படையிருந்தும் பயந்த சனம்.....எத்தனை வலி,எத்தனை ஏக்கம்,எத்தனை ஆழம், எத்தனை அடக்குமுறை, எத்தனை வரலாறு எல்லாத்தையும் ஒத்த வரில முடிச்சிட்டாப்ல.....யுகபாரதி யுகத்தின் கவிஞன்❤
From singing Ettanaa Irundha in Ilaiyaraaja's music back in 1995 to singing RaasaKannu in ARRahman's music now, just the journey of Vadivelu the singer alone has been a phenomenal one. What a discography!❤❤
இந்த பாடலின் வரிகளில் உள்ள வலியை புரிந்து கொள்ள எந்த சமுதாயத்தையும் சார்ந்து இருக்க வேண்டியதில்லை மனிதனாக இருந்தால் புரியும். நன்றி ஏ.ஆர் ரகுமான் அண்ணா❤🎉
இந்த பாடலை கேட்கும் போது.. எங்கோ ஒரு மூலையில்.. ஒரு கூட்டம்.. காற்று இல்லாமல்..மூச்சு விட முடியாமல்.. தவிப்பது போல்.. சொல்ல முடியவில்லை.. அவர்கள் வாழ்விலும் ஒரு நாள் தென்றல் வீசும்.. அருமையான பாடல்.. செதுக்கிய சிற்பி ARகும், உயிர் கொடுத்த வடிவேலுகும்.. பல கோடி நன்றி..
இந்தப் பாடல் தேசிய அளவில் வெற்றி பெற்று சிறந்த பாடல் சிறந்த படம் என்று பெருமையோடு வெற்றி பெற்று பல பரிசுகளை வெல்லும் சிறந்த படமாக தேர்வு செய்யப்படும் ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை சொல்லும் பாடல் பாடலைக் கேட்கும் பொழுது இதயத்திற்குள் ஒரு வலி எங்கோ ஒரு மூலையில் ஒடுக்கப்பட்ட மக்களின் மூச்சுக்குழல் இறுக்கப்பட்டுள்ளது.
பாடும்போதே பாடலின் வலியை உணர்ந்து பாடும் வடிவேலுவின் முக பாவனையும், மனதை மயக்கும் குரலும் அதற்கு ஏற்ற இசையும் மீண்டும் மீண்டும் கேட்டு சோக மனநிலைக்கு போகவே இதயம் துடிக்கிறது 🙏🏻
வாழ்க்கையின் பல வலிகளை கடந்துவந்தவர்களால் மட்டுமே இப்படிபட்ட வார்த்தைகளை எழுதமுடியும் பாடமுடியும் இசை வடிவம் கொடுக்கமுடியும். வாழ்த்துகள் மாரிசெல்வராஜ்.
ஒடுக்கப்பட்டவர்களின் வலியை வார்த்தையாக வடிவேல் குரலில் கேக்கும் போது மனதில் என்னமோ செய்கிறது அந்த இனம் முன்னேற வேண்டும் ❤A R ரகுமான் மியூசிக் அந்த உணர்வை உணர செய்கிறது அருமை ♥️
@@chandru2kc இது என்ன ஒரு புரிதல் என தெரியல..?? இங்க சமத்துவத்தை எடுத்துரைக்கும் கருத்தை படங்கள் (medium) மூலமா சொல்றாங்க. நீங்க மறுபடியும் startup ஆரம்பி, மேலும் ஒரு கூட்டத்தை நவீன வழியில் உருவாக்கு என சொல்றீங்க.. இது மறுபடியும் அதே இடதுக்குதான் போகும். கூட்டமா இரு கூட்டமாவே ஒதுக்கி அடிக்கிறோம் என்பதுதான் இதன் அர்த்தம்.
பட்ட காயம் எத்தனையோ அதை சொல்லிபுட்டா ஆறிடுமோ....கோணிக்குள்ளே சுருண்ட சனம்.படையிருந்தும் பயந்த சனம்.......வலிமிகுந்த வரிகள்.யுகபாரதி அண்ணாவால் மட்டுமே இப்படி எழுத முடியும்..... நன்றி அண்ணா
வலி நிறைந்த வரிகள்: குச்சிக்குள்ள கிடந்த ஜனம். கோனிசாக்குள்ள சுருண்ட ஜனம்.பஞ்சம் பசிபார்த்த ஜனம் .படை இருந்தும் பயந்த ஜனம். பட்ட காயம் எத்தனையோ ராசா அத சொல்லிப்புட்டா ஆரிருமோ ராசா.அருமை படைப்பு ....
@vimala கற்றுக்கொள்வது தவறன்று. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண்ணில் முடிந்தவரை தமிழில் பேசுவோம். தமிழை நாம் வளர்த்தால் தமிழ் நம்மை காக்கும் "ழ" சொல்லிப்பாருங்கள் நாவடியில் உமிழ் நீர் சுரக்கும்.
எத்தனை முறை கேட்டாலும் .. கண்ணில் ஈரம் வரவழைக்கும் வரிகள் .... சாதி என்ற சாக்கடையை சட்டை போல் அணியும் மக்கள் எண்ணங்கள் அழியும் வரை தொடரட்டும் மனித பயணம்
ஆதிக்கத்தின் பிடியில் பிணைக்கப்பட்டிருந்த ஒரு சமூகத்தின் அடிமை வலியை எவ்வளவு அற்புதமாக வரிகளாலும் உணர்வு மேலோங்கும் கண்ணீரை சுரக்க வைக்கும் இசையோடு கூடிய வடிவேல் சாரின் குரலும் வெளிப்படுத்துகிறது.. ஒட்டுமொத்த குழுவிற்கும் வாழ்த்துகள் ஆயிரம் 🙏🌹
பஞ்சம்,பசி,பாத்த சனம், படை,இருந்தும்,பயந்த,சனம். என்ன ஒரு அருமையான வரிகள்.சூப்பர்.பாடலாசிரியர்,திரு.யுக பாரதி,நவீன யுகத்தின் பாரதி, நன்றி, ஸார் பாராட்டுக்கள்,பட குழுவில் உள்ள அனைவருக்கும். படம் பெரும் வெற்றி,பெற வாழ்த்துக்கள்.
ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகளை தன் மனத்திலும் ஒலிக்க செய்ததது மிக அருமை. யுகங்கள் கடந்தும் கேட்க தூண்டும் யுகபாரதியின் வலி மிகுந்த வரிகள். சொல்ல வார்த்தைகள் இல்லை. வரிகளின் உயிர்ப்பு மாறாமல் அனுபவித்தே பாடியுள்ளார் அண்ணன் வடிவேலு .❤ இசை நரம்புகளில் கிளர்ச்சியை தூண்டுகிறது
@@sivaagache2254 neenga USA la poyitu irukara CISCO matter kelvi padalayo; Caste discrimination in US, nalla padichi PhD vangunaalum caste pera solli asinga paduthirukaanga. Ippo padicitta, caste certificate ah kilichitta, schoola la caste podama serthu vitta, caste alinjiduma.
