Kumbidukiraen || Vedanayagam Sastriar Keerthanai || Sastriar Mrs.Sarah Martin || A.Christiyaan Kutti

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • Song : Kumbidukiraen
    Album : Ananda Gnana Keerthanaigal
    Lyrics : Vedanayagam Sasthiriyar
    Sung & Featuring : Sastriar Mrs. Sarah Martin
    Introduction Speech : Dr. P. Martin Devaprasath
    Music & Tune : A. Christiyaan Kutti
    D.O.P. : Youth Sam, MGS. Rajan
    Editing : MGS. Rajan
    Drone : Daniel Daff
    Audio Recording : Samson Ramphony
    Audio Mixing & Mastering : Praveen Kumar
    Digital on : D.K.Enterprises
    Produced by : Dr. P. Martin Devaprasath
    All songs also available on
    music.amazon.c...
    / ananda-gnana-keerthana...
    open.spotify.c...
    www.jiosaavn.c...
    wynk.in/music/...
    பாடல் வரிகள்
    பல்லவி
    கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் - எங்கள்
    குருவேசுநாதர் பதங் கும்பிடுகிறேன்
    அம்புவி படைத்தவனைக் கும்பிடுகிறேன் - எனை
    ஆண்டவனை, மீண்டவனைக் கும்பிடுகிறேன்
    நம்புமடி யார்க்கருளைக் கும்பிடுகிறேன் - பவ
    நாசனைக் கிருபாசனைக் கும்பிடுகிறேன்.
    தம்பமெனக் கானவனைக் கும்பிடுகிறேன் - நித்திய
    சருவ தயாபரனைக் கும்பிடுகிறேன்
    உம்பர் தொழும் வஸ்துவையே கும்பிடுகிறேன் - தொனித்கும்
    தோசன்னா வோசன்னாவென்று கும்பிடுகிறேன் - கும்பிடு
    ஒரு சருவேசுரனைக் கும்பிடுகிறேன் - ஒன்றும்
    ஒப்பதில்லா மெய்ப்பொருளைக் கும்பிடுகிறேன்
    திருவுருவானவனைக் கும்பிடுகிறேன் - தாவிது
    சிம்மாசனாதிபனைக் கும்பிடுகிறேன்
    3.நற்றிசையும் நோக்கி நின்று கும்பிடுகிறேன்
    வேத நாயகனின் பாட்டனையே கும்பிடுகிறேன்
    சாஸ்திர விதத்துடனே கும்பிடுகிறேன்
    தாவீது சங்கீர்த்தனங்கள் சொல்லி கும்பிடுகிறேன்
    பொருள்
    பல்லவி
    வணங்குகிறேன். நான் வணங்குகிறேன்.
    எங்கள் குருவாகிய இயேசுநாதர் பாதத்தை வணங்குகிறேன்.
    சரணங்கள்
    1. இவ்வுலகை படைத்தவரை வணங்குகிறேன்.
    என்னை ஆட்கொண்டவரை, மீட்டுக்கொண்டவரை வணங்குகிறேன். அவரை நம்பும் அடியார்க்கு அருள்செய்பவரை வணங்குகிறேன் பாவத்தை அழிப்பவரை, கிருபை சிங்காசனத்தில் வீற்றிருப்பவரை வணங்குகிறேன்.
    2. எனக்கு நிலையான வாழ்வு தருபவரை, வணங்குகிறேன்
    அறியாத அனைத்தும் தருபவரை வணங்குகிறேன்.
    மெய்ப்பொருளை ஓசன்னா ஓசன்னா என்று முழங்கி வணங்குகிறேன்.
    3. ஒன்றான மெய்த்தேவனை வணங்குகிறேன்.
    தனக்கு யாரும் இணையில்லாத மெய்ப்பொருளை வணங்குகிறேன். திரு அவதாரமாக வந்தவரை வணங்குகிறேன்
    தாவீது அரசனின் அரியணைக்குரிய அதிகாரியை வணங்குகிறேன்.
    4. நான்கு திசைகளில் இருந்தும் உம்மை நோக்கி வணங்குகிறேன்
    பாட்டுக்குறிய வேதத்தின் நாயகனாகிய கிறிஸ்துவையே வணங்குகிறேன்
    வேதத்தின் சாஸ்திரங்களோடு உம்மை வணங்குகிறேன்
    தாவீதின் சங்கீதங்களை சொல்லி உம்மை வணங்குகிறேன்

