ஆந்திராவிலிருந்து வந்து மகோகனி செடிகளை ஏன் ..? கணேஷ் நர்சரியில் வாங்க வேண்டும்..? Mahogani sale

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 авг 2024
  • மகத்தான லாபம் தரும் மகோகனி💸
    மகோகனி என சொல்லப்படும் மரம் வீட்டின் நிலைக்கதவுகள், ஜன்னல்கள் போன்றவற்றில் பயன்படுவதோடு கப்பல் கட்டும் பணியில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இசைக்கருவிகள், பென்சில்கள் செய்யவும் ஏற்றது. இத்தகைய பலன்தரும் மரங்கள் பற்றாக்குறை ஏற்படும் போது வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் சூழல் ஏற்படுகிறது. ஆனால், இம்மரங்களை நாமே நம் ஊர்களில் நட்டு வளர்க்க முடியும், மரங்களின் எண்ணிக்கையை நாம் அதிகரிக்கும்போது மழை பொழிவும் அதிகம் ஏற்படும்; விவசாயமும் செழிக்கும்.
    மேற்கிந்திய தீவுகளை தாயகமாக கொண்ட, ‘மீலியேசி’ எனும் தாவரவியல் குடும்பத்தைச் சேர்ந்த மகோகனி, மரம் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு நல்ல லாபம் தரும் மரங்களில் ஒன்றாக உள்ளது.
    அதிக நிழல் விழாத மரமாக இருப்பதால் விவசாய நிலங்களில் வரப்பு ஓரங்களில் நடுவதன் மூலம், மண் வளம், நீர் வளம் மேம்படுவதோடு கணிசமான வருவாயை இம்மரங்கள் ஈட்டித்தரும். 1 ஏக்கருக்கு 80 மரங்கள் வரை வரப்பு ஓரங்களில் நட முடியும். 6 அடிக்கு ஒன்று என்ற விதத்தில் நடலாம். மேலும் இம்மரங்கள் காற்றுத்தடுப்பு வேலியாக செயல்படுவதால், அதிக காற்றினால் பயிர்களும் மற்ற மரங்கள் சேதமாகாமல் காக்கலாம்! நகரங்களில் கட்டிட வளாகங்களில் ஒரு வரிசையாக மகாகொனி மரங்களை நடலாம். இம்மரங்கள் நகரங்களில் மாடிகளில் வசிப்பவர்களுக்கு காற்றை வடிகட்டிக் கொடுக்கும்.
    நடவு தொழிற்நுட்பங்கள்:
    நிலத்தை உழுது மண்ணை இலகுவானதாக மாற்ற வேண்டும். பின் குழி எடுக்கும் இயந்திரத்தை கொண்டு குழிகள் பரிந்துரைக்கப்பட்ட இடைவெளியில் எடுக்கப்படுகிறது.
    குழியின் அளவு 45 செ.மீ3 என இருக்க வேண்டும்.
    மேல் மண், 200 கிராம், வேப்பம்பிண்ணாக்கு மற்றும் 2:1:1 என்ற விகிதத்தில் கலக்கப்பட்ட செம்மண், மணல் மற்றும் எரு ஆகியவற்றை குழியினுள் இட்டு நாற்றுகள் நடப்படுகிறது.
    நாற்றுகள் நடப்படுவதற்கு முன்பே இடுபொருட்களை குழியினுள் இட்டு உலர்த்த வேண்டும்.
    இடைவெளியானது 6 x 6.5 மீ அல்லது 8x 8என இருக்க வேண்டும்.
    நடப்பட்டவுடன் தண்ணீர் பாய்ச்சுவது மிக முக்கியமானதாகும்.
    முதல் இரு வாரங்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் தெளிக்க வேண்டும்.
    தண்ணீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளுக்கு சொட்டுநீர் பாசனம் போன்ற மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப முறையை பயன்படுத்தலாம்.
    தேவையான அளவு உரங்களை அவ்வப்போது இட வேண்டும்.