ரஹ்மானின் இசைப் பயணத்தில் இந்தப் பாடல் ஒரு மைல்கல்.அற்புதமான பிஜிஎம்.👏ஆத்மார்த்தமான மெல்லிசை👌இந்த பாடலை கேட்கும் போது இளையராஜா பாடலை கேட்பது போல் உணர்கிறேன்😊
எத்தனை தடவை கேட்டாலும் மீண்டும் கேட்க இழுக்குது 🥺❤️ என்ன குரல் டா ப்பா.....🔥🔥🔥🔥 ரகுமான் சார் தலைவர் குரலை வைத்து நடத்திய யுத்தம் 🔥❤️🥺 மாரி செல்வராஜ் அண்ணா படம் கண்டிப்பாக வெற்றி 🔥❤️
ஆயிரம் வலிகளை உள்ளடக்கிய வடிவேலுவின் குரல்... யுகத்தையே திரும்பி பார்க்க வைத்த யுகபாரதியின் வரிகள்... மக்களின் மனதில் ரணங்களை உண்டாக்கிய ரகுமானின் இசை... #மாமன்னன்_ராசாகண்ணு....
இன்னொன்று மறந்துவிட்டேன். அருமையான பாடல் வரிகளுக்கு உயிர் கொடுத்த இசை, அதை நெஞ்சை பிழியும் குரலால் வெளிப்படுத்தி வெற்றி கண்ட தம்பி வடிவேலு!!!! வாழ்த்துக்கள் எல்லா புகழையும் இறைவனுக்கு அர்ப்பனிக்கும் தம்பி ராகுமானுக்கு... 👌👌👏👏💐💐
தவறுகள் உங்கள் அனுபவத்தை அதிகரிக்கிறது, மற்றும் அனுபவங்கள் உங்கள் தவறுகளை குறைக்கிறது. உங்கள் தவறுகளை நீங்கள் கற்றுக்கொண்டால், மற்றவர்கள் உங்கள் வெற்றியைக் கற்றுக்கொள்கிறார்கள்
ஐயா வடிவேலு அவர்களின் குரல் இந்த பாட்டிற்கு மிகச்சிறந்த வலிமையை கொடுத்து விட்டது..அவரை தவிர இந்த பாடலுக்கு வேறு யாருடைய குரலும் பொருத்தமல்ல என்றால் அது மிகையாகாது.. கவிஞர் யுகபாரதி அவர்கள் வரிகள் மிக வலிமையாக உள்ளது.. காலும் அழியும் வரை இப்பாடல் நிலைத்து நிற்கும்.....❤❤❤❤❤
புயலின் இசையில் மற்றொரு புயலின் குரலில் நம் செவிகளை மோதி தழுவ திரண்ட மேகங்களான வரிகள்.... நம் கண்களில் மழை நீராய் பொழிந்து...நம் இதயம் எனும் நீரூற்றை நிரப்பியது.... அற்புதம்...வாழ்த்துக்கள்...❤️🫶
வடிவேலு அவர்கள் பாடும் போது நம் கண்களிலும் கண்ணீர் வழிகிறது அருமையாக பாடியுள்ளார்.. AR ரஹ்மான் அவர்களின் இசையும்.. யுகபாரதி அவர்களின் பாடல் வரிகளும் அற்புதம்.. அண்ணன் மாரிசெல்வராஜ் சிறந்த படைப்பாளி என்பதை நிரூபித்து கொண்டே இருக்கிறார்.. ❤️
AR Rahman இசையில் வடிவேல்..... Headsetல கேட்கும் போது நிச்சயமாக கண்ணீர் வருகிறது..... வடிவேலின் பாடும் திறனை அற்புதமாக பயன்படுத்தி இருக்கிறார் ரஹ்மான்...👍👍👍
வலி கலந்த வரிகள்....வடிவேலுவின் குரலில்...👍🏻❤️கேட்கும்போதே மனம் வலிக்கிறது..😔 ஈழத்து சொந்தங்களும் ஒருநாள் இப்படித்தான் இருந்தார்கள்...வலியை அனுபவித்து கொண்டு... இதை ஒருபோதும் மறவாதீர்கள்..😢
மிக மிக அற்புதமான கேட்கக் கேட்கத் திகட்டாத மனதை நெகிழவைக்கும் பாடல்! திரு. ஏ. ஆர். ரஹ்மான் அவர்களுக்கும், பாடல் பாடிய திரு. வடிவேல் அவர்களுக்கும் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்! ❤❤❤
Visuals paaaka vekka avasiyam vekkala,oru AR Rahman die hard kanni naan,ennayavey andha aala marakka vechu,Voice layea thonda thukkathula adaikra alavukku vechitiyea neeyyy. Personal life aside, As a Cinema artist , Vadivel is a GOAT in almost every aspect he attempted. You are marking a strong legacy man and I'll be proud to tell our next generation that I witnessed all these as it was happening. #Treasure
1995ல் இளையராஜாவின் இசையில் எட்டணா இருந்தா பாடியதில் இருந்து இப்போது ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ராசகண்ணு பாடுவது வரை, பாடகரான வடிவேலுவின் தனிப் பயணம் ஒரு தனிப் பயணம். என்ன ஒரு ஆழ்ந்த பாடல் , மனதை உருக வைக்கும் வரிகள்😢🥰
@@rifdhirifd5400 What is your point? Do you say that the attacks are not happening and people are not dying? Or are you claiming the people who does this in the name of Islam are not Muslims?
வேலை செய்யும் பொழுது, வேலையை செய்ய விடாமல் மீண்டும் மீண்டும், கேட்க வைக்கிறது, இந்த பாடல்....வடிவேல் அண்ணனுக்கும், மாரி செல்வராஜ் அண்ணனுக்கும், ரஹ்மான் அண்ணனுக்கும், என் நன்றியை தெரிவிக்கிறேன்...
ஆழ்ந்த அழுத்தத்தை அமைதியாகவும், அழகாகவும் அர்ப்பணித்து கொடுத்த ரகுமானிற்கும், வடிவேலுவிற்கும் மற்றும் யுகபாரதிற்கும் நன்றிகள்...
2004
@@gunapooshanamgunapooshanam5637 ennada athu 2004 ..Ella cmnt la uh panni vachiruka
Cool movie2004
@@vijayviji5641 😀
❤
நல்ல திறமை உள்ள கலைஞனுக்கு என்றுமே அழிவு இல்லை.... வா தலைவா... கண்களில் கண்ணீர் வந்து விட்டது... நல்ல படைப்பு நன்றி ரஹ்மான் அவர்களே
Talent mattum pothuma ah konjam navaaadakkam venum thimiru pudicha vadivelu
@@venkatraj2984 நல்ல கலைஞனுக்கு கொஞ்சம் திமிர் இருக்க தான் செய்யும்
❤
@@venkatraj2984 real life le, yarum 100%yarum perfect Elle, adhuvum konjum therinzikongo 🤔
@@venkatraj2984sir inga yaarum avalavu yogiyam illa...
