Jenmam Niraindhathu | Naatpadu Theral 02 - 10 | Vairamuthu | Vijay Yesudas | Vikram Sugumaran

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • மரணம் - வாழ்வின் பூரணம். அதைப் புரிந்துகொண்டவர்கள் பாக்கியவான்கள். மரணம் மற்றவர்களை அழவைக்கிறது; நிறைந்து போனவனுக்கு நிம்மதி தருகிறது. மரணத்தின் ஒருபக்கம் துக்கம்; மறுபக்கம் இன்பம். இது சாவுக்குப் பக்கத்தில் சம்பவித்த கவிதை.
    *
    Song : Jenmam Niraindhathu
    Lyrics : Vairamuthu
    Composer : Iniyavan
    Singer : Vijay Jesudas
    Director : Vikram Sugumaran
    Produced by : Vairamuthu
    *
    Video Credits :
    Artist : Viji Chandrasekar, Sanjay Saravanan, Subadhini
    Cinematography : Vetrivel Mahendran
    Editing : Lawrence Kishore
    Art Director : Mayappandi
    Production In charge : A.P.Ravichandran
    Associate Director : Karthik Durai
    Asst Director : Shyam Prasath, Karthik Malaichamy, Tamilmaran
    Associate Cinematography : V.Sugamurugan, Sriram
    Asst Cinematography : Karthik, Kalai, Jai
    Stills : Ramesh
    Production Assistant : Sellur Kumar, C.H.Nakesh, Ram Babu
    Set Assistant : Murugan, Arvindhan
    Makeup : Seenivasan, Fathima, Niramala, Umapathi
    DI : Nandha
    *
    Audio Credits :
    Music Composed and Arranged by : Iniyavan
    Mastered by : S.Sivakumar
    *
    Music Distrubution Partner : Believe Digital
    Co-ordination : P.Baskaran
    Office Administration : Kesavan Vellaichamy
    Line Production : Kanaa Ads
    PRO : Nikil Murukan
    Designs : Oodagaa
    *
    பாடல் வரிகள்
    ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க
    சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க
    நீரில் மிதந்திடும் கண்களும் காய்க
    நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க!
    ஜனனமும் பூமியில் புதியது இல்லை
    மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை
    இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை
    இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை
    பாசம் உலாவிய கண்களும் எங்கே?
    பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே?
    தேசம் அளாவிய கால்களும் எங்கே?
    தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே
    கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக
    மண்ணில் பிறந்தது மண்ணுடல் சேர்க
    எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக
    எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க
    பிறப்பு இல்லாமலே நாளொன்று இல்லை
    இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை
    நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை
    மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை.
    கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை
    தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை
    நதி மழை போன்றதே விதியென்று கண்டும்
    மதி கொண்ட மானுடர் மயங்குவதேன்ன!
    மரணத்தினால் சில கோபங்கள் தீரும்
    மரணத்தினால் சில சாபங்கள் தீரும்
    வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்
    விதை ஒன்று வீழ்ந்திட செடிவந்து சேரும்
    பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம்
    யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம்
    நித்திரை போவது நியதி என்றாலும்
    யாத்திரை என்பது தொடர்கதையாகும்
    தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
    சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும்
    மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
    மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும்
    மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க
    தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க
    பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க
    போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க
    ©Vairamuthu
    #Vairamuthu #VijayYesudas #jenmamniraindhathu

Комментарии • 254

  • @shobaaustralia7266
    @shobaaustralia7266 2 года назад +51

    I don’t know where to start…. Just couldn’t control myself from bursting into tears 😭. I don’t think there’s any single soul out there that wouldn’t be touched by those lyrics! What a song !! There’s a lot to take in. Every single word is meaningful and spiritual !! Hats off 🎩 to Vairamuthu !! Death is inevitable as we all know, but when it actually happens it’s almost impossible to cope with. Takes years to overcome. Life’s too short and can be too hard for many.
    Amazing sound effect👌🌸. Who’s that lady that acted as the mother?? She did a brilliant job 👍💐. Her acting is sooo natural !! I like that 😊
    Singer’s voice is perfect and he did a great job too 👏 !!
    Its amazing the way the song is picturized. I think a couple of scenes were taken from a height probably from a helicopter ? Excellent team work 👍🌸🌼.

