சீர்காழி பெரிய கோவில் தலபுராண வரலாறு History of Sirkali sattainathar Temple

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • சீர்காழி பெரிய கோவில் தலபுராண வரலாறு | History of Sirkali sattainathar Temple
    சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்
    சீர்காழி பிரம்மபுரீஸ்வரர், சட்டைநாதசுவாமி கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலம் சம்பந்தரின் அவதாரத் தலம் எனப்படுகிறது. சம்பந்தர் ஞானப்பால் உண்டமை, பிரமன் வழிபட்டமை, புறாவடிவில் வந்த அக்கினியால் சிபி மன்னன் பேறுபெற்றமை முதலிய அற்புதங்கள் நிகழ்ந்த தலமென்பது தொன்நம்பிக்கை. திருஞானசம்பந்தர் ‘தோடுடைய செவியன்‘ என்று உலகம் உய்யத் திருப்பதிகம் பாடியது இத்தலத்தில் என்பது குறிப்பிடத்தக்கது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 14வது தலம் ஆகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 14 வது தேவாரத்தலம் ஆகும். திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினையும் கொண்ட தலமாகும்.
    தேவாரம் பாடல் பெற்ற
    சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்பெயர்புராண பெயர்(கள்):பிரம்மபுரம், சீர்காழிபெயர்:சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்அமைவிடம்ஊர்:சீர்காழிமாவட்டம்:மயிலாடுதுறைமாநிலம்:தமிழ்நாடுநாடு:இந்தியாகோயில் தகவல்கள்மூலவர்:சட்டைநாதர், பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர்உற்சவர்:சோமஸ்கந்தர்தாயார்:பெரியநாயகி, திருநிலைநாயகிதல விருட்சம்:பாரிஜாதம், பவளமல்லிதீர்த்தம்:பிரம்மத் தீர்த்தம் முதலாக 22 தீர்த்தங்கள்ஆகமம்:பஞ்சரத்திர ஆகமம்பாடல்பாடல் வகை:தேவாரம்பாடியவர்கள்:சம்பந்தர், அப்பர், சுந்தரர்வரலாறுதொன்மை:1000-2000 வருடங்களுக்கு முன்அமைத்தவர்:சோழர்கள்
    தேவார முதலிகள் மட்டுமன்றி மாணிக்கவாசகர், அருணகிரிநாதர், கணநாதர், நம்பியாண்டார் நம்பிகள், பட்டினத்தார், சேக்கிழார், அருணாசல கவிராயர், மாரிமுத்தா பிள்ளை, முத்து தாண்டவ தீட்சிதர் ஆகியோரும்கூட இத்தலத்தின் மீது பாடல்கள் பாடியுள்ளனர்.
    தொன்மம்தொகு
    இந்தப் பேரண்டத்தைச் சுற்றி வளைந்து கிடக்கும் பெருங்கடல் ஊழிக்காலத்தில் பொங்கி எழுந்து அண்டத்தையே அழித்தபோது, உமாமகேசுவர் பிரணவத்தை தோணியாகக் கொண்டு கடலில் மிதந்து, இத்தலத்துக்கு வந்து தங்கித் திரும்பவும் அண்டத்தை உருவாக்கியிருக்கிறார் என்பது நம்பிக்கை. இரணியனது உயிர் குடித்த நரசிங்கம் அகங்கரித்துத் திரிந்தபோது அதனை அடக்கி, அதன் எலும்பைக் கதையாகவும், தோலைச் சட்டையாகவும் தரித்த வடுக நாதரே சட்டைநாதர் என்று தலவரலாறு கூறும். இது சிவனது பைரவ மூர்த்தங்களில் ஒன்று. இவரையே ஆபத்துத்தாரணர் என்று மக்கள் வணங்குகின்றனர். என்று தலபுராணம் கூறுகிறது. இதே சட்டைநாதர் முத்துச் சட்டைநாதர் என்ற பெயரோடும் கோயிலின் வலம்புரி மண்டபத்தில் யோக ஸ்தானத்தில் அஷ்ட பைரவர் உருவிலும் காட்சி கொடுக்கிறார்.
    கோயில் அமைப்புதொகு