படையிருந்தும் பயந்த சனம்.....எத்தனை வலி,எத்தனை ஏக்கம்,எத்தனை ஆழம், எத்தனை அடக்குமுறை, எத்தனை வரலாறு எல்லாத்தையும் ஒத்த வரில முடிச்சிட்டாப்ல.....யுகபாரதி யுகத்தின் கவிஞன்❤
Exactly.
You got it exactly... Sattunu oraikura oru vari
நிச்சயமாக தோழரே..!! உண்மை.. 😢
ஈழத்தின் குரல் 😢
@@selva_blacky எய்யா ராசா தயவுசெஞ்சு உங்க ஈழத்தையும் ஈழ அரசியலையும் உங்களோட வச்சிக்கங்க.....அவனுகல்லாம் நல்லா வெளிநாடுகள்ல சொகுசாதான் இருக்காங்க....இங்கையே ஆயிரத்தெட்டு பிரச்சனை நமக்கு.....ஆ ஊன்னா ஈழம்னு தூக்கிட்டு வராதிங்க....போதும்
வடிவேலு ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல, சிறந்த பாடகரும் கூட என்பது இப்போதுதான் தெரிந்தது... ஏ.ஆர். ரஹ்மானுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
Vadivel oru sagapthem
@@premchandkuttikrishnan2940 epe bnkop
You should go through his old movies. Especially emotional songs he is ❤❤❤
His first song from Ilayaraja
oru sirantha thurogi kuda
From singing Ettanaa Irundha in Ilaiyaraaja's music back in 1995 to singing RaasaKannu in ARRahman's music now, just the journey of Vadivelu the singer alone has been a phenomenal one. What a discography!❤❤
ARR mass.. Yuvan, Anrudh waste
@@sarmilasarmila3094 inga yarum waste illa
He has already sung for Rahman
Cinema tickets are you from USA தமிழ் தெரியாதா .....???கெட்ட வார்த்தை வேணாம்னு பாகுறன் ....
@@sarmilasarmila3094 anirutha waste than.. but not yuvan
படையிருந்தும் பயந்த சனம்..
கண்ணீர் அடக்க முடியவில்லை தாழ்த்தபட்ட மக்களின் வலி
அருமையான வரிகள்🔥 கண்ணீர் வர வைத்துவிட்டது 🥺🥺🥺🥺
யுகபாரதி
சகோ யாரும் இந்த உலகத்தில் தாழ்த்தபட்டவர்கள் இல்லை... நாம் அனைவரும் சிறந்த படைப்புகள்...
Exactly, could not control the tears .
This words making the long lasting pain.
ar rahman is very good...
கிராமத்து பாடலோ..
உலக அளவிளான பாடலோ
மிகச்சிறப்பாக தயாரிக்ககூடிய சிறந்த AR RAHMAN
பஞ்சம் பசி பார்த்த சனம் படை இருந்தும் பயந்த சனம் ...😢உண்மையான அருந்ததியர் இன வரலாறு...நன்றி மாரி செல்வராஜ் அவர்களுக்கு.
Mm super❤️
அருந்ததியர் மட்டும் பஞ்சம் பசி பார்க்கவில்லை பறையர் பள்ளர் எல்லோரும் பஞ்சம் பசி பார்த்தவர்கள் தான்
Super song
Yes😭😭
Paraiyar community Ku tha porunthum
இந்த பாடலின் வரிகளில் உள்ள வலியை புரிந்து கொள்ள எந்த சமுதாயத்தையும் சார்ந்து இருக்க வேண்டியதில்லை மனிதனாக இருந்தால் புரியும். நன்றி ஏ.ஆர் ரகுமான் அண்ணா❤🎉
உண்மை சகோ
True.well said bro
இந்த பாடலைக் கேட்கும்போது என்னை அறியாமல் என் இதயம் வலிக்கிறது அத்தனை துன்பங்களையும் போக்கியவர் சட்ட மாமேதை டாக்டர் அண்ணல் அம்பேத்கர்🙏
❤
My Hero.... அம்பேத்கர் ஐயா🙏🙏
Bro yea ipdi ninaikuringa samuthayathil anaivarum ondru 🙏
❤️❤️
❤❤❤🎉👍🏻💐🎊🔥🔥🔥🔥🔥🔥
இவ்வளவு வருடங்கள் ஒரு நல்ல பாடகரை நம் தமிழ்நாடு திரைத்துறை இழந்து இருக்கிறது அருமையான பாடல் ஐயா பாடலை கேட்கும் போது கண்களில் நீர் வடிகிறது
Neraya paadirkar appo appo
I don’t think he is a good singer but the emotion in voice works for this song
@@sumethanarulanantham9676 nalla singer than ga neega think pandrathala nalla singer illanu agirathu
Legend
Athukku rahman than karanam
ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை வெல்ல துடிக்கும் மாமன்னன் மாபெரும் வெற்றி ❤
வடிவேல் எனும் கலைஞனுக்கு அழிவே கிடையாது.... என்ன ஒரு அற்புதமான பாடகர்
என்ன வரி, இசை, பாடியது வடிவேலுக்கு இப்படி ஒரு குரல் இருக்கா ,அழுகை இப்பவே வருதே ,கண்களை மூடி அமைதியாக இது வரை 30 தடவை கேட்டுவிட்டேன் ,நன்றி மாரி அண்ணா
Apo.. unaku entha velayum illa.. athene..!!
Sari nallu azhugu
தொடர்ச்சியாக கேட்டு கொண்டே இருந்தால் எல்லா பாடல்களும் நல்லா தான் இருக்கும்.
@@vidyuthjayabal5718 ippo onakku entha velayum illa atana
@@vidyuthjayabal5718 ஏன் வேலை பாத்துக்கிட்டே கேட்க கூடாதா ,என்னுடைய கம்பெனியில் 20 பேர்பணி புரியுறாங்க
நம்மை சிரிக்க வைத்த மனிதர்.....
கடைசி காலத்தில் தோல்வி முகம் காட்டாமலிருக்க நமது சார்பாக AR.ரஹ்மான் அவர்களின் அன்பு பரிசு❤️
தலைக்கணம் திமிருதனம் தாழ்த்தியது.
