En Kadhala | Naatpadu Theral - 06 | Vairamuthu | Vijay | NR Raghunanthan | Srinisha Jayaseelan

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 май 2021
  • Before the might of love, when caste, religion, race and status shatter, will age matter?
    இது ஒரு வித்தியாசமான பாட்டு. ஆமாம்! வயது வித்தியாசமான பாட்டு. வயதில் மூத்தவரை இளம்பெண் காதலிக்கும் காமம் கடந்த பாட்டு. காதலுக்குக் கண்ணில்லை; சிலநேரங்களில் வயது வேறுபாடும் இல்லை.
    *
    Naatpadu Theral is a 100 song project by Kavipperarasu Vairamuthu.
    100 Composers - 100 singers - 100 Directors.
    கவிப்பேரரசு வைரமுத்துவின் நாட்படு தேறல் 100 பாடல்கள் திட்டம்.
    100 இசையமைப்பாளர்கள் - 100 பாடகர்கள் - 100 இயக்குநர்கள். வெவ்வேறு உள்ளடக்கங்களில் உலகத்தின் எல்லாப் பொருள் குறித்தும் பாடப்படும் பாடல்கள்.
    *
    Song : En Kadhala
    Lyricist: Vairamuthu
    Composer: N.R.Raghunanthan
    Singer : Srinisha Jayaseelan
    Director : Vijay
    Produced by : Vairamuthu
    Video Crew :
    Artist : Anikha Surendhran , Yohan Chacko
    Video Credits :
    Dop : Gurudev
    Editor : R.Vasanthakumar
    Costume : Jenifar Maria
    Assistant Directors : Karthik Gandhi, Manoranjan D Samy , Swetha
    Dance Choreography : Abhinaya Karthik
    Executive Producer : S. Prem
    Musician Credits :
    Song Composed, Arranged, Produced by N.R.Raghunanthan
    Mastered by S.Sivakumar
    Music Distribution Partner : Believe Digital
    PRO : Nikil Murukan
    Office Administration : P.Baskaran, Kesavan Vellaichamy
    Line Production : Kanaa Ads
    Also Available on :
    Apple Music : music.apple.com/in/album/en-k...
    Amazon Music : music.amazon.in/albums/B095KB...
    Gaana : gaana.com/song/en-kadhala-2
    Hungama : www.hungama.com/album/en-kadha...
    Resso : m.resso.app/ZSJa8cbLD/
    Saavn : www.jiosaavn.com/album/En-Kad...
    Spotify : open.spotify.com/album/4Ss5Ro...
    Wynk : wynk.in/music/song/en-kadhala...
    RUclips Music : • En Kadhala (Naatpadu T...
    *
    பாடல் வரிகள் :
    என் காதலா
    காதல் வயது பார்க்குமா?
    நானும்
    சின்னக் கன்று என்று இன்று
    சிந்தை மாறுமா?
    வயதால் நம்
    வாழ்வு முறியுமா?
    வாய் முத்தம்
    வயது அறியுமா?
    நிலா வெண்ணிலா
    வயதில் மூத்ததில்லையா
    இருந்தும்
    நிலவு சொல்லி இளைய அல்லி
    மலர்வதில்லையா?
    என்வாழ்வில் தந்தை இல்லையே!
    தந்தைபோல் கணவன் வேண்டுமே!
    *
    ஆணும் பெண்ணும் சேர்வது
    ஆசைப் போக்கில் நேர்வது
    காதல் நீதி என்பது
    காலம் தோறும் மாறுது
    வெட்டுக்கிளியின் ரத்தமோ
    வெள்ளையாக உள்ளது
    விதிகள் எழுதும் ஏட்டிலே
    விதிவிலக்கும் உள்ளது
    ஆழி ரொம்ப மூத்தது
    ஆறு ரொம்ப இளையது
    ஆறு சென்று சேரும்போது
    யாரு கேள்வி கேட்பது?
    *
    காதல் சிந்தும் மழையிலே
    காலம் தேசம் அழியுதே
    எங்கே சிந்தை அழியுதோ
    காதல் அங்கே மலருதே!
    அறிவழிந்து போனபின்
    வயது வந்து தோன்றுமா?
    பொருள் அழிந்து போனபின்
    நிழல் கிடந்து வாழுமா?
    அறமிருக்கும் வாழ்விலே
    முரணிருக்கும் என்பதால்
    முரணிருக்கும் வாழ்விலும்
    அறமிருக்கும் இல்லையா?
    *
    En kaadhalaa
    kaadhal vayadhu paarkkumaa?
    naanum
    chinnak kanRu enRu inRu
    chindhai maaRumaa?
    vayadhaal nam
    vaazhvu muRiyumaa?
    vaay mutham
    vayadhu aRiyumaa?
    nilaa veNNilaa
    vayadhil moothadhillaiyaa
    irundhum
    nilavu cholli iLaiya alli
    malarvadhillaiyaa?
    envaazhvil thandhai illaiyae!
    thandhaiboal kaNavan vaeNdumae!
    *
    aaNum peNNum chaervadhu
    aasaip poakkil naervadhu
    kaadhal needhi enbadhu
    kaalam thoaRum maaRudhu
    vettukkiLiyin rathamoa
    veLLaiyaaha uLLadhu
    vidhihaL ezhudhum aettilae
    vidhivilakkum uLLadhu
    aazhi romba moothadhu
    aaRu romba iLaiyadhu
    aaRu chenRu chaerumboadhu
    yaaru kaeLvi kaetpadhu?
    *
    kaadhal chindhum mazhaiyilae
    kaalam thaesam azhiyudhae
    engae chindhai azhiyudhoa
    kaadhal angae malarudhae!
    aRivazhindhu poanabin
    vayadhu vandhu thoanRumaa?
    poruL azhindhu poanabin
    nizhal kidandhu vaazhumaa?
    aRamirukkum vaazhvilae
    muraNirukkum enbadhaal
    muraNirukkum vaazhvilum
    aRamirukkum illaiyaa?
    ***
    © 2021 Vairamuthu
    #Tamil_New_Song #Anika #Vairamuthu

Комментарии • 2,4 тыс.

