குனித்த புருவமும் | kunitha puruvamum

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 май 2021
  • கோயில் - திருவிருத்தம்
    குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,
    பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும்,
    இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால்
    மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே!
    --- திருநாவுக்கரசு சுவாமிகள்
    பொருள்:
    வளைந்த புருவங்களையும், கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயிலே முகிழ்க்கும் புன்னகையையும், கங்கையால் ஈரமான சடைமுடியையும், பவளம் போன்ற சிவந்த திருமேனியில் அணிந்த பால் போன்று வெண்மையான வெண்ணீற்றுப் பூச்சினையும், பேரின்பம் நல்கும் தூக்கிய திருவடிகளையும் காணும் வாய்ப்பினைப் பெறுவதாம்பட்சத்தில் இவ்வுலகில் மனிதராய்ப் பிறப்பெடுத்தலும் விரும்பத்தக்க செயலாகும்
    பாடியவர் - லால்குடி சுவாமிநாதன்

Комментарии • 3

  • @parthlin7378
    @parthlin7378 Год назад

    ஓம் நமசிவாய சிவபெருமானின் திருவடிகள் போற்றி ஓம் நமசிவாய சிவபெருமானின் திருவடிகள் போற்றி ஓம் நமசிவாய சிவபெருமானின் திருவடிகள் போற்றி ஓம் நமசிவாய

  • @k.renuga4841
    @k.renuga4841 2 года назад +2

    திருச்சிற்றம்பலம்..🙏🌸🌺🌼👨‍👩‍👧🪔🪔🔔🔔🍋🍋

  • @senthilvelavan6289
    @senthilvelavan6289 2 года назад +2

    மனம் உருகுகிறது.