@@rooster1692 he is an artist, don't forget it bro
Vadivelu vadivel vadivel
Excellent a.r.r very nice
@@gokulshidhu7226 arristna periya pudungiya
Raasa Kannu Song Lyrics in Tamil
ஆண் : தந்தனா தானா…
தன தந்தனா தானா…
தந்தனா தானா…
தன தந்தனா தானா…
ஆண் : தந்தனா தானா…
தந்தனா தானா…
தந்தனா தானா…
தந்தனா தானா…
தந்தனா தானா…
தந்தனா தானா…
-BGM-
ஆண் : மலையிலதான் தீ பிடிக்கீது ராசா…
என் மனசுக்குள்ள வெடி வெடிக்கீது ராசா…
-BGM-
ஆண் : மலையிலதான் தீ பிடிக்கீது ராசா…
என் மனசுக்குள்ள வெடி வெடிக்கீது ராசா…
ஆண் : தவுலெடுத்து தாளம் அடி ராசா நா…
தன்னனா தன்னனா பாடுவேன் ராசா…
தவுலெடுத்து தாளம் அடி ராசா நா…
தன்னனா தன்னனா பாடுவேன் ராசா…
ஆண் : குச்சிக்குள்ள கெடந்த சனம்…
கோனி சாக்குல சுருண்ட சனம்…
பஞ்சம் பசி பார்த்த சனம்…
படை இருந்தும் பயந்த சனம்…
ஆண் : பட்ட காயம் எத்தனையோ ராசா…
அட சொல்லிப்புட்டா ஆறிடுமோ ராசா…
ஆறிடுமோ ராசா… ஆறிடுமோ ராசா…
ஆறிடுமோ… ராசா கண்ணு…
-BGM-
ஆண் : காட்டுக்குள்ள கருவமுள்ள ராசா…
நம்ம கால் நடக்க பாதையாச்சே ராசா…
காட்டுக்குள்ள கருவமுள்ள ராசா…
நம்ம கால் நடக்க பாதையாச்சே ராசா…
-BGM-
ஆண் : நடந்த பாதை அத்தனையிலும் ராசா…
அதுல் வேலிப்போட்டு மறிச்சதாரு ராசா…
திக்குதெச தெரியலயே ராசா…
அட தேடி திரியுரமே ராசா…
ஆண் : பட்ட காயம் எத்தனையோ ராசா…
அட சொல்லிப்புட்டா ஆறிடுமோ ராசா…
ஆண் : மலையிலதான் தீ பிடிக்கீது ராசா…
என் மனசுக்குள்ள வெடி வெடிக்கீது ராசா…
மலையிலதான் தீ பிடிக்கீது ராசா…
என் மனசுக்குள்ள வெடி வெடிக்கீது ராசா…
ஆண் : தவுலெடுத்து தாளம் அடி ராசா நா…
தன்னனா தன்னனா பாடுவேன் ராசா…
தவுலெடுத்து தாளம் அடி ராசா நா…
தன்னனா தன்னனா பாடுவேன் ராசா…
ஆண் : குச்சிக்குள்ள கெடந்த சனம்…
கோனி சாக்குலா சுருண்ட சனம்…
பஞ்சம் பசி பார்த்த சனம்…
படை இருந்தும் பயந்த சனம்…
ஆண் : பட்ட காயம் எத்தனையோ ராசா…
அட சொல்லிப்புட்டா ஆறிடுமோ ராசா…
ஆறிடுமோ ராசா… ஆறிடுமோ ராசா…
ஆறிடுமோ ராசா கண்ணு…
ஆண் : தந்தனா தானா…
தன தந்தனா தானா…
தந்தனா தானா…
தன தந்தனா தானா…
ஆண் : தந்தனா தானா…
தந்தனா தானா…
தந்தனா தானா…
தந்தனா தானா…
தந்தனா தானா…
தந்தனா தானா…
-BGM-
🙏
❤
🤩
Super bro 😮😮😮
❤
பஞ்சம் பசி பார்த்த சனம், படையிருந்தும் பயந்த சனம், ஆழமான வரிகள் 👌
😢
😢
பட்ட காயம் எத்தனையோ ராசா
அத சொல்லிப்புட்டா ஆரிடுமோ ராசா
Yes definitly
வரிகள் வித்தியாசமாக இல்லை .ஆனால் வலிக்குதே தோழா வலிகளில் உருவாகிய வரிகள் அதனால் பாடல்களாக தெரியவில்லை வாழ்க்கை
இந்த பாடலை கேட்கும் போது.. எங்கோ ஒரு மூலையில்.. ஒரு கூட்டம்.. காற்று இல்லாமல்..மூச்சு விட முடியாமல்.. தவிப்பது போல்.. சொல்ல முடியவில்லை.. அவர்கள் வாழ்விலும் ஒரு நாள் தென்றல் வீசும்.. அருமையான பாடல்.. செதுக்கிய சிற்பி ARகும், உயிர் கொடுத்த வடிவேலுகும்.. பல கோடி நன்றி..
Ama bro 🥺🥺🥺
இது தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வு எப்படி இருந்தது என்பதை விவரிக்கிறது. எங்கோ இல்லை, இங்கே நம்மை சுற்றியுள்ள நம் சகமனிதனின் நிலையையே பாடியுள்ளனர்.
யுகபாரதியின் வரிகள்🔥🔥🔥🔥 rest just accompaniment
பாடல் கேட்கும் போது இலங்கை தமிழர்களின் துயரமே மனக்கண்ணில் வந்து போகிறது இப் பாடலுக்கு உயிர் கொடுத்த அத்துணை பேரிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்
இந்தப் பாடல் தேசிய அளவில் வெற்றி பெற்று சிறந்த பாடல் சிறந்த படம் என்று பெருமையோடு வெற்றி பெற்று பல பரிசுகளை வெல்லும் சிறந்த படமாக தேர்வு செய்யப்படும் ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை சொல்லும் பாடல் பாடலைக் கேட்கும் பொழுது இதயத்திற்குள் ஒரு வலி எங்கோ ஒரு மூலையில் ஒடுக்கப்பட்ட மக்களின் மூச்சுக்குழல் இறுக்கப்பட்டுள்ளது.
பாடும்போதே பாடலின் வலியை உணர்ந்து பாடும் வடிவேலுவின் முக பாவனையும், மனதை மயக்கும் குரலும் அதற்கு ஏற்ற இசையும் மீண்டும் மீண்டும் கேட்டு சோக மனநிலைக்கு போகவே இதயம் துடிக்கிறது 🙏🏻
உண்மை 💯 மனசுக்குள்ளே ஏதோ பண்ணுது
உண்மை சகோ
Real fact..
S
q@@gowthamseenu6586 ❤❤😮
எங்களின் வலிகளை உங்களின் குரலால் வெளி படுத்திவிட்டீர்கள் வடிவேலு என்னும் பன்முக கலைஞரே நன்றி...
வாழ்க்கையின் பல வலிகளை கடந்துவந்தவர்களால் மட்டுமே இப்படிபட்ட வார்த்தைகளை எழுதமுடியும் பாடமுடியும் இசை வடிவம் கொடுக்கமுடியும். வாழ்த்துகள் மாரிசெல்வராஜ்.
உண்மை
ஒடுக்கப்பட்டவர்களின் வலியை வார்த்தையாக வடிவேல் குரலில் கேக்கும் போது மனதில் என்னமோ செய்கிறது அந்த இனம் முன்னேற வேண்டும் ❤A R ரகுமான் மியூசிக் அந்த உணர்வை உணர செய்கிறது அருமை ♥️
அந்த இனம் முன்னேறுதோ இல்லையோ. அத வேச்சி படம் பண்ற director நல்லா முன்னேறிடுவான்......!!!
@@chandru2kc so.. எவனும் பேசலனா ஏறி மிதிசிட்டே இருக்கலாம் அதானே.....!!!
