Thirukkural 21-30 | திருக்குறள் 21-30 |Athikaram 3 | அதிகாரம் 3 | Neethar perumai | நீத்தார் பெருமை

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 апр 2021
  • 21. ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
    வேண்டும் பனுவல் துணிவு
    தமக்குரிய ஒழுக்கத்தில் வாழ்ந்து, ஆசைகளை அறுத்து, உயர்ந்த மேன்மக்களின் பெருமையே, சிறந்தனவற்றுள் சிறந்தது என்று நூல்கள் சொல்கின்றன.
    --------------------
    22. துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
    இறந்தாரை எண்ணிக்கொண் டற்று
    ஆசைகளை விட்டு விலகியவரின் பெருமைக்கு, எண்ணிக்கையால் அளவு கூறுவது, இந்த உலகத்தில் இறந்து போனவர்களின் எண்ணிக்கையை எல்லாம் எண்ணுவது போலாகும்.
    --------------------
    23. இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
    பெருமை பிறங்கிற் றுலகு
    பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது
    --------------------
    24. உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
    வரனென்னும் வைப்பிற்கோர் வித்து
    மெய், வாய்,கண், மூக்கு, செவி என்னும் ஐந்து யானைகளும் தத்தம் புலன்கள் ஆகிய ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை ஆகியவற்றின் மேல் செல்லாமல், அவற்றை மன உறுதி என்னும் அங்குசத்தால் காப்பவன் எல்லாவற்றிலும் சிறந்ததாகிய வீட்டுலகிற்கு ஒருவிதை ஆவான்
    --------------------
    25. ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
    இந்திரனே சாலுங் கரி
    ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்
    --------------------
    26. செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
    செயற்கரிய செய்கலா தார்
    செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்ய முடியாதவரோ சிறியவரே.
    --------------------
    27. சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
    வகைதெரிவான் கட்டே உலகு
    சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று கூறப்படும் ஐந்து புலன்களின் வழிப் பிறக்கும் ஆசைகளை அறுத்து எறிபவனின் வசப்பட்டதே இவ்வுலகம்.
    --------------------
    28. நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
    மறைமொழி காட்டி விடும்
    நிறைவான வாக்குப் பெருமை உடைய மேன் மக்களின் உயர்வை, அவர்கள் இவ்வுலகில் சொன்ன மந்திரச் சொற்களே அடையாளம் காட்டிவிடும்.
    --------------------
    29. குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி
    கணமேயுங் காத்தல் அரிது
    நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.
    --------------------
    30. அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
    செந்தண்மை பூண்டொழுக லான்
    எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.
    #Thirukkural,#kural,#pothumarai,#Vaansirappu,#Poyyamozhi,#Vayuraivazhthu,#porutpaal,#Muppal,#Tamilmarai,#Muppaanool,#Thiruvalluvam #Neetharperumai,#Athikaram3
    பொய்யாமொழி / Poyyamozhi - statements devoid of untruth
    வாயுரை வாழ்த்து / Vayurai vazhthu - truthful utterances
    தெய்வநூல் / porutpaal - Holy book
    பொதுமறை / Pothumarai - Book for all
    முப்பால் / Muppal - three chaptered
    தமிழ் மறை / Tamil marai - Tamil Veda
    முப்பானூல் / Muppaanool - three chaptered book
    திருவள்ளுவம் / Thiruvalluvam - the work of Thiruvalluvar
    Thiruvalluvar: en.wikipedia.org/wiki/Thiruva...
    Naayanar, Theyva pulavar, Perunavalar, Poyyil pulavar
    திருவள்ளுவர் : ta.wikipedia.org/wiki/%E0%AE%...​
    திருவள்ளுவரை நாயனார், தேவர், தெய்வப்புலவர், பெருநாவலர், பொய்யில் புலவர் என்றும் சில சிறப்புப்பெயர்களால் அழைப்பர்.

Комментарии • 1