Tamilnadu Dam | Maharaja Samuthiram Dam | மகாராஜசமுத்திரம்அணை| Prakash Natarajan | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 авг 2024
  • Heartly welcome to my channel
    keep supporting and subscribe the channel...
    Watch "Deeshidhan" on RUclips
    TO SUBSCRIBE PRESS HERE
    / @prakashnatarajan29
    Maharaja samuthiram dam is located in Thanjavur district.Particulary it is located in Tokkalikkadu village which is 10 km away from Pattukottai taluk.
    It was built in 1955 and opened by our late chief minister Kamarajar.
    தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே தொக்காலிக்காடு கிராமத்தில் மகாராஜசமுத்திரம்அணை அமைந்துள்ளது.
    பட்டுக்கோட்டையில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இந்த அணையானது அமைந்துள்ளது.
    1955-ம் ஆண்டு மகாராஜசமுத்திரம் அணை கட்டப்பட்டு அப்போதைய முதல்-அமைச்சர் காமராஜரால் திறந்து வைக்கப்பட்டது.
    இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் நீரைக் கொண்டு இப்பகுதி விவசாயத்திற்கும், நீர் நிலைகளை நிரப்புவதற்கும் பயன்படுத்தப்பட்டது. இப்பகுதியில் அதிகளவில் மழை பெய்யும்போதும், விவசாயத்திற்காக கல்லணை கால்வாயில் இருந்து தண்ணீர் திறந்து விடும்போதும் அணைக்கட்டில் நீர் மட்டம் வெகுவாக அதிகரிக்கும். இதனால் அணை நிரம்பிய பிறகு அணையிலிருந்து வெளியேறும் உபரி நீர் வீணாகக் கடலில் சென்று கலக்கிறது.
    மகாராஜசமுத்திரம் காட்டாற்று அணை நீர் கடலில் கலந்து வீணாவதை தடுத்து கல்லணைக்கால்வாய் பாசன கடைமடை பகுதியான ராஜாமடம், மகிழங்கோட்டை, தொக்காலிக்காடு, சேண்டாக்கோட்டை, பள்ளிகொண்டான், நடுவிக்காடு, மிலாரிக்காடு உள்ளிட்ட 10-க்கு மேற்பட்ட கிராமங்கள் பாசன வசதி பெறும் வகையில் இந்த அணை மூலம் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று ஒருபோக சாகுபடியும் நடைபெற்று வந்தது.
    இங்கு பெரும்பாலானோரின் தொழிலாக தென்னை மற்றும் தானியங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. பச்சை பசேல் என குளுமையுடன் காட்சியளிக்கும் இந்த கிராமத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கக்கூடியது மஹாராஜா சமுத்திரம் அணைக்கட்டில் தேக்கி வைக்கப்படும் நீர் ஆகும். இந்த நீரை எடுத்துதான் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதுவும் குறிப்பிட்ட காலத்திற்கு மாத்திரமே பயனைத்தரும். மற்ற நேரங்களில் இந்த அணை நீரின்றி வறணடே காட்சியளிக்கும்.
    பொதுப்பணித்துறை கண்காணிப்பில் இருந்து வரும் இந்த அணை காலப்போக்கில் பராமரிப்பின்றி சாகுபடிக்கு பயன்படாமல் இந்த அணை தண்ணீர் கடலில் கலந்து வீணாகி வருகிறது.
    மஹாராஜ சமுத்திர அணையில் குளிப்பதற்கு ஏற்ற அமைப்பில் சற்று இலகுவாக அமைந்திருப்பதால் அதிகமானோர் விரும்பிச் செல்கின்றனர். குறிப்பிட்ட சில வாரங்களில் மாத்திரமே நீரைக்கொண்டுள்ள இந்த அணையில் வெளிநாடுகளிலிருந்து விடுமுறைக்காக தாயகம் வரும் இளைஞர்களும், உள்ளூரில் வசிக்கும் இளைஞர்களும் என அதிகமானோர் இந்த அணைக்கு சென்று குளித்து மகிழ்கின்றனர். தண்ணீர் வரத்து மிதமாக இருப்பதால் அதிகமான நேரம் குளித்து மகிழ்கின்றனர். பயணத்திற்காக இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர்..
    Music by Kevin MacLeod. Available under the Creative Commons Attribution 3.0 Unported license. Download link: incompetech.co....
    Thank you

Комментарии • 53