சென்னையில் வாணியர் மெகா கல்யாண மாலை நிகழ்ச்சி.

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 дек 2023
  • தமிழ்நாடு வாணியர் பேரவை #மூன்று #மாத#கடுமையான #உழைப்பு #நேர்த்தியான #பாதை ,அழகான மெகா வெற்றி.👍
    💥💥💥💥🔥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
    🥈 அன்பு சொந்தங்களுக்கு வணக்கம் 🙏தமிழ்நாடு வாணியப் பேரவை நடத்திய மெகா வாணியர் கல்யாண மாலைநிகழ்வின் அழகிய தருணங்கள்🙏.
    🥈 எந்த ஒரு நிகழ்வானாலும் அது முடிந்த உடன் (ஃபீட்பேக்) தருவது எங்களது வாடிக்கை ஏனென்றால்? நிகழின் தன்மை மற்றும் அதன் கட்டமைப்பு அதன் அடுத்த வெற்றிக்கு இது ஒரு பெரும் பாலமாகவும் வாணியர் பேரவை ரத்தங்களுக்கு உத்வேகமாகவும் இது அமையும்.
    🥈 மேலும் நமது சொந்தங்களுக்கு விழாவின் தன்மையை ,உள்ளதை உள்ளபடியே எடுத்துச் சொல்வது எங்களது மிகுந்த பண்பும் கூட.
    🥈 விழா ஆரம்பம் முதல் முடிவு வரை அப்படி ஒரு விறுவிறுப்பு தலைநகர் சென்னையில் நடப்பதால் மேலும் பரபரப்பு.
    🥈 சென்னையில் சில நாட்கள் மழை கொட்டு ,கொட்டு என்று கொட்டியது ஆனால் டிசம்பர் 17 ம வாணிய செல்வங்களின் கூட்டமழை கொட்டத் தொடங்கியது ஸ்ரீதேவி கல்யாண பேலஸ் தாம்பரத்தில்.கூட்டம் என்றால் அப்படி ஒரு கூட்டம் அலைமோதிய நமது சொந்தங்களின் பந்தஅலைகள்.
    🥈 இந்த அழகிய விதைக்கு முழு காரணமாக அமைவது வாணியர் சிற்பி ஐயா ராம பன்னீர்செல்வம் செட்டியார் அவர்கள்.
    🥈 சென்னையில் இந்த அழகிய விதையை விருச்சமாக அமைய செய்தது நமது தமிழ்நாடு வாணியப் பேரவை துணைத் தலைவர் பாசமிகு அண்ணன் சோலையூர் நாகராஜன் செட்டியார் அவர்கள்.மேலும் அவர்களுடன் அழகிய முறையில் களப்பணியாற்றிய பேரவை மாநில, மாவட்ட மற்றும் அனைத்து சொந்தங்களும்.
    🥈 மூன்று மாத கடுமையான உழைப்பு நேர்த்தியான பாதை அழகான வெற்றி.
    🥈 காலையிலிருந்து நமது மக்களின் வருகை வரத் தொடங்கியது காலையில் சிற்றுண்டியும் மிக அருமையாகவும் வந்தவர்கள் பாராட்டும் வகையில் அமைந்தது. விழாவை அப்படி அழகாக வடிவமைக்கப்பட்டும் அனைவரது குடும்ப உறுப்பினர் கடும் களப்பணியாற்றியது மேலும் மேலும் வலிமை சேர்த்த வண்ணமே அமைந்தது.
    🥈 இப்படி ஒரு திருவிழாவை தமிழ்நாட்டின் தலைநகரில் நடத்துவது எளிதான காரியமா யோசித்துப் பாருங்கள்?
    🥈 900 ஜாதகங்கள் வரப்பெற்றது, சுமார் மூவாயிரம் பேர் கலந்து கொண்ட ஒரு மாபெரும் மெகா பரிவர்த்தனை விழாவாக அமைந்தது
    🥈 கல்யாண மண்டபமும் நிரம்பி வெளியிலும், பால்கனியிலும் மக்கள் அமர்வதற்கு ஏதுவாக தருணமாகவே அமைந்தது
    🥈 பிரம்மாண்ட மண்டபம், பிரம்மாண்டமான விழா ,பிரமாண்டமான விருந்து உபசரிப்பு என அத்தனை உள்ளங்களை வரவேற்கும் பாசமான நமது உறவுகள், என்று அத்தனையும் சிறப்பாக அமைந்த தருணமாகவே அமைந்தது.
