விநாயகர் சதுர்த்தி 2021 - வழிபடும் முறை & பூஜை நேரம்| Vinayagar Chaturthi 2021 Worship method @ Home

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • விநாயகர் அகவல்
    சீதக் களபச் செந்தா மரைப்பூம்
    பாதச் சிலம்பு பலவிசை பாடப்
    பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
    வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
    பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
    வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
    அஞ்சு கரமும் அங்குச பாசமும்
    நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
    நான்ற வாயும் நாலிரு புயமும்
    மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
    இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
    திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
    சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
    அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
    முப்பழ நுகரும் மூஷிக வாகன!
    இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
    தாயா யெனக்குத் தானெழுந் தருளி
    மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
    திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
    பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து
    குருவடி வாகிக் குவலயந் தன்னில்
    திருவடி வைத்துத் திறமிது பொருளென
    வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
    கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
    உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்
    தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
    ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
    இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
    கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
    இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து
    தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
    மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
    ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
    ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
    ஆறா தாரத்(து) அங்குச நிலையும்
    பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
    இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
    கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
    மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
    நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்
    குண்டலி யதனிற் கூடிய அசபை
    விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
    மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
    காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
    அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
    குமுத சகாயன் குணத்தையும் கூறி
    இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
    உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
    சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
    எண் முகமாக இனிதெனக் கருளிப்
    புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
    தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
    கருத்தினில் கபால வாயில் காட்டி
    இருத்தி முத்தி யினிதெனக் கருளி
    என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து
    முன்னை வினையின் முதலைக் களைந்து
    வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
    தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
    இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
    அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில்
    எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
    அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
    சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
    சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
    அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்
    கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
    வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
    கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
    அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
    நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்
    தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
    வித்தக விநாயக விரைகழல் சரணே!
    VINAYAGAR AGAVAL
    SEETHA KALABA SENTHA MARIPOO
    PAADHA SILAMBU PALA ISAI PAADA
    PONARAIGNAANUM POONTHUGIL AADAIYUM
    VANNA MARUNGIL VALARNTHAZHAGERIPPA
    PEZHAI VAYIRUM PERUMBARA KODUM
    VEZHA MUGAMUM VILANGU SINTHURAMUM
    AINDU KARAMUM ANGUSA PAASAMUM
    NENJIR KUDIKONDA NEELA MENIYUM
    NANDRA VAAYUM NALIRU PUYAMUM
    MOONDRU KANNUM MUMMADHA SUVADUM
    IRANDU SEVIYUM ILANGUPON MUDIYUM
    THIRANDAMUP PURINOOL THIGAZHOLI MARBUM
    SORPADHAM KADANTHA THURIYA MEIGNANA
    ARPUTHAM NIRAINTHA KARPAGA KALIREY
    MUPAZHAM NUGARUM MOOSHIGA VAGANA
    IPPOZHUDHENNAI AATKOLLA VENDI
    THAYAAI ENNAKU THAAN EZHUNDHARULI
    MAAYA PIRAVI MAYAKAM ARUTHU
    THIRUNDHIYA MUDHAL IYANDEZHUTHUM THELIVAAI
    PORUNDHAVEY VANTHEN ULANTHANIL PUGUNTHU
    GURU VADIVAAGI KUVALAYAM THANNIL
    THIRUVADI VAITHU THIRAMITHU PORULENA
    VADA VAGAITHAN MAGIZHNTHENAKARULI
    KODA YUDATHAAL KODUVINAI KALAINDHEY
    UVATTA UBADESAM PUGATIYEN SEVIYIL
    THEVITTADHA GNANA THEILVAIYUM KAATI
    AIMPULAN THANAI ADAKUM UPAAYAM
    INBURU KARUNAI INITHENAKU ARULI
    KARUVIGAL ODUNGUM KARUTHINAI ARIVITHU
    IRUVINAI THANNAI ARUTHIRUL KADINTHU
    THALAMORU NAANGUM THANTHU ENAKARULI
    MALAMORU MOONDRIN MAYAKAM ARUTHEY
    ONPATHU VAYIL ORU MANTHIRATHAL
    AIMPULAN KADHAVAI ADAIPADHUM KAATI
    AARAADHAARATHU ANGUSA NILAYUM
    PERA NIRUTHI PECHURAI ARUTHEY
    IDAI PINGALAIYIN EZHUTH ARIVITHU
    KADAYIR SUZHUMUNAI KABALAMUM KAATI
    MOONDRU MANDALATHIN MUTTIYA THOONIN
    NANDREZHU PAAMBIN NAVIL UNARTHI
    KUNDALI YADHANIL KOODIYA SABAYIL
    VINDEZHU MANTHIRAM VELIPADA URAITHU
    MOOLA THARATHIN MOONDELU KANALAI
    KAALAL EZHUPUM KARUTHARIVITHEY
    AMUDHA NILAYUM ADITHAN IYAKAMUM
    KUMUTHUA SAGAYAM KUNATHAYUM KOORI
    IDAI SAKKARATHIN ERRATTU NILAUM
    UDAR SAKKARATHIN URUPAIYAM KAATI
    SHANMUGA SULAMUM CHATURMUKHA SOOKSHAMUM
    EN MUGAMAGA INITHENAKU ARULI
    PURIYATTA KAAYAM PULAPADA ENAKKU
    THERIYETTU NILAYUM THERISANA PADUTHI
    KARUTHINIL KABAALA VAYIL KAATI
    IRUTHI MUKTHI INITHENAKU ARULI
    ENNAI ARIVITHU ENAKARUL SEITHU
    MUNNAI VINAIYIN MUDHALAI KALAINTHU
    VAKKUM MANAMUM ILLA MANOLAIYAM
    THEKKIYE ENTHAN SINTHAI THELIVITHU
    IRULVELI IRANDUM ONDRIDUM ENNA
    ARULTHARUM ANANDATHAI AZHUTHIEN SEVIYIL
    ELLAI ILLA ANANDAM ALITHU
    ALLAL KALAINTHEY ARULVAZHI KAATI
    SATHATHIN ULLEY SADASIVAM KAATI
    SITHATHIN ULLEY SIVALINGAM KAATI
    ANUVIRKU ANUVAI APPALUKKU APPALAI
    KANUMUTRI NINDRA KARUMPULLI KAATI
    VEDAMUM NIRUM VILANGA NIRUTHI
    KOODUMEI THONDAR KUZHATHUDAN KOOTI
    ANJA KARATHIN ARUMPORUL THANNAI
    NENJA KARATHIN NILAI ARIVITHU
    THATHUVA NILAIYAI THANTHENAI AANDA
    VITHAGA VINAGAYAGA VIRAIKAZHAL SARANEY
    Vinayagar Chaturthi
    விநாயகர் சதுர்த்தி
    ஆத்ம ஞான மையம்

