மூன்று சகோதரிகள் நடத்தும் குழம்புக்கு ஒரு கடை | Run by three Woman's | A shop for Curry in Madurai

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 апр 2021
  • மதுரையில் முற்றிலும் வித்தியாசமாக குழம்பிற்கு என்று ஒரு தனிக் கடையை மூன்று சகோதரிகள் இணைந்து கடந்த 10 வருடங்களாக பந்தடி 8வது தெருவில் நடத்தி வருகின்றனர். ஆச்சர்யமான விசயம் என்றபோதும், இதை மிகச் சாதாரணமாக இவர்கள் தினமும் செய்து வருகின்றனர்.
    ஒவ்வொரு நாளும் இரண்டு கூட்டு, ஒரு பொறியல், அப்பளம், சாம்பார், ரசம், மோர் குழம்பு, புளிக்குழம்பு ஆகியவை தேவைக்கு ஏற்ப ரூ.10 முதல் ரூ.20க்கு விற்பனை செய்து அசத்தி வருகின்றனர். இதில் வாரம் இரு நாட்கள் அசைவ குழம்பும் கிடைக்கும் என்பது கூடுதல் சுவாரஸ்யம். அதன் விலை தனி.
    குழம்பு மட்டுமின்றி அளவு மற்றும் முழு சாப்பாடும் இங்கு உண்டு. வீட்டுக்குள் எளிமையான முறையில் மிகவும் தரமாக, குழம்பு கொடுக்கும் இவர்களுக்கு பின்னால் இவர்களின் அம்மா உள்பட 5க்கும் மேற்பட்ட பெண்கள் சமையல் செய்து கொடுக்கின்றனர்.
    இங்கு அமர்ந்து சாப்பிடுவதற்கான வசதிகள் இல்லை. ஒன்லி பார்சல் மட்டுமே. இவர்களிடம் குழம்பு வாங்குவதற்கு என்றே மதுரையில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாடிக்கையாளர்கள் வருகின்றனர். கொஞ்ச நேரத்தில் நாங்களே அசந்துட்டோம். அதேபோல் சமைக்க இயலாத முதியர்களுக்கு இவர்களின் குழம்புதான் ஸ்பெசல்.
    மேலும் ஏழ்மையான குடும்பங்கள் மற்றும் தனியாக இருப்பவர்களுக்கு தயக்கமின்றி ரூ.10க்கும் குழம்பு, கூட்டு, பொறியல் வழங்குகின்றனர். இவர்களை பார்த்ததும் 10 ரூபாய் சாப்பாடு வழங்கிய ராமு தாத்தா அவர்கள்தான் சட்டனெ நினைவிற்கு வந்தார்.
    பெண்களால் எதையும் செய்ய முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கும் இந்த சகோதரிகளின் குழம்புக்கடை நடத்தி வருவதை பாராட்டாமல் எப்படி கடந்துவிட முடியும். நிச்சயமாக இவர்களுக்குப் பின்னால் இருக்கும் ஆண்களும் கைதட்டல்கள் உண்டு.
    தந்தையை இழந்து தவிக்கும் தங்களது குழந்தைகளின் வாழக்கை, இன்று பலரின் வயிற்றுப் பசிக்கு உதவும் நிலையில் மாறியிருப்பது நிச்சயம் இச்சகோதரிகளின் தாய்க்கு பெருமையாகத்தான் இருக்கும். நல்ல செயல்கள் விலை மதிப்பிட முடியாது ஒன்று என்பது உண்மை.
    பிறு என்ன எங்களுக்கும் குழம்பு பார்சல் கிடைத்தது. பணம் வாங்க மறுத்துவிட்டனர். சாம்பார் அவ்வளவு அருமையாக இருந்தது. குழம்பு மட்டுமின்றி சாம்பார் போன்ற சமையல் பொடிகளும் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. அதேபோல் அனைத்து விசேஷ நிகழ்வுகளுக்கும் ஆர்டரின் பேரில் சமைத்துக் கொடுக்கின்றனர்.
    எண்ணம் திண்ணமாக இருந்தால் எதையும் செய்ய முடியும் என்பது எடுத்துக்காட்டாக செயல்படும் இப்பெண்கள் இன்னும் உயர வேண்டும். இல்லாதோருக்கும் இன்முகத்துடன் உணவு வழங்க வேண்டும். என்ற வாழ்த்துகளுடன் நாங்களும் அங்கிருந்து விடைபெற்றோம்.
    ஸ்ரீ சக்ரா டிபன் சென்டர் & கேட்டரிங்
    தொலைபேசி எண்: 99445 52250.
    _________________________________________________________
    இதுபோல் உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:
    Hello Madurai M.Ramesh - 95 66 53 1237. (Whatsapp)
    _________________________________________________________
    மேலும் ​எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.
    💓 App Link: play.google.com/store/apps/de...
    💓 Facebook : / maduraivideo
    💓web site :www.hellomaduraitv.com
    💓web site :www.hellomadurai.in
    💓web site :www.tamilvivasayam.com
    💓 Telegrame Link: t.me/hellomadurai
    _________________________________________________________

Комментарии • 35

  • @ponnuchamynainar1689
    @ponnuchamynainar1689 4 дня назад +2

    இந்த மூன்று சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள்...

