சடையா எனுமால் - தேவார பதிகம் | Sadaiyaa Enumaal - Thevara Pathigam | Palan Tharum Pathikangal

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • Sadaiyaa Enumaal - Devara Pathigam | Album : Palan Tharum Pathigangal | Singer : Bombay Saradha | Rendered : Thirugnanasambandar | Music : Veeramani Kannan | Amutham Music
    சடையா எனுமால் - தேவார பதிகம் | இசைத்தொகுப்பு : பலன் தரும் பதிகங்கள் | குரலிசை : பாம்பே சாரதா | அருளியவர் : திருஞானசம்பந்தர் | இசை : வீரமணி கண்ணன் | அமுதம் மியூசிக்
    பாடல்வரிகள் :
    திருமணம் கைகூட அருளிட வேணும்
    கல்யாண சுந்தரனே திருவடி சரணம்
    திருமணஞ்சேரியிலே கல்யாண கோலம் தரும்
    கல்யாண சுந்தரனே திருவடி சரணம்
    சடையா யெனுமால் சரண்நீ யெனுமால்
    விடையா யெனுமால் வெருவா விழுமால்
    மடையார் குவளை மலரும் மருகல்
    உடையாய் தகுமோ இவள்உள் மெலிவே
    சிந்தா யெனுமால் சிவனே யெனுமால்
    முந்தா யெனுமால் முதல்வா எனுமால்
    கொந்தார் குவளை குலவும் மருகல்
    எந்தாய் தகுமோ இவள்ஏ சறவே
    அறையார் கழலும் மழல்வா யரவும்
    பிறையார் சடையும் முடையாய் பெரிய
    மறையார் மருகல் மகிழ்வா யிவளை
    இறையார் வளைகொண் டெழில்வவ் வினையே
    ஒலிநீர் சடையிற் கரந்தா யுலகம்
    பலிநீ திரிவாய் பழியில் புகழாய்
    மலிநீர் மருகல் மகிழ்வா யிவளை
    மெலிநீர் மையளாக் கவும்வேண் டினையே
    கோகிலாம்பாள் உடனுறையும் கல்யாண சுந்தரா
    திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் சர்வேஸ்வரா
    துணிநீ லவண்ணம் முகில்தோன் றியன்ன
    மணிநீ லகண்டம் உடையாய் மருகல்
    கணிநீ லவண்டார் குழலாள் இவள்தன்
    அணிநீ லவொண்கண் அயர்வாக் கினையே
    பலரும் பரவப் படுவாய் சடைமேல்
    மலரும் பிறையொன் றுடையாய் மருகல்
    புலருந் தனையுந் துயிலாள் புடைபோந்
    தலரும் படுமோ அடியா ளிவளே
    வழுவாள் பெருமான் கழல்வாழ் கவெனா
    எழுவாள் நினைவாள் இரவும் பகலும்
    மழுவா ளுடையாய் மருகற் பெருமான்
    தொழுவா ளிவளைத் துயராக் கினையே
    இலங்கைக் கிறைவன் விலங்க லெடுப்பத்
    துலங்கவ் விரலூன் றலுந்தோன் றலனாய்
    வலங்கொள் மதிள்சூழ் மருகற் பெருமான்
    அலங்கல் லிவளை அலராக் கினையே
    எரியார் சடையும் மடியும் மிருவர்
    தெரியா ததொர்தீத் திரளா யவனே
    மரியார் பிரியா மருகற் பெருமான்
    அரியாள் இவளை அயர்வாக் கினையே
    அறிவில் சமணும் மலர்சாக் கியரும்
    நெறியல் லனசெய் தனர்நின் றுழல்வார்
    மறியேந் துகையாய் மருகற் பெருமான்
    நெறியார் குழலி நிறைநீக் கினையே
    வயஞா னம்வல்லார் மருகற் பெருமான்
    உயர்ஞா னமுணர்ந் தடியுள் குதலால்
    இயன்ஞா னசம்பந் தனபா டல்வல்லார்
    வியன்ஞா லமெல்லாம் விளங்கும் புகழே
    திருஞானசம்பந்த சம்பந்தர் சைவ சமயத்தவர்களால் நாயன்மார்கள் என அழைக்கப்படும் அறுபத்து மூவருள் முதல் வைத்து எண்ணப்படும் நால்வருள் ஒருவராவார். திருஞானசம்பந்தர் நாயனாரின் அற்புதங்கள் (பெரியபுரணம் வழி) ஞானப்பால் உண்டமை ஞானசம்பந்தப் பிள்ளையார் மூன்றாண்டு நிறையப் பெற்ற பின்னர் ஒரு நாள் காலை தந்தையாருடன் சீர்காழி திருகோயிலின் திருக்குளத்திற்குச் சென்றார். சிவபாத இருதயர் மைந்தனைக் கரையில் அமரச்செய்து நீருள் முழ்கி அகமருடஜெபம் செய்தார்.
    தந்தையைக் காணாமையாலும், முன்னைத்தவம் தலைக்கூடியதாலும் திருத்தோணிச்சிகரம் பார்த்து “அம்மே! அப்பா!” என்று அழைத்தருளி அழுதருளினார். அப்பொழுது, திருத்தோணிபுரபெருமான் உமா தேவியாரோடும் விடைமீதமர்ந்து காட்சி கொடுத்தார். உவமையிலாக் கலை ஞானமும் உணர்வரிய மெய்ஞானமும் கலந்த திருமுலைப்பால் ஊட்டுவாயாக எனப்பெருமான் பணித்தார். அப்படியே பெருமாட்டியும் எண்ணரிய சிவஞானத்து இன்னமுதம் குழைத்தருளி உண் அடிசில் என ஊட்டினார். ஞானம் உண்ட பிள்ளையார் சிவஞானச்செல்வராய்த் திகழ்ந்தார்.
    எண்ணரிய சிவஞானத்
    தின்ன முதங்குழைத் தருளி
    உண்ணடிசில் எனஊட்ட
    உமையம்மை எதிர்நோக்கும்
    கண்மலர்நீர் துடைத்தருளிக்
    கையிற்பொற் கிண்ணமளித்
    தண்ணலைஅங் கழுகைதீர்த்
    தங்கண்ணார் அருள்புரிந்தார்.
    For Music Streming & Downloads
    Apple Music : / palan-tharum-pathikangal
    Spotyfy : open.spotify.c...
    Amazon Prine Music : music.amazon.i...
    Jiosavan : www.jiosaavn.c...
    Wynk Music : wynk.in/music/...
    Google Play Store : play.google.co...
    For More Videos: / amuthammusic
    Facebook : / amuthammusicofficial
    #Palantharumpthiganagal#osarun#bombaysaradha
    Amuthammusic#dailyprayers#lordsiva#thevaram

Комментарии • 1 тыс.