Комментарии • 1,3 тыс.

  • @AthmaGnanaMaiyam
    @AthmaGnanaMaiyam  3 года назад +120

    ஆத்ம நண்பர்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் 🙏

    • @selvit8440
      @selvit8440 3 года назад +2

      Same

    • @elavarasithirumalai9100
      @elavarasithirumalai9100 3 года назад +2

      Same too you 🙏

    • @saibabachannelrntamil9910
      @saibabachannelrntamil9910 3 года назад +4

      Happy Vinayagar chaturthi mam

    • @S.aksudhan
      @S.aksudhan 3 года назад +2

      இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் அம்மா🙏🏻😘

    • @sujasubha4528
      @sujasubha4528 3 года назад +1

      விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் அம்மா🙏

  • @vidhyas480
    @vidhyas480 3 года назад +41

    அம்மா உங்களது பேச்சாற்றலாலே பக்தி இல்லாதவர்களையும் இறைவனை வணங்க தொடங்கி விடுவர். அனைத்து பதிவு களையும் மிக அழகாக எடுத்து இருக்கீறிர்! இறைவனது அருள் கிட்டட்டும்

  • @lakshur9335
    @lakshur9335 3 года назад +56

    நீங்கள் விநாயகர் சதுர்த்தி வழிபடும் முறை சொல்லுவதை கேட்க்கும் போதே விநாயக பெருமாளை வழிபட்ட அளவுக்கு மனதில் ஒரு சந்தோசம் கிடைக்கிறது அம்மா விநாயக பெருமானே போற்றி போற்றி 🙏🙏🌹

  • @umavenkateswari4891
    @umavenkateswari4891 3 года назад +42

    தமிழே உலகில் மிகஅழகு. அழகுக்கு அழகு உங்கள் தமிழ். 🙏🙏🙏 நன்றி நமஸ்காரம் அன்பு அம்மா ❤️ வாழ்க வளமுடன் நலமுடன் அன்பு சகோதரி 🙏🙏🙏🙏🙏

  • @kavithamukesh6294
    @kavithamukesh6294 3 года назад +11

    உங்கள் சிரித்த முகமும் , அழகிய தமிழும் மிக சிறப்பு அம்மா ❤️🙏

  • @vennilag368
    @vennilag368 3 года назад +30

    எங்கள் வழிகாட்டி குருவாகிய அம்மா அவர்களுக்கு வணக்கம் 🙏🙏🙏 மிகவும் நல்ல பதிவு. மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏

  • @subhashinisaravanan6012
    @subhashinisaravanan6012 3 года назад +13

    நன்றாக இருந்தது விநாயகர் வழிபாடு முறைகள் நாங்கள் அனைவரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் விநாயகர் அகவல் 👍🙏🙏🙏🙏

  • @buvi4227
    @buvi4227 3 года назад +5

    ரொம்ப நன்றி மா first time வீட்ல விநாயக சதுர்த்தி விரதம் இருந்து சாமி கும்புட போறேன் மா உங்க blessings வேணும் மா 🙏🙏

  • @madhialagank9615
    @madhialagank9615 3 года назад +2

    அம்மா உங்கள் பேச்சைக் கேட்டால்
    பக்தி அருவி போல் பெருக்கெடுத்து ஓடும்....
    கரையாத மனமும் கரையும்...
    வாழ்க உங்கள் பக்தி....

