, அந்த நோக்கம் நிறைவேற இறைவன் அருள் புரிவானாக.
Vanakkam sir. Ungal sorpzhivukku nandrigal Kodi.
ஐயா இப்போது தான் நீங்கள் அழகுக்கு அழகு. உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் அழகு. உங்கள் ஒவ்வொரு அசைவும் அழகு. உங்களின் ஒவ்வொரு கருத்துக்களும் இந்த கலியுகம் முடியும் வரை தொடரும் ஐயா. நீங்கள் உடல் நலம் பெற்றும் நீண்ட ஆயுளும் நிறைவான அமைதியும் பெற வாழ்த்துக்கள்
இந்த தோற்றம் நன்றாக இருக்கு sir (old is gold )sir 👍👍
நல்லது மகிழ்ச்சி ஐயா!
"ஞானம் பிறந்த கதை"
எல்லாம் ஊழ்வினைப்படியே நடக்கும்!
ஆனால், ஊழ் உண்டு இல்லை என்பதும் ஊழ் தரும் புரிந்துணர்வில் அடங்கிக் கிடக்கிறது. எங்கும் நல்லூழ் ஞானம் பிறக்கவேண்டும்.. மனிதம் தழைக்க வேண்டும்..! உங்களுக்கு என்னூழ் தரும் நன்றிகள்!!!
நீங்க என் குரு சார்.. உங்க வழியாக இன்னும் நிறைய குருக்களை கண்டடைந்தேன்.. முக்கியமாக ஓஷோ.. ரமண மகரிஷி போன்ற ஞானிகளை உங்கள் வழியாக அறிந்து பின் அவர்கள் என் வாழ்வில் நிகழ்த்திய மாற்றம் என்பது இன்னும் அற்புதமானது.. காலத்துக்கும் மறக்காத உதவி செய்துள்ளீர்கள் நன்றி சார்.. ❤️
ஐயா தாங்கள் கூறிய தோல் சம்பந்தப்பட்ட குறைகள் எனக்கு 2000 ஆண்டு ஏற்பட்ட தீ.அது சமயம் நான் ஒரு பத்தாண்டு காலம் டை போட்டு வந்திருந்தேன்.தோலில் ஏற்பட்ட மாற்றங்களை சரி செய்ய அன்று முதல் 22 ஆண்டு காலம் டை போடாமல் வாழ்ந்து வருகிறேன்.இப்போது எந்த தொந்தரவும் இல்லை.நீங்கள் கூறிய வை முற்றிலும் சரி. வாழ்த்துக்கள்
சூப்பர் ஐயா நீங்கள் எடுத்திருக்க முடிவு நல்ல முடிவு நீங்கள் மேடைகள் தோறும் பேசினீர்கள் நல்ல நல்ல அறக்கருத்துக்களாக பேசினீர்கள் பேசிய போதெல்லாம் வியந்தேன் இப்பொழுது உங்களையே பார்த்து வியக்கின்றன ஐயா (உங்களது தோற்றம்) உங்களது முடிவு
சிறப்பான கருத்து!நல்ல முடிவு !!ஆன்மீகம் பேசிய உங்களுக்கு die தான் வரக்கூடாதே தவிர நரைவரலாம் .அதை அப்படியேவும் காட்டலாம் .நாங்கள் உங்கள் குரலைத் தான் நேசித்தோம் முடியை அல்ல!!வாழ்க வளமுடன் .பரபத வாசலில் உங்கள் உயிர் பத்திரமாக பாதுகாக்கப்படும் .
ஐயா, அவ்வாறு செய்ய வேண்டாம். தங்களது சொல் ஆற்றலையும், முக அசைவுகளையும் காணாது இனி நான் என் செய்ய போகிறேன்...
இருப்பினும், ஐயாவின் வார்த்தைகளை தெய்வ வாக்காக பின்பற்றும் எனக்கு, உங்களின் முடிவை எதிர்க்க துணிவில்லை அய்யா.
இப்படிக்கு,
என்றும் உங்களின் அடியேன்.
அய்யா, நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் என்றும் மன நலத்துடன், உடல் நலத்துடன் நீண்டு வாழ ஆசைப்படுகிறேன்.
நன்றி, வணக்கம்.
Sir, you are my best inspiration . You did a fantabulous job to this society..God will knows who you are.. எனக்கு உங்களை வாழ்த்த வயதில்லை ஆனால் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன் நீங்கள் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற வேண்டும் என்று. நீங்கள் இவ்வளவு நாட்களாக எங்களுக்கு கூறிய ஒவ்வொரு கருத்துகளையும் எடுத்து கொண்டு வாழ்ந்தாலே நாங்கள் சிறப்பாக இந்த சமுதாயத்தில் திகழ முடியும். நன்றி ஐயா
ஒரு எளிமையான சிந்தனை.
வாழ்க்கை உண்மையில் முரண்பாடுகள் மற்றும் இருமைகள் நிறைந்தது என்பதை நீங்கள் உணர்ந்தால், அனைத்தும் அர்த்தமுள்ளதாக இருக்கும்.
நான் தண்ணீர் கொடுப்பது போல் நடிக்காததால் எனது
பிளாஸ்டிக் செடிகள் இறந்துவிட்டன 🙃
Good 👍🌺
வணக்கம் ஐயா, உள்ளிருப்பது மாறாதது, வெளியாருப்பது மாற்றத்திற்க்குரியது, ஐயா நீங்கள் நல்லாராக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ எங்கள் பிரார்த்தனை🙏
அய்யா...உங்களின் அழகு தோற்றத்தில் இல்லை... உங்கள் பேச்சினில் உள்ளது. அது நாளுக்கு நாள் உங்களை மெருகேற்றி மெருகேற்றி புடம் போட்ட தங்கமாக வைத்துள்ளது.
த்ற்போது அந்த தங்கத்தின் மீது கொஞ்சம் வெள்ளியை அள்ளி பூசினாற்போல மேலும் அழகுக்கு அழகு சேரப் போகிறது... அவ்வளவுதான்...
நீங்கள் நீண்ட ஆயுளோடு நிறைவான ஆரோக்யம் பெற்று என்றும் எங்களுக்கு அறத்தை போதிக்கும் ஆசானாக, கருத்தை அள்ளித்தரும் கர்ணனாக நிலைக்க வேண்டுமென எல்லாம் வல்ல பிரபஞ்ச பேரருளினை பிரார்த்திக்கிறேன்.
ஐயா..... நீங்களும் உங்கள் அறிவும், ஞானமும், அனுபவமும் தமிழ்நாட்டின் பொக்கிஷம்.....
தங்களின் கம்பீரக்குரல்
அந்தக்குரலில் வரும் சொல் தான் தங்களின் அடையாளம். வெளிப்பற அடையாளமும் மிகப்பலருக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் ஐயா.என்றும் எங்களுடன் இருக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் ஐயா.