ஸ்ரீ ஹனுமன் சாலீசா தமிழில் | Hanuman Chalisa | Tamil Devotional | Tulsidas | Jai Shri Ram

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 33

  • @purushothamanp8223
    @purushothamanp8223 6 месяцев назад +3

    ஸ்ரீகுரு பதங்களின் தூளிகையாலே என்மன மாசுகள் துடைத்தேனே !
    பயன்கள் நான்கையும் நமக்களிக்கும்... ஸ்ரீ..ராமனின் புகழ் பாட...
    வாயு மைந்தனேஉனை வேண்டினேன்..! வேறெதும் அறியா மூடன்நான் !
    பலமோடு ஞானம் தந்தருள்வாயே ! பவவினை தீர்த்தருள்வாயே !
    ஞானத்தின் கடலே ! ஹனுமனே போற்றி ! வானர தேவா ! உலகத்தின் ஒளியே ! (1)
    ராம தூதனே ! அதி பல சாலியே ! அஞ்சனை மைந்தனே ! வாயுவின் தனையா ! (2)
    மகாவீரனே! வஜ்ர தேகனே ! அல்லவை தீர்த்து நல்லதே சேர்ப்பாய் ! (3)
    பொன்நிற மேனியும் கண்களில் மின்ன... குண்டலம் ஆடிடும், சுருள் முடி அழகா...! (4)
    தோளில் முப்புரி நூல் படர்ந்தது ஓட... கொடியும், இடியும் உன் கரங்களில் ஏந்த... (5)
    சங்கரன் அம்சமே ! கேசரி மைந்தனே ! உன் தீர பராக்ரமம்... உலகே போற்றுமே ! (6)
    நற்குண சீலா ! பேரறிவாளா ! ராம சேவையே உன்நினைவாகும் ! (7)
    ராம சரிதமே கேட்டுநீ ரசிப்பாய் ! சீதா ராமனுன் நெஞ்சிலே வசிப்பார் ! (8)
    ராம லட்சுமண ஜானகி... ஜெயமே உனக்கு மாருதி !
    ராம லட்சுமண ஜானகி... ஜெயமே உனக்கு மாருதி !
    சிறிய உருவெடுத்து சீதைமுன் நின்றாய் ! விஸ்வ ரூபமாய் லங்கையை எரித்தாய் ! (9)
    பீம ரூபத்தில் அசுரரை அழித்தாய் ! ராமச்சந்திரனின் பணிகளை முடித்தாய்! (10)
    லட்சுமணன் உயிர்த்தெழ மலையினைக் கொணர்ந்தாய்! ஆனந்த ராமனும் உனை அணைத்தானே ! (11)
    ராமனே உந்தன் புகழுறைத் தானே ! பரதன் போல் நீயும் சோதரன் என்றே ! (12)
    ஆதி சேஷனும் உன்புகழ் சொல்வான் !
    என்று சொல்லியே ராமனும் தழுவ... (13)
    ப்ரம்மனும், தேவரும், சனகரும், முனிவரும் நாரதர், சரஸ்வதி, ஆதி சேஷனும்.. (14)
    எமன், குபேரன், திக்பா லகரும்.. உன்னருட் பெருமை சொல்லவே திகைத்தார் ! (15)
    தனது ராஜ்ஜியம் சுக்ரீவன் அடைய... ராமனைக் காட்டியே நீ அருள் செய்தாய் !(16)
    ராம லட்சுமண ஜானகி... ஜெயமே உனக்கு மாருதி !
    ராம லட்சுமண ஜானகி... ஜெயமே உனக்கு மாருதி !
    உன்னருளால் தான் வீடணன் கூட லங்கையின் மன்னன் ஆனதை அறிவோம் ! (17)
    பல மைல் தாண்டி கதிரவன் தன்னை பழமென விழுங்கிய பலவான் நீயே! (18)