    முதல் வருடம் தழைசத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல்சத்து (17:17:17) மற்றும் நுண் ஊட்டச்சத்துக்கள் செடிக்கு 200 கிராம் ஆகியவற்றை மாதம் ஒரு முறையிட வேண்டும்.
    உரமிட்டபிறகு அதனை சிறிது மண்ணை கொண்டு மூட வேண்டும்.
    அறுவடை : 10 to 15 ஆண்டுகள்
    ஒரு ஏக்கருக்கு 1200 - 1500 7.5x 7.5 - 744 மரங்கள் அல்லது 8x 8 -640என்ற எண்ணிக்கையில் நடப்பட வேண்டும்.
    ஊடுபயிர் சாகுபடி :
    பீன்ஸ், உருளை, மரவள்ளி, சர்க்கரை வள்ளி போன்றவற்றை ஊடுபயிராகப்
    முக்கிய பயன்கள் :
    இம்மரத்தின் அழகிய தோற்றம் காரணமாக பொருளாதார முக்கியதுவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
    இவை மரச்சாமான்கள் செய்யவும் வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கவுமம் பயன்படுத்தப்படுகிறது.
    வெட்டிய மரப்பட்டையிலிருந்து பசை பெறப்படுகிறது.
    இது தூய நிலையிலோ மற்றும் பிற பசைகளுடன் கலந்த நிலையிலோ விற்கப்படுகிறது.
    மரப்பட்டை சடானின் நிறைந்தது.
    சாயமேற்றப் பயன்படுகிறது. இதன் எண்ணெய் கசப்பானது.
    எண்ணெய் விதையிலிருந்து பெறப்படுகிறது. உட்கருமரம் சிவப்பானது.
    வயதாக ஆழ்ந்த சிவப்பு (அ) காவி நிறமுடையது.
    உயரமான மரக்கன்றுகளை தேர்வு செய்யுங்கள் எடுத்துக்காட்டிற்கு நீங்கள் ஒரு வருட மரக்கன்றை தேர்வு செய்வதாக வைத்துக்கொள்ளுங்கள் அந்த ஒரு வருடத்தில் அந்த மரக்கன்று மழைக்காலம் வெயில்காலம் பனிக்காலம் போன்ற அனைத்து சூழ்நிலைகளையும் தாங்கி வந்திருக்கும் இதனால் உங்கள் தோட்டத்தில் வந்து இறப்பது என்பது அரிதாகவே இருக்கும் !!உங்களுடைய நேரத்தையும் ..உழைப்பையும் ..
    பணத்தையும் மிச்சப் படுத்துங்கள்..
    இந்த மரம் ஒரு கன அடி 900 ரூபாயிலிருந்து ஆயிரத்து 1850 ரூபாய் வரை தமிழ்நாடு முழுவதும் பரவலாக விற்கப்படுகிறது
    மரக்கன்று களுக்கான மிகப்பெரிய நர்சரியான நாங்கள் விதைகளை வீரியமான தாய் மரங்களிலிருந்து 35 வருட கடந்த தாய் மரத்திலிருந்து மட்டுமே விதைகளை பெறுகிறோம் (CPT Tree )இதனால் செடிகள் நோய் எதிர்ப்பு சக்தியுடன் இயற்கையாகவே வளரும்.. 40 வகையான மரக்கன்றுகள் கிடைக்கும் 40வருட அனுபவத்தோடு ...
    கன்றின் விலை 10 ₹ரூபாய் முதல் 200₹ ரூபாய் வரை உயரத்திற்கு தகுந்தார்போல்..
    • பணம் காய்க்கும் மரம் ம...
    GANESH NURSERY GARDEN
    FIRST BLOCK , VELLALAVIDUTHI, TALUK, Gandarvakkottai, Tamil Nadu
    goo.gl/maps/nC...
    Contact: 9943119955 - 9443065802 - 9943259955

Комментарии • 4