  • @jayakumarv4942
    @jayakumarv4942 11 месяцев назад +45

    என் மகனின் திருமணம் வெகுவிரைவில் நடக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @vadivoosubramanian9725
    @vadivoosubramanian9725 Год назад +20

    மற்றவர்களுக்கும் கூடிய சீக்கிரம் திருமணம் நட க்க வேண்டும் கடவுளை பிராத்திக்கிறேன்

  • @kalapalaniguru7164
    @kalapalaniguru7164 10 месяцев назад +18

    என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் கல்யாண சுந்தரேஸ்வரர் ரே,

  • @muniswaran.n3905
    @muniswaran.n3905 2 года назад +75

    திருமண வயதுடைய அனைவருக்கும் திருமணமாக அருள் புரியவேண்டும் கல்யாண சுந்தரேஸ்வர பெருமானே ஓம் நமசிவாய

    • @sampath1963
      @sampath1963 2 месяца назад +1

      Om. Nama sivaya. Om. Sakthi. Yl
      Saranam ❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢

  • @shanmugarajayyakkannu9148
    @shanmugarajayyakkannu9148 2 года назад +164

    திருமணம் நடைபெற வேண்டி நிற்கும் அனைவருக்கும் விரைவில் நடைபெற வாழ்த்துக்கள்!

  • @lalithamuruganandam2852
    @lalithamuruganandam2852 Год назад +32

    என் மகளுக்கு விரைவில் நல்ல வரன் அமைந்து சிறப்பாக வாழ வேண்டுகிறேன். திருமண வயதுல உள்ள அனைவருக்குக்கும் நல்ல வரன் அமைய வேண்டுகிறேன் இறைவா

    • @tamilselvi5885
      @tamilselvi5885 9 месяцев назад

      Ungal details vendum

    • @gomathykannan4359
      @gomathykannan4359 7 месяцев назад +1

      உங்க மகள் ப்ரொபைல் வேண்டும்

    • @SHIVAALAYAMUSICALSTV
      @SHIVAALAYAMUSICALSTV 20 дней назад

      ruclips.net/video/nfm-Lvb_hZ8/видео.html

  • @gomathimohan5990
    @gomathimohan5990 Год назад +9

    என் மகளுக்கு சிக்கிரம் திருமணம் நடைபெற வேண்டும்

  • @vadivoosubramanian9725
    @vadivoosubramanian9725 Год назад +93

    இந்தப் பாடலை தினசரி கேட்பேன்-என் மகனுக்கு திருமணம் முடிந்துவிட்டது அந்த கடவுளுக்கு நன்றி கோடான கோடி நன்றி

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed Год назад

      Evlav nal ketenga

    • @sureshpandiyan3720
      @sureshpandiyan3720 Год назад

      ​@SathyaSathya-bg7சீக்கிரம் நடக்கும்

    • @lohsm8467
      @lohsm8467 6 месяцев назад

      அம்மா.எத்தனை நாட்கள் கேட்க வேண்டும்..

    • @Bala1w
      @Bala1w 5 месяцев назад

      Super

    • @umamaheswarir2004
      @umamaheswarir2004 2 месяца назад

      எவ்வளவு நாள் கேட்டீர்கள்?

  • @gomathykannan4359
    @gomathykannan4359 10 месяцев назад +17

    திருமண வயதில் இருக்கும் அனைவருக்கும் திருமணம் நடக்க வேண்டுகிறேன் என் மகனுக்கு திருமண பாக்கியம் அருளவேண்டுகிறேன் 🙏🙏🙏

  • @loganayagi7929
    @loganayagi7929 2 года назад +80

    என்தங்கை போல் திருமணமாகாத ஆண்கள் பெண்கள் அனைவருக்கும் விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் இறைநிலலயே வாழ்க வளமுடன் திருச்சிற்றம்பலம்

    • @muruganrajendran7548
      @muruganrajendran7548 11 месяцев назад +1

      உங்களுக்கு விருப்பம் இருந்தால் சொல்லுங்க சார் எனக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை

    • @pandirajendran7280
      @pandirajendran7280 7 месяцев назад

      முருகனுக்குஅரோகரா​@@muruganrajendran7548

  • @dhanushkodin39
    @dhanushkodin39 Год назад +16

    என் மகளுக்கு திருமணம் நல்ல முறையில் நடைபெற்றது சிவன் அருளால்

  • @gnprabakaran6634
    @gnprabakaran6634 2 года назад +76

    பக்தர்கள் வேண்டுதல்களை வெற்றியாக்கித்தரட்டும் கல்யாண சுந்தரனார்....

  • @prabharamesh2879
    @prabharamesh2879 Год назад +9

    என் மகளுக்கு திருமணம் விரைவில் கை கூட அருள் புரிய வேண்டும் இறைவ

    • @KM-gf1sw
      @KM-gf1sw 10 месяцев назад

      ❤❤❤❤❤❤❤🎉✈✈✈✈✈✈✈✈✈✈✈🌜🌜🌜🌜🌜🌜🌜🌜🌜

  • @anandduraimani2092
    @anandduraimani2092 Год назад +15

    திருமணம் கைகூடி விட்டது. நன்றி ஐயா. நன்றி ஐயா. நன்றி ஐயா.