  • @vanakampa9222
    @vanakampa9222 3 года назад +52

    தந்தைபோல் கணவன் வேண்டுமே என்பது கொஞ்சம் நெருடலான வரி. ஆனால் என் வாழ்வில் தந்தை இல்லையே என்று முதல் வரியை போட்டு இரண்டாவது வரிக்கு நியாயம் செய்துவிட்டார் கவிப்பேரரசு.

  • @ayanaish655
    @ayanaish655 2 года назад +58

    அவனது காதல் இயற்கையோடு,... அவளது காதல் இயற்கையோடும் அதை காதலிக்க சொல்லி தந்த அவனோடும் 💕....

    • @krithisheha8539
      @krithisheha8539 2 года назад +2

      Nice words
      It makes me to feel....
      thank you

  • @revathimuthukumar4448
    @revathimuthukumar4448 3 года назад +1076

    ஒரு நபரை காதலிப்பதை விட ....இயற்கையை காதலியுங்கள் ❤️ கண்ணீர் சிந்தாமல் இருக்கலாம்...

  • @InspiringMind491
    @InspiringMind491 2 года назад +57

    என் வாழ்வில் தந்தை இல்லையே தந்தை போல கணவன் வேண்டுமே...............what a lyrics 😘😍😘

  • @suriyareddy5119
    @suriyareddy5119 2 года назад +41

    என் வாழ்வில் தந்தை இல்லயே தந்தை போல கணவன் வேண்டுமே ❤️✨👌intha oru lyricskaga intha song ah 100 time ku Mela kekalam

  • @palania5129
    @palania5129 2 года назад +18

    "போருளழிந்து போனபின்
    நிழல் கிடந்து வாழுமா?.
    அறமிருக்கும் வாழ்விலும்
    முரண் இருக்கும் இல்லையா?
    முரண் இருக்கும் காதலில்
    அறமிருக்கும் இல்லையா?."
    °என்னே பொருள் பொதிந்த
    வார்த்தைகள் .
    என்னே தர்க்கரீதியான
    உண்மை நிறை வார்த்தைகள்
    வாழ்க கவிதை .
    வாழ்க கவிபேரரசு.
    வாழ்க எம் வளமார்ந்த தமிழ்..

  • @lovelyeditz24
    @lovelyeditz24 3 года назад +27

    அன்புக்கு வயது இல்லை என்பதை உணர்ந்தேன் ............ காலம் கடந்த பிறகும் நினைவில் இருப்பது காதல் செய்த தருனங்களே........ என்றும் சில நினைவுகளுடன்.....

  • @vaimudha85
    @vaimudha85 3 года назад +211

    ஐயா...என்னய்யா இது.?
    வருத்தம் அளிக்கிறது...
    இது பாரதிராஜாவின் "முதல் மரியாதை" காலமல்ல..
    உங்கள் கவிதைகளை
    ஒரு பள்ளி வயது சிறுமி
    ரசித்து
    பிரம்மித்து போகலமே தவிர
    பிரேமித்து போவது போல காட்டாதீர்கள்...
    அறனில் முரண்
    முரணில் அறனா?
    பாலில் விஷம்
    விஷத்தில் பாலா?
    கொஞ்சம்
    உங்கள்
    கற்பனை குதிரையை
    யதார்த்த உலகிற்கு
    திருப்புங்கள்...
    -
    இப்படிக்கு
    உங்கள் தமிழின்
    ஈர்ப்பாளன்

    • @thangarajkmch2502
      @thangarajkmch2502 3 года назад +3

      பாட்டிலே உங்களுக்கு பதில் உண்டு ஆழி ரொம்ப பெரியது... ஆறு ரொம்ப சிறியது... யாரு இதை கேள்வி கேட்பது

    • @user-qz3cq2tb2t
      @user-qz3cq2tb2t 3 года назад +6

      ஆழி ரொம்ப மூத்தது
      ஆறு ரொம்ப இளையது
      ஆறு சென்று சேரும்போது
      யாரு கேள்வி கேட்பது?
      பொருந்தாக் காமம் இந்த பாடலில் இல்லை... காமம் கடந்த காதல்தான் உள்ளது....ரசனை இல்லாமல் விமர்சனம் செய்ய வேண்டாம்🙂 கண் தெரியாதவன் ஓவியத்தை விமர்சனம் செய்வது போல உள்ளது

    • @aruran3
      @aruran3 3 года назад +1

      என் வாழ்வில் தந்தை இல்லையே தந்தை போல கனவன் வேண்டுமே

  • @SriRam2613_
    @SriRam2613_ 3 года назад +116

    Paatu keka nalla irukku Srinisha Jayaseelan did a good job 💥
    But song la convey panra vishiyam seriya padala thanthai paasathukkaga appa vayasula irukka oruthara luv panrathu oru maari awkward ah irukku 😬

  • @tamilarasi9720
    @tamilarasi9720 3 года назад +37

    காதல் சிந்தும் மழையிலே
    காலம் தேசம் அழியுதே
    எங்கே சிந்தை அழியுதோ
    காதல் அங்கே மலருதே!

  • @user-mh9tr1yi5e
    @user-mh9tr1yi5e 2 года назад +27

    காதல் வயது பார்க்குமா தெரியவில்லை ஆனால் மனைதை வளைத்து பார்க்கும் இந்த பாடல் என்னை இழுத்து விட்டது

  • @rockeyrockey8289
    @rockeyrockey8289 2 года назад +248

    அந்த பொண்ணை எந்த மாதிரி காண்பித்தாலும்..
    சிறு குழந்தையாகத் தான் தெரிகின்றாள்..