  • @Valarmathi-nz9pj
    @Valarmathi-nz9pj Год назад +7

    என் மகனை இழந்து தவித்த நேரத்தில் பல முறை இந்த பாடலை கேட்டு கேட்டு ஆறுதல் படுகிறேன்.மந்திரம் போன்ற குரல், அதன் வாழ்க்கை, தத்துவம், எவராகினும் இந்த இறப்பை சந்தித்து ஆகவேண்டிய உண்மை.திரு.வைரமுத்து அவர்கள் ,திருமூலர் போன்ற சித்தர்கள் கூறியற்றை இந்த பாடல்மூலம் தற்காலத்திற்கும்,இனி கேட்கும் மனிதர்கள் அனைவருக்கும்,ஆறுதல் கூறிக்கொண்டு இருப்பார்.நன்றி.

  • @mydream5437
    @mydream5437 2 года назад +83

    உறவுகளை இழந்து மனஅழுத்தம் கொண்டவர்களுக்கு மாமருந்து இந்த பாடல்.

  • @saravanansarwan2541
    @saravanansarwan2541 2 года назад +19

    கடைசியில் அம்மா என்று ஓவென அழும் அந்த குரல் மொத்த பாடல் வரிகளை திண்றேவிட்டது... பெயர் மட்டுமல்ல உங்கள் எழுத்தும் வைரம் தான்..

  • @starboyra8041
    @starboyra8041 2 года назад +49

    என் ஒரே மகனை இழந்து தனிமையில் தவித்துவரும் எனக்கிருக்கும் ஒரே ஆறுதல் கவிஞானி வைரமுத்து அய்யாவின் இந்தப் பாடல் ஒன்றே. முன்பு இசைவடிவில் கேட்டது இன்று காட்சி வடிவிலும் பார்ப்பது வாழ்க்கைத் தத்துவத்தை புரிந்து கொள்ள உதவுகிறது

    • @rameshv4970
      @rameshv4970 2 года назад

      வாழ்த்தியதற்கு நன்றி ❤️

    • @prabhakaranb9858
      @prabhakaranb9858 2 года назад

      உடலுக்கு மட்டும் தான் அழிவு....?

    • @soundrapandian5198
      @soundrapandian5198 2 года назад +1

      Sorry sir

    • @cvmcoimbatore9300
      @cvmcoimbatore9300 2 года назад

      நானும் என் ஒரே மகளே இழந்து தனிமையில் தவித்து கொண்டு இருக்கிறேன். இசையும் தமிழும் மட்டுமே என் ஒரே ஆறுதல்

    • @powman1984
      @powman1984 Год назад

      இதையே தானுங்க
      3000 ஆண்டுகளுக்கும் முன்னரே
      கணியன் (வானியல் ஆய்வாளன்) பூங்குன்றனார் அவர்கள்
      அவருடைய‌ பாடலில்
      மிகத் தெளிவாகக் கூறி விட்டு சென்று விட்டார்.
      அவருடைய‌ பாடலின் உட் கருத்தை
      காப்பி பண்ணி பாட்டு எழுதி வைத்துள்ளது இது.

  • @cmrpandian
    @cmrpandian 2 года назад +30

    மனித வாழ்வு என்பது என்ன என்பதை உணர்த்தும் இப்பாடலை ரசித்தவர்களுக்கு என் வணக்கம்.
    தமிழே இல்லாத தமிழ் பாடல்களுக்கு இருக்கும் வரவேற்பு சுத்த தமிழுக்கு இல்லை😡.
    கண்டும் கேட்டும் கொண்டாடிய அனைவரும் உங்களுக்கு தெரிந்த அனைத்து நண்பர்களுக்கு இதை பகிந்து இந்த முறைச்சிக்கு துணை நிற்போம், தமிழை காப்போம் 🙏

  • @SelvamSelvam-cs4hz
    @SelvamSelvam-cs4hz 2 года назад +17

    வேதங்கள் சொல்லாததை மரணம் சொல்லும். பட்டினத்தார் பாடல் கேட்டது போல் இருக்கிறது வாழ்க தமிழ் வளர்க உங்கள் புகழ்👌👌👌👌👌