  • @JayaKumar-jf3jz
    @JayaKumar-jf3jz 11 месяцев назад +14

    ஓம் நமசிவாய போற்றி போற்றி.
    திருமண வயதில் உள்ள என் மகளுக்கு விரைவில் நல்ல இடத்தில் திருமணம் நடத்தி வைக்க வேண்டும்.
    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க.

  • @Paviv99689
    @Paviv99689 Год назад +5

    திருமணத்தை நடத்தி அரளும் என் ஈசனுக்கு நன்றிகள்🥹🙏🏻❤️

  • @ezhilarasiumapathy8262
    @ezhilarasiumapathy8262 Год назад +22

    இறைவா கல்யாண சுந்தரனே என் மகனுக்கு திருமணத்தை நிறைவேற்றி தாருங்கள்.
    ஆசிர்வதிங்கள் இறைவா . கோடான கோடி நன்றி இறைவா🌺🌻🌹💐🎉🙏

  • @ravindranramiah3261
    @ravindranramiah3261 9 месяцев назад +53

    கடவுளே என் பிள்ளைக்களுக்கு நீதான் திருமணத்தை யாரிடமும் கையேந்தி நிற்கும் நிலை இல்லாது நடத்தி வைக்க வேண்டும்.

    • @bamakarunakaran4204
      @bamakarunakaran4204 7 месяцев назад

      En maganukku nalla vithamaha thirumanam nadkka kadaulai venduhiren

  • @rangaraajankcn
    @rangaraajankcn 4 месяца назад +10

    இறைவா எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை துணையை அமைத்து கொடுங்கள்

  • @sankarsubramanian9054
    @sankarsubramanian9054 2 года назад +57

    திரு மணத்திற்காக வரன் பார்த்து கொண்டு இருக்கும் ஆண் பெண் இரு பாலருக்கும் விரைவில் திருமணம் நடை பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டு கிறேன்

    • @muthuarul1131
      @muthuarul1131 7 месяцев назад

      Madam muthu arulku udana marriage a vadugrom .

    • @meenakshi_suresh
      @meenakshi_suresh 6 месяцев назад

      Vaazhga Valamudan Vaazhga Nalamudan

    • @SUMATHIRAGUPATHI
      @SUMATHIRAGUPATHI 4 месяца назад

      என் மூத்த மகன் கார்த்திக் விரைவில் திருமணம் நடத்தி வைக்க வேண்டும் அப்பா நல்ல வரன் அமைய வேண்டும் அப்பா

    • @MercyJacintha-j9s
      @MercyJacintha-j9s 3 месяца назад

      En pillaihal marriage Nadakka prayer 🙏 pannunga 🙏 ❤thiruvadi .saranam❤

  • @girijab634
    @girijab634 2 месяца назад +3

    ❤ அப்பா கல்யாண சுந்தரனே என் மகனுக்கு சீக்கிரம் திருமணம் நடத்தி வையப்பா திக்கற்றவர்க்கு தெய்வமே துணையப்பா நின் திருவடி சரணம் ஐயா 🙏🙏

  • @gomathiraju354
    @gomathiraju354 3 года назад +706

    எல்லாம் வல்ல இறைவனே திருமண வயதில் உள்ள குழந்தைகளுக்கும், திருமண வயதைத் தாண்டிய குழந்தைகளுக்கும் குறைந்த செலவில் நிறைந்த மண வாழ்க்கையை... பெற்றோர் மனம் மகிழ அமைத்துத் தாருங்கள். நன்றி சாயி அப்பா.

    • @sowmya7648
      @sowmya7648 3 года назад +53

      உண்மையிலேயே நல்ல மனசு உங்களுக்கு.

    • @muthuravi6266
      @muthuravi6266 3 года назад +12

      En thangai Kalyan nadakkanum appa Amma

    • @malinipadmarajah1296
      @malinipadmarajah1296 3 года назад +26

      அப்பா அம்மா. வணக்கம். என் மகளுக்கு திருமணம் நடக்க அருள் புரிவீங்கள் தானே அப்பா

    • @gomathiraju354
      @gomathiraju354 3 года назад +24

      @@malinipadmarajah1296 நிச்சயம் கூடிய விரைவில் அப்பா அருள் புரிவார்.

    • @gunsekaranchendrayan5926
      @gunsekaranchendrayan5926 3 года назад +8

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @balajianu6244
    @balajianu6244 2 года назад +175

    திருமணத்திற்கு காத்திருக்கும் எங்கள் அன்பு மகன்கள் மகள்கள் அனைவருக்கும் அருள் புரிவாய் ஈசனே. ஓம் நமசிவாய
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malarkrishna2463
    @malarkrishna2463 2 года назад +6

    என் மகனுக்கு விரைவில் திருமண ம் நடைபெறஅருள்புரிய வேண்டும் பகவனே

  • @narasimhana9507
    @narasimhana9507 2 года назад +81

    முப்பது வயது கடந்தவர்கள் அனைவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.இதற்கு மேல் சோதனை வேண்டாம் அவர்களுக்கு.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 года назад +1

      சரியே
      ஆம் நிச்சயமாக நம்புவோம் நல்லது
      சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ

    • @pandiarajanngod7621
      @pandiarajanngod7621 Год назад

      NANDRI AYYA

    • @loganathanloga3480
      @loganathanloga3480 10 месяцев назад

      Ayya Nandri ....En brother ku Above 30 years .....Shiva Shiva Siva...

    • @parvathij3726
      @parvathij3726 9 месяцев назад

      🙏🌹🌹🌹🙏

    • @narasimhana9507
      @narasimhana9507 9 месяцев назад +1

      @@parvathij3726 Thanks

  • @sujatharajan4918
    @sujatharajan4918 2 месяца назад +4

    நானும் தினம் இந்த பாடலைக் கேட்டுக்கொண்டு இருக்கின்றேன். என்மகனுக்கும் விரைவில் திருமணம் நிச்சயம் கூடிவிடும் என்று பரிபூரணமாக நம்புகிறேன்🙏🙏🙏

  • @pumskeeranallur4326
    @pumskeeranallur4326 2 года назад +112

    என் மகளுக்கு நல்ல வரன் அமைந்து விரைவில் திருமணம் நடக்க இறைவன் ஆசி வழங்கட்டும்.

