Issaiyum Kathayum- Ilangai Vaanoli | 1986 | Radio Ceylon

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • இசையும் கதையும்..........
    70பதுகள் தொடங்கி 3 தசாப்தகாலம் "இலங்கை வானொலியில்" வரலாறு படைத்த நிகழ்ச்சி. சகோதரர் விமல், செவ்வாய் தினங்களிலும், அடியேன் வியாழன் தினங்களிலும் போட்டிபோட்டுத் தயாரித்தளித்த நிகழ்ச்சி.(பிற்காலத்தில் சகோதரி ராஜேஸ்வரி ஷண்முகம் மற்றும் திரு.சாரா இமானுவேல் போன்றோரும் இந்நிகழ்ச்சியை ஏற்று நடத்தியதுண்டு) அந்நாளில், பல எழுத்தாளர்கள் உருவாக முதல் தளமாய் விளங்கிய நிகழ்ச்சியும் அதுவே. ஒரு திரைப்படம் பார்க்கும் உணர்வுடன், உள்நாட்டிலும்- கடல்கடந்து தென்னிந்தியாவிலும் காத்திருந்து கேட்டுப் பரவசமடைந்த அந்த வானொலி நிகழ்ச்சியை, காட்சி வடிவமாக தொலைக்காட்சியில் வழங்கினால் என்ற புதிய சிந்தனை அன்று ரூபவாஹினியில் தமிழ்ப் பிரிவின் தலைமைப் பொறுப்பில் இருந்த நண்பர் திரு.பி.விக்னேஸ்வரனுக்குத் தோன்றியது. அவரது கற்பனையில் உருவானகதைக்கு அவரே எழுத்துவடிவம் தந்து, "என் வாழ்வு உன்னோடுதான்" எனும் பெயரில் முற்றிலும் புதுமையாகத் தயாரித்து நெறிப்படுத்தி, ரூபவாஹினி தொலைக்காட்சியில் வழங்கினார். எவருமே இன்றுவரை நினைத்துக்கூடப் பார்த்திராத சாதனை அது. முழுக்க முழுக்க அடியேனது குரல் பின்னணியில்( கதை சொல்லும் குரல்) பாடல்களையும் இணைத்து அவர் உருவாக்கிய அந்த "சின்னத்திரைச் சித்திரத்தை" 36 ஆண்டுகள் கழித்து, பூஞ்ஞனக் குவியலுக்குள் இருந்து மீட்டெடுத்த புதையலாய் சுத்தப்படுத்தித் தந்தார் சகோதரர் திரு.வி.ஜெகதீசன். நாம்தான் இதனைச் செய்தோமா! என திரு விக்னேஸ்வரன் உட்பட நாமனைவருமே இன்று வியந்து ரசிக்கக் கூடியதாக இருப்பதால், "யாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறவேண்டி, இணையத்தளங்களில் பதிவிடுகிறோம். உங்கள் கருத்துக்கள் எங்களை மேலும் பரவசத்தில் ஆழ்த்தும் எனவும் நம்புகிறோம்.

Комментарии • 2

  • @shashisathya3256
    @shashisathya3256 3 года назад +2

    நீங்காத பசுமையான நினைவுகள்
    மிக்க நன்றிகள்

  • @mishrafmubarak643
    @mishrafmubarak643 11 месяцев назад

    Nan anďru virumbi ketlen isium kadiumm