  • @gmpchiyaankgf8500
    @gmpchiyaankgf8500 2 года назад +23

    இயற்கையை காதலிப்பவனை இந்த உலகம் லூசூ என்று தான் சொல்லும்
    இயற்கையும் இறைவனும் மனிதனின் இரு கண்கள்🌹🌹🌹

  • @AMJOSEDIDEXE
    @AMJOSEDIDEXE 2 года назад +184

    நெஞ்சை கொள்ளை கொண்ட பாடல்: "ஒவ்வொரு வார்த்தைகளும் மிக அற்புதமாக காட்சி ஆக்கப்பட்டிருக்கிறது! நேற்று தற்செயலாக இந்த பாடலை பார்த்தேன்! பார்த்த முதல் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்! நான் எவ்வளவு பெரிய முட்டாளாக இருந்திருக்கிறேன் என்று என்னை எள்ளி நகையாடுவது போலிருக்கிறது இந்தப் பாடல்! வயது வித்தியாசத்தை காரணம் காட்டி என்னிடம் காதல் சொன்ன குழந்தைப் பெண்களை தட்டிக் கழித்திருக்கிறேன்! ஏன் என் தாய் எனக்கு திருமணத்திற்கு பார்த்த பல குறைந்த வயது பெண்களை நான் நிறைய வயது வித்தியாசம் காரணம் காட்டியே வேண்டாம் என்று நிராகரித்து இருக்கிறேன்! ஒன்றே யோசிக்க மறந்துப் போனேன்! அதை இந்தப் பாடல் ஒவ்வொரு வரியிலும் சொல்லுகிறது! காதலுக்கு வயதில்லை காமம் கடந்த ஒரு உன்னதமான மானசீக நட்பு கொள்ளும் ஒரு குழந்தைப் பெண்ணின் ஒருதலைக் காதலைச் சொல்லி இருக்கிறார்கள்! வைரமுத்துவின் வரிகள் ஒவ்வொன்றும் செதுக்கப்பட்ட நாட்பட்டத் தேறல் போல ஒரு பாடல் இது! அவன் செய்வதெல்லாம் செய்து பார்த்து மகிழும் ஒரு குழந்தைப் பெண்ணின் கபடமற்ற காதல் இது. இயற்கையை நேசிக்க கற்றுக் கொடுத்தவனை இழந்தப்பின் நினைத்து வெம்முகிறாள் இந்த மழலைக் காதலி. வழிப்போக்கன் என்ன லவுசா என சொல்லும்வரை இதற்குப் பெயர் காதல் என்று கூட தெரியாமல் அதுவரை அவன் மீது அவள் மரியாதை கொள்கிறாள், பின் தந்தை போல கணவன் வேண்டும் என்ற அவள் அறியாமை எண்ணி சிரிக்கின்றேன்! தந்தை போல் ஒரு தோழன் வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கலாம். ஆனால் தன் தந்தை போல் காதலன் வேண்டும் என்ற அவளுடைய பேராசையில் முரண் இருந்தாலும் அறம் இருக்கிறது என்கின்றாள்! நிலவு பழையது எனவும் கூறி இளைய அல்லி மலர்வதிலையா எனும்போது குழந்தை பெண்ணுக்குள் இருக்கும் பெரிய பெண்ணின் வெட்கமும் சிறிய பெண்ணின் சிரிப்பும் கள்ளமும் கபடமும் இல்லாமல் வெளிப்படுத்தியிருக்கிறாள்! ஆழி பெரியது ஆறு இளையது ஆழியை சேரும்போது என்னை யார் கேள்வி கேட்பது என்று தன் தரப்பு நியாயமாக விதண்டாவாதம் செய்கிறாள்! இது சிவாஜி கணேசனின் இரண்டாவது முதல் மரியாதை போல் உள்ளது. இதில் அவளின் காதல் இலக்கியம் வாழ்வியல் இலக்கணத்தை விழுங்குகிறதா இல்லை வாழ்வியல் இலக்கியத்திற்கு உட்பட்டு இருக்கிறதா என்பதை கூற இயலவில்லை! இருப்பினும் ஒரு குழந்தைப் பெண்ணின் உணர்வுகளை மதிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அவளின் காதல் ஆழத்தை புரிந்து அவளின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது அவள் பூவை விட மென்மையாக இருப்பதால் அவளின் காதலை தட்டிக் கழித்து காயப்படுத்த மனமில்லை இப்போது...!" - Amjose Didexe .

  • @jerrypage3466
    @jerrypage3466 3 года назад +57

    Song super but ivlo age difference la love katrathu thappa therithu maththapadi song super super 👍

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj1127 2 года назад +76

    இது காதலே அல்ல.அந்த மனிதனுக்கு.. இயற்கை மேல் உள்ள காதலால், இந்த குழந்தைக்கு அவர் மேலே தோன்றும் மரியாதையான ஈர்ப்பினால் ஏற்படும்ஆர்வத்தைக்
    காதலென நினைக்கும்,இரண்டும் கெட்டான் வயதில் தோன்றும் சிந்தனைப் பிறழ்வு அவ்வளவே...

  • @sundarimurugan5248
    @sundarimurugan5248 3 года назад +46

    இங்கே மூத்தது(பழமை) பற்றிய சித்தரிப்புகள் வியக்கத்தக்கது. இன்று வியக்க வைக்கும் அறிவியல் விந்தைகள் எத்தனை வந்தாலும், மூப்பு அதாவது மிகவும் பழமை வாய்ந்த அனைத்தும் தான் நம்மை இயங்க வைத்துக் கொண்டு இருக்கிறது ( சூரியன், உலகம், காற்று, கடல், மண், இயற்கை, ஏன் நம் தமிழ்மொழி கூட).
    காட்சிகளாய் பாராமல் பாடல் வரிகளாய் பார்த்தால் எம் பழமையானத் தாய்மொழித் தமிழுக்கும் அதனை உண்ணதமான உணர்வோடு இயங்க வைத்துக்கொண்டு இருக்கும் இயற்கைக்கும் பெருமை சேர்க்கும் விதமாய் இப்பாடல் அமைந்துள்ளது. நன்றி கவிஞரே.....

  • @poojaasrini789
    @poojaasrini789 2 года назад +16

    அருமையான வரிகள். இதை நான் மூன்றாவது முறையாகக் கேட்கிறேன். ஒவ்வொரு முறையும் இது புதியது போல் உணர்கிறேன்.