    இந்தக் கோயில் மூன்று பகுதியாக இருக்கிறது. பெரிய பகுதியில் இறைவன் தோணியப்பர், சட்டைநாதர் எல்லாம் உள்ளனர். வட பக்கத்தில் திருநிலை நாயகி கோயில் உள்ளது. அக்கோயிலின் முன் பிரம தீர்த்தம் உள்ளது. இந்தத் தீர்த்தக் கரையிலேயேதான் திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்டிருக்கிறார். இரண்டு கோயில்களுக்கும் இடையில் மேற்குக் கோடியில் ஞானசம்பந்தருக்குத் தனித்ததொரு கோயில் உள்ளது.
    கோயிலில் நுழைந்து ஆஸ்தான மண்டபத்தைக் கடந்ததால் கருவறையில் லிங்க உருவில் பிரமபுரி ஈசுவரரை காண இயலும். அவருக்கு வலப்பக்கத்தில் மகா மண்டபத்தில் ஞானசம்பந்தர் உற்சவ மூர்த்தியாக இருக்கின்றார். இந்த உற்சவர் சின்னஞ்சிறு குழந்தை வடிவில், பால்வடியும் முகத்தோடு இருப்பார். இவர் கையிலே வழக்கமாக இருக்கும் பொற்றாளம் இராது. இடது கையில் சிறு கிண்ணத்தோடு இருப்பார். வலது கையோ தோடுடைய செவியனாம் தோணி புரத்தானைச் சுட்டிக் காட்டும் வகையில் இருக்கும்.
    கோயிலின் மேற் பிராகாரத்தில் விமானம் வடிவில் உள்ள கட்டு மலைமீது எளிதாக ஏறலாம். அங்கே அந்த மலை மீது குருமூர்த்தமான தோணியப்பர் பெரிய நாயகி உடன் காட்சி அளிக்கிறார். அவருக்கும் மேல் தளத்திலே, மலை உச்சியிலே தென் திசை நோக்கியவராயச் சட்டைநாதர் நிற்கிறார். தோணியப்பரும் சட்டைநாதரும் சுதையாலான திருவுருவங்களே.
    இங்குள்ள திருஞானசம்பந்தரின் கோயிலில் செய்யப்படும் அர்ச்சனையானது முருகப்பெருமானுக்கு உரிய அஷ்டோத்தரத்தைச் சொல்லி செய்யப்படுகிறது. காரணம் முருகனது அவதார மூர்த்தமே ஞானசம்பந்தர் என்று கருத்து உள்ளதே காரணம்.
    கல்வெட்டுகள்தொகு
    இக்கோயிலில் நாற்பத்து ஏழு கல்வெட்டுகள் இருக்கின்றன. சோழ மன்னர்களது கல்வெட்டுகளோடு வீர விருப்பண்ண உடையார் கல்வெட்டுகளும், கிருஷ்ணதேவராயரது கல்வெட்டுகளும் இருக்கின்றன. இந்தக் கல்வெட்டுகளிலிருந்து பல பழக்க வழக்கங்களும், நில அளவை முறைகளும், தலம் மூர்த்தி இவைகளின் அமைப்புகளும் விளக்குவதாக உள்ளன. “இராஜராஜ வளநாட்டுத் திருக்கழுமல நாட்டுப் பிரமதேசம் திருக்கழுமலம்” என்ற நீண்ட பெயரில் இத்தலம் குறிப்பிடப்பட்டிருக்கும். வீர ராஜேந்திரன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் ராஜராஜன், ராஜாதிராஜன் முதலிய சோழ மன்னர்கள் ஏற்படுத்தியுள்ள நிபந்தங்கள் கணக்கில் பல இவன்றிம்மூலம் அறியவருகிறது.
    #sirkalikalitv #sirkazhi #sirkali #sattainathar #brahmapureeswarar #thoniappar #shivantemple #ancienttemples #sivan #siva #tamiltemples #tamiltemple #tamilnadutemple #tamilnadutemples #padalpetratemple #padalpetrasthalam #choladynasty #mayiladuthurai #mayiladuthuraidistrictnews #mayiladuthuraivlogs #mayiladuthuraitemples #cholan #cholakingdom #parigarangal #pariharamtamil #pariharamintamil #parigaram #pariharam
    #sirkali
    #sirkalisattainathartemple
    #sattainathartemplehistory
    #sirkalitemple
    #sirkalitemplelive
    #குலதெய்வங்கள்​
    #kuladheivam
    #sirkalilive
    #sirkalikalitv
    #sirkalitv
    #sirkalibigtemple
    #sirkalithirumulaipaalfunction
    #sirkalithirumulaipaalfunctionlive
    #sirkalithirumulaipaalfunctiontoday
    / @sirkalikalitv