  • @rameshbapup5185
    @rameshbapup5185 2 года назад +51

    எங்கள் மகனுக்கு நல்ல குண முள்ள, அறிவுள்ள மனைவி அமைய வேண்டும் என்று இறைவன், இறைவியை வேண்டி கொள்கிறோம்.

    • @amudhachinnappan2659
      @amudhachinnappan2659 2 года назад +2

      எங்கள் மகனுக்கு நல்ல குணம் அல்ல அறிவுள்ள மனைவி அமைய வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறோம்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 года назад

      ஆம்

    • @shobanaloganesan3666
      @shobanaloganesan3666 Год назад

      Yen magalukum nalla manamagan vendum...

  • @bhagiyamdhachu697
    @bhagiyamdhachu697 2 года назад +24

    எல்லாம் வல்ல இறைவா திருமண வயதில் இருக்கும் எங்கள் குழந்தை க்கு திருமணம் நடக்க அருள் புரியும் வேண்டும்

  • @Palaniv6786
    @Palaniv6786 10 дней назад

    திருமணத்திற்காக பிரார்த்திக்கும் அனைவருக்கும்
    திருமணம் நடைபெற வேண்டும் இறைவா 🙏🙏🙏

  • @rathna.a8100
    @rathna.a8100 Год назад +25

    இறைவா என் மகளுக்கு விரைவில் நல்ல வரன் அமையனும் ஓம் நமசிவாய அப்பா நிங்கதான் துணை

  • @purushothamannarashiman1565
    @purushothamannarashiman1565 Год назад +2

    இறைவா என் மகனுக்கு கருணை காட்டு 🙏🙏🙏🙏🙏

  • @loganathanloga3480
    @loganathanloga3480 10 месяцев назад +8

    கல்யாணம் வயசு உள்ளவர்கள் மற்றும் அந்த வயசு தாண்டியவர்கள் கல்யாண சந்தரர் அருள் கிடைக்கட்டும்

  • @karunagarank247
    @karunagarank247 2 года назад +27

    கல்யாண சுந்தரரே விரைவில் என் மகனுக்கு திருமணம் நடைபெற அருள் புரிவாயாக.

  • @rathna.a8100
    @rathna.a8100 Год назад +11

    எல்லா வல்ல இறைவன் திருமண வயதில் உள்ள அனைத்து குழந்தை களுக்கு ம் திருமணம் விரைவில் நடக்கனும்

  • @CiyyappanCiyyappan
    @CiyyappanCiyyappan 8 дней назад

    என் மகனுக்கு விரைவில் திருமணம் அமைய அருள்வாய் கல்யாணசுந்தரே திரு வடி சரணம்

  • @sankarsubramanian9054
    @sankarsubramanian9054 Год назад +28

    கல்யாண சுந்தரர் அருளால் எனது அன்பு மகனின் திருமணம் சிறப்பாக நடந்தது இநத பிரார்த்தனை எல்லாருக்கும் பலன் அளிக்க இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்

    • @padmadevi3359
      @padmadevi3359 Год назад +1

      இது
      போல நானும் பதிவிட இறைவன் கருணை காட்ட வேண்டும்.

    • @samiyappans3830
      @samiyappans3830 6 месяцев назад

      Sivan Arul kidaikkum 10:29

  • @jayanthiramachandran4138
    @jayanthiramachandran4138 Месяц назад

    I have posted a request to god when I started to recite this song for my daughter's marriage. Last year she got married nd in she gave birth to a male baby nd settled in USA. Thanks to the almighty. Now I'm started to recite again for my son's marriage. Hope God will bless him with a nice girl for our family.

  • @jeevithasekar5860
    @jeevithasekar5860 2 года назад +98

    விரைவில் மனதிற்க்கு பிடித்தாற்போல் நல்ல திருமண வாழ்வு அமைய வேண்டும்🙏🙏🙏நல்ல குணநலன்,குடும்பத்துடன் விரைவில் வர வேண்டும்🙏🙏🙏நிம்மதி,நிறைவு,சந்தோஷம்,திருப்தி, ஆரோக்யம்,அன்புடன் நன்றாக வாழ வேண்டும்🙏🙏🙏வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @Palaniv6786
    @Palaniv6786 10 дней назад

    திருமணம் கைகூட அருளிட வேணும்
    கல்யாண சுந்தரனே திருவடி சரணம் ❤️🌹🙏...

  • @kesavamoorthim7740
    @kesavamoorthim7740 2 года назад +11

    எனக்கு வயது 29. நான் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறேன். இன்னும் திருமணம் நடக்கவில்லை. இறைவன் என்னப்படி நல்லதாக அமைய வேண்டுகிறேன்.

  • @nagarajannagarajan9018
    @nagarajannagarajan9018 2 года назад +12

    என் மகளுக்கும் மற்றும் திருமணம் தாமதமாகும் பிள்ளைகளுக்கும் விரைவாக திருமணம் நடக்க அருள்புரிய ஈசனே உன் தாழ் வணங்குகிறேன்

    • @gopalakrishnankrishnaswamy3546
      @gopalakrishnankrishnaswamy3546 Год назад

      என் மகனுக்கும் திருமணவயதில் இருக்கும் அனைத்து ஆண், பெண் குழந்தைகளுக்கும் சீக்கிரம் திருமணம் நடை பெற அருள் புரிய வேண்டும் சர்வேஸ்வரா

  • @arunadassingaaravelan4266
    @arunadassingaaravelan4266 11 месяцев назад +3

    ஐயனே அம்மனே
    எங்கள் மகனுக்கு அரசுப்பதவியும் அமுத வாழ்வும் அமைத்து தாருங்கள் நன்றி

  • @pandianthambidorair3251
    @pandianthambidorair3251 10 месяцев назад +2

    My daughter is also 33 y old Please pray she should be married soon.But she is in depression. She is a dentist professor also..my worries should vanish soon sarveshwara😊

  • @rathna.a8100
    @rathna.a8100 Год назад +8

    ஓம் நமசிவாய அப்பா உண்னை விட்டா எனக்கு வேரா யாரும் இல்லை என் மகள் க்கு நல்ல வரன் அமையனும்