  • @jayakumarp9648
    @jayakumarp9648 3 года назад +50

    சமூக கட்டமைப்பை மீறிய காதல்கள் சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறது.....அதை இப்படி திரையில் காட்டும் போது விதிவிலக்குகளை விதியாக எடுத்துகொள்ளாமல், அதை கடந்து செல்லும் பக்குவம் அனைவருக்கும் இருக்கும் என்று நம்புவோம்...

  • @God-ly7vo
    @God-ly7vo 3 года назад +29

    எந்த ஒரு விஷயத்துக்கும் நான் முழுமையாக அடிமையானது இல்ல ஆனா இந்த பாட்டுக்கு நான் அடிமை ஆயிட்டேன் எத்தனைமுறை கேட்டுகிட்டே இருக்கேன்னு எனக்கே தெரியல கேட்டுக்கிட்டே இருக்கேன்...... , 😍😍😍😍♂️♀️

    • @yummyfoods6872
      @yummyfoods6872 3 года назад +1

      s nanum than seema song super feel

    • @yoursakhi
      @yoursakhi 3 года назад +1

      நானும் தான்.. வரிகள் ரொம்ப அழகா இருக்கு.. திரும்ப திரும்ப கேட்க தோன்றுகிறது😍😍

    • @veralevelboys5852
      @veralevelboys5852 3 года назад +1

      நானும்

    • @bowsibowsikutty7544
      @bowsibowsikutty7544 3 года назад

      same pa

    • @raji7815
      @raji7815 3 года назад

      S nanum

  • @kalaamma7391
    @kalaamma7391 3 года назад +11

    என் வாழ்வில் தந்தை இல்லையே!
    தந்தை போல் கணவன் வேண்டுமே!
    என்னே!வரிகள் அருமை.
    குட்டிப் பெண்ணின் நடிப்பு அருமை!வாழ்த்துக்கள் மா

  • @sharukkhans2490
    @sharukkhans2490 2 года назад +69

    என் காதலா..
    காதல் வயது பார்க்குமா..
    நானும் சின்ன கன்று என்று என்ற சிந்தை மாறுமா..
    வயதான வாழ்வு முறியுமா..
    வாய் முத்தம் வயது அறியுமா..
    நிலா வெண்ணிலா,வயதில் மூத்ததில்லையா..
    இருந்தும் நிலவு சொல்லி இளைய அல்லி மலர்வதில்லையா....
    என் வாழ்வில் தந்தை இல்லையே......
    தந்தை போல் கணவன் வேண்டுமே...
    என் காதலா..
    காதல் வயது பார்க்குமா..
    நானும் சின்ன கன்று என்று என்ற சிந்தை மாறுமா..
    ஆணும் பெண்ணும் சேர்வது...
    ஆசை போக்கில் நேர்வது..
    காதல் நீதி என்பது..
    காலம் தோறும் மாறுது...
    வெட்டுக்கிளியின் இரத்தமோ, வெள்ளையாக உள்ளது..
    விதிகள் எழுதும் ஏட்டிலே...
    விதி விலக்கு உள்ளது...
    ஆழி ரொம்ப மூத்தது...
    ஆறு ரொம்ப இளையது...
    ஆறு சென்று சேரும் போது யாரு கேள்வி கேட்பது.....
    காதல் சிந்தும் மழையிலே..
    காலம் வேசம் அழியுதே...
    எங்கே சிந்தை அழியுதோ..
    காதல் அங்கே மலருதே...
    அறிவழிந்து போனபின்...
    வயது வந்து தோன்றுமா...
    பொருள் அழிந்து போனபின்..
    நிழல் கிடந்து வாழுமா..
    அரண் இருக்கும் வாழ்விலே...
    முரண் இருக்கும் என்பதால்...
    முரண் இருக்கும் வாழ்விலும்..
    அரண் இருக்கும் இல்லையா...
    என் காதலா..
    காதல் வயது பார்க்குமா..
    நானும் சின்ன கன்று என்று என்ற சிந்தை மாறுமா..
    என் காதலா..
    காதல் வயது பார்க்குமா..
    நானும் சின்ன கன்று என்று என்ற சிந்தை மாறுமா..

  • @chellappanstr
    @chellappanstr 2 года назад +46

    அறமிருக்கும் வாழ்விலே முறணிருக்கும் என்பதால்... முறணிருக்கும் வாழ்விலே அறமிருக்கும் இல்லையா...!!! Excellent 👌

  • @subashinijayaganeshan7662
    @subashinijayaganeshan7662 2 года назад +52

    தந்தை போன்று கணவன் கிடைப்பது கடவுள் கொடுத்த வரம். அந்த வகையில் நானும் ஒரு அதிஷ்டம் செய்தவள் தான்💑

  • @mssimon6389
    @mssimon6389 2 года назад +32

    "நிலா வெண்ணிலா, வயதில் மூத்ததில்லயா.."
    நிலவாக நான், நினைவாக நீ💗

  • @vaiyapuricongress5072
    @vaiyapuricongress5072 3 года назад +133

    காதல் வயது பார்க்குமா? இல்லைதான். நிலா வெண்ணிலா வயதில் மூத்ததில்லையா இருந்தும் நிலவு சொல்லி இளைய அல்லி மலர்வதில்லையா ஆகா கவிஞரின் கவிதை அருமை! அருமை!!

  • @mannaiyoutuber5971
    @mannaiyoutuber5971 3 года назад +18

    சிரி நிஷா அவர்கள் குரல் நாம் எனும் மலேசிய தொடரில் ஒலிபரப்பு செய்யப்பட்ட பின்னரே நான் கவனிக்க தொடங்கினேன். அன்று முதலே அந்த குரலில் ஓர் ஈர்ப்பு....