  • @padmavathya9413
    @padmavathya9413 3 года назад +4

    தெளிவான தமிழ், தூய்மையான உள்ளம், அனைவருக்கும் பல நல்ல செய்திகளை கூறுதல், உண்மையான அக்கறை, தெய்வ நம்பிக்கை ஆகியவையே உங்கள் பதிவின் சிறப்பு. வாழ்க வளமுடன். நன்றி, வணக்கம்.

  • @chennammalchenna4126
    @chennammalchenna4126 3 года назад +2

    அம்மா நீங்கள் சொல்லும் போதே மெய் சிலிர்க்க வைக்கிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selviranjith9165
    @selviranjith9165 3 года назад +14

    நீங்க சொன்ன வார்த்தைகள் உண்மை தான் போன வருடம் பிள்ளையார் அப்பாவ என் குழந்தையாக நீனைத்து அவருடைய சிலையை மடியில் வைத்து மெரினாவில் கொண்டு சென்று கடலில் கலந்து கொண்டாடிய பலன் இன்று மூன்றரை மாதங்கள் ஆகிறது என் குழந்தை குழந்தைக்கு அவன் மொனிஷ் இதை நான் எதற்காக இதில் பதிவு இடுகிறேன் என்றால் நான் ஒரு கிறிஸ்டின் ஒருவர் சொன்னார் நீ உண்மையாக அப்பாவிடம் வேண்டுதல் வை என்றார் என் நம்பிக்கை இன்று உங்களுக்கு முன் இந்த பதிவை வைக்கும் அளவுக்கு கொண்டுள்ளது நான் எதுவும் தப்பா பேசினால் என்னை மன்னிக்கவும் ஓம் கணபதி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @ayyanarsvm2993
    @ayyanarsvm2993 3 года назад +2

    🙏அம்மா அருமையான பதிவு ‌🙏‌விநாயகர் அகவல் இசையுடன் இறையருள் பெற ஆவலுடன்‌ இருக்கிறோம்.
    🙏 வீடுகள் தோறும் விநாயகர்
    🙏வினைதீர்க்கும் விநாயகர்
    🙏 வியாதிகளை நீக்கும் ‌; கொடிய கொரானா வை இவ்வுலகில் இல்லாமல் ‌இருக்க இந்த சதுர்த்தி விழாவில்
    வீடுகள் தோறும் விநாயகர் ஐ வழிபடுவோம் 🙏

  • @jayanthinis7593
    @jayanthinis7593 3 года назад +14

    அம்மா ஆயிரம்முறைகேட்டிருந்தாலும் தங்களின் விளக்கம் விநாயகரே மகிழ்வார்.

  • @sasikala9527
    @sasikala9527 3 года назад +5

    அருமையான பதிவு அம்மா , நீங்கள் போடும் பதிவுகள் அனைத்தும் மனதிற்கு மிகவும் நிறைவாக உள்ளது நன்றி அம்மா...

  • @ambikathiben652
    @ambikathiben652 3 года назад +13

    தமிழுக்கும் அதை இன்புற எடுத்துச் சொல்லி எங்கள் செவிக்கு விருந்து அளிக்கும் எங்கள் அன்னைக்கும் அன்பு வணக்கம்☺🙏

    • @Solgirenkelungal
      @Solgirenkelungal 3 года назад

      விநாயகர் சதுர்த்தி அன்று கேட்க வேண்டிய பிள்ளையார் பாடல்
      பிள்ளையாரின் சிறப்பு 108 போற்றி
      ruclips.net/video/hUZSUiv78PI/видео.html

  • @lathaguru4898
    @lathaguru4898 3 года назад +1

    உங்களின் பதில் எங்கள் வீட்டில் ஒரு உயிரை காக்கும் என்ற நம்பிக்கையில் உங்களுக்காக காத்திருக்கிறேன் அம்மா..,🙏

  • @kowsikam4490
    @kowsikam4490 3 года назад +3

    அம்மா உங்களின் வழிகாட்டுதல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏

  • @subhamadhan112
    @subhamadhan112 3 года назад +1

    Hi Ma’am,
    I am Subha, my native is Rajapalayam,now I live in Texas,USA.
    My dad was such a god faithful person,now he is not alive.All your explanations are like as if my dad taught me.
    I used to chant vinayagar agaval before I go to school when I was a kid.
    If I listen to your videos my mind is calm and happy.

