THF: வரலாற்று ஆய்வாளர் திவான்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2017
  • Recorded on: 26.12.2016
    Edited and released by: Dr.K.Subashini (Tamil Heritage Foundation)
    அறிஞர்கள் நம்முடன் வாழும் போதே அவர்களது ஆய்வுகளைப் பற்றி அறிந்து கொள்வதும், அவர்களது ஆய்வுப் பணிக்காக அவர்களைப் போற்றிச் சிறப்பிப்பதும் அவசியம். நம்மோடு வாழ்பவர்களில் தம் வாழ்நாட்களையே ஆய்வுப் பணிக்காக அர்ப்பணித்து வாழும் சிலர் இருக்கின்றனர். மிகக் கடுமையான ஆய்வு நெறிமுறைகளைப் பின்பற்றுவதும் களப்பணிகளை மேற்கொண்டு தகவல்களைச் சேகரித்து அவற்றை நூல்களாக வெளியிட்டு இத்தகையோர் தொடர்ந்து சமுதாயத்திற்கானப் பங்கினை மிகச் சீரிய வகையில் ஆற்றி வருகின்றனர். அத்தகையோரை அடையாளம் கண்டு போற்றும் பண்பு நம் சூழலில் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது.
    போலிகளைப் புகழும் கலாச்சாரம் தான் பெரும்பாலான தளங்களில் விரிவாக இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அத்தகைய நிகழ்வுகளுக்கு மத்தியில் தரமான ஆய்வுகளைத் தொடர்ச்சியாகச் செய்து கொண்டு வரும் நல்லறிஞர்களை இனம் கண்டு பாராட்டுவதைத் தமிழ் மரபு அறக்கட்டளை முக்கியக் கடமையாகக் கொண்டுள்ளது.
    இலக்கியமும் வரலாறும் தனது இரு கண்கள், என்கின்றார் தமிழகத்தின் நெல்லையைச் சேர்ந்த வரலாற்று ஆய்வறிஞர் திவான் அவர்கள்.
    தமிழ் நாட்டின் மிகச் சிறந்த வரலாற்று அறிஞர்களில் ஒருவர்...
    சுமார் 100 அறிய நூல்களுக்கும் மேல் எழுதியவர் ​
    இன்றும் தொடர்ந்து ஆவணச் சேகரிப்பில் ஈடுபட்டு களப்பணிகளின் வழி தகவல்களைச் சேகரித்து அவற்றை ஆய்வு செய்து வெளியிட்டு வருபவர்
    50,000க்கும் குறையாத நூல்களுடன் தன் இல்லத்தில் வாழ்பவர்
    அவரது பேட்டியைத் தாங்கிய விழியப் பதிவே இன்றைய தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடாக மலர்கின்றது.
    தனது முதல் நூலாகிய​ தென்காசி தந்த தவப்புலவர் என்ற நூல் தொடங்கி இவரது ஆய்வுகள் நூல்களாகப் பிரசவிக்கப்பட்டுக்கொண்டே உள்ளன.
    குறிப்பிட்டு சொல்வதற்குச் சில உதாரணங்களாக
    ஆஷ் கொலை வழக்கு
    மாலிக் கபூர் பற்றிய தகவல்
    ஆதிச்சநல்லூர் அகழாய்வுகள்
    கொற்கை துறைமுகம்
    இந்திய விடுதலைப் போரின் போது இஸ்லாமியர்களின் பங்கு
    ​மருதநாயகம்​ ஆய்வுகள்
    ..​களப்பணி அனுபவங்கள்
    ..ஆய்வு மாணவர்களளுக்கானக் குறிப்புக்கள்
    ..ஆவணப் பாதுகாப்பு பற்றிய தேவைகள்
    எனப் பல தகவல்களை இந்தப் பேட்டியில் பகிர்ந்து கொள்கின்றார்.
    ​அவர் வீட்டிலேயே இந்தப் பேட்டியின் பதிவு செய்யப்பட்டது
    விழியப் பதிவைக் காண: video-thf.blogspot.de/2017/09/...
    யூடியூபில் காண: • THF: வரலாற்று ஆய்வாளர்...
    இப்பதிவினைச் செய்ய உதவிய தமிழ் மரபு அறக்கட்டளை உறுப்பினர்கள் முனைவர்.சௌந்தர மகாதேவன், திரு.நாறும்பூ நாதன், சகோதரர் விஜய் (தீக்கதிர்) ஆகியோருக்கு எனது நன்றி.
    அன்புடன்
    முனைவர்.சுபாஷிணி
    [தமிழ் மரபு அறக்கட்டளை]

Комментарии • 21

  • @Premkumar-or8kk
    @Premkumar-or8kk 3 года назад

    உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.

