THF: கொங்கற்புளியங்குளம் புராதனச் சின்னங்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2017
  • Recorded on: 18:12.2016
    Filmed and Released by: Dr.K.Subashini (Tamil Heritage Foundation)
    மண்ணின் குரல்: செப்டம்பர் 2017: கொங்கர்புளியங்குளம் தமிழி கல்வெட்டுக்களும் சமணர் சின்னங்களும் மாயன் வாழிபாடும்
    ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
    மதுரையின் திருமங்கலம் வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் கொங்கர்புளியங்குளம். தேனிக்குச் செல்லும் சாலையில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தை அடுத்து அமைந்துள்ளது இந்தச் சிற்றூர். மதுரையிலிருந்து ஏறக்குறைய 15 கி.மீ தூரத்தில் உள்ளது இவ்வூர்.
    நாகமலைத் தொடரின் பாறைப்பகுதிகளை இங்கு காணலாம். பாறை உடைப்புப் பணிகள் இங்கு நடக்கத்தொடங்கியமையால் முன்பகுதியில் உள்ள பாறைகள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டன. பின்னர் பொதுமக்களின் கோரிக்கையினால் அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இங்கு குவாரிப் பணிகள் நிறுத்தட்டன.
    பசுமை மாறாத வகையில் இப்பகுதி அமைந்திருக்கின்றது. இங்கு வாழும் மக்கள் சிறிய வகையில் பயிர் விவசாயம் செய்து வாழும் விவசாயிகள். நாகமலை பாறை பகுதிக்குச் செல்வதற்குக் கீழே நாட்டுப்புர வழிபாடு நடைபெறும் மாயன் கோயில் ஒன்று இங்குள்ளது. உருவங்கள் அற்ற வகையில் செங்குத்தான ஒரு கல்லினை மட்டுமே வைத்து வழிபடும் மரபு இங்குள்ளது. மிகப் பழமையான வழிபாட்டுக் கூறுகள் மாற்றமடையாத நிலையில் இன்றும் தொடர்வதாக இந்த வழிபடு தலம் அமைந்திருக்கின்றது.
    இக்கோயிலை அடுத்தாற்போல் மேல்பகுதியில் உள்ள நாகமலைத்தொடர் பாறைகளின் மேற்பகுதியில் 60க்கும் மேற்பட்ட சமண கற்படுக்கைகள் உள்ளன. அங்கு செல்வதற்குக் கீழ்ப்பகுதியிலிருந்து ஏற்படுத்தப்பட்டுள்ள படிகளில் ஏறிச்செல்லவேண்டும்.
    இங்கு அப்பாறையினைச் செதுக்கி வரிசை வரிசையாக படுக்கைகளை அமைத்திருக்கின்றனர். இது இயற்கையான குகைத்தளமாகும். இக்குகையின் முகப்புப் பகுதியில் காடி என அழைக்கப்படும் நீர்வடி விளிம்பு அமைக்கப்பட்டுள்ளது. அதன் மேர் சுவற்றுப் பகுதியில் பெரிய அளவில் செதுக்கப்பட்ட தமிழி (பிராமி) எழுத்துக்கள் கொண்ட வாசகங்கள் உள்ளன.
    முதல் கல்வெட்டின் பாடம்
    குறகொடு பிதவன் உபச அன் உபறுவ(ன்)
    இதன் பொருள், உபசன் ஆகிய உபறுவன் என்பவரால் இக்குகை கொடுக்கப்பட்டது. உபசன் என்பது சமய ஆசாரியன் என்னும் பொருள்படும். உபறுவன் என்பது ஆட்பெயர். குற என்னும் சொல் கூறை என்னும் பொருளில் இக்குகையைக் குறிப்பது. கொடுபிதவன் என்பதைக் க் கொடுப்பித்தவன் என்று கொள்ளல் வேண்டும்.
    2ம் கல்வெட்டு முதல் கல்வெட்டிலிருந்து இரண்டடி தூரத்தில் அதே பாறைப்பகுதியில் வெட்டப்பட்டுள்ளது. அதன் பாடம்
    குறு கொடல்கு ஈத்தவன் செற் அதன் ஒன்
    குறு என்பது கூரை என்றும், கொடல் என்பது கொடுத்தல் என்றும், குஈத்தவன் என்பதை குயித்தவன் எனக் கொண்டு குகையைச் செதுக்கியவன் எனப் பொருள் கொள்ளல் வேண்டும். இறுதியில் உள்ள இரண்டு குறியீடுகள் பொன் என்பதைக் குறிப்பன.
    மூன்றாவது கல்வெட்டுப் பாடம்
    பாகன் ஊர் பேராதன் பிடன் இத்தவேபொன்
    பாகனூரைச் சேர்ந்த பேராதன் பி(ட்)டன் கொடுத்த பொன் என்பது இதன் பொருள். வே பொன் என்பதை வெண்பொன் எனக் கொள்ளலாம். பாகனூர் என்பது இம்மலையின் பின்புறம் உள்ள நிலப்பகுதியாகும். பிடன் என்பது பிட்டன் என்னும் ஆள் பெயராகக் கொள்ளல் வேண்டும்.பாகனூரே இன்றைய சோழவந்தான் எனவும் கொள்ளலாம்.
    இக்கல்வெட்டுக்கள் மூன்றும் கி.மு.2ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.
    இக்கல்வெட்டின் மேற்குப் பகுதியில் பாறையின் மேல் சிறிய தீர்த்தங்கரர் திருமேனி செதுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் ஸ்ரீ அச்சணந்தி செயல் எனும் வட்டெழுத்துக் கல்வெட்டு உள்ளது. இது கி.பி. 9-10ம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
    கொங்கர்புளியங்குளம் இன்றைக்கு ஈராயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட காலகட்டத்தில் சமண முனிவர்கள் தங்கி வாழ்ந்து கல்விச்சாலைகளை அமைத்து சமண நெறி தழைக்கச்செய்த ஒரு முக்கிய இடமாகும். பக்திகாலத்தில் சமண சமய வீழ்ச்சிக்குப் பின்னர் மீண்டும் கி.பி.9ம் நூற்றாண்டு வாக்கில் அச்சணந்தி முனிவர் ஏற்படுத்திய சீரிய நடவடிக்கைகளினால் இப்பகுதியில் மீண்டும் சமணம் தழைத்தோங்கியது. அதன் சான்றாக இருப்பது தான் நாம் இன்று காணும் தீர்த்தங்கரர் சிற்பமும் அதன் கீழ் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டுகளுமாகும்.
    குறிப்பு- மாமதுரை, பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம்
    இப்பதிவினைச் செய்ய உதவிய முனைவர்.பசும்பொன் (மதுரைத் தமிழ்ச்சங்கம்), தொல்லியல் அறிஞர் முனைவர்.சாந்தலிங்கம் ஆகியோருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
    அன்புடன்
    முனைவர்.சுபாஷிணி
    [தமிழ் மரபு அறக்கட்டளை]