  • @sridevisingaravelan9522
    @sridevisingaravelan9522 3 года назад +5

    உண்மைதான் மகளே இந்த சின்ன வயதில் இவ்வளவு அழகா ஆன்மிக சிந்தனை உள்ள உங்க முகம் நேரில் பார்க்க வேண்டும் பேச வேண்டும் மா

  • @KavithaKavitha-lu8ju
    @KavithaKavitha-lu8ju 3 года назад +2

    Kadavul nambikai iĺathavanga kuda ,
    Unga speech keata kandipa kadavul irukarunu nambuvanga amma.
    U R an Excellent women ma!
    Lots of Thanks for the wonderful speech ma!

  • @bhuvaneshwarinatarajan7848
    @bhuvaneshwarinatarajan7848 3 года назад +8

    பிள்ளையாரப்பா 🙏😇🙇🏻‍♀️🙇🏻‍♂️
    என்ன ஒரு அருமையான விளக்கவுரை அம்மா 🙏😇 நாங்கள் பெற்ற வரம் நீங்கள் 🙏

  • @lakshmin7045
    @lakshmin7045 3 года назад +2

    தெய்வத்திருமகள்.....அக்கா...நலமா.... விநாயகர்.....வழிப்பாடு பதிவு..... மிக...மிக....மிக......அற்புதம்...... நன்றி.....அக்கா.....

  • @gobinathan3742
    @gobinathan3742 3 года назад +5

    அருமையான பதிவு....வள்ளல் பெருமானின் பாடல் அற்புதம்...
    ஓம் விநாயகா போற்றி

  • @swethasri4067
    @swethasri4067 3 года назад +3

    மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏 என்னுடைய இஷ்டதெய்வம் அவர் தான் நன்றி

  • @shanmugavadivu9245
    @shanmugavadivu9245 3 года назад +226

    அம்மா, தயவு செய்து குழந்தை இல்லாதவர்கள என்று நீங்களும் சொல்லாதீர்கள்..... குழந்தை வேண்டும் என்று நினைப்பவர்கள் ,அது மாதிரி வார்த்தைகள் சொல்லுங்கள்.... இது என் நிலையில் உள்ள பலரின் தாழ்மையான வேண்டுகோள்....

    • @sisterssquad909
      @sisterssquad909 3 года назад +7

      Sashti viradham irunga

    • @shanmugavadivu9245
      @shanmugavadivu9245 3 года назад

      @@sisterssquad909 ok mam

    • @vijimilton6995
      @vijimilton6995 3 года назад

      Pls ithupanunga athu panunga solrathu easy anke poiyum kitamal irukum... pls dont give suggestion for people who dont have child ... leave them as it is ....

    • @sisterssquad909
      @sisterssquad909 3 года назад +3

      @@vijimilton6995 நம்பிக்கை இல்லை என்றால் எதுவும் நடக்காது..... கிடைக்கும் என்று நம்பி வழிபாடு செய்யுங்கள், நிச்சயம் கிடைக்கும்

    • @vijimilton6995
      @vijimilton6995 3 года назад

      @@sisterssquad909 ellorum nbikaiyodu than vanukuvar.... nan enna sollavaren na kuzhanthai ilathavaruku theriyum
      ..... nengal avarmel thininka vendam melum avarkali vethanai seiyavendam

  • @haappyhomedecors8716
    @haappyhomedecors8716 3 года назад

    அம்மா உங்கள் குரலும் , உங்கள் இறை வழிபாடு தகவல்களும் இருள் அகற்றும் ஒளியாக என் மனதிற்கு இதமாக இருக்கிறது 🙏🙏🙏❤

    • @jayapalanisamy9865
      @jayapalanisamy9865 3 года назад

      நீங்கபோட்டு கொண்டுள்ளருத்ராட்சமாலைஎனக்கும்கிடைக்க

  • @nexarowaterpurifiersystem3675
    @nexarowaterpurifiersystem3675 3 года назад +3

    Thank you Akka.After my father s death I am watching your channel for every pooja and festival.You are filling and clarifieing my dad s role

  • @legendkilleryt2557
    @legendkilleryt2557 3 года назад +1

    அம்மா நீங்க சொன்ன மாதிரி நான் என் வீட்டில் வழிபாடு செய்து இருக்கிறேன் நல்ல பலன் கிடைத்தது நன்றி

  • @vairamk1060
    @vairamk1060 3 года назад +7

    அம்மா நானும் என் கணவரும் பிரிந்து விட்டோம் நாங்கள் கூடிய விரைவில் ஒன்றுசேர பிரார்த்திக்கிறேன்

    • @senthilr5354
      @senthilr5354 3 года назад

      Aamaa kandipaa jeipinga ,all the best ,nambikaiaana nabargala vatchu unga kanavaridam ,pesi otrumaiaa irunga sister ,andha vaalkai dhaan nalathu , from mgr and Vijay baktharkal and agorigal 🏆