  • @fathimabegum6841
    @fathimabegum6841 2 года назад +13

    மரணத்தினால் சில கோபங்கள் தீரும்; மரணத்தினால் சில சாபங்கள் தீரும்; வேதம் சொல்லாத்தை மரணங்கள் கூறும்; விதை ஒன்று வீழ்ந்திட செடி வந்து சேரும்..”- சத்தியமான வரிகள்.இது என் வாழ்க்கையில் நடந்த்து. என் நெருங்கிய உறவோடு முரண்பட்டு இனி வாழ்க்கை இல்லை என்றிருந்த என்னை ஒரு மரணச் சந்திப்பின் நெகிழ்வு ஒன்று சேர்த்தது. மீண்டும் எங்கள் வாழ்வு துளிர்விட அந்த மரணக் கண்ணீரே நீர் வார்த்தது.. கவிப்பேரரசு ஒரு தீர்க்கதரிசி.அவருக்கு எங்கள் நன்றி

    • @powman1984
      @powman1984 Год назад

      என்னது...!
      இவன் ஒரு தீர்க்கதரிசியா....??? 😱🙄🤔
      இவனைப் போய் தீர்க்கதரிசி என்று கூறுகிறீர்களே....!
      இவனை
      தீர்க்கதரிசி என்று கூறுவதன் மூலம்
      உண்மையான தீர்க்கதரிசிகளை கேவலப்படுத்தாதீங்க....
      3000 ஆண்டுகளுக்கும் முன்னரே
      கணியன் (வானியல் ஆய்வாளன்) பூங்குன்றனார் அவர்கள் அவருடைய பாடலில்
      மிகத் தெளிவாகக் கூறி விட்டு
      சென்று விட்டார்
      " வாழ்வியல் நிதியைப் " பற்றி.
      ஆகவே ,
      அவரைக் காட்டிலுமா
      இவன் தீர்க்கதரிசி....???
      இவனே ஒரு பொம்பள பொறுக்கி நாயி.
      பின்னணி பாடகி
      சின்மயி யிடம் கேளுங்கள் இவனுடைய உண்மை முகம்
      (பொம்பள பொறுக்கித் தனம்) தெரியும்.

  • @manimegalais8836
    @manimegalais8836 2 года назад +54

    பூமிக்கு நாமொரு யாத்திரை வந்தோம்
    யாத்திரை தீருமுன் நித்திரை கொண்டோம்
    நித்திரைபோவது நியதி என்றாலும்
    யாத்திரை என்பது தொடர்கதையாகும்”
    இப்படிப்பட்ட வரிகளையெல்லாம் மொழிபெயர்த்தால் வைரமுத்துவின் புகழ் உலகமெல்லாம் பேசப்படும்.

    • @powman1984
      @powman1984 Год назад +3

      இந்த வரிகளை யெல்லாம் 3000 ஆண்டுகளுக்கும் முன்னரே
      கணியன் (வானியல் ஆய்வாளர்) பூங்குன்றனார் அவர்கள்
      அவருடைய பாடலில்
      கூறி விட்டாருங்கோ....!!!
      அவருடைய பாடல் வரிகளை
      காப்பி பண்ணி
      எழுதி வச்சுருக்குது இது.

    • @sandhyaananthagopal7854
      @sandhyaananthagopal7854 7 месяцев назад

      Who is the original writer? This song has been around for more than 10 years in a more soulful female voice with no credits mentioned. Now everyone talking of this film song . 😮

  • @chandrasekarlogesan3077
    @chandrasekarlogesan3077 2 года назад +29

    கண்கள் கலங்க வைத்த பாடல்
    கவிப்பேரரசுவின் அர்த்தமுள்ள
    அற்புதமான வரிகள். விஜி அவர்களின் பிரமாதமான நடிப்பு

  • @yogalakshmi.s4794
    @yogalakshmi.s4794 2 года назад +18

    இப்பாடலின் ஒவ்வொரு வரியும் நெஞ்சைத் தொட்டு சென்றன🙏
    வாழ்க தமிழ்! வாழ்க இவ்வையகம்✊🙏