Комментарии • 16

  • @rangarajaryan
    @rangarajaryan 2 года назад

    Mam ..u r looking great 😀

  • @-tnnews
    @-tnnews 9 месяцев назад

    My native

  • @nammabhoominammasamy
    @nammabhoominammasamy 6 лет назад +2

    mam expecting your latest videos

  • @sureshm-me3fd
    @sureshm-me3fd 5 лет назад

    அருமையான

  • @luziolokesh5785
    @luziolokesh5785 5 лет назад

    arumai 👌

  • @k.narayanankannan9858
    @k.narayanankannan9858 6 лет назад

    அருமையான பதிவு

  • @user-gp4wm9zx2c
    @user-gp4wm9zx2c 6 лет назад +5

    சகோதாி தங்கள் முயற்சிக்கும் உழைப்பிற்கும் என் வாழ்துக்கள்.அனால் நீங்கள் சொல்வதில் சிறு பிழை உள்ளது கி.மு 2.அல்லது 3.ஆம் நூற்றாண்டுகளில் ஆசிவகம் என்ற மதம் அல்லது வாழ்வியல் நெறிமுறை மட்டுமே தமிழகத்தில் இருந்தது அந்த ஆசீவக மதம் அல்லது வாழ்வியல் நெறிமுறை இந்தியாவின் வடக்கு வரை சென்று சமனமாக பெளத்தமாக மீண்டும் தமிழகம் வந்தது அந்த கால கட்டமே 8,9 ம் நூற்றாண்டு சமனம் என்ற சொல்லே அமனம் என்ற சொல்லின் திரிபே எனவே தமிழகத்தில் ஆசீவகம் பற்றிய ஆய்வுகள் விாிவாக செய்யப்பட வேண்டும்.ஆசீவகத்திலிருந்துதான் எல்லா மதங்களும் உருவானது என்பது என் தாழ்மையான கருத்து நீங்கள் ஆசீவகத்திலிருந்து ஆய்வை துவங்கினால் சாியகப்புாிந்து கொள்ள முடியும் இல்லை என்றால் அது தலைகீழ் ஆய்வாக முடியும் என்பது என் தாழ்மையான கருத்து.
    எங்கள் கிராமத்திலும் முதுமக்கள் தாழி மற்றும் பெரும்பாறை வைத்து மூடப்பட்ட கல்திட்டைகள் பழங்கால பானயோடுகள் கிடைக்கின்றன தாங்கள் என்னை தொடா்பு கொள்ள வேன்டுகிறேன்Ph:7904548769 9940780790