    • @abibharani
      @abibharani 3 года назад

      Varahi ammana kumpudungamma

    • @vairamk1060
      @vairamk1060 3 года назад

      @@senthilr5354 thanku.sir

  • @udhayanbalaiah9113
    @udhayanbalaiah9113 3 года назад

    அம்மா நன்றி வாரியார் சாமிகள் வாழ்ந்த காலத்தில்அவர்தம் சொற்பொழிவு கேட்டு வாழ்த்தோம் என பெருமை உள்ளது தங்களின் பதிவு, எமது ஊருக்கு அடியார்கள் வருகை புரிந்து கும்பாபபிஷேகம் செய்து வைத்து ஆன்மிக உரை ஆற்றியதை அடியேனும் கேட்டு மகிழ்ந்தேன் நன்றி தாயே தொடரட்டும் தங்கள் இறைபணி

  • @raavanan17
    @raavanan17 3 года назад +3

    தெளிவான பதிவு அனைவருக்கும் உதவும் பதிவு அருமை சகோதரி விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் சகோதரி அவர் அருள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டிகிறேன்🙏🙏🙏🙏🙏

  • @indianauthenticrecipes7532
    @indianauthenticrecipes7532 3 года назад +1

    அருமையான
    அழகான தெளிவான எல்லோருக்கும் புரியும்படியான பதிவு
    மிக்க நன்றி🙏

  • @padmavathidpadma7274
    @padmavathidpadma7274 3 года назад +3

    வணக்கம் அம்மா. இந்த அருமையான பதிவிற்கு நன்றி. இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் அம்மா. 🙏

  • @mahandra7291
    @mahandra7291 3 года назад +1

    💐எல்லா நல்ல நாட்களிலும் எளிமையான வழிபாட்டைத்தான் இறைவன் விரும்புவார் என்று எங்களுக்கு உற்சாகம் கொடுக்கும் சகோதரிக்கு மிக்க நன்றி உங்கள் ஆன்மீக தகவலுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன் 💐

  • @sathishsakthi9539
    @sathishsakthi9539 3 года назад +4

    Hi mam ungala parkkum pozhuthu oru santhosham varuthu unga Tamil super 👌👌👌👌mam

  • @sujasubha4528
    @sujasubha4528 3 года назад +1

    ரொம்ப நன்றி அம்மா🙏இந்த கொரணா காலத்துல எப்படி வணக்குறதுன்னு தெரியாம இருந்தம், எங்கலுக்கு உங்கள் பதிவு உதவிகரமாக இருந்தது👌👌💐💐💐

  • @Vaishu12891
    @Vaishu12891 3 года назад +32

    அம்மா சிவபுராணம் விளக்க உரை சொல்லுங்கள்...🙏🙏🙏🙏🙏 ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் .......... சிவபுராணம் தேனை உங்கள் பக்தியோடு கேட்டால் சிவமயம் அடைவோம்......😍😍 சிவபுராணத்திலயே பொருள் உணர்ந்து சொல்லுவார் என்று இருக்கிறது...... தாங்கள் விளக்க உரை கொடுத்தால் பொருள் உணர்ந்து சொல்லுவோம் அம்மா........

  • @vgpriya555
    @vgpriya555 3 года назад +5

    இந்த பதிவிற்காக காத்திருந்தேன் அம்மா 🙏🙏🙏🙏

  • @rathishark2101
    @rathishark2101 3 года назад +83

    பிள்ளையார் கதைகள், சிறப்புகளை ஒரு சொற்பொழிவு ஆ கொடுங்க அம்மா💐

    • @kovaihema8905
      @kovaihema8905 3 года назад

      Yes ma

    • @vijayalakshmin3961
      @vijayalakshmin3961 3 года назад

      Good morning super ma

    • @nagarani9596
      @nagarani9596 3 года назад

      Ulagathil mudalmuraiyaga arugampulluthan mulaithatham athanal vinayagarukku piriyamam

    • @harishruthi4583
      @harishruthi4583 3 года назад

      @@vijayalakshmin3961 😎😎1 நிமிஷம் பல விஷயங்கள் விநாயகர் சதுர்த்தி பற்றி ruclips.net/video/LMvbd7c9k6c/видео.html
      சப்போர்ட் subscribe

    • @kuppusamyn.p6161
      @kuppusamyn.p6161 3 года назад

      @@vijayalakshmin3961m

  • @anbarasun9492
    @anbarasun9492 3 года назад +5

    ஓம் ஸ்ரீ என் மஹா சக்தி கணபதி துணை ஓம்

  • @varagunasekaran7959
    @varagunasekaran7959 3 года назад +32

    குடிப்பழக்கத்தை நிறுத்த மருந்து ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் சொல்லுங்கள் அம்மா என்னைப்போன்ற பெண்களின் கஷ்டத்தைப் போக்கும் கள் தயவு செய்து இதற்கு ஒரு பதிவு தாருங்கள் சீக்கிரம் தாருங்கள் ப்ளீஸ் அம்மா

  • @sreejagopinathan5614
    @sreejagopinathan5614 3 года назад +1

    அழகாக விளக்கியுள்ளீர்கள் அம்மா நன்றி .. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @thanuthanu406
    @thanuthanu406 3 года назад +4