@@சதீஷ்கண்ணன் அவர் சம்பாதித பணத்தை ஒரு start up துவக்கி அவங்க சமுதாய மக்கள் வேலை வாய்ப்பு வழங்களாமே
@@chandru2kc இது என்ன ஒரு புரிதல் என தெரியல..?? இங்க சமத்துவத்தை எடுத்துரைக்கும் கருத்தை படங்கள் (medium) மூலமா சொல்றாங்க. நீங்க மறுபடியும் startup ஆரம்பி, மேலும் ஒரு கூட்டத்தை நவீன வழியில் உருவாக்கு என சொல்றீங்க.. இது மறுபடியும் அதே இடதுக்குதான் போகும். கூட்டமா இரு கூட்டமாவே ஒதுக்கி அடிக்கிறோம் என்பதுதான் இதன் அர்த்தம்.
@@chandru2kc pa.ranjith teriuma? sir ungaluku
பாடல் கேட்கும் போதே கண்களில் கண்ணீர் வருகிறது சமீபத்தில் ஏ. ஆர்.ரஹ்மானின் சிறந்த பாடல்
பஞ்சம்,பசி பார்த்த ஜனம்...படை இருந்தும் பயந்த ஜனம்...அருமை.. அருமை...யுகபாரதி அண்ணன் வரிகள்...
பட்ட காயம் எத்தனையோ அதை சொல்லிபுட்டா ஆறிடுமோ....கோணிக்குள்ளே சுருண்ட சனம்.படையிருந்தும் பயந்த சனம்.......வலிமிகுந்த வரிகள்.யுகபாரதி அண்ணாவால் மட்டுமே இப்படி எழுத முடியும்..... நன்றி அண்ணா
Arumai azhagana azhutham miguntha varigal.vadivelu sir ra entha movie LA vera vedivelu va papom nu nenaikren.vazhthukkal.
வலி நிறைந்த வரிகள்: குச்சிக்குள்ள கிடந்த ஜனம். கோனிசாக்குள்ள சுருண்ட ஜனம்.பஞ்சம் பசிபார்த்த ஜனம் .படை இருந்தும் பயந்த ஜனம். பட்ட காயம் எத்தனையோ ராசா அத சொல்லிப்புட்டா ஆரிருமோ ராசா.அருமை படைப்பு ....
😢
அடிவாங்குவது பெருமையா??
@@SuganElavan express the pain is a sin?????
@@SuganElavan இல்லை நண்பரே. அடிப்பதும் பெருமை அல்ல. 🙏🙏
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்.
@@SuganElavan yaarkitta adi vaangumadhu????
மனதை ஆட்கொண்ட பாடல்,
வடிவேலு ஐயாவாக அடுத்த நிலைக்கு உயர்ந்து விட்டார்,
நன்றி ரகுமான்,
நன்றி மாரி செல்வராஜ்.
நன்றி.
@vimala கற்றுக்கொள்வது தவறன்று. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண்ணில் முடிந்தவரை தமிழில் பேசுவோம். தமிழை நாம் வளர்த்தால் தமிழ் நம்மை காக்கும் "ழ" சொல்லிப்பாருங்கள் நாவடியில் உமிழ் நீர் சுரக்கும்.
எத்தனை முறை கேட்டாலும் .. கண்ணில் ஈரம் வரவழைக்கும் வரிகள் .... சாதி என்ற சாக்கடையை சட்டை போல் அணியும் மக்கள் எண்ணங்கள் அழியும் வரை தொடரட்டும் மனித பயணம்
வலி நிறைந்த வரிகள்... பல கிராமங்களின் வலிகள் நிறைந்த மொழிகள்... அருமையான படைப்பு... ரஹ்மான் சார்... வடிவேலு சார் மற்றும் மாரிசெல்வராஜ் அண்ணா 💞
கண்ணோடு ஒரு தூளி நீர் வழிகிறது உன் குரலில் வடிவேல் உன் இசையில் AR ரஹ்மான் உன் இயக்கத்தில் மாரி செல்வராஜ்❤
@@imanaserelax6460 🎭
@@imanaserelax6460en Ne sethutiyo
@@imanaserelax6460wotha wanted Mbi polaye😂 line la Nilu d
@@imanaserelax6460Ada mada bumda 😢
இந்த வலி நிறைந்த பாடலை எழுதிய யுகபாரதிக்கு வாழ்த்துக்கள். பாடலை பாடிய வடிவேலுவையும், தமிழன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களையும் பாராட்ட வேண்டும்.
9
A.R.ரஹ்மான் அவர்கள் இசையில் நல்ல பாடகர்கள் மிகவும் உயர்ந்த பாடலை படைப்பார்கள். 👏👏👏
இதுவரைக்கும் வடிவேல் பாடிய பாடல்களில் இந்த பாடல் மிகச் சிறந்த பாடலாக அமைந்துள்ளது......அருமை அருமை....
ஆதிக்கத்தின் பிடியில் பிணைக்கப்பட்டிருந்த ஒரு சமூகத்தின் அடிமை வலியை எவ்வளவு அற்புதமாக வரிகளாலும் உணர்வு மேலோங்கும் கண்ணீரை சுரக்க வைக்கும் இசையோடு கூடிய வடிவேல் சாரின் குரலும் வெளிப்படுத்துகிறது..
ஒட்டுமொத்த குழுவிற்கும் வாழ்த்துகள் ஆயிரம் 🙏🌹
பஞ்சம்,பசி,பாத்த சனம்,
படை,இருந்தும்,பயந்த,சனம். என்ன ஒரு அருமையான வரிகள்.சூப்பர்.பாடலாசிரியர்,திரு.யுக பாரதி,நவீன யுகத்தின் பாரதி,
நன்றி, ஸார் பாராட்டுக்கள்,பட குழுவில் உள்ள அனைவருக்கும்.
படம் பெரும் வெற்றி,பெற வாழ்த்துக்கள்.
வைகை புயல் ஒரு பண்முகக் திறமை கொண்ட கலைஞன்!👍
குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த
தலைமுறைக் கலைஞன்!🙏
இரு புயலின் சீற்றத்தால்... கேட்போரின் கண்களில் மழை அடிக்குதே ராசா.... ✨️😢❤
Correct 💯
Nice
👏👏👏👏👏
Goood
Aruldas super coment.iam andhra.rehman.vadivelu..fan
ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகளை தன் மனத்திலும் ஒலிக்க செய்ததது மிக அருமை. யுகங்கள் கடந்தும் கேட்க தூண்டும் யுகபாரதியின் வலி மிகுந்த வரிகள்.
சொல்ல வார்த்தைகள் இல்லை.
வரிகளின் உயிர்ப்பு மாறாமல் அனுபவித்தே பாடியுள்ளார் அண்ணன் வடிவேலு .❤
இசை நரம்புகளில் கிளர்ச்சியை தூண்டுகிறது
Yarum odukkapadavillai nee padithal nee uyarvai adarkudan arasu pala udavigal seigiradhu adai payanpaduthavittal mel varuvadhu kadinamdan idudan kasappana unmai 😢
*Vadivelu sir* >>>>>> *Udhayanidhi dog*
unna odukaravan Udhayanidhi pondra politicians.