    • @NRVAPPASAMY1
      @NRVAPPASAMY1 3 года назад

      Aaseevagam of Makkali Gosala and Jainism of Vardhman Mahavir started at the similar time - there are legends attached to it of how a chemist (Mahavir) preferred over a metallurgist (Gosala) because the smell of his perfume covered several miles when Mahavir walked around.
      All Sramana Movements (there are many) are contemporary. It was a fashion at that point time and creativity at the best.
      But at the period of Buddha, Mahavira and Gosala itself, atleast 6.
      In six who are contemporaneous:
      1.Buddha is a mystic who taught as void.(Buddhism)
      2.Mahavir is a mystic chemist who taught as restraint. (Jainism)
      3.Makkali Gosala is a mystic alchemist(metallurgist ) who taught as fatalism.(Ajivika)
      4.Purana Kassappa is an ascetic who taught as non action(Akiriyavada)
      5.Ajita Kesakamabali is an ascetic who advised as to live happily (Charvaka)
      6.Sanjaya Belathiputta taught as suspension of judgement (Ajnana)
      There is no evident that Jainism and Aaseevagam existed before Mahavir and Makkali. These claims are created later from their followers and they differed themselves creating several sects.
      There were several mystics (over 84 Maha Siddhas) in our holy land before and after Buddha, Mahavira, Gosalas, Kassappas, Ajita and Sanjayas. These mystics contributed much in philosophy, medicine, metullergy and performed miracles. In Tamil Country itself 18 mystics are found.

    • @ShitalkumarDagade
      @ShitalkumarDagade 3 года назад

      @@NRVAPPASAMY1
      Tirthankar Parshwnath 23rd was already accepted by all historian...

    • @NRVAPPASAMY1
      @NRVAPPASAMY1 3 года назад

      @@ShitalkumarDagade Yes. There were several mystics in our holy land before and after Mahavir. Nath Tradition claims atleast 84 in which Tamil region itself had 18.
      Ours is a holy land, there were no dearth of mystics- thats why all end with infinity, meaning Adi Nath.
      This traceability from 24 to 1 is created later by "baras" and various ""pants" and patronised by political resource support which themselves differed and fought.
      Its only my view.
      Michchamy Dukkadam.

  • @ramanathanramanathan1007
    @ramanathanramanathan1007 6 лет назад

    Super msg

  • @vimalkumarvajravelu1124
    @vimalkumarvajravelu1124 6 лет назад +3

    ஆசிவகம் பற்றி உங்கள் கருத்து?

    • @NRVAPPASAMY1
      @NRVAPPASAMY1 3 года назад

      Aaseevagam of Makkali Gosala and Jainism of Vardhman Mahavir started at the similar time - there are legends attached to it of how a chemist (Mahavir) preferred over a metallurgist (Gosala) because the smell of his perfume covered several miles when Mahavir walked around.
      All Sramana Movements (there are many) are contemporary. It was a fashion at that point time and creativity at the best.
      But at the period of Buddha, Mahavira and Gosala itself, atleast 6.
      In six who are contemporaneous:
      1.Buddha is a mystic who taught as void.(Buddhism)
      2.Mahavir is a mystic chemist who taught as restraint. (Jainism)
      3.Makkali Gosala is a mystic alchemist(metallurgist ) who taught as fatalism.(Ajivika)
      4.Purana Kassappa is an ascetic who taught as non action(Akiriyavada)
      5.Ajita Kesakamabali is an ascetic who advised as to live happily (Charvaka)
      6.Sanjaya Belathiputta taught as suspension of judgement (Ajnana)
      There is no evident that Jainism and Aaseevagam existed before Mahavir and Makkali. These claims are created later from their followers and they differed themselves creating several sects.
      There were several mystics (over 84 Maha Siddhas) in our holy land before and after Buddha, Mahavira, Gosalas, Kassappas, Ajita and Sanjayas. These mystics contributed much in philosophy, medicine, metullergy and performed miracles. In Tamil Country itself 18 mystics are found.