  • @sivaramanrajangam7522
    @sivaramanrajangam7522 Год назад +53

    திருமண வயதை தாண்டிய எனது மகளுக்கும் எனது மகள் வயதில் மற்ற குழந்தைகளுக்கும் திருமண நடைபெற அருள் வழங்க வேண்டும்

    • @Vigneshvaran-vv6tc
      @Vigneshvaran-vv6tc 9 месяцев назад +3

      Nadandrum sir

    • @pandirajendran7280
      @pandirajendran7280 7 месяцев назад +4

      நடக்கும்கண்டிப்பாகமயில்வாகனன்நடத்திவைப்பார்

    • @SHIVAALAYAMUSICALSTV
      @SHIVAALAYAMUSICALSTV 20 дней назад

      ruclips.net/video/nfm-Lvb_hZ8/видео.html

  • @vijayashalini6413
    @vijayashalini6413 2 года назад +16

    கல்யாண சுந்தரா திருமணம் நடத்தி வைக்க வேண்டும்...விரைவில் உங்கள் அருளோடு எந்த தடையும் இன்றி திருமணம் கைகூட வேண்டும் .... ஓம் நமசிவாய .... மண மாலை தோல் சேர வேண்டும்....
    கோகிலாம்பாள் உடன் உரையும் கல்யாண சுந்தரா திருமணம் தடை இல்லாமல் நடக்க விரைவில் அருள் புரிய வேண்டும்..... நல்ல வரன் அமைந்து திருமணம் கைகூட அருள் புரிய வேண்டும்.........

  • @revathyrevathy926
    @revathyrevathy926 10 месяцев назад +2

    என் பிள்ளைகள்க்கு திருமணம் நடத்தி தாங்க தெய்வமே இதற்கு மேல் சொதனை வேண்டாம் ஐய்யனே பதிகம் பலன் தர வேண்டும் இறைவா ஒம் நமசிவாயம் ஒம் நமசிவாயம் ஒம் நமசிவாயம் நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @lifeisbeautiful2336
    @lifeisbeautiful2336 3 года назад +119

    எங்கள் மகனுக்கு மனம் போல் விரைவில் நல்ல மணவாழ்க்கை அமைய கோகிலாம்பாள் சமேத கல்யாண சுந்தரேஸ்வரர் அருளவேண்டும்🙏🙏

    • @jayanthigovindan6970
      @jayanthigovindan6970 3 года назад +3

      Enmaganuku viraivil thirumanam nadaka arulpurivai kalyana sundharan udanurai kokilambal

    • @vinayagatex4500
      @vinayagatex4500 2 года назад

      Enjoy maganuku vraivil thirumanam nadakanum swamy

    • @gopalakrishnankrishnaswamy3546
      @gopalakrishnankrishnaswamy3546 Год назад +3

      எங்கள் மகனுக்கு மனம் போலீஸ் விரைவில் நல்ல மணவாழ்கை அமைய கோகிலாமபாள் சமே த கல்யாண சுந்தரேஸ்வரர் அருள் புரிய வேண்டும்.

    • @snehaarasan1680
      @snehaarasan1680 Год назад

      எங்கள் மகளின் திருமணம் விரைவில் நடைபெற ஐயா உண்பாதம் போற்றி போற்றி ஓம் நமோ நாராயணா.....

    • @shobanaloganesan3666
      @shobanaloganesan3666 Год назад

      Enakum marriage aga villai... Nalla varan irundha sollavum

  • @vijalayakshmig7398
    @vijalayakshmig7398 2 года назад +22

    என் மகனுக்கு விரைவில்நல்லவரன் அமையவேண்டுகிறோம் சுயம்வர பார்வதிதேவி.

  • @nmadhavan5700
    @nmadhavan5700 3 месяца назад +6

    என் மகள் திருமணம் விரைவில் நடைபெற பிரார்த்திக்கிறேன் அதுபோல் அனைவரது மகள் மகன் திருமணம் விரைவில் நடைபெற இந்தப் பதிகத்தை தினமும் பாராயணம் செய்கிறேன்

  • @moni-editor.
    @moni-editor. Год назад +2

    எனக்கும் உமாக்கும் கல்யாணம் ஆகனும் சாமி

  • @Saratha.p2007
    @Saratha.p2007 Год назад +3

    ❤ ayyane eesa mahesa enakum en kidz kum oru paathukaapuku nalabadiya 2.nd marriage ku thunai puriya vendum ayya

  • @rajeshrajpalanisamy2019
    @rajeshrajpalanisamy2019 7 месяцев назад +1

    கடவுளே என் பிள்ளைகளின் திருமணததை நடத்திட வேண்டும் கடவுளே🙏🙏🙏🙏

  • @jothijothi3828
    @jothijothi3828 2 года назад +47

    என் மகனுக்கு நல்ல வரன் அமைய சமேத கோகிலாம்பிகை கல்யாண சுந்தரேசுவரர் அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏

  • @dhanalakshmic9711
    @dhanalakshmic9711 15 дней назад

    திருமண வயதில் உள்ள எல்லா குழந்தைகளுக்கும் நல்ல வாழ்க்கை துணை அமைய அருள் புரிவாயாக ❤

  • @ammukuttysart7306
    @ammukuttysart7306 3 года назад +97

    எனக்கு விரைவில் திருமணம் நடக்க அருள்புரிய வேண்டும் ..சிவன் அய்யா🙏🙏 ஓம் நமசிவாயா🙏🙏

  • @sujatharajan4918
    @sujatharajan4918 3 месяца назад +1

    என் மகனுக்கு மிக விரைவில் நல்ல வரன் அமைந்து திருமணம் கைகூட சிவபெருமான் பார்வதி அருள வேண்டும்🙏 நமசிவாய போற்றி 🙏🙏🙏

