Thirukkural 31-40 | அதிகாரம் 4 | அறன் வலியுறுத்தல் | Athikaram 4 | Aran valiyiruthal

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 май 2021
  • 31: சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
    ஆக்கம் எவனோ உயிர்க்கு
    அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது?
    32:அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை
    மறத்தலின் ஊங்கில்லை கேடு
    ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை.
    33: ஒல்லும் வகையான அறவினை ஓவாதே
    செல்லும்வாய் எல்லாஞ் செயல்
    செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.
    34: மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
    ஆகுல நீர பிற
    ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.
    35: அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
    இழுக்கா இயன்ற தறம்
    பிறர் மேன்மை கண்டு பொறாமை, புலன்கள் போகும் வழிச் செல்லும் ஆசை, இவை தடைபடும் போது வரும் கோபம், கோபத்தில் பிறக்கும் தீய சொல் எனும் இந்நான்கையும் விலக்கித் தொடர்ந்து செய்யப்படுவது அறம்.
    36: அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது
    பொன்றுங்கால் பொன்றாத் துணை
    பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும்
    37: அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
    பொறுத்தானோ டூர்ந்தான் இடை
    அறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில் உட்கார்ந்து செல்பவர்களைப் போல வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்கள் இரண்டையும் எளியவாகக் கருதி மகிழ்வுடன் பயணத்தை மேற்கொள்வார்கள் தீய வழிக்குத் தங்களை ஆட்படுத்திக் கொண்டவர்களோ பல்லக்கைத் தூக்கிச் சுமப்பவர்களைப் போல இன்பத்திலும் அமைதி கொள்ளாமல், துன்பத்தையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவமின்றி வாழ்வையே பெரும் சுமையாகக் கருதுவார்கள்
    38: வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
    வாழ்நாள் வழியடைக்கும் கல்
    ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தை செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்.
    39: அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்
    புறத்த புகழும் இல
    அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.
    40: செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
    உயற்பால தோரும் பழி
    பழிக்கத் தக்கவைகளைச் செய்யாமல் பாராட்டத்தக்க அறவழிச் செயல்களில் நாட்டம் கொள்வதே ஒருவர்க்குப் புகழ் சேர்க்கும்
    பொய்யாமொழி / Poyyamozhi - statements devoid of untruth
    வாயுரை வாழ்த்து / Vayurai vazhthu - truthful utterances
    தெய்வநூல் / porutpaal - Holy book
    பொதுமறை / Pothumarai - Book for all
    முப்பால் / Muppal - three chaptered
    தமிழ் மறை / Tamil marai - Tamil Veda
    முப்பானூல் / Muppaanool - three chaptered book
    திருவள்ளுவம் / Thiruvalluvam - the work of Thiruvalluvar
    Thiruvalluvar: en.wikipedia.org/wiki/Thiruva...
    Naayanar, Theyva pulavar, Perunavalar, Poyyil pulavar
    திருவள்ளுவர் : ta.wikipedia.org/wiki/%E0%AE%...​
    திருவள்ளுவரை நாயனார், தேவர், தெய்வப்புலவர், பெருநாவலர், பொய்யில் புலவர் என்றும் சில சிறப்புப்பெயர்களால் அழைப்பர்.
    #Thirukkural,#kural,#manvaadai,#pothumarai,#Vaansirappu,#Poyyamozhi,#Vayuraivazhthu,#porutpaal,#Muppal,#Tamilmarai,#Muppaanool,#Thiruvalluvam #Neetharperumai,#Athikaram4,

Комментарии • 1