Комментарии • 19

  • @johnbalasundaram2484
    @johnbalasundaram2484 Год назад +7

    தாம் வணங்கும் கடவுள் எவ்வளவு பெரியவர் என்பதை சாஸ்திரியார் நன்கு புரிந்திருக்கிறார். குருவேசுநாதர் பாதத்தை அவர் கும்பிடுகிறார் எனும்போது தாழவிழுந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வதைப் பற்றி சொல்லுகிறார் என்று புரிந்து கொள்ளலாம். இன்றைய ஆராதனை வீரர்களுக்கு இந்த பக்தி உணர்வும் இறையியல் அறிவும் மிகவும் தேவை.
    இன்னொரு செய்தி
    புரியாத மொழியில் மந்திரங்களை உச்சரித்துவிட்டு நமஹ என்று முடிப்பது போல நாம் அல்லேலூயா என்கிற பதத்தை உபயோகிக்கிறோம். உயிர்த்தெழுந்த ஆண்டவரைப் பாடும்போது ஆமென் அல்லேலுயா என்று புகழ்ந்தாலும் இப்பாடலில் அவர் இந்த பதத்தைப் பயன்படுத்தவில்லை.
    (வேத புத்தகத்திலும் 150ம் சங்கீதத்துக்குப்பின் எதிர்காலத்தில், மோட்சத்தில் தான் அல்லேலூயா கோஷம் முழங்குகிறது)

  • @malligaidentalacademy
    @malligaidentalacademy 11 дней назад

    Super song

  • @moseslazar1359
    @moseslazar1359 2 месяца назад

    Very beautiful great song

  • @jesinthadaniel8710
    @jesinthadaniel8710 2 месяца назад +1

    என்னே!தமிழ்ப் புலமை...
    வாழ்த்துகள்.

  • @paulleanderravi3177
    @paulleanderravi3177 Год назад +2

    Awesome. Thank you Sir for bringing this old songs . Well explained. Thank you so much. May God richly bless you Sir and all your works. All Glory to Him alone.

  • @jonansmithj
    @jonansmithj Год назад +2

    Very Nice

  • @anitatheodora3415
    @anitatheodora3415 Год назад

    Amazing song with His anointing... Thank dear Martins for bringing back to life all the wonderful hyms and songs of our beloved Late Shastriyar... all glory to His Matchless Name!

  • @vijayakireeti7567
    @vijayakireeti7567 Год назад

    Thank God for His blessings on your ministry, Let it be a blessing to thousands like us

  • @SubalaJustin-wi9em
    @SubalaJustin-wi9em Год назад +1

    Song is super

  • @rev.dr.devikaisaac1457
    @rev.dr.devikaisaac1457 Год назад +1

    Glory to God

  • @SamuelPrakasam
    @SamuelPrakasam 5 месяцев назад

    Very nice........praise the Lord

  • @missionarymemories4185
    @missionarymemories4185 Год назад +1

    சென்னை துரைராஜ் பாகவதர் வேதநாயகம் சாஸ்திரியார் அவர்களின் புதல்வியாரின் குரல் வளம் இனிமை தமிழ் உச்சரிப்பு மிக அருமை

  • @miltonsaji3350
    @miltonsaji3350 Год назад

    Very nice to hear Sister. 🎉❤ Always Old is Gold🥇

  • @thampijesudasan
    @thampijesudasan 2 месяца назад

    V. Nice setting

  • @vibishv3611
    @vibishv3611 Год назад

    🎉🎉🎉🎉❤❤

  • @Samathanaprabhu-pa
    @Samathanaprabhu-pa 10 месяцев назад

    🤲amen🤲

  • @shajisaviour2122
    @shajisaviour2122 8 месяцев назад

    Amen

  • @missionarymemories4185
    @missionarymemories4185 Год назад

    உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் சிறப்பாக இருக்கிறது