Комментарии • 39

  • @aanmeegavalipadu
    @aanmeegavalipadu 3 года назад +11

    அருமையான பதிவு

  • @lg4016
    @lg4016 3 месяца назад

    ஓம் ஸ்ரீ சிவ சக்தி சரணம் சரணம்...
    🌹🌹🌹🌹🙏🌹🌹🌹🌹
    🌹🌹🌹🙏❤️🙏🌹🌹🌹
    🌹🌹🌹🌹🙏🌹🌹🌹🌹

  • @r.vishnuvardhan9910
    @r.vishnuvardhan9910 3 года назад +8

    My native place🥰😍

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 года назад +4

    🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌼திருச்சிற்றம்பலம்🌺நடராஜர்🌹காளத்தியப்பர்🌺💐திருஅண்ணாமலையார் 🌸🌻ஜம்புகேஸ்வரர் 🌹ஏகாம்பரநாதர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🥥🌸நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🌺

  • @vasukir584
    @vasukir584 23 дня назад

    Om nama sivaya

  • @BharathiBharathi-bw5kh
    @BharathiBharathi-bw5kh Год назад +1

    Arpudam Arpudam ayya nandrigal kodanakodi namaskarangal 🙏🙏🙏🙏🙏

  • @arumugamsubramaniam
    @arumugamsubramaniam Год назад +1

    தமிழ் விரகர்‌ திருஞானசம்பந்தர் திருவடி போற்றி போற்றி 🙏

  • @allindiastreetfood5394
    @allindiastreetfood5394 3 года назад +6

    Super bro 👌

  • @trending4752
    @trending4752 3 года назад +4

    Super video

  • @anbesivan6499
    @anbesivan6499 8 месяцев назад

    ஓம்நமசிவாய சிவாயநம
    ஓம்🔥🔥அருமையான பதிவு.
    மிக்க நன்றி.❤❤❤

  • @gogulmani2585
    @gogulmani2585 Год назад

    அப்பனுக்கு எல்லாம் அப்பனே எந்தன் ஈசனே ஆதி பரம்பொருள் நீயே போற்றி போற்றி

  • @veeramani4371
    @veeramani4371 Год назад

    Arumaiyana vilakkam ohm namachivaya

  • @umasrinivasan5125
    @umasrinivasan5125 Год назад

    Surprise l gone back to my olden days. Number of times l used go to this temple. I proud to say this is my native place. Swamiji explained very well. 🙏🙏

  • @mideachannel4514
    @mideachannel4514 3 года назад +4

    👌👌

  • @Indraindra-of3pe
    @Indraindra-of3pe 2 года назад +1

    நல்லப்பதிவு நன்றி அய்யா

  • @shivasundaram3637
    @shivasundaram3637 3 года назад +3

    Namashkram ji

  • @9aiyyappan.m527
    @9aiyyappan.m527 3 года назад +7

    இந்த வருடம் திரூமுலைப்பால்
    திருவிழா நடக்குமா

  • @SK-608
    @SK-608 3 года назад +3

    🙏🙏🙏

  • @yazidipharma8675
    @yazidipharma8675 2 года назад +1

    superb ...salute to you and gurukkal ayya...very clearly explained by him...

  • @vickyv5672
    @vickyv5672 3 года назад +3

    Super bro

  • @DMS.Dinesh
    @DMS.Dinesh 3 года назад +3

    👍

  • @Sirkazhikathirsamaiyal
    @Sirkazhikathirsamaiyal Год назад

    அருமைஅண்னா

  • @balasubramaniamveluppillai660
    @balasubramaniamveluppillai660 2 года назад

    அருமையான விளக்கம்.👍👌🙏

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 года назад +3

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sirkazhiramani1338
    @sirkazhiramani1338 3 года назад +1

    My native place

  • @deepasairam2609
    @deepasairam2609 Год назад +1

    Om namah shivaya 🙏
    அருமை அய்யா திருச்சிற்றம்பலம்

  • @thoppaitv1029
    @thoppaitv1029 2 года назад

    ஓம் நமோ

  • @manopillai6918
    @manopillai6918 3 года назад +1

    Tell some about sattainathar bhairava temple and the siddhar samadhi inside the temple in sirkali explain in youtube

  • @santhisalemrangasamy5083
    @santhisalemrangasamy5083 2 года назад +1

    இறைவா சர்வேஸ்வரா பார்வதி பரமேஸ்வரா போற்றி போற்றி

  • @thoppaitv1029
    @thoppaitv1029 2 года назад

    பிருகு மகரிஷி பூஜை

  • @aadhavangroup2269
    @aadhavangroup2269 Год назад

    ஆபதுத்தாரணர்ருக்கு தேவார பாடல் உள்ளதா?

  • @abusmanian9556
    @abusmanian9556 Год назад +1

    Allah is the almighty God.

    • @Abc13223
      @Abc13223 Год назад

      ஓகே பில்லா

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 Год назад

    ஓம் நமசிவாய🌏

  • @muthuvel2062
    @muthuvel2062 Год назад

    🙏🙏🙏🙏🙏

  • @manikandan.r9029
    @manikandan.r9029 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