  • @seelan1711
    @seelan1711 Месяц назад

    வலி நிறைந்த வைரமுத்துவின் வைர வரிகள் மனதை ஒரு நிலை படுத்தும் மருந்து 😢😢😢

  • @kanis2116
    @kanis2116 2 года назад +5

    இந்தப் பாட்டு திருப்பூர் மின்மயானத்துக்காக எழுதப்பட்டதா கவிஞர் வைரமுத்து ஒரு பேட்டியில சொன்னது ஞாபகமிருக்கு. . சினிமா பயன்படுத்திக்காத இந்த பாடலை ஓரு குறும்படம் போல் தென்மாவட்ட கலாசாரத்தோடு காட்சியாக்கியிருக்கும் விதம் உருக வைக்கிறது. இனியவன் இசையும் , விஜய்ஜேசுதாஸ் குரலும்,‘ மதயானைக்கூட்டம் ’விக்ரம்சுகுமாரன் டைரக்ஷனும் விஜியோட நடிப்பும் கவிஞரோட வரிகளுக்குள்ள ஊடாடி உயிர் கொடுத்திருக்கு

    • @Bhuvanesh_Rajendran
      @Bhuvanesh_Rajendran Год назад

      இல்லை அய்யா இது பொதுவான பாடல்...யாரும் கேட்டு பிரபலப் படுத்தாத இந்த பாடல் சில மின் மயானங்களில் அதன் உரிமையாளர்களின் விருப்பத்தில் ஒலிபரப்பப் பட்டது...ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியில் யாத்ரா என்ற மின் மயானத்தில் விஜய் யேசுதாஸ் அவர்களின் குரலில் இப்பாடல் ஒலி பரப்பப்படுகிறது...நன்றி

  • @srpstories1510
    @srpstories1510 2 года назад +16

    "மதயானைக் கூட்டம்" இயக்குனர்/அண்ணன் விக்ரம் சுகுமாரன் அவர்களின் இயக்கமும் காட்சிகளின் பிரதிபலிப்புமே கவிப்பேரரசின் வரிகளுக்கு உயிரூட்டியிருக்கிறது... வாழ்வியல் தத்துவத்தை நம்முள் கடத்தியிருக்கிறது... வாழ்த்துக்கள் சார்... 🌹🌹❤️❤️ நன்றி சார்🌹🌹🌹

  • @jayarajprasad6011
    @jayarajprasad6011 2 года назад +3

    பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் கடத்தும் வாழ்வு முறைகள் ஒவ்வொருவருக்கும் தனித் தனியானது. இந்த பயணம் முடிவை நோக்கித் தான் என்று உணர்த்திச் சொல்லும் காட்சிகள் மீண்டும் மீண்டும் நமக்கு உரைக்கும் அழகிய பாடம் எதையும் கொண்டுவரவில்லை எடுத்துச் செல்வதற்கு.
    தாய் மீண்டும் நமக்கு குழந்தையாய் வருவாள் என்று முடிவுரை அமைந்திருப்பது சிறப்பு.
    நல்ல உணர்வுபூர்வமான படைப்பு.
    வாழ்த்துக்கள்

  • @NishaMohan-m9f
    @NishaMohan-m9f 2 месяца назад

    பாடல் கேட்டு கண்ணீர் வடித்தது மட்டும்தான் மிச்சம் என்ன செய்வதென்று தெரியவில்லை பணம் ஒன்று தான் வாழ்க்கையில் முக்கியம் சந்தோசம் நினைப்பதில்லை எப்போது பணத்தை சம்பாதிப்பேன் கடன் மட்டும் ஒளிந்தால் போதும் இறைவா இறைவா

  • @baskarv4195
    @baskarv4195 2 года назад +2

    உறவின் பெருமையை இதயத்தின் உள்ளே செலுத்தும் ஊசி இந்தப் பாடல்! வரிகள் இசை நடிப்பு இயக்கம் அனைத்தும் அருமை! வாழ்வின் எல்லையை சொல்லும் இந்தப் பாடல் கால எல்லையைத் தாண்டும்! வாழ்க கவிப்பேரரசர் வாழ்க இந்தப் பாடலுக்காக உழைத்த ஒவ்வொருவரும்!