  • @kalamanoharan5557
    @kalamanoharan5557 3 года назад +26

    என் மகனுக்கு திருமணம் விரை‌வி‌ல் நடைபெற அருள் புரிவாய் பெருமானே

  • @SUMATHIRAGUPATHI
    @SUMATHIRAGUPATHI 4 месяца назад +1

    கல்யாண சுந்தர பெருமானே ஈசனே என் மகனுக்கு திருமணம் நடத்தி வைகனும் அப்பா ஓம் நமசிவாய ,,,,,,❤❤❤❤

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 2 года назад +245

    என்னைப்போல் தன் குழந்தைகள் திருமணம் குறித்து பிரார்த்தனை செய்யும் அனைவருக்கும் கருணை கூர்ந்து விரைவில் திருமணம் நடைபெற்று உம் அருளால் நிம்மதியாக வளமுடன் வாழ தயைக்காட்டுங்கள் இறைவா! 🙏🙏🙏

    • @HappyLife786
      @HappyLife786 2 года назад +5

      திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

    • @revathim3850
      @revathim3850 2 года назад +11

      ,எங்க ள் மகன் சரவணன் திருமணம் விரைவில் நடைபெற வேண்டும் இறைவா. சுந்தரேஸ் வரா. கோகிலாம்பாள். தாயே. தந்தை யே. சரணம். சரணம்

    • @rveeramuthu6815
      @rveeramuthu6815 2 года назад +3

      நன்றி 🙏🥰💚

    • @maheswarikaliyaperumal5369
      @maheswarikaliyaperumal5369 2 года назад +2

      Kkkk@@HappyLife786

    • @maheswarikaliyaperumal5369
      @maheswarikaliyaperumal5369 2 года назад +1

      @@HappyLife786 Oki Loki

  • @AjiBabyvariousthoughts-od7mt
    @AjiBabyvariousthoughts-od7mt Год назад +2

    Nan indha padhikathai kettu 1 varudathirkkul thirumanam mudindhathu🙏kalyana sundharare thiruvadi saranam🙏

  • @vimalkumarm8908
    @vimalkumarm8908 2 года назад +22

    என் இளைய மகனுக்கு மிக விரைவில் திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும் உத்வாகநாதனே.

  • @jeyamanin2827
    @jeyamanin2827 Год назад +5

    என் மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டும். இறைவா நீதான் அருள்புரிய வேண்டும்

  • @chandrasekarmudaliar1201
    @chandrasekarmudaliar1201 2 года назад +4

    கோகிலாம்பாள் உடறுறையும் கல்யாண சுந்தரா திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் சர்வேஸ்வரா என் மகனுக்கு கூடிய விரைவில் திருமணம் நடைபெறும் வேண்டும் சர்வேஸ்வரா

  • @Saraswathi-wq7gj
    @Saraswathi-wq7gj 8 месяцев назад +2

    கல்யாண சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்கு என் மகனை அழைத்து வர அருள் புரிய வேண்டும் இறைவா என் போன்ற தாய்மார்களில் கவலையும் கண்ணீரையும் நீதான் வழிகாட்ட வேண்டும் ஈசனே🎉🎉🎉🎉🎉

    • @Saraswathi-wq7gj
      @Saraswathi-wq7gj 7 месяцев назад

      நம்பிக்கையுடன் தினமும் கேட்டு வருகிறேன் இறைவா என் மகனுக்கு சீக்கிரம் திருமணம் முடிய அருள் புரிய வேண்டும் ஈசனே🎉🎉🎉🎉

  • @srisakthi7214
    @srisakthi7214 Год назад +19

    இன்று வேண்டிக்கொள்கிறேன் சிவனே எங்கள் மகனின் திருமணம் விரைவில் நல்லபடியாக நடக்க ஆசீர்வாதம் செய்யுங்கள் அம்மையப்பனே 🙏🙏🙏

  • @devendranmothilal4336
    @devendranmothilal4336 3 года назад +16

    திருமணம் கைகூட அருளிய வேண்டும் கல்யாண சுந்தரனே

    • @kalikaliyappan1527
      @kalikaliyappan1527 3 года назад +1

      👍👍👍

    • @sankarsubramanian9054
      @sankarsubramanian9054 2 года назад

      இவ்வளவு அருமையான தேவார பாடல் கேட்பதற்கு புண்ணிய யம் செய்திர்க வேண்டும்

  • @selvaraniramasamy9962
    @selvaraniramasamy9962 Год назад +4

    என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும்.கல்யாண சுந்தரர் போற்றி போற்றி போற்றி...

  • @RameshSelvi-i7g
    @RameshSelvi-i7g 21 день назад

    என் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் ஈசன் அருளாலே எல்லாமே, நல்லது நடக்க வேண்டும் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉

  • @saraswathim4889
    @saraswathim4889 10 месяцев назад +7

    என் மகன் திருமணம் நல்ல முறையில் நடைபெற்றது ஓ ம் நம் சிவா இயக்கத்தில்

  • @premalatharamesh6583
    @premalatharamesh6583 10 месяцев назад +1

    காேகிலாம்பிகை சமேத கல்யாண சுந்தரேசா பாேற்றி ! என் மகளுக்கு மனப்பாெருத்தம் இருக்கக்கூடிய வரனாக அமைந்து நல்லபடியாகத் திருமணத்தை நடத்தி வையுங்கள் இறைவா!

  • @kalaraman2169
    @kalaraman2169 2 года назад +17

    ஈசனே எங்கள் பையனுக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்க வேண்டும் கண் திறந்து பாரப்பா

  • @sujatharajan4918
    @sujatharajan4918 3 месяца назад +1

    என் மகனுக்கு விரைவில் திருமணம் நிச்சயமாக வேண்டும் சிவபெருமானே பார்வதித் மாயே🙏🙏🙏
    ஓம் நமசிவாய போற்றி🙏🙏🙏

  • @loganayagi7929
    @loganayagi7929 2 года назад +7

    திருமண வயதில் உள்ள அனைவருக்கும் விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் திருமணஞ்சேரி கோகிலாம்பாள் சமேத கல்யாண சுந்தரேஸ்வரா திருச்சிற்றம்பலம் வாழ்க வளமுடன்