  • @thejaswini96
    @thejaswini96 2 года назад +89

    She is not loving him. People are misunderstanding her feeling. She loves his attitude only

  • @user-ny1cf3hz9e
    @user-ny1cf3hz9e 3 года назад +1425

    First scene la அந்த பொண்ணோட அப்பாக்கு உடம்பு சரியில்லை என்று நினைத்து விட்டேன்

    • @thalapathiprabhu
      @thalapathiprabhu 3 года назад +36

      😂😂😂

    • @Lawyerponnu
      @Lawyerponnu 3 года назад +86

      Na avunga grandfather nu ninaichaen.... reactionum apdi dhaan irundhuchu😂😂😂

    • @balajisekar3656
      @balajisekar3656 3 года назад +9

      😂😂😂

    • @arivumech1798
      @arivumech1798 3 года назад +20

      Naanum appdithaya nenachite😂

    • @anujavp1747
      @anujavp1747 3 года назад +7

      🤣🤣🤣😂😂

  • @Sivagangai_queen567
    @Sivagangai_queen567 3 года назад +33

    Srinisha voice vera level . கேட்கவே காதுக்கு ரொம்ப இனிமையா இருக்கு.

  • @lovechaneel3242
    @lovechaneel3242 2 года назад +95

    இது ஒரு கற்பனை கலந்த கதை ஆனாலும் கதையோடு பாடல் நகர்கிறது

  • @balajisakkrapani9823
    @balajisakkrapani9823 3 года назад +21

    நாட்படு தேறல் பாடல் தொகுப்பில் இதுவரை வெளி வந்த பாடல்களில் இந்த பாடலே உச்சம். வைர வரிகள் மென்மையான இசை ஜாலம் இரண்டும் பின்னி பினைந்து இன்னொரு ஏன்டி கள்ளச்சி பாடலாக உருவெடுத்திருககிறது. என்.ஆர். ரகுநந்தன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஸ்ரீீ நிஷா நன்றாக பாடியிருக்கிறார். ஆனால் வேறு பெரிய பாடகியர் யாரேனும் குறிப்பாக கே.எஸ். சித்ரா அம்மா பாடியிருந்தால் இன்னும் உச்சரிப்பில் குரல் தெளிவில் இந்தப் பாடல் உச்சம் தொட்டிருக்கும் என்பது என் பணிவான எண்ணம்.
    வரிகளில் துள்ளும் இளமை எங்கள் கவிப்பேரரசருடன் வார்ததை போரிட யாருமில்லை என்பதை அடித்துக் கூறுகிறது. இது போன்ற பாடல்களை யாரால் எழுத இயலும். இன்றுள்ள மகா கவிகளால் முடியுமா? முடியவே முடியாது. எங்கள் கவிபேரசானை யாராலும் விஞ்ச முடியாது.

  • @selvamk5628
    @selvamk5628 3 года назад +44

    இந்த பாடல் கேட்கும் போது இனம் புரியாத ஓர்உணர்வு. தந்தை போன்ற தோற்றம் கொண்டவர்களையே பெண்கள் முதலில் காதலிப்பார்கள் என்பது என் வாழ்வின் நிரூபணம்.... பெண்களின் மனசைப்படித்த நற் கவிஞர் வைரமுத்து

    • @athishd8228
      @athishd8228 3 года назад +2

      Idhu enga poi mudiya pogudho therilaye

    • @srivathsan_baskaran
      @srivathsan_baskaran 3 года назад +4

      This is called pedophilia da dubukku

    • @harshavadhanethi8101
      @harshavadhanethi8101 3 года назад

      @@srivathsan_baskaran correct nanba paedophilia pathi pada vendiyadhu chinna ponnunga manasula pottu poga vendiyadhu Aprm andha boomer pasangalum kadhal vayasu pakkadhu nnu harrase panna arambichiruvanunga

  • @Thamizh_Magal
    @Thamizh_Magal 3 года назад +24

    பாடல் வரிகள் அருமை இசை அதை விட அருமை 👌👌👌

  • @thulasist2376
    @thulasist2376 3 года назад +20

    "aazhi romba moothadhu
    aaRu romba iLaiyadhu
    aaRu chenRu chaerumboadhu
    yaaru kaeLvi kaetpadhu?"....my most fav lyric in this song....
    luv this song very much

  • @lathu3420
    @lathu3420 2 года назад +47

    உண்மையான அன்பு வயது பார்க்காது 💯💝

  • @BALASUBRAMANI-zb1or
    @BALASUBRAMANI-zb1or 3 года назад +43

    இறுதியாக இலை தொடும் காட்சி மனதில் நெகிழ்ச்சி.. வெட்டுக்கிளி ரத்தம் வெள்ளை.. ஆஹா அறிவியல் தகவல்களை எல்லாம் பாடலில் கொண்டு வரும் சமயோசித சக்தி கவிஞரே உங்களுக்கு மட்டுமே உண்டு 🙏

  • @gaminghari5583
    @gaminghari5583 3 года назад +19

    Srinisha voice yarukellam pedikum 😍

  • @anihaa7379
    @anihaa7379 2 года назад +31

    Nice song ..... Nice lyrics .....Yetho solla theriyala oruvithamana feel ..... Ennoda status la itha Adikkadi vaikiren ....sollamudiyatha feel ahh irukku ..... ❤❤❤❤

  • @lakshmisweety4421
    @lakshmisweety4421 3 года назад +16

    வெட்டுக்கிளியின் ரத்தமோ வெள்ளையாக உள்ளது
    விதிகள் எழுதும் ஏட்டிலே விதிவிலக்கும் உள்ளது.... ❤ ❤
    ஆழி ரொம்ப மூத்தது,
    ஆறு ரொம்ப இளையது,
    ஆறு சென்று சேரும் போது யாரு கேள்வி கேட்பது... ❤ ❤ ❤

  • @valarmathiarvind4985
    @valarmathiarvind4985 3 года назад +24

    வார்த்தைகள் இல்லை ✍️✍️✍️ எழுத்திற்கு எவ்வளவு சக்தி

  • @thalapathiprabhu
    @thalapathiprabhu 3 года назад +31

    எப்படி நடிச்சாலும் இந்த பாப்பாவ அஜித் சார் ரோட மகளாகத்தான் பார்க்க முடியுது😬😬😬

  • @rajeshakila9647
    @rajeshakila9647 3 года назад +12

    Wow very nice song.எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று

  • @jayapriyae5421
    @jayapriyae5421 3 года назад +24

    Recently addicted to this song because of srinisha voice

  • @kavikarthik1412
    @kavikarthik1412 3 года назад +13

    கவிப்பேரரசு ஐயா😍😍😍...தங்களை வாழ்த்த எனக்கு வயதில்லை...தங்களை வாழ்த்தவிட்டால் நான் கவிஞனில்லை....ஆகையால் வாழ்த்துகிறேன்✌😊....தங்களின் வரிகள் செம்மொழி தமிழை போலே என்றென்றும் நிலைக்க வாழ்த்துக்கள்🤗.....என்றும் உங்கள் வைர வரிகளால் இதயத்தை நிரப்பி வைத்திருக்கும் எதிர்கால இளைஞன்❤....இக்கால மாணவன்🙏