  • @ShanthiShanthi-yp7pu
    @ShanthiShanthi-yp7pu 2 дня назад

    Valthukkal.chennai la santhi akka kulambu kadai vachurukken

  • @MohankumarKumar-sy5xd
    @MohankumarKumar-sy5xd 15 дней назад +4

    Fantastic sisters!! Congratulations!!👉 Keep it up your service!+🙋🗣️

  • @ManiRamasamy57
    @ManiRamasamy57 5 дней назад +1

    Good joy deduct rate for elegible for people your rate compere Kurakafai Anna Bus stand high level

  • @anandhangeetha1298
    @anandhangeetha1298 7 месяцев назад +3

    வாழ்த்துக்கள் சகோதரிகளுக்கு

    • @hellomadurai
      @hellomadurai  6 месяцев назад +1

      மகிழ்ச்சி

  • @vijayalakshmiramachandran7252
    @vijayalakshmiramachandran7252 3 года назад +5

    வாழ்த்துக்கள்

  • @MuthukumarSamykkanu
    @MuthukumarSamykkanu 8 дней назад +1

    Good job 🎉❤🎉

  • @kamallict2286
    @kamallict2286 2 года назад +2

    Good service for society.

  • @Banumathy-l7g
    @Banumathy-l7g 3 дня назад

    Good.....

  • @pooarachanv276
    @pooarachanv276 2 года назад +2

    Nice sistar

  • @govindanraman6727
    @govindanraman6727 6 дней назад

    Congrats sisters

  • @todayvillagesamayal9935
    @todayvillagesamayal9935 Год назад +1

    Great good

  • @chinnakkammalr3617
    @chinnakkammalr3617 3 года назад +1

    👍🏻🙏

  • @jjk9701
    @jjk9701 3 года назад +1

    Congratulations Sisters.👍👍

  • @telungarvaran
    @telungarvaran 3 года назад +36

    23.6.21 மதியம் விளம்பரத்த பாத்து மதியம் சாம்பார் வாங்கினேன் மொதநாள் சாம்பார்போல கெட்டுப்போனத கொடுக்குராங்க

    • @user-pl7ly9qd4c
      @user-pl7ly9qd4c 9 дней назад +4

      என்ன நம்ம மதுரை யை இப்பிடி க் கேவல ப் படுத்தி ட் ttaan க

    • @Arivu845
      @Arivu845 6 дней назад

      சாம்பார் ரொம்ப நேரம் வைக்க முடியாது...

  • @murugansundaram672
    @murugansundaram672 2 года назад +6

    ஒரு நபர்க்கு சாதம் ரூ 100/- என்றால் மிக அதிகம். கூட்டம் எங்கே இருக்கிறது. இவங்க குரூப் தான் இருக்கு.

  • @ramzans8466
    @ramzans8466 Год назад +2

    அம்மா உணவகத்தில் சாம்பார் சாதம் ஐந்து ரூபாய் தான்

  • @Damo19691
    @Damo19691 3 года назад +7

    Meals 100 ஆ over cast , hotel, மெஸ் இல் unlimited meals 70- 80 கிடைக்கிறது

  • @kg4853
    @kg4853 9 дней назад +1

    விலை அதிகமாக தெரிகிறது. மூன்று பொரியல் 3 x 20
    குழம்பு 3 X 10
    இது மாதிரி இருந்தா ?? சாப்பாடே ரூ 80/-க்கு கிடைக்கும். இது அதிகம் தான்.

  • @chellaiah203
    @chellaiah203 5 дней назад

    விலை ஓவரோ ஓவர் சமீவ்..

  • @muthukrishnan1277
    @muthukrishnan1277 6 дней назад

    அளவு ரொம்ப கம்மியாக ( குறைவாக) உள்ளது.

  • @sathiamoorthyrajagopalan8227
    @sathiamoorthyrajagopalan8227 4 месяца назад

    பந்தடியில சௌராஷ்ட்ரா அல்லாத ஒரு பெண்கள் குழுவா?!ஆச்சரியம் தான்

    • @karthika5284
      @karthika5284 3 дня назад

      அவர்கள் சௌராட்டிராகாரர்களாம்.

  • @johnvictor1877
    @johnvictor1877 2 года назад +1

    எதற்கு உயர் திரு?

  • @shajiniahmed262
    @shajiniahmed262 13 дней назад +1

    கொரோனா நேரத்தில் எடுத்தது போல் உள்ளது..

  • @UshaKR-fd5wf
    @UshaKR-fd5wf 2 месяца назад +2

    Over ajnamoto

  • @abdulabdulrahman8842
    @abdulabdulrahman8842 Год назад +3

    ஓவர் பில்ட் அப் இல்லாமல், பாத்திங்கன்ன என்ற வார்த்தை பல முறை கூறாமல் சுருக்கமாக பேசினால் பதிவு சிறப்பாக இருக்கும்

  • @Banumathy-l7g
    @Banumathy-l7g 3 дня назад

    No...

  • @rajendransachidanandam1997
    @rajendransachidanandam1997 5 месяцев назад

    Rates are too high

  • @muthukrishnanp5481
    @muthukrishnanp5481 Месяц назад +1

    கொள்ளயோ கொள்ளை