  • @NarenMariappan
    @NarenMariappan 11 месяцев назад +1

    சொக்கநாதா, இறைவா. கரம் தாரம் இன்றி தவிக்கும் மூத்த இளம்பிள்ளைகளுக்கு, காதலுக்காக காத்திருக்கும் சின்னசிருசுகளுக்கு விரைவில் திருமணம் கைக்கூட அருள் புரிவாய். ஓம் காமாட்சி அம்பாள் சமேத, ஏகாம்பரநாதர் போற்றி. 🙏🙏🙏🙏

  • @KG_2718
    @KG_2718 2 года назад +19

    என் அப்பனே ஈசா என் இரண்டு மகள்களுக்கும் நல்ல கணவர்களாக அமைத்துக் கொடுத்து நல்லபடியாக திருமணத்தை நடத்திக கொடுக்க வேண்டும் என்று தாழ்மையோடு வேண்டிக் கொள்கிறேன் அப்பா🙏🏼🙏🏼🙏🏼

  • @mariappan2414
    @mariappan2414 11 месяцев назад +1

    என் மகன் போல் திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் இருந்தாலும் அனைவருக்கும் திருமணம் உடனே நடக்கக் அந்த திருமணஞ்சேரி கல்யாண சுந்தரனார் அருளால் நல்லது நடக்கட்டும் வாழ்த்துகள் வாழ்க வாழ்த்துகள்

  • @sriraamanatiyalaya1731
    @sriraamanatiyalaya1731 3 года назад +26

    எனக்கு திருமணம் நடைபெற வேண்டும் என் அப்பா சிவனே.மனம் இரங்க வேண்டும் என் நெல்லையப்பா

    • @kalikaliyappan1527
      @kalikaliyappan1527 3 года назад +3

      கண்டிப்பாக நடக்கும்

    • @eswarimurugesan2013
      @eswarimurugesan2013 3 года назад +4

      கவலை வேண்டாம் தைமாதம் கொட்டு மேளம் தான் கண்டிப்பாக திருமணம் கை கூடும் 👍👍👍👍👍👍 ஓம் நமசிவாய🙏🙏🙏🙏

    • @HemaLatha-dx6xl
      @HemaLatha-dx6xl 3 года назад +2

      நிச்சயம் நடக்கும் கல்யாண பெருமாள் அருள் அனைவருக்கும் உண்டு🙏

    • @sylosylo6409
      @sylosylo6409 2 года назад +1

      @@HemaLatha-dx6xl enke mam nallavankalykku ponnu amaya mattenkethu na m. A, m. Phil, m. Ed paduchu iruken aana enakku yarum marriageku step edukkala kadavule

    • @HemaLatha-dx6xl
      @HemaLatha-dx6xl 2 года назад

      @@sylosylo6409 விரைவில் கெட்டி மேளம் கேட்க வாழ்த்துக்கள்🎉🎊 🙏

  • @kamalambaskaran5062
    @kamalambaskaran5062 6 месяцев назад +1

    எனது மகன் கல்யாணம் இனிதாக நிறைவேற வேண்டும் இறைவா நீ தான் அருள் புரிய வேண்டும்

  • @ganeshraman6249
    @ganeshraman6249 3 года назад +9

    கல்யாண சுந்தரா என் மகனுக்கு நல்லகுணவதியான வாழ்க்கை துணை அமைய அருள்வாய் அப்பா.நமச்சிவாய துணை

  • @sugavaneshram5794
    @sugavaneshram5794 8 месяцев назад +1

    சுந்தரேஸ்வரா என் மகனுக்கு பொருத்தமான நல்ல வரன் விரைவில் அமைய அருளவேண்டும் என் அப்பனே இறைவா பரம்பொருளே ❤❤❤❤❤❤🌹🌹🌹🔥🔥🔥🙏🙏🙏🙏🙏

  • @KANAGASKANAGA-c1i
    @KANAGASKANAGA-c1i 8 месяцев назад +3

    எனது மகனுக்கு இந்த வருடம் திருமணம் நடக்க அருள்புரிவாய் ஓம் நமச்சிவாய❤

  • @kannanlakshmanan4509
    @kannanlakshmanan4509 9 месяцев назад +3

    நமஸ்காரங்கள்
    என் மகன் போல் திருமணம் ஆக வேண்டிய ஆண் பெண் இரு பாலருக்கும் விரைவில் திருமணம் நடைபெற அருள் கூர்ந்து வரம் வேண்டி பிச்சை கேட்டு இறைஞ்சுகிறேன். அப்பனே அம்மையே. திருச்சிற்றம்பலம்

  • @kishora3212
    @kishora3212 3 года назад +22

    விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் ஈசனே

  • @HemaLatha-dx6xl
    @HemaLatha-dx6xl 3 года назад +84

    கோகிலாம்பாள் உடனுறையும் கல்யாண சுந்தரா திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் சர்வேஸ்வரா🌷❤ஓம் நமசிவாய🙏

    • @kalikaliyappan1527
      @kalikaliyappan1527 3 года назад +4

      வாழ்த்துக்கள்🙏🙏🙏

    • @pandiyan7245
      @pandiyan7245 2 года назад +2

      Enakkum viraivil tirumanam nadakkanum

    • @HemaLatha-dx6xl
      @HemaLatha-dx6xl 2 года назад

      @@kalikaliyappan1527 நன்றி 🙏

    • @HemaLatha-dx6xl
      @HemaLatha-dx6xl 2 года назад

      @@pandiyan7245 இறைவன் அருளால் கூடிய விரைவில் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்🎉🎊 🙏

    • @kalaiselvi7829
      @kalaiselvi7829 2 года назад +2

      Priyaa Athithan கூடிய விரைவில் திருமணம் நடக்க வேண்டுகிறேன் சர்வேஸ்வரா

  • @manimegalai7819
    @manimegalai7819 2 года назад +134

    அருமையான பாடல்... இப்பாடலை கேட்ட பின்பு எனக்கு நல்ல வரன் அமைந்தது....மிகவும் நன்றி.....🙏🙏

    • @nithisam0498
      @nithisam0498 2 года назад +2

      Ethanna time kettinga sister plz reply

    • @manimegalai7819
      @manimegalai7819 2 года назад +4

      Epo venalum kekalam sis...

