ஓசூர் கோட்டை சுயம்பு மாரியம்மன் திருக்கோயில் புனரமைப்பு பணிகள் துவக்கம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • ஓசூர் கோட்டை சுயம்பு மாரியம்மன் திருக்கோயில் புனரமைப்பு பணிகள் துவக்கம். கிருஷ்ணகிரி எம்பி, கோபிநாத் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் பங்கேற்று சிறப்பு பூஜை
    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகரில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்ததும் மிகவும் பிரசித்தி பெற்றதுமான அருள்மிகு கோட்டை ஸ்ரீ சுயம்பு மாரியம்மன் திருக்கோவிலில் நடைபெற உள்ள புனரமைப்பு பணிகளுக்கான சிறப்பு பூஜையில், கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் கே கோபிநாத் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் பங்கேற்று வழிபாடுகள் நடத்தினர்.
    பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மன்னர்களாலும், ஆங்கிலேய ஆட்சியாளர்களாலும் வணங்கி வழிபாடு செய்யப்பட்ட, சக்தி வாய்ந்த அருள்மிகு கோட்டை சுயம்பு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவர்களின் வசதியை கருத்தில் கொண்டு, பல்வேறு திருப்பணி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    அதன்படி, மிகவும் பழமை வாய்ந்த இந்த திருக்கோயிலில் மண்டபங்கள் மற்றும் உற்சவமூர்த்திகள் உள்ள பிரகாரங்கள் ஆகியவற்றின் மேற்கூரைகளில் விரிசல்கள் ஏற்பட்டதுடன் மழைக்காலங்களில் தண்ணீர் ஒழுகுவதால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.
    மேலும் அந்த காலகட்டங்களில் இருந்த மக்கள் தொகைக்கு ஏற்ப கோவிலில் பிரகாரமானது திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்டு இருந்தது.
    இந்த நிலையில் தற்போதைய பக்தர்களின் வருகை எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருப்பதால் திருக்கோவிலின் பிரகாரங்கள் மண்டபங்கள் ஆகிய பகுதிகளை விரிவாக்கம் செய்ய கோவில் நிர்வாகத்தின் சார்பில் முடிவு செய்யப்பட்டது.
    அந்த வகையில், ஆகம விதிகளின்படியும், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு உட்பட்டும் திருக்கோவிலில் புணர் அமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கான சிறப்பு பூஜை இன்று நடைபெற்றது.
    முன்னதாக கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் கே கோபிநாத், மற்றும் அவரது குடும்பத்தார், கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள், மூலவர் சுயம்பு ஸ்ரீ மாரியம்மனை தரிசித்து வழிபட்டனர்.
    இதைத்தொடர்ந்து புதிதாக மேற்கொள்ளப்படவிருக்கும் புனரமைப்பு பணிகளுக்கான திட்ட வரைபடங்கள் மற்றும் பிரதான கல் ஆகியவற்றை கொண்டு திருக்கோவிலில் விசேஷ பூஜைகள் நடைபெற்றன.
    இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு திருப்பணிகளுக்கான நன்கொடைகளையும் வழங்கி, திருப்பணிகள் தங்கு தடையின்றி எந்த இடையூறும் இல்லாமல், செவ்வனே நடைபெற, சுயம்பு ஸ்ரீ மாரியம்மன் அருள் வேண்டி, அனைவரும் அம்மனை தரிசித்து வழிபட்டனர்.

Комментарии •