    மிகவும் உன்னதமான பதிவு அம்மா

  • @bamarengarajan428
    @bamarengarajan428 3 года назад +1

    ரொம்ப நன்றி..விநாயகர் சதுர்த்தி பற்றி விளக்கமாக விபரமாகசொல்லிட்டீங்க..நன்றி மிக்க நன்றி

    • @harishruthi4583
      @harishruthi4583 3 года назад +1

      😎😎1 நிமிஷம் பல விஷயங்கள் விநாயகர் சதுர்த்தி பற்றி ruclips.net/video/LMvbd7c9k6c/видео.html
      சப்போர்ட் subscribe

  • @smithasasi5593
    @smithasasi5593 3 года назад +3

    I am Sri Lankan supper amma I am u are fan Happy vinayagar chaturthi 🙏🙏🙏

  • @manimegalaithangaraj2905
    @manimegalaithangaraj2905 3 года назад +2

    ரொம்ப நன்றி எங்களது விநாயகர் சதுர்த்தி 🙏 வாழ்த்துக்கள் 🙏🙏

  • @lakshimathi1317
    @lakshimathi1317 3 года назад +47

    வணக்கம் அம்மா, அடகு வைத்த நகைகளை எவ்வளவு முயற்சி செய்தாலும் மீட்க முடியவில்லை அவைகளை மீட்க ஏதும் வழி சொல்லுங்கள் அம்மா

    • @suryadhanu6208
      @suryadhanu6208 3 года назад +1

      @jaya bala ethachum nalla work from home irunthal sollunga

    • @sriramminiworld
      @sriramminiworld 3 года назад +4

      Oru kannadi powl vanki kal uppu nirappi unka veetu பீரோ mela illaina பீரோ adila vachudinka manjal குங்குமம் athula konjam podunka... Every Friday mathitunka.. Manasa kadavul vendunka nampunka.... Kandipa unka nagai meendu varum.. Ethu enaku oruthanka sonnanka.. Seichen பலன் கிடைத்தdhu... Athukku panam venum thaan ilainu sollala... Paththa வருமானம் yepputi thirupurathu ninaipinka.... Ithoda பலன் kadavul athukana வழிய kaattuvar.. Enakum miracle thaan nadanthuchu... Nampi seinka

    • @m.pushpalatha5984
      @m.pushpalatha5984 3 года назад +2

      @@sriramminiworld nanum eppadi pannuvan ennoda Ella nagaikalaiyum one mnthla thiruppittan kadavul thinaiya erukkaru 🙏

    • @sriramminiworld
      @sriramminiworld 3 года назад +1

      @@ananthimadurai485 piro mela top la... இல்லை na bottom. Baby iruntha mela vainka.. Ilaina adila vainka.. Nan pooja room la vachen. Because en veedu la piroo illai..

    • @sriramminiworld
      @sriramminiworld 3 года назад +1

      @@m.pushpalatha5984 thanks for valuable reply mam.. Itha paththu 4 perkku nallathu nadakumla.. Nampuravankalukku

  • @நற்றிணை-ஞ8ள
    @நற்றிணை-ஞ8ள 3 года назад +3

    அம்மா தங்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்🌷🌸🌷

  • @INIYAN45
    @INIYAN45 3 года назад +11

    லட்சுமி கடாட்சம் நிறைந்த முகம்....உங்களின் முகம்

  • @சி.காஞ்சனா
    @சி.காஞ்சனா 3 года назад

    வாழ்க வளமுடன்..
    வாழ்க வையகம்..
    மிக்க நன்றி அம்மா..
    விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏🙏🙏

  • @poornivelu
    @poornivelu 3 года назад +10

    @13:31
    உங்கள் குரலில் உங்களுடன் சேர்ந்து படித்து கற்றுக்கொள்ள காத்திருக்கிறோம் சகோதரி 🙏

  • @lavanyaprabhu5067
    @lavanyaprabhu5067 3 года назад +1

    Or seithiyai Patri neengal solvathu azhahaha ullathu, athai keatpatharku viruppamahavum ullathu 😍 🙏🙏🙏🙏🙏🙏

  • @ramapriyapriya3037
    @ramapriyapriya3037 3 года назад +3

    நன்றி அம்மா. 🙏🙏🙏🙏🙏 விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் அம்மா.

  • @kamalasharan6188
    @kamalasharan6188 3 года назад +1

    Romba thanks mam ...neenga soldratha vachi thaan naa Ella poojavhum pandren...