  • @sunderm813
    @sunderm813 3 года назад +31

    ஆழிரொம்பமூத்தது,
    ஆறுரொம்பஇளையது
    ஆறுசென்றுசேரும்போது
    யாருகேள்விகேட்பது?
    இயற்கையை இழுத்து வந்து காதலுக்கு logic. Veri nice.

    • @Sandy-to7oo
      @Sandy-to7oo 3 года назад +9

      அரசாங்கம் கேள்வி கேக்கும் டா மைனர் பொண்ண இழுத்துட்டு போனீனா 🤦‍♂️

  • @balajisakkrapani9823
    @balajisakkrapani9823 3 года назад +16

    இது போன்று கவிதைகளை பாடல்களை யாரால் எழுத முடியும் எங்கள் கவிப்பேரரசரை தவிர.
    வயதால் நம் வாழ்வு
    முறியுமா?
    வாய் முத்தம் வயது
    அறியுமா?
    இது போன்ற ஒரு கவிஞன் இனி இப்பூவுலகில் பிறக்கப்போவது இல்லை

  • @k.rajesh2697
    @k.rajesh2697 2 года назад +18

    வாய் முத்தம் வயது அறியுமா? பாடல் வரிகள் அருமை!! N.R.ரகுநந்தன் இசை மற்றும் ஒளிப்பதிவு இனிமை. அனிகா இந்த பாடலுக்கு பொருத்தமான தேர்வு. வாழ்த்துக்கள் ஐயா!

  • @arumugamsai2457
    @arumugamsai2457 3 года назад +37

    ஆழி ரொம்ப மூத்தது
    ஆறு ரொம்ப இளையது
    ஆறு சென்று சேரும் போது
    யாரு கேள்வி கேட்பது...
    அருமையான வரிகள்😘
    காத்திருக்கிறேன் அடுத்த பாடலுக்காக...

    • @sabeenap9551
      @sabeenap9551 3 года назад +1

      Lyrics Vera level sri nisha voice super

    • @ss-nw8ov
      @ss-nw8ov 3 года назад +1

      👌👌👌

  • @gnanasivabalan9729
    @gnanasivabalan9729 3 года назад +18

    கடைசியில,கையில வந்து உட்கார்ந்த செடி தான் மனச ஏதோ பன்னுது.அருமையான பாடல்.அருமையான ஒளிப்பதிவு.

  • @gmpchiyaankgf8500
    @gmpchiyaankgf8500 2 года назад +8

    ஆணும் பெண்ணும் சேர்வது ஆண்டவனின் திட்டமே அதுவே இயற்கையில் பிறக்கும்
    காமம்🌹🌹🌹

  • @hariharanvijayan2185
    @hariharanvijayan2185 3 года назад +40

    To all critics. It's an infactuation one experiences during teen which is quite normal. If you see clearly they're not romancing she's just attracted towards an elderly person.. it's written from the girl's Point of view. Now go and watch the song once again you'll understand what I said.

  • @GGG.26
    @GGG.26 3 года назад +32

    Wth? She is a school kid. You guys romanticize this.

  • @devil_dudesrini3870
    @devil_dudesrini3870 3 года назад +17

    Vera levelu .... srinisha 💖💛😘😘😘... enna voice ma... came at the first for srinisha

    • @govindaramkrishna8899
      @govindaramkrishna8899 3 года назад +5

      கவிஞரின் அனுபவத்தில்
      காதலுக்கு மொழி இல்லை
      காதலுக்க வயதும் இல்லை
      நிலவு கண்டு அல்லிஸ மலருது
      உறவு கொண்டு காதல் ஜெயிக்குது
      ஆணும் பெண்ணும் சேர்வது
      காதல் போக்கில் நேர்வது
      காதல் நீதி என்பது
      காமன் சேதி போன்றது

    • @govindaramkrishna8899
      @govindaramkrishna8899 3 года назад +1

      கோவிந்தராம்.
      மதுரை.

    • @devildude7988
      @devildude7988 3 года назад +4

      Yaa 💞💌😘

    • @srinithi2014
      @srinithi2014 3 года назад +3

      Sss 💙❤

    • @venkatesansgs7930
      @venkatesansgs7930 3 года назад +2

      😍😘😘😘

  • @prithivirajnatarajan5583
    @prithivirajnatarajan5583 2 года назад +49

    சொல்ல முடியாத சோகம். காதல்.
    அருமையான பாடல். இப்படியும் காதல் பூக்கும்

  • @srt1997
    @srt1997 2 года назад +13

    தமிழ் ...அழகான வார்த்தைகள்... மிகவும்.. அற்புதம்...🙏🙏

  • @naveenng4398
    @naveenng4398 3 года назад +14

    Intha kavithaiya, Nan enga school competition la, sonna, enaku enga school first price thanthanga, I am soo happy, 😍😍😍😍❤❤❤❤🙏🙏🙏

  • @a.bhuvaneswaria.bhuvaneswa2910
    @a.bhuvaneswaria.bhuvaneswa2910 3 года назад +31

    Kadhaluku vayasu illai... Athai arindhavaragal matume vunara mudium

  • @sugumarsugumar6432
    @sugumarsugumar6432 2 года назад +11

    பெருந்திணை காதலை நயமாக எடுத்துரைத்த விதம் அருமை..