    • @Bhavani1999
      @Bhavani1999 2 года назад +2

      etthanai time ketta piragu ungaluku marriage fix aachu?

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 года назад +2

      வாழ்த்துகள்

    • @kalaiselvigovindan6875
      @kalaiselvigovindan6875 Год назад +6

      @@Bhavani1999 நம்பிக்கையோடு தினமும் கேளுங்க நிச்சயமாக திருமணம் கைகூடும்

  • @santhirn6139
    @santhirn6139 Месяц назад +1

    என் மகனுக்கு விரைவில் திருமணத்திற்கு பெண் அமைய அருள் புரிவாய் இறைவா

  • @sathankanth6101
    @sathankanth6101 3 года назад +30

    என் அப்பனே சர்வேஸ்வரா என்னோட.மூத்தப்பிள்ளைக்கு.நல்லவாழ்க்கை துணை அமைந்து திருமணம் நடைபெற வேண்டும் என்று ஆசீர் வதியுங்கள் இறைவனே

    • @kalikaliyappan1527
      @kalikaliyappan1527 3 года назад

      அப்படியே நடக்கும்

    • @kalaiselvi7829
      @kalaiselvi7829 3 года назад

      என் மகள் மோகனப்ரியா ஆதித்தன் திருமணம் நடக்க தடை ‌உள்ளது தடை ‌நீக்கி‌விரைவில் திருமணம்‌ நடக்க வேண்டும் சிவனே🙏🙏

    • @meenakshisekaran93
      @meenakshisekaran93 3 года назад

      Kalyana duntharesa en pethiishuvukku ceekeram varan amaiyanum arul puriya vendum appa

    • @ravi.vazhka.valarkaravi2904
      @ravi.vazhka.valarkaravi2904 3 года назад +1

      Paramporull.Ammaiappa.potri.annaivarukkumnalvazhkkai.amya.eraivan.arul.priattum.vazhga.valarka

  • @rajasekar26
    @rajasekar26 Месяц назад +1

    I pray god lord Siva and Parvathi to bless all children’s who are all waiting for suitable match, let them
    getting married soon

  • @meenachemuniandy5296
    @meenachemuniandy5296 3 года назад +67

    எங்கள் செல்லம் திங்களணிக்கு விரைவில் நல்ல வரம் ‌அமையவேண்டும், இறைவா🙏🙏🙏

  • @prakashvinoth5276
    @prakashvinoth5276 2 месяца назад +1

    எனக்கு திருமணம் நடக அருள் புரியா வேண்டும் கல்யாண சுந்தரேஸ்வரர் ஓம் நமசிவாய வாழ்க

  • @sakuntalamrs9029
    @sakuntalamrs9029 3 года назад +6

    சர்வேஸ்வரா என் மகளுக்கு நல்ல வரன் அமைந்து நல் வாழ்க்கை வாழ வேண்டும் என்று வேண்டி உன் திருவடியை வணங்கி வேண்டுகிறேன். அருள் புரியுங்கள் ஐயனே..

    • @kamalakamala9443
      @kamalakamala9443 2 года назад

      Nana nalla mappilai thedugiren nalabadiyaga kldaikka Arul puriunggal

    • @jothijothi3828
      @jothijothi3828 2 года назад

      என் மகனுக்கு நல்ல வாழ்க்கை அமையவேண்டும் இறைவா 🙏🙏🙏

    • @pandiyan7245
      @pandiyan7245 2 года назад

      Esan bless you

  • @sivasubramanian7004
    @sivasubramanian7004 2 года назад +5

    இறைவா என் பேத்தி க்கு திருமணம் நல்லவரன்அமைய
    அருள் புரியவேண்டும்

  • @MurugeswariEswari-p8j
    @MurugeswariEswari-p8j Год назад +3

    ஓம் நமசிவாய. என்மகனுக்குவிரைவில்திருமணம்நடக்க
    அருள்புரியவேண்டும்சிவயநம

  • @kalamanoharan5557
    @kalamanoharan5557 3 года назад +69

    எனக்கு இருக்கும் ஒரே மகனுக்கு வயது 30 நடக்கிறது..நல்ல அன்பான புரிந்து கொண்டு வாழும் பெண் அமைய அருள் புரிவாய் இறைவா..எங்களுக்கும் வயது 60 கடந்து விட்டது...விரைவில் திருமணம் கை கூட அருள் புரிவாய் இறைவா

  • @kannanm5180
    @kannanm5180 2 года назад +8

    என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள்புரியவேண்டும்

  • @paramananthamgeevananthy328
    @paramananthamgeevananthy328 3 месяца назад

    ரிசானிக்கு கல்யாணம் விரைவில் நடைபெறனும்.கல்யாண சுந்தரனே துணை புரிவாயாக.

  • @prabakaran.nnagarajan.n4608
    @prabakaran.nnagarajan.n4608 2 года назад +24

    மிக உயர்ந்த பதிகம். அழகான மெட்டு. இதயத்தை உருக்கும் குரல். ஆஹா மனமே கரைந்து போகிறது. கல்யாணசுந்தரா அனைவரையும் ஆசிர்வதிப்பாய்🙏

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 года назад +2

      ஆம் நிச்சயமாக நம்புவோம் நல்லது

    • @aachislifestyle8774
      @aachislifestyle8774 Год назад

      Kan kalangi vendinen en paiyanuku thirumanam kaikooda vendum endru..idhayathai urukum kural.🙏🙏

    • @KaviKavi-fm1cw
      @KaviKavi-fm1cw Год назад

      Eanakum cekiram marriage agatum kalyanasundaram out😊🎉

  • @RagaviR-ix5te
    @RagaviR-ix5te 3 месяца назад +1

    கடவுளே என் பெண் குழந்தைக்கு நல்ல வரன் அமைய வேண்டுகிறேன் கண் திறந்து பாரப்பா என் கவலை எல்லாம் போக்க பா என் தாயும் தந்தையும் நீயே அப்பா நான் தினந்தோறும் கண்ணீர் வடிக்கிறேன் அப்பா மனமிறங்கி வாயா