  • @abineshwaranakchannelediti2588
    @abineshwaranakchannelediti2588 3 года назад +1

    அம்மா ஒரு பெரிய சந்தேகம் தீர்ந்தது விநாயகர் வாங்குனா எப்படி கரைக்கிறது தெரியாமல் இருந்தோம் வீட்டிலேயே கரைக்கலாம் என்று சொன்னதற்கு நன்றி ❤️❤️❤️❤️❤️💕❤️❤️

  • @kirthanaskumar8835
    @kirthanaskumar8835 3 года назад +6

    👌💐🙏 very authentic spirtual information, very grateful to you respected Madam, (if like this kind of spiritual rituals need to be taught to us @ the teenage level itself for a better blissfull society, hope thru Divine Power 🎊 blessings it happens by Divine speaker s like you All

  • @yogeshyogi-ml5jr
    @yogeshyogi-ml5jr 3 года назад +1

    நன்றிம்மா அருமையான தெய்வீக பதிவு உங்களுடைய தமிழ் உச்சரிப்பும் அருமை வாழ்த்துக்கள்

  • @saibalajicollections6637
    @saibalajicollections6637 3 года назад +5

    Neenga pesuratha kettale pillaiyar varam kodutha mathiri iruku madam🙏🙏🙏

  • @mahalakshmisekar3410
    @mahalakshmisekar3410 3 года назад +1

    அம்மா மிகவும் அருமையான பதிவு விநாயகர் சதுர்த்தி பதிவு சிறந்த முறையில் கொண்டாடி பயன்பெருவோம்

  • @jayshriraj1140
    @jayshriraj1140 3 года назад +3

    ஆஹா! அருமையான பாடல் விளக்கம் ❤️❤️

  • @arumugamr6086
    @arumugamr6086 3 года назад +2

    எதிர்பார்த்த வீடியோ அம்மா. நன்றி அம்மா 🙏🙏🙏🙏

  • @nithyadevi3644
    @nithyadevi3644 3 года назад +4

    அருமையான பதிவு அம்மா🙏 உங்களுக்கு நிகர் நீங்கள் ஒருவர் மட்டுமே 🙏🙏🙏🙏🙏

  • @gopalakrishnan3190
    @gopalakrishnan3190 3 года назад +1

    ஆவலுடன் எதிர்பார்த்து 🙏🙏🙏 கொண்டிருந்தேன் அம்மா நன்றி

  • @cutiepei2113
    @cutiepei2113 3 года назад +10

    வீட்டில் வைத்த மஞ்சள் பிள்ளையாரை சாமி கும்பிட்டதுக்கு அப்புறம் என்ன செய்யணும் அம்மா

    • @sisterssquad909
      @sisterssquad909 3 года назад +1

      Suthamaana neeril karaithu kaaal padaadha idathil oottrungal

    • @sarumathisarumathi853
      @sarumathisarumathi853 3 года назад

      வீட்டில் உள்ள பெண்கள் பூசி குளிக்கலாம்

  • @durkaskitchen9251
    @durkaskitchen9251 2 года назад

    வணக்கம் அம்மா உங்களது விநாயகர் சதுர்த்தி பற்றிய விளக்கம் மிக அற்புதம். மிக்க நன்றி .

  • @bnagajothi3857
    @bnagajothi3857 3 года назад +3

    அருமையான விளக்கம் அம்மா. நன்றி அம்மா. 🙏

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 года назад +1

    ஓம் வினை தீர்த்த விநாயக பெருமானே துணை 🙏🙏🙏🙏🙏🙏

  • @j.k.jegathishjegathish5982
    @j.k.jegathishjegathish5982 3 года назад +4

    அம்மா திருமணத்திற்கு தயாராகும் பெண்ணிற்க்கும் அவள் தாயாருக்கும் அறிவுரை தாருங்கள் அம்மா🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙏🏻🙏🏻🙏🏻

  • @shirisha1092
    @shirisha1092 3 года назад +2

    Intha vedio ku wait panitu iruntha Amma thank you..

  • @jeyachitra3669
    @jeyachitra3669 3 года назад +4

    மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏

  • @அம்மாவின்இளவரசி

    Tq so much Amma ungal aalosanai padi Krishna janthi clbrtn panna..... manasukku neraiva irunthathu Amma 🙏😊

  • @thi3871
    @thi3871 3 года назад +4

    நன்றி அம்மா

  • @m.vanithamanivanithamani373
    @m.vanithamanivanithamani373 3 года назад +1

    எளிமையான வழி சொன்னீங்க மிக்க நன்றி அம்மா

  • @prema8883
    @prema8883 3 года назад +3

    வணக்கம் சகோதரி.அருமையான பதிவு.மிக்க நன்றி 🙏🙏🙏

  • @RTKDHARUNSHANKAR
    @RTKDHARUNSHANKAR 3 года назад

    ரொம்ப நன்றிங்க அம்மா. இவ்வளவு ஒரு அருமையான விளக்கம்.

  • @alagumeena2656
    @alagumeena2656 3 года назад +5

    அம்மா எங்கள் வீட்டில் இருந்த பழைய சுவாமி படங்கள் எல்லாம் வெளிறிய நிலையில் உள்ளன. அதை என்ன செய்வது புது படங்கள் வாங்கி வைக்கலாமா ஆலோசனை கூறவும் நன்றி

  • @sangeetharaju1985
    @sangeetharaju1985 3 года назад +1

    அருமையான தெளிவான விளக்கம். 👏🏻👏🏻🙏🏻

  • @Divyashree251
    @Divyashree251 3 года назад +6

    பிள்ளையரப்பா எனக்கு ஓரு நல்ல வேலை கொடு ஓம் கனேசாய நம

  • @mrmuru605
    @mrmuru605 3 года назад

    Mika nandri Amma...
    I have shared with my ex-collage mates, family group and our temple members group. Very clear and easy to follow tips.

