அருள்மிகு சிமன்குடியிருப்பு இசக்கி அம்மன் கும்மிபாடல்
HTML-код
- Опубликовано: 4 янв 2025
- drive.google.c...
பாடல் வரிகள்
த. ஹேமா வெங்கடேஸ்குமார்
வெங்கல பம்பை முழங்கிவர நல்ல
வேதாள பூதமும் ஆடிவர
வேதம் புகழ் பெற்ற இசக்கிஅம்மைக்கு
வேடிக்கை கும்மியடிப்போமடி
ஆலேலோங் கும்மி ஆலேலோ
ஆலேலோங் கும்மி ஆலேலோ
மறையவர்கள் நின்று ஓதிவர இந்த
பெருமாள் சுவாமி புகழ் பாடி வர
மறை புகழ்கின்ற பெருமாள் சுவாமியை
மகிழ்ந்து கும்மியடிப்போமடி
ஆலேலோங் கும்மி ஆலேலோ
ஆலேலோங் கும்மி ஆலேலோ
ஸ்ரீ தர்மசாஸ்தா ஆடிவர அவர்
வாகனமும் பண்பாடி வர
ஓடி வருகின்ற சாஸ்தாவிற்கு
உயர்ந்த கும்மியடிப்போமடி
ஆலேலோங் கும்மி ஆலேலோ
ஆலேலோங் கும்மி ஆலேலோ
பஞ்ச வாத்தியங்கள் முழங்கிவர இந்த
பாட்டாளிமார்களும் பாடிவர
ஆடி வருகின்ற இசக்கி அம்மனுக்கு
ஆனந்த கும்மியடிப்போமடி
ஆலேலோங் கும்மி ஆலேலோ
ஆலேலோங் கும்மி ஆலேலோ
கடற்கரையில தீர்த்தமாடி அம்மா
கனத்த கூந்தல் சிக்காத்தி
சூலாயுதம் கைப்பிடித்து அவள்
சுழலும் காற்றைபோல் ஓடிவாராள்
ஆலேலோங் கும்மி ஆலேலோ
ஆலேலோங் கும்மி ஆலேலோ
அம்மன் வாரதை பாருங்கடி அம்மன்
ஆடி வருவதை பாருங்கடி
வேப்பங்குழை கை பிடித்து அம்மன்
வீதி வருவதை பாருங்கடி
ஆலேலோங் கும்மி ஆலேலோ
ஆலேலோங் கும்மி ஆலேலோ
முக்கடலிலே தீர்த்தமாடி எங்க
இசக்கி அம்மையும் பட்டு உடுத்தி
குழந்தையையும் கையில் வைத்து எங்க
நீலராஜன் தங்கையும் ஓடிவாராள்
ஆலேலோங் கும்மி ஆலேலோ
ஆலேலோங் கும்மி ஆலேலோ
பின்னல் சடையாம் பிறைசடையாம் அவள்
பின்னலிட்டது கரும்சடையாம்
பிச்சிப்பூ சூடிய இசக்கி அம்மைக்கு
முழப்பட்டு கும்மியடிப்போமடி
ஆலேலோங் கும்மி ஆலேலோ
ஆலேலோங் கும்மி ஆலேலோ
யானை வாரத பாருங்கடி யானை
அசைந்து வாரத பாருங்கடி
யானை மேல் வார இசக்கி அம்மைக்கு
கொலுசு மின்னுது பாருங்கடி
ஆலேலோங் கும்மி ஆலேலோ
ஆலேலோங் கும்மி ஆலேலோ
குதிரை வாரதை பாருங்கடி குதிரை
குலுங்கி வாரதை பாருங்கடி
குதிரை மேல் வார சாஸ்தாவுக்கு
அச்சிகை மின்னுது பாருங்கடி
ஆலேலோங் கும்மி ஆலேலோ
ஆலேலோங் கும்மி ஆலேலோ
பசு வாரதையும் பாருங்கடி
பசு பாய்ந்து வாரதை பாருங்கடி
பசு மேல்வார பத்திரகாளிக்கு
பதக்கம் மின்னுது பாருங்கடி
ஆலேலோங் கும்மி ஆலேலோ
ஆலேலோங் கும்மி ஆலேலோ
சிங்கம் வாரதை பாருங்கடி சிங்கம்
சீறி வாரதை பாருங்கடி
சிங்கம் மேல் வார புருஷாதேவிக்கு
செண்பக பூவையும் சாத்துங்கடி
ஆலேலோங் கும்மி ஆலேலோ
ஆலேலோங் கும்மி ஆலேலோ
வெள்ளி மலைதனில் வேட்டையாடி நல்ல
வெங்கலபானையில் பொங்கலிட்டு
வேத்து பூத்துவார இசக்கி அம்மைக்கு
வெள்ளி குஞ்சம் கொண்டு வீசுங்கடி
ஆலேலோங் கும்மி ஆலேலோ
ஆலேலோங் கும்மி ஆலேலோ
தங்க மலைதனில் வேட்டையாடி நல்ல
