master piece movie. sivaji sir lived has mookaya devar. super hit songs. sivaji, jayalalitha good combination, record break collection in black & white.
டி.ஆர்.மகாலிங்கம் வீட்டில் படப்பிடிப்பு சிவாஜிகணேசன்- ஜெயலலிதா நடித்த 'பட்டிக்காடா பட்டணமா' படத்தின் வெளிப்புற படப்பிடிப்பு மதுரை மாவட்டம் சோழவந்தானில் நடந்தது. அப்போது ஜெயலலிதா, பல நாட்கள் சோழவந்தான் அருகே தென்கரையில் உள்ள டி.ஆர். மகாலிங்கத்தின் வீட்டில் தங்கி இருந்து படப்பிடிப்பில் பங்கேற்றார். இதுகுறித்து டி.ஆர். மகாலிங்கத்தின் பேரன் டி.ஆர்.எம். ராஜேஷ் மகாலிங்கம் கூறியதாவது:- எங்கள் தாத்தா, தென்கரையில் கட்டிய வீட்டுக்கு காமராஜர், கருணாநிதி, எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெயலலிதா போன்ற பிரபலங்கள் பலர் வந்துள்ளனர். 1972-ம் ஆண்டு 'பட்டிக்காடா பட்டணமா' படப்பிடிப்புக்காக வந்த ஜெயலலிதா எங்கள் வீட்டில்தான் தங்கி இருந்தார். அவருக்கு தனி அறை ஒதுக்கப்பட்டது. படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் எங்கள் வீட்டு சமையலறையில் என் பாட்டி உள்ளிட்ட பெண்களுடன் சேர்ந்து சமையல் செய்ததாகவும், எங்கள் வீட்டை ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்துப் போனது என்றும் பாட்டி கூறியுள்ளார். சிவாஜியும் சில நாட்கள் தங்கினார். அந்த படத்தில் இடம்பெற்ற 'கேட்டுக்கோடி உருமி மேளம்' என்ற பாடல் எங்கள் வீட்டில்தான் படமாக்கப்பட்டது. இதனால் ஜெயலலிதாவுக்கும், எங்கள் குடும்பத்துக்கும் எப்போதும் தொடர்பு இருந்தது. அவர் முதல்-அமைச்சராக இருந்த போது 2016-ம் ஆண்டில் என்னை சந்திக்க விரும்பினார். நானும், குடும்பத்தினரும் அவரை முதல்-அமைச்சர் அலுவலகத்தில் சந்தித்தோம். பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்த அவர், எங்கள் தாத்தாவின் பெருமைகள் பற்றி பேசியது மறக்க முடியாதது. நாடக உலகிலும், திரைத்துறையிலும் தாத்தாவின் புகழ் எப்போதும் மங்காது. அவர் வாழ்ந்த வீட்டை படப்பிடிப்புகளுக்காக கொடுப்பது என முடிவு செய்துள்ளோம். அவரது நூற்றாண்டு பிறந்தநாள் விழா முடிந்த உடன் இதற்கான அறிவிப்பை வெளியிடுவேன். இவ்வாறு அவர் கூறினார். -நன்றி "தினத்தந்தி" 16.6.2024
master piece movie. sivaji sir lived has mookaya devar. super hit songs. sivaji, jayalalitha good combination, record break collection in black & white.
டி.ஆர்.மகாலிங்கம் வீட்டில் படப்பிடிப்பு
சிவாஜிகணேசன்- ஜெயலலிதா நடித்த 'பட்டிக்காடா பட்டணமா' படத்தின் வெளிப்புற படப்பிடிப்பு மதுரை மாவட்டம் சோழவந்தானில் நடந்தது.
அப்போது ஜெயலலிதா,
பல நாட்கள் சோழவந்தான் அருகே தென்கரையில் உள்ள டி.ஆர்.
மகாலிங்கத்தின் வீட்டில் தங்கி இருந்து படப்பிடிப்பில் பங்கேற்றார்.
இதுகுறித்து டி.ஆர்.
மகாலிங்கத்தின் பேரன் டி.ஆர்.எம்.
ராஜேஷ் மகாலிங்கம் கூறியதாவது:-
எங்கள் தாத்தா, தென்கரையில் கட்டிய வீட்டுக்கு காமராஜர், கருணாநிதி, எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெயலலிதா போன்ற பிரபலங்கள் பலர் வந்துள்ளனர். 1972-ம் ஆண்டு 'பட்டிக்காடா பட்டணமா' படப்பிடிப்புக்காக வந்த ஜெயலலிதா எங்கள் வீட்டில்தான் தங்கி இருந்தார். அவருக்கு தனி அறை ஒதுக்கப்பட்டது. படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் எங்கள் வீட்டு சமையலறையில் என் பாட்டி உள்ளிட்ட பெண்களுடன் சேர்ந்து சமையல் செய்ததாகவும், எங்கள் வீட்டை ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்துப் போனது என்றும் பாட்டி
கூறியுள்ளார்.
சிவாஜியும் சில நாட்கள் தங்கினார். அந்த படத்தில் இடம்பெற்ற 'கேட்டுக்கோடி உருமி மேளம்' என்ற பாடல் எங்கள் வீட்டில்தான்
படமாக்கப்பட்டது. இதனால் ஜெயலலிதாவுக்கும், எங்கள் குடும்பத்துக்கும் எப்போதும் தொடர்பு இருந்தது. அவர் முதல்-அமைச்சராக இருந்த போது 2016-ம் ஆண்டில் என்னை சந்திக்க விரும்பினார். நானும், குடும்பத்தினரும் அவரை முதல்-அமைச்சர் அலுவலகத்தில் சந்தித்தோம். பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்த அவர், எங்கள் தாத்தாவின் பெருமைகள் பற்றி
பேசியது மறக்க
முடியாதது.
நாடக உலகிலும், திரைத்துறையிலும் தாத்தாவின் புகழ் எப்போதும் மங்காது. அவர் வாழ்ந்த வீட்டை படப்பிடிப்புகளுக்காக கொடுப்பது என முடிவு செய்துள்ளோம். அவரது நூற்றாண்டு பிறந்தநாள் விழா முடிந்த உடன் இதற்கான அறிவிப்பை வெளியிடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
-நன்றி "தினத்தந்தி"
16.6.2024
The only black and white movie collected. One crores. Movie a mega hit movie
Nice movie I like it ❤
❤
17:39 17:40