  • @rajalakshmis9766
    @rajalakshmis9766 3 года назад +3

    நீங்கள் பேசும் தமிழ் பஞ்சாமிர்தம் போல் சுவையாக உள்ளது தாயே

  • @anjumani7698
    @anjumani7698 3 года назад

    Lot of stress iruthen unga speech aptiye lessa akituchu manashu thank you ❤️

  • @nirmalravinirmalravi671
    @nirmalravinirmalravi671 3 года назад +3

    அம்மா மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @madhialagank9615
    @madhialagank9615 3 года назад

    விநாயகர் சதுர்த்தி பற்றிய தகவல்கள் அருமை அருமை அருமை மிக்க நன்றி அம்மா...

  • @devotionaluma8821
    @devotionaluma8821 3 года назад +1

    சிவாய நம 🙏... அம்மா தங்களை வணங்குகிறேன் 🙏.. நன்றி

  • @pappathib6749
    @pappathib6749 3 года назад +33

    அம்மா நாள் தோறும் விளக்கு ஏற்றி நெய் வேத்தியம்படைக்கின்றேன்நாங்கள்ஊருக்குஞசென்றால்என்னசெய்வது

    • @varahithayesaranam
      @varahithayesaranam 3 года назад

      Hi ma, pooja room le epovum chinna light potu veinga neenga ooruku pogum nerathula. Idhu naan seivadhu

    • @shalinipranavipaapu2712
      @shalinipranavipaapu2712 3 года назад +1

      Konjam arisi vellam edthu Sami Kita vachitu ponga pa enga Amma solli kudthathu

    • @selvakumar-uh4jo
      @selvakumar-uh4jo 3 года назад

      Amma Enga Appa irandu 3months thaan agudu v2la vinayagar chadhurthi Samy kumpidalama plz sollunga amma

  • @srisaimathythiruvarasan8480
    @srisaimathythiruvarasan8480 2 года назад

    வல்லளார்பாடல் பதவி விளக்கம்அருமை சகோதரி.அப்பத்தின்விளக்கமும்என்மனதைதொட்டது.உங்கள்தொண்டுவளரபிரார்த்திக்கிறேன்.

  • @maheswaran2161
    @maheswaran2161 3 года назад +6

    அம்மா வீட்டில் முன்னோர்கள் விளக்கை தெற்கு திசை நோக்கி ஏற்றலாமா?

  • @manikalai8924
    @manikalai8924 3 года назад +1

    தெளிவான பதிவு தந்தமைக்கு நன்றிமா 🙏🙏🙏

  • @brindadevi818
    @brindadevi818 3 года назад +3

    Happy vinayagar chathurthi amma

  • @jananibarbieshow373
    @jananibarbieshow373 3 года назад +1

    விநாயகர் சதுர்த்தி வீடியோ எனக்கு ரொம்ப பயனுள்ளதாக இருந்தது

  • @padmapriya3991
    @padmapriya3991 3 года назад +3

    Even I can recite vinayagar agaval, highly expecting from you.
    I'm praying Lord Siva with your voice of sivapuranam video.
    Please sing this time. 😊😍
    Awaiting for your singing.😍
    Thank you...

  • @rathika5363
    @rathika5363 3 года назад +2

    Aathma gnaana anbu tholiku iniya kalai vanakkam 🙏 amma ❤️ romba nandri 🙏 amma ❤️

  • @anands8400
    @anands8400 3 года назад +5

    Positive vibes sister 🙏.iam madurai sister

  • @kowsalyakowsi3608
    @kowsalyakowsi3608 3 года назад +2

    Nandri amma ungalukum vinayakar chadhurdhi valthukal amma 🙏🙏🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 3 года назад +9

    கோமதி சக்கரம் பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.

  • @malathimalu3863
    @malathimalu3863 3 года назад

    வணக்கம்🙏 அம்மா சிறப்பனா தகவல்.... நன்றி... மா எனக்கு மிகவும் பிடித்த கடவுள்.... விநாயகர்....

  • @INIYAN45
    @INIYAN45 3 года назад +4

    🙏🙏 அம்மா......
    உங்களைப் பார்த்தால் நல்ல பாஸிடிவ் vibration a இருக்கு

  • @p.sathyasathya1100
    @p.sathyasathya1100 3 года назад

    Rompa nandri payanulla thagaval Amma mikka nandri, theriyadhavai therindhukonden amma🙏🙏🙏🙏

  • @sakthiveetusamayal2969
    @sakthiveetusamayal2969 3 года назад +3

    விளக்கம் சூப்பர் மேடம் 🙏🙏🙏