    🥈 விழாவில் வந்த அனைத்து உள்ளங்களும் பாராட்டும் வகையில் அனைவரது செயல்பாடும் மிக அருமையாகவும் விழாவில் வாணிய சிற்பி ஐயா பன்னீர் செல்வம் செட்டியார் அவர்கள் பேசுகையில் இந்த அழகிய விதை விருச்சம் ஆகிக்கொண்டே போகிறது .மூன்று இடங்களிலும் முத்தான வெற்றி கண்டோம் .மேலும் பல இடங்களில் நமது சொந்தங்களுக்கு இப்படி பல நிகழ்ச்சிகள் மூலம் நாம் நன்மை செய்து கொண்டே இருக்க வேண்டும் என்றும் அவர் இனிமையான பேசிய தருணங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
    🥈 மதிய விருந்தும் மிக சிறப்பாகவும் அனைவரும் போற்றும் வகையில் மிக அருமையாக அமைந்த விதமும், ஜாதகத்தை ஒவ்வொன்றாக வாசிக்கும் தருணத்தில் பெற்றோர்களும் மாப்பிள்ளை ,பெண் மேடையில் அலங்கரித்த விதமும் பெரிய திரை மானிட்டரில் ஒவ்வொரு ஜாதகமாக பெரிய அளவாக காண்பித்த தொழில் நுட்பமும் அனைவரும் வியக்கும் வண்ணமும், இப்படி எல்லாம் செய்ய முடியுமா என்பதை இயக்கும் வண்ணம் அமைந்த விழாவாக அமைந்தது.
    🥈 இப்படி எந்த அமைப்பும் செய்ய முடியாததை தொடர்ந்து செய்து கொண்டிருப்பது தமிழ்நாடு வாணியப்பேரவை. பல வாணியர் மனிதம் சார்ந்த விஷயங்களை தொடர்ந்து முன்னெடுத்துக் கொண்டே இருப்பது நமது வா ணியர்களுக்கு பெருமையான விஷயமாக அமைகிறது.
    🥈 சொல்லில் மட்டுமல்ல செயலை செய்து முடித்தும் அதை தான் சொல்லுகிறது தமிழ்நாடு வாணியப் பேரவை.
    🥈 மேலும் அனைத்து ஜாதகங்களை அப்படி சிறப்பாக வாசித்த அன்பு உள்ளங்கள் அனைவராலும் பாராட்டு பெற்றார்கள்
    🥈 அனைவரும் மகிழும் வகையில் ஒரு சிறப்பான பிரம்மாண்டமான மிக அதிக அளவு பொருட்செலவில் நடத்திய வாணிய கல்யாண மாலை நிகழ்ச்சியில் பரிவர்த்தனை செய்து 30 நிமிடங்களிலேயே ஒரு திருமணம்த்திற்கான ஏற்பாடு நடைபெற்ற தருணம் 👍நிகழ்ச்சியின் வெற்றியை மேலும் பறைசாற்றுகிறது.
    🥈 மேலும் மாலையில் சிற்றுண்டி, ஜாதகங்கள் அத்தனையும் ஒரு புத்தக வடிவில் அமைத்து அதை அனைவருக்கும் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    🥈 மிக அருமையான, அற்புதமான, நாங்கள் சொன்னது போல் மெகா கல்யாண மாலை நிகழ்ச்சி இனிதே மாலை 6:30 மணிக்கு நிறைவடைந்தது.
    மேலும் மேலும் வாணியர் மனிதம் சார்ந்த விஷயங்களை முன்னோக்கி செல்லுகிறது தமிழ்நாடு வாணிய பேரவை.
    அன்பாய்
    தமிழ்நாடு வாணிய பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் மு.முகி மற்றும் அனைத்து பேரவை சொந்தங்கள்.

Комментарии • 2

  • @ganappathiraja4713
    @ganappathiraja4713 6 месяцев назад

    அருமையான நிகழ்ச்சி. வாணிய செட்டியார் சொந்தங்கள் அனைவரும் பயன் பெற்றனர். தலைவர் ஐயா திரு. நாகராஜ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி🙏💕

  • @harikkuttanchettiar4633
    @harikkuttanchettiar4633 Месяц назад

    ഈ വൈശ്യരെ വടക്കേ ഇന്ത്യൻ ബനിയയുമായി ഒരുമിച്ചു നിർത്തണം