@@sivaagache2254 neenga USA la poyitu irukara CISCO matter kelvi padalayo; Caste discrimination in US, nalla padichi PhD vangunaalum caste pera solli asinga paduthirukaanga. Ippo padicitta, caste certificate ah kilichitta, schoola la caste podama serthu vitta, caste alinjiduma.
Yaru ipom oduka patta makkal caste ah vachi padam yeduthu kasu paakuradhu ipom trend aagiruchu pola
Vadivelu sir deserves a national award for this song..Love and Respect from kerala ❤️
வடிவேலுவின் குரலில், ஏ ஆர் ரகுமானின் இசையில் ஒரு சோகப்பாடல் நம் நெஞ்சை நெகிழ வைக்கிறது. அருமை 👌
பஞ்சம் பசி பார்த்த சனம் படை இருந்தும் பயந்த சனம்.
என் ஈழத்து மக்களுக்கு பொருந்தும் பாடல் வரிகள்..😭😭
இது ஈழத்தில் வாழ்ந்த மக்களுக்கு பொருந்தாது 🤬😡😠🤦💯🙌🚶
😢😢😢
ஏன்தமிழ்நாட்டில் அனைத்துமக்களும் ராசாக்களா.........இன்னும் காலனி சேரி இளைஞர்களின் வலியை உணராத மக்கள் ....
2nd time yuga bharathi srilanka tamil people ku 4 lines write panni irukar
1st song ellu vaya pookalaye
Pa vijay innum enna thozha
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓
ஏ ஆர் ரஹ்மானின் இசையில் வடிவேலுவின் குரலில் இந்த ஆண்டிற்கான மிகச்சிறந்த பாடல் மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது......
❤
ஜாதி மதம் பேதமின்றி அனைவர் கண்களை மட்டும் அல்ல இதயத்தையும் கசிய வைக்கும் பாடல்
Bhhhhh
ji
சொல்ல வார்த்தைகள் இல்லை... வைகை புயலின்... குரலில், இசை புயலின்... இசையில், யுகபாரதியின் வரிகளில் மிக அற்புதமான பாடல்... 🔥👌👏👍
ruclips.net/video/_SdBX5tJ22o/видео.html
இந்த வரிகளை கேட்கும் போது நம் ஈழத்தில் நடந்த துயரத்தை பாடல் வரிகளாக செதுக்கியது போல் உள்ளது... நன்றி AR ரஹ்மான் Sir🙏
பிரபாகரனின் துரோகத்தை நினைவூட்டுகிறது
Enna da aaaavvvuu nnaa Eelathuku poidringa!!! Adha vida koduram ingaye nadandhuruku da!!!Manjolai , keelvenmani sambavam la theriyumaa!!!
❤️
@@lspkvarma4424 yes
@@fareeth1389 enna Un pundaila singalan vitaana ?
ஒடுக்கப்பட்ட எம் மக்களுக்கும் ஈழ மக்களுக்கும் பொருந்தும் வைர வரிகள் வாழ்த்துகள் நண்பர் யுகபாரதி💚💚💚💚💚💚
ரஹ்மானின் இசைப் பயணத்தில் இந்தப் பாடல் ஒரு மைல்கல்.அற்புதமான பிஜிஎம்.👏ஆத்மார்த்தமான மெல்லிசை👌இந்த பாடலை கேட்கும் போது இளையராஜா பாடலை கேட்பது போல் உணர்கிறேன்😊
சிரிக்க வைத்த என்னால் அதை விட அதிகமாக அழ வைக்க முடியும் என நிரூபித்துள்ளார்
Unmai thaan nanba🥺😩
True bro 😭😭😭😭
🙏🙏🙏
Anna
LEGEND VADIVELU ❤🎉🎉🔥🔥🔥🔥
பாட்டை முதல் முறை கேக்கும் போதே மனதை என்ன மோ செய்கிறது...!!
வடிவேலுவின் வாய்ஸ் அருமை..🎉
Nice joke
@@sivakumars3532 poda 🤬
@@bharathanakash5665 hmmm
Somewhat reminds me the vidai kodu engal naade song in kannathil muthamittal...they are not the same...but gives pain
@@sivakumars3532 loosu koo🔥
இருபுயல்கள் சேர,கரைகள் உடைகிறது!..மழையோ,கண்களை அடைகிறது !!❤
Wow
Arumai thozhar
Super 😍
Super
Awesome ❤❤❤
Iam from Kerala but really love tamil songs Tamil people simplicity and culture and her love. One of my favorite places Tamilnadu ... 💚💚
பல வலிகளை எளிமையாக உணர்த்தும் இயல்பான குரல்... வடிவேலு அவர்கள் இது போன்ற பல கிராமத்து பாடல்கள் பாட வேண்டும்....
ஆரிடுமோ ராசா வரிகள் ஒன்று போதும், அய்யா வடிவேலு அவர்களின் இசை திறமையை பறைசாற்ற.... என்ன வலி அந்த குரலில்....
𝐋😊
எத்தனை தடவை கேட்டாலும் மீண்டும் கேட்க இழுக்குது 🥺❤️ என்ன குரல் டா ப்பா.....🔥🔥🔥🔥 ரகுமான் சார் தலைவர் குரலை வைத்து நடத்திய யுத்தம் 🔥❤️🥺 மாரி செல்வராஜ் அண்ணா படம் கண்டிப்பாக வெற்றி 🔥❤️
ஏண்டா ரிலீஸ் ஆகியே 1 மணி நேரம் கூட ஆகல.. எத்தனை தடவ கேட்டாலும் சலிக்கலயாம்😂😂😂😂 ஏண்டா உருட்டிட்டு இருக்கே
Yenda release aagiye 11 minutes than aaguthu adhukulla ethana thadava nee keta
ஒரு மணி நேரத்துல எத்தனை தடவை வேணும்னாலும் கேக்கலாம்டா நாய்ங்களா
Ada kena bunda
Isai Puyal+ Vaigai Puyal Combo on 🔥🔥🔥🔥🔥
பட்ட காயம் எத்தனையோ ராசா?
அத சொல்லிப் புட்டா ஆறிடுமோ ராசா?
மலையிலதான் தீப்பிடிக்குது ராசா
என் மனசுக்குள்ள வெடி-வெடிக்குது ராசா
😢😢😢😢😢😢😢 Feeling line
வடிவேல் ஐயா அவர்களின் குரல் வளமும் ரஹமான் அவர்களின் இசையும் யுக பாரதி அவர்களின் வரிகளும் என் கண்ணில் கண்ணீரை வரவைத்தது... 😇😇😇😇😇😇😇😇😇😭😭😭😭😭
கண்ணீரை துடைத்து தைரியமா இரு.....!!!
@@owaaaaaaaaau796😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
ஆயிரம் வலிகளை உள்ளடக்கிய வடிவேலுவின் குரல்...