    ராம முத்திரை மோதிரம் வாயில்.. தாங்கி சென்றாயே ! கடலினைத் தாண்டி...! (19)
    இயலாதெதுவும் உண்டோ உனக்கு? மலையும் கூட மடுவென ஆகும்..! (20)
    ராம ராஜ்யத்தின் காவலன் நீயே ! (உன்னருள் இன்றி...யாரங்கு வருவார்? (21)
    உன்பதம் சரணே என்போர்க் கின்பமே! உன்னருள் இருக்க பயமிலை என்றுமே ! (22)
    உன்பலம் அதுவே உனக்கே தெரியும் ! உலகம் மூன்றுமுன் பெருமையைப் போற்றும் ! (23)
    உன் திருநாமமே நாவினில் போதும்...! தீண்டக் கூடுமோ தீவினை ஏதும்...!(24)
    ராம லட்சுமண ஜானகி... ஜெயமே உனக்கு மாருதி!
    ராம லட்சுமண ஜானகி... ஜெயமே உனக்கு மாருதி!
    தினம் உன்நாமம் ஜபமென சொன்னால்... பிணிகள் நீங்குமே...வலிகளும் நீங்கும்... (25)
    மனம், மொழி, செயலால் உன் திரு நாமம்... த்யானம் செய்தால் துன்பமும் நீங்கும் ! (26)
    தவ வேந்தவனாம் ஸ்ரீரகு ராமன்...! அவன்பணி முடிக்கும் நீ அருட் சேவகன்...! (27)
    அடியவர்க் கருள் தரும் கற்பகம் நீயே !
    அடிபணிந்தே தொழும் அற்புதம் நீயே ! (28)
    நான்கு யுகங்களும் உன்புகழ் ஒலிக்கும் ! உலகம் முழுதுமே உன்புகழ் ஜொலிக்கும் ! (29)
    தேவர், முனிவரைக் காத்திடும் தேவா! அசுரரை அழித்திடும் ராமனின் தூதா ! (30)
    அஷ்ட சித்தி, நவ நிதியும் அருளே ! அன்னை ஜானகி அருளிய வரமே ! (31)
    நீயே ராம பக்தியின் சாரம் ! எப்போது மேநீ ராமனின் தாசன் !
    (32)
    ராம லட்சுமண ஜானகி... ஜெயமே உனக்கு மாருதி !
    ராம லட்சுமண ஜானகி... ஜெயமே உனக்கு மாருதி !
    உன்புகழ் பாடி ராமனை சேர்வோம் ! ஜென்ம ஜென்மத்து பாவங்கள் தீர்ப்போம் !
    (33)
    இறுதியில் அவனடி சேர்ந்திடும் போது ஹரி பக்தனிவன் எனும் பெயர் போதும் ! (34)
    உன்னை வேண்டினால் போதும் ஹனுமானே! ஏனைய தெய்வங்கள் மனம் மகிழ்வாகும் ! (35)
    உன் திரு நாமத்தை சொல்லிடுவோர்க்கு துன்பங்கள் விலகும் ஜெய ஹனுமானே ! (36)
    ஜெய்...ஜெய் .ஜெய் ஜெய் ஜெய ஹனுமானே!
    தயை புரிந்து உன் அருளொளி தாராய் ! (37)
    நூறு தடவை இதை படித்திடுவோர்க்கு வாட்டிடும் பந்தம் அறுபடும் ! நலம் மிகும் ! (38)
    பக்தியாய் இந்த ஹனுமன் சாலீசா படித்திடுவோர்கள் பரமனைச் சேர்வார் ! (39)
    துளசிதாசன் ஹரி சே வகனே ! நாதா ! எந்தன் இதயத்தில் உறைவாய்! (40)
    ராம லட்சுமண ஜானகி... ஜெயமே உனக்கு மாருதி!
    ராம லட்சுமண ஜானகி... ஜெயமே உனக்கு மாருதி!
    மாருதி! மாருதி!!!மாருதி!!!!