  • @Mahatamil1974
    @Mahatamil1974 7 лет назад +14

    தமிழ் மரபு அறக்கட்டளைக்காக திருநெல்வேலியில் வாழும் மூத்த வரலாற்று ஆய்வாளர் திரு.திவான் அவர்களை நாங்கள் நேர்காணல் மேற்கொண்டோம். ஜெர்மனி தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் முனைவர் சுபாஷினி,எழுத்தாளர் திரு.நாறும்பூநாதன்,தீக்கதிர் செய்தியாளர் திரு.விஜயகுமார் ஆகியோர் பங்கேற்ற நேர்காணல் பதிவினை தமிழ் மரபு அறக்கட்டளை இணையத்தின் இதயத்தில் நிலைநிறுத்தியுள்ளது.

  • @jawaharlal1853
    @jawaharlal1853 5 лет назад +5

    சுபாசினி அக்கா உங்களைப் போன்ற தமிழ்த் தொண்டாளர்கள் நிறைய தேவை. மகிழ்ச்சி அக்கா சுபாசினி அவர்களே.

  • @marirajanrajan3531
    @marirajanrajan3531 7 лет назад +5

    அருமை.. மிக அருமை..
    சிறப்பானத் செய்திகளை அறிந்து கொண்டேன்.
    சில விடயங்ளுக்கு தெளிவும் கிடைத்தது..
    மிகவும் நன்றி..

  • @dassdass6736
    @dassdass6736 5 лет назад +1

    ஐயா உங்கள் உரையாடல் மிகவும் சிறப்பு.
    விசுவநாத புரம் ஊருகாரர் என்பது எங்களுக்கு பெருமை.
    நடந்து முடிந்த நிகழ்ச்சியை இறைவன் கூட மாற்ற முடியாது, ஆனால் போலி வரலாற்ற்று ஆசிரியர்கள் வரலாரை மாற்றி ஏழுதியதை தோல் உரித்து காட்டியதற்க்கு நன்றி.

  • @shannantha
    @shannantha 4 года назад

    அற்புதமான பேட்டி.. எவ்வளவு தகவல்கள்.. எவ்வளவு உழைப்பு.. மிக்க நன்றி அய்யா.. உங்களின் எல்லா புத்தகங்களும் படிக்க வேண்டும்.. நன்றி தமிழ் மரபு அறக்கட்டளை .. உங்களின் பணி மிகவும் பாராட்டுக்குரியது.

  • @ramakrishnangovindasamy2892
    @ramakrishnangovindasamy2892 5 лет назад +1

    Wow what a knowledge ? Amazing . salute Sir.

  • @saravananking1661
    @saravananking1661 4 года назад +1

    டாக்டர் சுபாஷினி அவர்களே நான் இந்திய கலாச்சாரத்தை பற்றி ஆய்வு செய்து கொண்டிருக்கின்றேன் இந்திய கலாச்சாரம் என்னும் ஆங்கில திரைப்படம் மிக விரைவில் தயாரிக்க உள்ளேன் இந்திய திரைப்படத்தினை உலகம் முழுவதும் திரையிடப்பட வேண்டும் இந்தியர்கள் அனைவரையும் ஒற்றுமை படுத்த வேண்டும்அதற்கு உங்களை உதவி தேவை

    • @siththartv232
      @siththartv232 4 года назад +1

      ஐயா எனக்கும் அந்த நோக்கம் இருக்கிறது

  • @Fnn895
    @Fnn895 5 лет назад

    Aariyar paathayil pasu vathai book was my eye opener...hatts off ...Diwan sir.❤❤💪💪💪

  • @thomasraj7205
    @thomasraj7205 2 года назад

    Can't hear clearly.

  • @annakale
    @annakale 4 года назад +1

    at 33.40 min, i lost it wen he told nabi broke chandran in to 2 pieces n stick it again. and neil armstrong saw that line.lol..

  • @ambikabathimuruganandam3877
    @ambikabathimuruganandam3877 3 года назад

    Audio poor quality

  • @srinivasakriskumar
    @srinivasakriskumar 3 года назад

    Olai thiridi

  • @siththartv232
    @siththartv232 4 года назад +2

    அக்கா உங்கள் தமிழ் மரபு அறக்கட்டளை எதைத்தமிழின் உச்ச மாககருதுகிறது
    மனித பிறப்பின் நோக்கம் எது

  • @nagalingam8059
    @nagalingam8059 4 года назад

    புத்தகம் எழுதுவதினால் எந்த முன்னேற்றமுமில்லை அது மூடநம்பிக்கையை அதிகப்படுத்துவதாகும்ஹஹஹஹஹஹிஹிஹிஹி

  • @nagalingam6581
    @nagalingam6581 4 года назад +1

    ஹிஹிஹிஹாஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹி

  • @ekh-a-live7433
    @ekh-a-live7433 4 года назад +1

    அருமையான பதிவு..
    நன்றி..
    ஆனால்
    மிக மிக மிக. மோசமான ஒலிப்பதிவு..
    இது போன்ற அரிய உரையாடல் கெடுத்துவிட்டீர்கள்..
    ஒலிப்பதிவுக்கும் முக்கியதுவம் கொடுங்கள்..
    மிக மிக வேதனை அளிக்கிறது...