  • @theresasrini4328
    @theresasrini4328 3 года назад +76

    Nice song 👌
    Note: kadhal thaa varanuma , nalla nanbara or mariyaathaiaana guru va eduthukka koodatha, school ponnu - vazhkaya kathukkura vayasu thappa vali nadathura maathiri irukku age difference mattum change pannirkala

  • @k.kanishabommi7127
    @k.kanishabommi7127 3 года назад +349

    பள்ளி பெண் போல் இல்லாமல் இருந்திருக்கலாம்

  • @timsancreationssusairajan8158
    @timsancreationssusairajan8158 3 года назад +22

    இவள் தந்தையைப்போல்
    கணவனைத் தேடுகிறாள்...
    நானும் தாயைப்போல்
    மனைவியை தேடினேன்
    கானல் நீரில்..
    தேடிக்கொண்டே இருக்கிறேன்
    அவளை

  • @visha1866
    @visha1866 2 года назад +20

    Srinisha voice all songs soooo amazing n mesmirising especially adi penne song

  • @vigneshm9654
    @vigneshm9654 3 года назад +70

    என் வாழ்வில் தந்தையே இல்லையே தந்தை போல் கணவன் வேண்டுமே இந்த லைன் எனக்கு மிகவும் பிடிக்கும்

    • @muthupandi8605
      @muthupandi8605 3 года назад

      இந்த வரிகளுக்கு தா நெறைய பேர் கழுவி ஊத்துனாங்க..... அது அவங்க அவங்க பார்வை பொருத்தது.. எனக்கு வைரமுத்துsir ர ரொம்ப கிடைக்கும்

  • @jegancfca3368
    @jegancfca3368 3 года назад +27

    பொய்யைக் கூட விரும்பி கேட்கலாம்... சொல்வது வைரமுத்துவாக இருந்தால்!!!
    பொய்யும் போதையாகும் அவன் வரிகளில்....

  • @user-yu4tn5lm2t
    @user-yu4tn5lm2t 3 года назад +87

    காதலின் முடிவு காமம் என்று நினைப்பவர்களுக்கு இந்த பாடல்.....

    • @chanthurubaichanthurubai9245
      @chanthurubaichanthurubai9245 3 года назад +29

      காதலின்‌ தொடக்கம் தான் காமம். காமத்தின் முடிவு தான் காதல்

    • @shyamprasathb8979
      @shyamprasathb8979 3 года назад

      @@chanthurubaichanthurubai9245 is true bro

    • @saravanakousi1642
      @saravanakousi1642 3 года назад

      @@chanthurubaichanthurubai9245 semma semma true

    • @skarthikeyan3809
      @skarthikeyan3809 3 года назад +2

      இதுல எங்கயா காமம் இருக்கு வெலக்கென்ன

    • @shivakumar.r6361
      @shivakumar.r6361 3 года назад

      @@skarthikeyan3809 correct

  • @PREETHIKULFI
    @PREETHIKULFI 2 года назад +27

    🌳🏞இயற்கை கூட பெண்களுக்கு ஓர் காதலன்தான்...❤
    👆பார்த்ததில் புரிந்தது..😇

    • @AnishAnto-rc1bo
      @AnishAnto-rc1bo 2 года назад

      இயற்கையும் நமக்கு நம்மை போன்ற காதலி.என்றும் நம்மை போலவே அழகு.

  • @soudaravallisoundaravalli6717
    @soudaravallisoundaravalli6717 2 года назад +32

    Song semma but boy vera aala irunthurukalam

  • @arunahari3434
    @arunahari3434 3 года назад +21

    Mesmerizing voice... Srinisha😍😍😍

  • @janakijanu2709
    @janakijanu2709 3 года назад +118

    இதில் காதல் என்று குறிப்பிடுவது இயற்கைகும் அவர்களுக்கும் உள்ள உறவு என்று தான் நான் நினைக்கிறேன்..

    • @gnanasivabalan9729
      @gnanasivabalan9729 3 года назад +2

      👌👌👌👌👌

    • @ndeem786
      @ndeem786 3 года назад +1

      காதல் மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானது இல்லை என உணர்த்தும் உங்கள் புரிதல் அருமை.

    • @Gayathrivasanthofficial
      @Gayathrivasanthofficial 3 года назад

      Yes

  • @sahaanasowmya8189
    @sahaanasowmya8189 3 года назад +33

    Andha pen avanai kaadhalikka villai.. avan kaadhalai kaadhalithirukiraall.. no lust but a nature love..

  • @gayathrid659
    @gayathrid659 3 года назад +10

    Superb srinisha akka 😘😍🥰 nice voice....

  • @arulska8570
    @arulska8570 3 года назад +16

    சூப்பர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு👍👍👍

  • @arikaran370
    @arikaran370 2 года назад +15

    எத்தன தடவ பாத்தாலும் சகிக்கவே இல்ல

  • @sowmiyadevi3373
    @sowmiyadevi3373 3 года назад +35

    ஆணும் பெண்ணும் சேர்வது
    ஆசை போக்கில் நேர்வது
    காதல் நீதி என்பது
    காலம் தோறும் மாறுது.....💕
    வரிகளுக்குள் வாழும் இதயங்கள்...💯

  • @SaraVanan-qb1hb
    @SaraVanan-qb1hb 3 года назад +12

    Aram irukum valvilum muran irukum enbathal...muran irukum valvilum aram irukum illaiya......excellent lines 💖💞💛🧡❤💖💞

  • @vijibosco
    @vijibosco 2 года назад +17

    OMG enna oru feel, 😍😍wonderful making congratulations to the whole team

  • @soundbox5637
    @soundbox5637 3 года назад +32

    பள்ளி பருவ பெண் போல் இல்லமால் இருந்திருக்கலாம்
    So வைரமுத்து is legent

  • @azim9781
    @azim9781 2 года назад +7

    அருமையான பாடல் வரிகள் .....வைரமுத்து ஐயா விற்கு வாழ்த்துக்கள் ....

  • @sreejith1955
    @sreejith1955 3 года назад +12

    kadhalai kaamathodu paarpavargaluku theriyathu intha paadalin arumai.............