  • @Laksmanakumar-m7d
    @Laksmanakumar-m7d Месяц назад

    Jay Shri Ram❤

  • @pubglovers605
    @pubglovers605 10 месяцев назад +3

    ஆஞ்சநேயாய வித்மஹே
    வாயுபுத்ராய தீமஹி
    தன் நோ ஹனுமன் பிரசோதயாத்🙏🙏🙏

  • @ramak1872
    @ramak1872 10 месяцев назад +4

    அருமையான பதிவு. மனம் அனுமனிடமே சென்று விட்டது. நனறி ஐயா

  • @aarem2880
    @aarem2880 10 месяцев назад +2

    நான் இன்னும் கேட்க வில்லை.ஆனால் நன்றி கலந்த பாராட்டுக்கள் தெரிவிக்கின்றேன்....

  • @AnithaAnitha-j9i
    @AnithaAnitha-j9i Месяц назад +1

    Nanri aiya

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  Месяц назад

      மகிழ்ச்சி 🙏🏿 தொடர்ந்து ஆதரவு தரவும்

  • @AnuPriya-wu8dn
    @AnuPriya-wu8dn 7 месяцев назад +1

    Ram lakshman janaki 🙏sree rama thoothane maruti🙏🙏🙏🙏

  • @jayashreekrishnan8267
    @jayashreekrishnan8267 10 месяцев назад +1

    அருமை அழகான மொழி பெயர்ப்பு அழகிய இசை சேர்ப்பில்

  • @saradhaganapathi1845
    @saradhaganapathi1845 10 месяцев назад

    superb valthukkal jai Hanuman chalisa RamRam Ram ❤

  • @ramak1872
    @ramak1872 10 месяцев назад +2

    ஐயா பக்திக்கு முக்தி இந்த அனுமான் கவசம். தாங்கள் பாடல் வரிகள் பதிவிட்டிருந்தால் அனைவரும் படிப்போம். அந்த பண்ணியமும் தங்களை வந்தடையும்

  • @natarajans5512
    @natarajans5512 10 месяцев назад

    Jai Sri Ram 🙏🏼 Jai Sri Hanuman 🙏🏼

  • @lakshmisubramanian6609
    @lakshmisubramanian6609 10 месяцев назад +4

    அருமை அருமை அருமை ஐயா நான் பல வருடங்களுக்கு முன்னாடியே படித்திருக்கிறேன் ஆனால் பொருள் தெரியாமல் இன்று பொருள் உணர்ந்து கேட்கும் போது மனம் ஒருநிலை பட்டு ஆனந்தமாக இருக்கிறது கோடி நமஸ்காரம் ஐயா தங்கள் பணி மென்மேலும் தொடர இறைவனிடம் சமர்பிக்கின்றேன்

    • @_Yogi_Babu
      @_Yogi_Babu 10 месяцев назад

      அது சம்ஸ்கிருதம் அல்ல, ஹிந்தி

  • @VijayalakshmiRanganathan-f7n
    @VijayalakshmiRanganathan-f7n 10 месяцев назад

    Jai Shree Ram 🙏🙏🙏

  • @AnithaAnitha-j9i
    @AnithaAnitha-j9i 2 месяца назад +1

    Thanks

  • @AnithaAnitha-j9i
    @AnithaAnitha-j9i 12 дней назад

    Thanks 🙏🏻🙏🏻🙏🏻

  • @dr.v.subhadradevi3700
    @dr.v.subhadradevi3700 10 месяцев назад +2

    For years together reciting this mandra..without knowing the meaning..no words to thank u..be blessed forever🙏🙏🙏Jai Sri ram..

  • @saraswathykrishnamoorthy7734
    @saraswathykrishnamoorthy7734 10 месяцев назад

    Jai Hanumaan

  • @vasanthanatraj6830
    @vasanthanatraj6830 10 месяцев назад

    JAI SRI RAM

  • @leelas5431
    @leelas5431 10 месяцев назад +1

    Super. Thanks for the lyrics and song.

  • @manickavasagam7706
    @manickavasagam7706 10 месяцев назад

    🙏🙏🙏👌👌

  • @indrat6128
    @indrat6128 10 месяцев назад

    🙏🙏🙏

  • @anandalakshmik9132
    @anandalakshmik9132 10 месяцев назад +2

    பாடல் பத்தகம் கிடைக்குமா .

  • @AASUSID
    @AASUSID 10 месяцев назад

    🤗🤗🤗

  • @malathynatarajan5609
    @malathynatarajan5609 10 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺

  • @DeviS-f6r
    @DeviS-f6r 10 месяцев назад

    Kuralenimaiiya

  • @anirudhsdigitalworld4955
    @anirudhsdigitalworld4955 10 месяцев назад

    👍

  • @Vasanthiradhakrishna
    @Vasanthiradhakrishna 10 месяцев назад +1

    Arumai. Veru oru tamil mozhi payarphu padithu irukiren

  • @rameshr6847
    @rameshr6847 10 месяцев назад

    🎉🎉🎉