பசுமடத்தில் கோ பூஜை.

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2024
  • About:
    Thillaigeetham channel cover all videos and articles in and around chidambaram.
    பற்றி:
    தில்லைகீதம் சேனல் சிதம்பரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து வீடியோக்கள் மற்றும் கட்டுரைகளை உள்ளடக்கும்.
    -----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Video details:
    தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் பண்டிகையும், இரண்டாம் நாள் உழவு தொழிலுக்கு விவசாயிகளுக்கு உறுதுணையாக விளங்கும் கால்நடைகளுக்கு நன்றி கூறும் விதமாக மாட்டுப்பொங்கல் விழாவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோவிலில் பசு மடம் தனியாக உள்ளது இங்கு நூற்றுக்கணக்கான பசு மாடுகளை வைத்து தினம் தோறும் பராமரிக்கப்பட்டு வருகிறது. மாட்டுப் பொங்கலை முன்னிட்டு இக்கோவிலில் உள்ள பசுமடம் சுத்தம் செய்யப்பட்டது.பின்பு பசு மாடுகளை குளிப்பாட்டி சுத்தம் செய்து குங்குமம், மஞ்சள் வைத்து மலர் மாலைகள் அணிவித்து மணிகளை கட்டி அலங்கரிக்கப்பட்டது. மாட்டுப் பொங்கல் அன்று மாலையில் பசு மடம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.கோவில் பொது தீட்சிதர்கள் வேத மந்திரங்கள் கூறி பசுக்களுக்கு படையலிட்டனர். பசு மாடுகளுக்கு பழங்கள், உணவுகளை வைத்து படைத்து அதற்கு ஊட்டியதோடு தீபாராதனை காட்டப்பட்டது.இதனை கோவிலுக்கு வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
    -----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Click this below link to read more interesting articles in :
    thillaigeetham...

Комментарии •