யுகத்தையே திரும்பி பார்க்க வைத்த யுகபாரதியின் வரிகள்...
மக்களின் மனதில் ரணங்களை உண்டாக்கிய ரகுமானின் இசை...
#மாமன்னன்_ராசாகண்ணு....
Dai badu.. vengai vayal pathi pesu...
@@manivanank5213 hi unga la mathiri kevalamanavan illa
Sry public la asingama pesathinga
Ungalukku enga valikkuthu
enna thappa potanga ippo
Migavum kevalamaana ieeeeenappiravi bro neenga
Vengai vayalai patri neengal pesalame
இன்னொன்று மறந்துவிட்டேன்.
அருமையான பாடல் வரிகளுக்கு உயிர் கொடுத்த இசை, அதை நெஞ்சை பிழியும் குரலால் வெளிப்படுத்தி வெற்றி கண்ட தம்பி வடிவேலு!!!!
வாழ்த்துக்கள் எல்லா புகழையும் இறைவனுக்கு அர்ப்பனிக்கும் தம்பி ராகுமானுக்கு... 👌👌👏👏💐💐
AR Rahman+ vadivelu = Goosebumps overloaded 🔥🔥🔥
தவறுகள் உங்கள் அனுபவத்தை அதிகரிக்கிறது, மற்றும் அனுபவங்கள் உங்கள் தவறுகளை குறைக்கிறது. உங்கள் தவறுகளை நீங்கள் கற்றுக்கொண்டால், மற்றவர்கள் உங்கள் வெற்றியைக் கற்றுக்கொள்கிறார்கள்
There is no words to tell.. It will make miracle......
பாடலை கேட்கும் போது மனதில் வலிகளுடன் கண்களில் இருந்து கண்ணீர் வடிகிறது என்னை அறியாமல் 😢 வாழ்த்துக்கள் திரு மாரி செல்வராஜ் அவர்களுக்கு❤❤❤
கண்ணில் இருந்து கண்ணீர்தான் வரும் இல்ல மூத்திரமா வரும்😂😂
@@praveenpraveen370 குடிச்சிருப்பான் போல டேய் ஜோக்கர்
@@gobihan3844 bro ellaroda channelayum indha paatu mokkanu comment pannitu irukaan
@@pardeepnarwal5567 வவுதாரிச்சல் அப்படி தான் பண்ணுவானுக
Why flowing tears ?
வாழ்வியல் கவிஞன்.....
வலி தாங்கிய இசை....
மெய்மறந்த உணர்வு...
இசைப்புயல்&வைகைப்புயல்
ஐயா வடிவேலு அவர்களின் குரல் இந்த பாட்டிற்கு மிகச்சிறந்த வலிமையை கொடுத்து விட்டது..அவரை தவிர இந்த பாடலுக்கு வேறு யாருடைய குரலும் பொருத்தமல்ல என்றால் அது மிகையாகாது..
கவிஞர் யுகபாரதி அவர்கள் வரிகள் மிக வலிமையாக உள்ளது..
காலும் அழியும் வரை இப்பாடல் நிலைத்து நிற்கும்.....❤❤❤❤❤
இந்த ஆண்டின் ஆகச்சிறந்த பாடல்....
வடிவேல் மற்றும் ரகுமான் இருவருக்கும் வாழ்த்துகள்... நன்றி🙏
Lyricist also 🔥
உணர்ச்சிகரமான வரிகளுடன் இதயத்தை நடுங்க வைக்கும் பாடல். நன்றி ARR மற்றும் YB
தரமான கலைஞர்களிடம் ஒரு படைப்பாளி சிக்கும் தருவாயில் திறமையின் கனம் வெளியில் வரும்
ஒவ்வொரு முறை கேட்கும் போதும் கண்களில் கண்ணீர் வருகிறது 🥺
யுகங்கள் கடந்த பின்னும்
அழியாத வரிகளை அளித்த ,
புரட்சி கவிஞர்
யுகபாரதி. அண்ணனுக்கு
நன்றி.....
நகைச்சுவை நடிகர் -100%
சிறந்த பாடகர் -200%
Character artist 300%
Vedivelu fans assemble here?? ❤
🤚🤚
Yes
I am
@vimala 😂thug life
vijaykanth sir fans like
👇
இந்த பாட்ட கேட்கும் போது எனக்குள்ள இருக்குற ஆதங்கம் புரட்சி சிந்தனையில் என்னை வலிமை ஆணவனாக மற்றுகிறது
புயலின் இசையில் மற்றொரு புயலின் குரலில் நம் செவிகளை மோதி தழுவ திரண்ட மேகங்களான வரிகள்.... நம் கண்களில் மழை நீராய் பொழிந்து...நம் இதயம் எனும் நீரூற்றை நிரப்பியது.... அற்புதம்...வாழ்த்துக்கள்...❤️🫶
யுகபாரதி
என் மனவலியை படமாக்கிய என் அன்பு சகோதரர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
இந்தப் பாடலில் வரும் அனைத்து வெளிப்புறக் காட்சிகளும் எங்கள் ஊர்(#சேலம்) #எருமாபாளையம் #ஜருகுமலையில் எடுக்கப்பட்டது ❤
Mm yes bro ur crt nanum Salem tan intha movie full ha Salem la tan 90% shoot pannanga..
⭐⭐⭐⭐⭐🙏⭐⭐⭐⭐⭐
@@saranraj6211🙂🤝
@@velravirvelravi8976🙂
Ya bro nice location
వడివేలు గారినీ ఇల చూడటం చాలా ఆనందాన్ని ఇచ్చింది.... ❤
அருமையான பாடல் வரிகள் சிறப்பான இசை பாடிய வடிவேலு ஐயா அவர்களுக்கு பெரிய வணக்கம் 😢😢😢 கண்கள் கண்ணீர் வர வைத்த ஒரு அழகான பாடல்😢
இசை புயலும் வைகை புயலும்...!
துல்லிய இசையில் மனதை கனக்கும் குரலோடு
வலி மிகுந்த வரிகளோடு
மொத்தமாய் ஆட்கொண்டது மனதை...
👍
வடிவேலு அவர்கள் பாடும் போது நம் கண்களிலும் கண்ணீர் வழிகிறது அருமையாக பாடியுள்ளார்.. AR ரஹ்மான் அவர்களின் இசையும்.. யுகபாரதி அவர்களின் பாடல் வரிகளும் அற்புதம்.. அண்ணன் மாரிசெல்வராஜ் சிறந்த படைப்பாளி என்பதை நிரூபித்து கொண்டே இருக்கிறார்.. ❤️
Even if, iam a malayali i belive Tamil is the most beautiful language
Thanks I love Malayalam Kannada and Telugu languages
❤
❤
వడివేలు గారిలో గొప్ప నటుడే కాకుండా గొప్ప గాయకుడు కూడా ఉన్నాడని ఇప్పుడే తెలిసింది...A.R. రెహ్మాన్ గారికి నా హృదయపూర్వక అభినందనలు...