  • @kanis2116
    @kanis2116 3 года назад +50

    ஒவ்வொரு பாடலுக்கும் ஒருவாரம் காத்திருக்கசெய்துவிட்டீர்கள் எங்களை.
    அழகான காதலை இப்படி வார்த்தைகளில் சிக்கிதவிக்கவைக்கிறீர்களே!

  • @Aditi12.25
    @Aditi12.25 3 года назад +17

    Sch ponna katturathuku pathil clg ponna katirukalam 👍

  • @amuthapalani3032
    @amuthapalani3032 3 года назад +24

    என் காதலா..
    என் உயிரின்
    தேடலா..
    என் மனதின்
    தூரலா...
    என் மொழியின் பாடலா..
    நான் யார் எவள்.....
    உந்தன் உயிரின் பாதியா..
    உந்தன் நினைவின்
    தனிமையா..
    உந்தன் வாழ்வின்
    மீதியா.....................
    நான் என்னை பார்ப்பது போல்
    உன்னை காண்கிறேன்..
    உந்தன் உறவின் கரையில்
    இருந்து..
    என் கவலை மறக்கிறேன்..
    .. உந்தன்
    அன்பின் ஆயுள்
    கொண்டு என் வாழ்வை வாழ்கிறேன்...
    நீ மட்டும் என்னை
    நேசிக்காமல் போனால்...
    நானும் கூட கொஞ்சம்
    சுவாசிக்காமல் போவன்..
    செல்ல சண்டையிட்ட
    போதும்..
    தீயில் என்னை விட்ட
    போதும்..
    எந்தன் உயிரை
    என்னை விட்டு
    செல்லாதே...
    நான் காத்துவந்த
    காதலை
    தூரம் போடாதே....
    💐💐💐💐💔💓💓💕💕by amutha

  • @swathipriya858
    @swathipriya858 2 года назад +35

    Love is not defined by meaning of age 😍😘

  • @roshnisubahan3453
    @roshnisubahan3453 2 года назад +14

    Indha song kekkum bodhu heart touching ah iruku... I fee somthing❤️

  • @thameemnisha4132
    @thameemnisha4132 3 года назад +46

    இயற்கையை நேசிப்பது போல் அந்தப் பெண் அந்த கவிஞனை ரசிக்கிறார். இதில் காமம் இல்லை. புரிந்தவர்களுக்கு பள்ளிப் பெண் காதல் என்றெல்லாம் குறைபட்டுக் கொள்ளவேண்டாம்

  • @jollyrobert1961
    @jollyrobert1961 2 года назад +25

    Masterpiece, love is boundless ❤️ it's not physical... Beautiful by Vairamuthu...

  • @ManiMaran-wg6wj
    @ManiMaran-wg6wj 2 года назад +42

    En valvil thandhai illaye thandhai pol kanavar vendume🥰🥰🥰🥰🥰🥰🥰💝💝💝💝💝💝💝💖💖💖💖💖💖🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🤩🤩🤩🤩🌹🌹🌹💞💞💞💞💞

  • @denipriya2690
    @denipriya2690 3 года назад +11

    ஆறு சென்று சேறும் போது யார் கேள்வி கேட்பது அருமை

  • @mohanakrish1275
    @mohanakrish1275 3 года назад +54

    Y r u thinking like that. She didnt love him. She loves that nature and his relation with it. That's the story

  • @JOSEPH-ij4kk
    @JOSEPH-ij4kk 3 года назад +6

    தந்தை போல் கணவன் வேண்டும்.....vairamuthu
    One line of this song

  • @vaadivasal9823
    @vaadivasal9823 2 года назад +17

    Voice semmaiya irukku

  • @nandhukavi3603
    @nandhukavi3603 3 года назад +21

    Srinisha😍😍😍 so sweet semma😍😍😍 superb lyrics👌👌👌tq sir for this beautiful song🥰🥰

  • @revathy8495
    @revathy8495 3 года назад +77

    Indha ponna periya ponnu Mathiri pakkavey mudiyala... Ajith kuda act panna kolandha Mathiri than thonudhu... Epdio.... Decent a epdiey act panna nalla irukkum... ❤️

  • @MsMira09
    @MsMira09 3 года назад +10

    Very expressive singing by sreenisha. A promising singer. Looking forward for her songs❤️

  • @harinisekar34
    @harinisekar34 2 года назад +20

    ❤Any srinisha🌸fans here👍❤

  • @vinuvikram8991
    @vinuvikram8991 3 года назад +31

    விதிகள் எழுதும் ஏட்டிலே விதிவிலக்கும் உள்ளது👌👏

    • @kulitalaimano5312
      @kulitalaimano5312 3 года назад +2

      விதிகள் எழுதும் ஏட்டிலே
      விதிவிலக்கும் உள்ளது
      நீதிமன்றங்களும் கூட
      இந்தியாவில்
      விதிகளை கடைபிடிக்க இயங்குவதில்லை
      விதிவிலக்குகளை காபந்து செய்யவே இயங்குகின்றன
      செத்து போனால் தண்டனை இல்லையாம்
      [செத்து போனால் பிணத்தை சிறையிலடைக்கமுடியாது உண்மை அதனால் வழங்கிய தீர்ப்புஎப்படி மாறும் ?
      விதிவிலக்குகளை கடைபிடிக்கும் பச்சோந்தி நீதிமன்றங்கள் ]
      புனிதர் பட்டம் கூட குற்றவாளிக்கு தருவார்களாம்

    • @kulitalaimano5312
      @kulitalaimano5312 3 года назад

      @கவிஞர் தமிழ்த்தேன் எங்கே இருக்கீங்க ?என்னை தெரியுமா?

  • @pugalkutty2706
    @pugalkutty2706 3 года назад +18

    Srinisha voice beautiful

  • @athira2370
    @athira2370 2 года назад +34

    Anigha look like Nayantara

  • @SaraVanan-qb1hb
    @SaraVanan-qb1hb 2 года назад +21

    I love 💘this song iam addicted this song , aaram irukum valvilum muran irukum enbathal... muran irukum valvilum aaram irukum illaiya.....

    • @arunaanu2265
      @arunaanu2265 2 года назад +2

      plz tell me meaning in english