சங்ககால வாழ்க்கை | Sanga Kalam | சங்ககால விழாக்கள் | Sangakala Vizhakkal | AppleBox Sabari
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- Sanga Kala Vizhakkal | சங்ககால விழாக்கள் | Festivals of Sangam Era | AppleBox Sabari
Sangam Literature References
**** நீர் விழா ****
பரிபாடலின் வழியே வைகையில் வெள்ளம் வந்த போது மக்கள் நீராடி மகிழ்ந்ததை அறிகின்றோம் (பரி., 16-வது பாடல், 11-15-வது வரிகள்)
**** புனலாட்டு விழா ****
மலர்களும் பொன்மீன்களும் கொண்டு வைகையாற்றுக்கு மக்கள் நீராடச் சென்றனர். முற்காலத்தில் மன்னர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்; என்பதற்கு அகநானூற்றுப் பாடல்கள் சான்றாக அமைகின்றன (அகம்., பா.எ., 222, 376)
ஆற்றில் புனலாடியதைப் பரிபாடலும் (பரி., 10-வது பாடல், 27-வது வரி)
கடலில் புனலாடியதைப் பட்டினப்பாலையும் (பட்டினப்பாலை, 99-வது வரி)
பறையறிவித்துப் புனலாடியதனைப் பரிபாடல் கூறுகிறது (பரி., 20-வது பாடல், 14-வது வரி.)
பெண்கள் பொன்னாலான சங்கு, நண்டு, வாளை முதலியவற்றைப் புதுப்புனலில் இட்டு வேண்டியதையும் பரிபாடல் உணர்த்துகிறது (பரி., 10-வது பாடல், 85-வது வரி)
ஆட்டனத்தி காவிரி வெள்ளத்தில் நீராடும் போது அடித்துச் செல்லப்பட்டதை அகநானூறு உணர்த்துகிறது (அகம்., பா.எ., 45)
**** பூந்தொடை விழா ****
‘‘தெம்முனை சிதைத்த கடும்பரிப்புரவி
வார்கழல் பொலிந்த வன்கண்மழவர்
பூந்தொடை விழவின் தலைநாள் அன்ன
தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றம்’’ (அகம்., பா.எ., 187)
**** கோடியர் விழா ****
கோடியர் விழவுகொள் முதூர் விறலிபின்றை முழவன் போல்’’ (அகம்., பா.எ., 352)
**** கார்த்திகைத் திருவிழா ****
‘‘மழைக்கால் நீங்கிய மாசறு விசும்பின்
குறுமுயல் மறுநிறம் கிளர் மதிநிறைந்து
அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள்
மறுகு விளக்குறுத்து மாலை தூக்கிப்
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவுடன் அயர’’ (அகம்., பா.எ., 141).
‘‘அருவி யான்ற உயர்சிமை மருங்கில்
பெருவிழா விளக்கம் போலப் பலவுடன்
இலையில்மலர்ந்த இலவமொடு
நிலையுயர் பிறங்கல்மலையிறந்தோரே’’ (அகம்.,பா.எ., 185)
#tamilsangam #sangamera #tamil