தவல பானையில் பொங்கலிட்டு
தவிச்சு வாற இசக்கி அம்மைக்கு
தங்க குஞ்சம் கொண்டு வீசுங்கடி
ஆலேலோங் கும்மி ஆலேலோ
ஆலேலோங் கும்மி ஆலேலோ
வெத்திலை பெட்டிமடிமேல நல்ல
வேப்பிலை குஞ்சம் தலமேல
மஞ்சனபெட்டி மடிமேல நல்ல
மாவிலை கும்பம் தலமேல
ஆலேலோங் கும்மி ஆலேலோ
ஆலேலோங் கும்மி ஆலேலோ
அம்மன் பிறந்தது பழவூரில்
அம்மன் சடைபிறத்தது சீமான்குடி
வேம்பு பிறந்தது மாவிளையில் அம்மன்
விளையாட வந்தது சீமான்குடியில்
ஆலேலோங் கும்மி ஆலேலோ
ஆலேலோங் கும்மி ஆலேலோ
பத்திரகாளி பிறந்தது மாவிழையில் காளி
கல் சுமந்தது பாஞ்சாலம்
கும்பம் பிறந்தது கும்பகோணம் அவள்
கூத்தாட வந்தது மாவிளையில்
ஆலேலோங் கும்மி ஆலேலோ
ஆலேலோங் கும்மி ஆலேலோ
மாரி பிறந்தது மாநாடு
மாரி மக்கள் பிறந்தது தென்னாடு
தென்னாடு காக்கின்ற பேச்சிஅம்மைக்கு
சில்லென்று கும்மியடிப்போமடி
ஆலேலோங் கும்மி ஆலேலோ
ஆலேலோங் கும்மி ஆலேலோ
மாவிழையின் மேற்கு தெரு அங்கு
கொலுவிருப்பாளாம் இசக்கிஅம்மன்
ஞானம் முந்திய ஈசனைப் போற்றி
நங்கையர் கும்மியடிப்போமடி
ஆலேலோங் கும்மி ஆலேலோ
ஆலேலோங் கும்மி ஆலேலோ
பழவிளை காட்டில் திரிந்தவளாம்
இந்த பாண்டிய நாட்டையும் கண்டவளாம்
மன்னனாம் அந்த பாண்டியனிடத்தில்
முத்தாரம் வாங்கிய அம்மாவாம்
ஆலேலோங் கும்மி ஆலேலோ
ஆலேலோங் கும்மி ஆலேலோ
வைகை நதியினில் ஓடிவரும் இந்த
வளம் பொருந்திய மாவிளையில்
சிவபெருமாள் தன்னிடத்தில்
படி வாங்கி வாந்தாளாம் இசக்கிஅம்மன்
ஆலேலோங் கும்மி ஆலேலோ
ஆலேலோங் கும்மி ஆலேலோ
மண்ணிட்ட சந்தணம் மண்கோட்டை நம்
அம்மா இருப்பது மண்கோட்டை
மண்ணிட்ட சந்தண மல் கோட்டைக்கு
எங்க மாட சுவாமியாம் காவலாளி
ஆலேலோங் கும்மி ஆலேலோ
ஆலேலோங் கும்மி ஆலேலோ
வெத்தலை பாக்கு பழம் தேங்கா அவள்
எத்தனை கேட்டாலும் தந்திடுவாள்
அத்தனருள் பெற்ற இசக்கி அம்மைக்கு
ஆனந்த கும்மியடிப்போமடி
ஆலேலோங் கும்மி ஆலேலோ
ஆலேலோங் கும்மி ஆலேலோ
கொட்டாம் பெட்டியில் மாவிடித்து நல்ல
கோவை இலையாலே மூடி கொண்டு
குங்கும் பொட்டுகாரி இசக்கி அம்மையை
குதித்து கும்மியடிப்போமடி
ஆலேலோங் கும்மி ஆலேலோ
ஆலேலோங் கும்மி ஆலேலோ
துள்ளுமாவு அந்த பலகாரம் எங்க
இசக்கி அம்மைக்கு தந்திடுவோம்
துள்ளு மாவைக் கண்டு இசக்கிஅம்மையும்
துள்ளி சாடி இங்கு ஓடிவாராள்
ஆலேலோங் கும்மி ஆலேலோ
ஆலேலோங் கும்மி ஆலேலோ
காட்சி பெற்றது கண்ணபுரம் நல்ல
கல்வி பெற்றது குலசைநகர்
மேல மாவிளையை காக்கின்ற தாய்க்கு
கோதையர் கும்மியடிப்போமடி
ஆலேலோங் கும்மி ஆலேலோ
ஆலேலோங் கும்மி ஆலேலோ
அம்மன் இருப்பது அறையிலே
அம்மன் அழுகு இருப்பது கொலுவிலே
கொலுவிருக்கின்ற இசக்கி அம்மையை
கொண்டாடி கும்மியடிப்போமடி
ஆலேலோங் கும்மி ஆலேலோ
ஆலேலோங் கும்மி ஆலேலோ