Yes painful lyrics too ❤️
எல்லோருக்கும் முன்னோடி இளையராஜா.
Thanks
கிராமங்களின் அழகியலையும் வாழ்வியலையும் படமாக்கி மக்களுக்கு காட்டும் மண்ணின் மைந்தன் மாரி'க்கு வாழ்த்துக்கள்
கண்களை மூடி கொண்டு கேட்டால் என்னமோ செய்யுது!
கிழக்கு சீமையிலே படத்துக்கு பிறகு ஒரு கிராமத்து வாசம் ரஹ்மானின் இசையில்....🎵
அடித்தட்டு மக்களின் வாழ்க்கை நிலை மற்றும் வலியை உணரும் வகையில் ஒரு அற்புதமான பாடல் வரிகள் 😢😢😢😢
Rahman is a legend. Copycats like anirudh can come no where near this legend. This song will live for generations to come.
There was a time Rahman was a copycat, please!
ஒரு பாடல்லில் படத்தின் முழு கதையின் கண் முண்ணே கொண்டுவருகிறது நன்றி மாரி செல்வராஜ் team...
Padai irundhum Bayandha Sanam ❤ The pain of Mari Selvaraj...... eagerly waiting for this !!!!!
What pain?
Odukka pattavanukku than theriyum andha pain
@@sugumarsundaram9501 ஒடுக்கப்பட்ட இல்ல ஒடுக்கப்படுத்த பட்ட...
@@raghulprashanth6991 really crct bro
AR Rahman இசையில் வடிவேல்.....
Headsetல கேட்கும் போது நிச்சயமாக கண்ணீர் வருகிறது.....
வடிவேலின் பாடும் திறனை அற்புதமாக பயன்படுத்தி இருக்கிறார் ரஹ்மான்...👍👍👍
*Fallen in love with this song. I so can relate to the movie as iam too a cancer patient so please everyone keep me in your prayers.*
You will be okay dont worry
How are you bro? Don’t give up life is full of adversity
You will be fine and a great survivor
வலி கலந்த வரிகள்....வடிவேலுவின் குரலில்...👍🏻❤️கேட்கும்போதே மனம் வலிக்கிறது..😔 ஈழத்து சொந்தங்களும் ஒருநாள் இப்படித்தான் இருந்தார்கள்...வலியை அனுபவித்து கொண்டு... இதை ஒருபோதும் மறவாதீர்கள்..😢
Totally involved deep in the song....❤❤❤❤🎉🎉🎉🎉🎉 Evergreen Song ❤❤❤🎉🎉🎉🎉🎉 Vadivel Sir...🎉🎉🎉
பாடலிலேயே உணர்ச்சியை கடத்தியுள்ளனர் இசைப்புயலும், வைகைப்புயலும். பாடலின் உச்சரிப்பில் கூட தன் நடிப்புக்கலையை வெளிப்படுத்தியுள்ளார் வடிவேலு. உறுதியாக, மாமன்னன் வெற்றிப்படைப்பு தான்💯🔥
மிக மிக அற்புதமான கேட்கக் கேட்கத் திகட்டாத மனதை நெகிழவைக்கும் பாடல்!
திரு. ஏ. ஆர். ரஹ்மான் அவர்களுக்கும், பாடல் பாடிய திரு. வடிவேல் அவர்களுக்கும் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்! ❤❤❤
Ethu ithu thigatatha paataa ...konjam manasatchi oda comment pannunga
Visuals paaaka vekka avasiyam vekkala,oru AR Rahman die hard kanni naan,ennayavey andha aala marakka vechu,Voice layea thonda thukkathula adaikra alavukku vechitiyea neeyyy. Personal life aside, As a Cinema artist , Vadivel is a GOAT in almost every aspect he attempted. You are marking a strong legacy man and I'll be proud to tell our next generation that I witnessed all these as it was happening. #Treasure
இந்த பாடல் தொடக்கத்தில் உள்ள "தந்தானத்தான..... " கேட்கும் போது இதயம் கனக்கிறது😌😌
வடிவேல் அய்யா குரல்....என்னமோ செய்கிறது....அற்புதமான வரிகள்...இசை பின்னணி மூலைக்குள் ரீங்காரமிடுகிறது.எம்மக்களின் வலி...கண்ணீராய் வெளிப்படுகிறது.நன்றி.🙏💐💐💐
வலிகளை உணர்த்திய வரிகள், வடிவேலு அவர்களின் வடிவமான குரலில்❤, உணர்ச்சிமிக பாடிய வடிவேலு அவர்களுக்கு தேசிய அளவில் அங்கீகாரம் கிடைக்கும்👍
Correct 💯
எத்தனை காலம் கேட்டாலும் வீரம் மற்றும் தங்களுடைய சொந்த ஊர் உணிவை உணர்த்தும் & அர்த்தம் செறிந்த பாடல்....
அருமையான பாடல்... கேட்கும் போது மனதை உருக வைக்கும் பாடல்.... திரு வடிவேலு திரு ரஹ்மான் அவர்களின் உழைப்பை கண்கூடாக பார்க்கலாம்..
வலி இருக்கிற எவனுக்கும் பிடிக்கும் இந்த பாடல்
😢
😢
❤❤❤❤❤
தமிழர்கள் வீண்சண்டைக்கு போகவில்லை வந்தசண்டை விடமாட்டோம் யூதமனநோயாளிகள் வந்தவழியே செல்லவேண்டியதுதான் ராமன் சகுனி தாத்தாத்ரயன் பரசுராமன் துர்கைகாமாட்சி இவர்களை நம்மை கும்பிடவைத்த மனநோயாளிகள் ஒழிக
Yes
1995ல் இளையராஜாவின் இசையில் எட்டணா இருந்தா பாடியதில் இருந்து இப்போது ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ராசகண்ணு பாடுவது வரை, பாடகரான வடிவேலுவின் தனிப் பயணம் ஒரு தனிப் பயணம். என்ன ஒரு ஆழ்ந்த பாடல் , மனதை உருக வைக்கும் வரிகள்😢🥰
I’m a Muslim tamilan but I feel the pain of that caste people
Song made me goosebumps ❤
Do you feel for the poor people dying across the globe because of your religion?
@@SurajInd89 mr sangi man if you no the truth you never talk like this stop witching sangi medias read the history
@@rifdhirifd5400 What is your point? Do you say that the attacks are not happening and people are not dying? Or are you claiming the people who does this in the name of Islam are not Muslims?
What right you got when poor people are dying of hunger because of your fuckked up religion?@@SurajInd89
@@rifdhirifd5400 sangi didnt call anyone kafir..sangi is to protect women and children from thukulans killing our ppl
வேலை செய்யும் பொழுது, வேலையை செய்ய விடாமல் மீண்டும் மீண்டும், கேட்க வைக்கிறது, இந்த பாடல்....வடிவேல் அண்ணனுக்கும், மாரி செல்வராஜ் அண்ணனுக்கும், ரஹ்மான் அண்ணனுக்கும், என் நன்றியை தெரிவிக்கிறேன்...