மருந்தீஸ்வரர் திருக்கோவில், திருவிடையாறு | T.Edayar | marundeeswarar temple | devara temple

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • திருச்சிற்றம்பலம்
    thiruvidaiyaru siva temple
    இறைவன் பெயர் மருந்தீஸ்வரர், இடையாற்றுநாதர், இடையாற்றீஸ்வரர், கிருபாபுரீஸ்வரர்
    இறைவி பெயர் சிற்றிடைநாயகி
    பதிகம் சுந்தரர் - 1
    எப்படிப் போவது திருக்கோயிலூரிலிருந்து திருவெண்ணெய்நல்லூர் வழியாக அரசூர் செல்லும் பாதையில் (SH68) சித்தலிங்க மடத்தையடுத்து இடையாறு உள்ளது. கோயில் சாலையோரத்தில் உள்ளது. மற்றொரு சிவஸ்தலமான திருவெண்ணைநல்லூர் இங்கிருந்து தென்கிழக்கே 5 கி.மீ. தொலைவில் அரசூர் செல்லும் பாதையில் உள்ளது.
    விழுப்பரத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை செல்லும் தேசீய நெடுஞ்சாலையில் (NH 45) அரசூரை அடைந்து அங்கிருந்து வலதுபுறம் மாநில நெடுஞ்சாலை SH68ல் சென்றும் திருவெண்ணைநல்லூர் வழியாக திருவிடையாறு தலத்தை அடையலாம்.
    இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். ( கோயிலை ஒட்டியே அர்ச்சக்ர் வீடு உள்ளது)
    Temple map - maps.app.goo.g...
    கோயிலில் கிடைத்த கல்வெட்டில் இவ்விறைவன் 'மருதந்துறை உடைய நாயனார் ' என்று குறிக்கப்படுகின்றார்.இங்குள்ள முருகனின் (சண்முகர்) பெயரினை 'கலியுகராமப் பிள்ளையார் ' என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது
    இவ்வூர், இராஜராஜவளநாட்டு, திருமுனைப்பாடி இடையாற்று நாட்டு இடையாறு என்று குறிக்கப்பட்டுள்ளது.ஒரிசாதேசத்து கஜபதி மன்னனது படையெடுப்பால், திருமருதந்துறை உடையார்கோயில் அழிக்கப்பட்டு, பத்து ஆண்டுகள் பாலைவனம்போல் கிடந்தது. சாளுவநரசிம்மதேவனின் பிரதிநிதி ஒருவர் இக்கோயிலைக்கட்டி அதற்கு வழிபாட்டிற்கு ஜோடி, சூல வரிகளைக் கொடுத்துள்ளனர். இந்நிகழ்ச்சி இம்மன்னனது சகம் 1393 அதாவது கி.பி.1471 இல் ஏற்பட்ட கல்வெட்டால் அறியக் கிடக்கின்றது. எனவே கஜபதி மன்னரது படையெடுப்பு சகம் 1383 அதாவது கி.பி.1461 இல் ஏற்பட்டிருக்கவேண்டும்.இதற்கு முன்னரே திருமருதந்துறை உடையார் கோயில் நான்கு ஆண்டுகள் பூசனையின்றிக் கிடந்தது
    இதுவரை நான் கண்ட திருத்தலங்களின் சிறப்புகள்,
    மகான்கள் மற்றும் இறையடியார்களின் பெருமைகள்,
    இறைப்புராணங்களுடன் திருமுறைகள், திருப்புகழ் மற்றும் பல ஆன்மிக நூல்களிலிருந்தும் இறையருளால் யாமறிந்ததை, யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எனும் வாக்கிற்கிணங்க உங்களுடன் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன்.
    அத்துடன் ஆன்மிகம் தொடர்பான உங்களது சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கும் இயன்ற அளவு இறையருளால் விடையளிக்க இருக்கிறேன்.
    உங்கள் கேள்விகளை கீழே தந்துள்ள எனது வாட்சப் எண்ணிலோ அல்லது வீடியோவின் கமெண்ட்டிலோ கேட்கலாம்.
    அன்புடன்
    சிவ.ஜவஹர்
    ☎️ 9551623296
    #சிவ_ஜவஹர்
    #Siva_Jawahar
    இறையடியார்கள் தங்களின் மேலான ஆலோசனைகளை வழங்கி இச்சேனலை ஆதரிக்கவேண்டுகிறேன்.

Комментарии • 4

  • @narayanamoorthyr1656
    @narayanamoorthyr1656 7 месяцев назад +1

    🕉🕉🕉🕉🕉 thiruchitrambalam🚩🚩🚩🌹🙏🏻

    • @ellamsivanarul
      @ellamsivanarul  7 месяцев назад

      திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏💐💐

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 7 месяцев назад +2

    🙏📿🌹பொன்னம்பலம்🔱🌷சிவாய நம🙏❤❤❤❤❤❤

    • @ellamsivanarul
      @ellamsivanarul  7 месяцев назад +1

      திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
      சிவாயநம 💐💐💐