ஓசூர் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமை கோலாகலம். பக்தர்கள் சுவாமி தரிசனம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 ноя 2024
  • ஓசூர் கோட்டை மாரியம்மன் கோவிலில் மூன்றாவது வாரமாக ஆடி வெள்ளிக்கிழமை கோலாகலம். பக்தர்கள் ஏராளமானவர்கள் சுவாமி தரிசனம்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோட்டை சுயம்பு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் மூன்றாவது வாரமாக ஆடி வெள்ளிக்கிழமை கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்து வழிபட்டனர்.
    ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கும் முருகனுக்கும் உகந்த மாதமாக இந்து சமய மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக நம்பிக்கையுடன் பக்தர்கள் சிறப்பு வழிபாடுகள் நடத்தி வருகின்றனர்.
    அந்த வகையில், ராம் நகரில் அமைந்துள்ள பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்ததும் பிரசித்தி பெற்றதுமான கோட்டை சுயம்பு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் மூன்றாவது வாரமாக ஆடி வெள்ளிக்கிழமை திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
    முன்னதாக மூலவர் அம்மனுக்கு அதிகாலையில் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு மலர் அலங்காரத்தில் அம்மன் காட்சி தந்தார். இதைத்தொடர்ந்து அம்மனுக்கு அர்ச்சனைகள் நடைபெற்றது.
    இதில் பெண்கள் அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் நெய் தீபமேற்றி வழிபட்டனர். ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    மேலும் திருக்கோவிலில் உள்ள நாக தேவதைகளுக்கு பால் அபிஷேகம் செய்து உப்பு மிளகு ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தினர்.
    பின்னர் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனைகள் செய்யப்பட்டதை தொடர்ந்து பக்தர்களுக்கு மஞ்சள் குங்குமம் எலுமிச்சம் பழம் மற்றும் பூஜை செய்யப்பட்ட மலர்கள் ஆகியன பிரசாதமாக வழங்கப்பட்டது.
    வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் இனிப்பான பாயசத்துடன் அன்னதானமும் வழங்கப்பட்டது.
    இந்த திருநாளில் ஓசூர் மட்டுமின்றி கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலத்தில் இருந்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசித்து வழிபட்டனர்.

Комментарии •