  • @jeevithat-qu6om
    @jeevithat-qu6om Год назад +1

    என்னோட சித்தப்பாவின் மரணம் என்னால் இன்று வரை நினைத்து பார்த்தால் நெஞ்சு வெடித்திடும் போல இருக்கும் i miss u chithpa பார்த்திபன்

  • @vanakampa9222
    @vanakampa9222 2 года назад +1

    தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்,சூரியக் கீற்றொலி தோன்றிடும் போதும், மழலையின் தேன்மொழி செவியுறும்போதும், மாண்டவர் எம்முடன் வாழ்ந்திடக் கூடும் - என் கூட இருந்தவங்கள கொரோனாவில் கொத்தாகப் பறிகொடுத்தேன். எதற்கு இந்த வாழ்க்கன்னு நெனச்சேன்.கவிஞர் வைரமுத்துவின் இந்த வரிகளே இப்ப என்ன வாழ வைக்கிது.

  • @kavithasathiyamoorthy3565
    @kavithasathiyamoorthy3565 7 месяцев назад +9

    இப் பாடலை கேட்கும் போது து என் தந்தையின் ஏக்கம் மிக அதிகம் வரும்😭😭😭😭 ( பாசம் உளவிய கண்களும் எங்கே பாய்ந்து துளாவிய கைகளும் எங்கே)

    • @ranamarina9712
      @ranamarina9712 3 месяца назад

      எனக்கும் 😢😢

  • @sunderm813
    @sunderm813 2 года назад +2

    இரும்பு இதயங்களைக் கூட இளக வைக்கும் பாடல்.வைரமுத்து வரிகள், இனியவன் இசை ,விஜய்ஜேசுதாஸ் குரல். விக்ரம் சுகுமாரன் இயக்கம், விஜி நடிப்பு எல்லாம் கண்ல தண்ணிய கரகரன்னு வரவழைக்குது. சாவு வீட்டு அட்மாஸ்பியர்நேச்சரா இருக்கு.

  • @baskarv4195
    @baskarv4195 2 года назад +2

    உறவின் பெருமையை இதயத்தின் உள்ளே செலுத்தும் ஊசி இந்தப்பாடல்! கர்த்தா கவிப்பேரரசர் அவர்களுக்கும் உழைத்த அனைவருக்கும் வாழ்த்தும் நன்றியும்!

  • @littledinesh822
    @littledinesh822 2 года назад +7

    என்ன மாதிரியான பாடல் வரிகள்.ஆனால் இந்த remake பாடல் only screen play மட்டும் தான் நல்ல இருக்கு . இதன் orginal version vera level.

  • @தமிழ்-மு
    @தமிழ்-மு Месяц назад

    நான் என் துணையை இழந்து தவித்த போது எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது இந்த பாடல் தான். ஒரு நாளைக்கு பலமுறை கேட்பேன்...
    மனசு லேசா ஆகிடும்...

  • @premkumar-kc5vm
    @premkumar-kc5vm Год назад +2

    இந்த பாடல் கேட்க்கும்போது என் மனதில் ஒரு அமைதி வருகிறது பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம் யாத்திரை தீரும் முன் நித்திரை அடைந்தோம் 😭😭😭😭

  • @savithiriganesh328
    @savithiriganesh328 Год назад +1

    ஐயோ உயிர் உருக்கும் வரிகள்.. வைரமுத்து ஓர் வைரச்சுரங்கம்.....

  • @kannanr4780
    @kannanr4780 2 года назад +6

    கவிப்பேரரசு சொன்னதுபோல்…. மனிதன் உள்ளவரை ….மரணம் இருக்கும்வரை இந்தப் பாட்டும் இருக்கும்.

  • @gowranmurugan4879
    @gowranmurugan4879 2 года назад +3

    என்ன ஒரு வரிகள், கவிஞரின் தலையில் இன்னொரு மகுடம்

  • @manikarthikgk325
    @manikarthikgk325 2 года назад +1

    ஜனனமும் மரணமும் இயல்பான வாழ்க்கை என்பதையும் மறதி தான் மாமருந்து என்பதை வாழ்க்கைக்கு கூறும் தத்துவம் மற்றும் தாய்மாமன் சீர் க்கு ஒரு பாட்டு மரணத்திற்கு ஒரு பாட்டு மறக்கமுடியாத பாட்டுகள் இந்த நூற்றாண்டின் சிறப்பான பாடல்கள் கவிப்பேரரசு அண்ணாவிற்கு நன்றி வணக்கம்

  • @rojajeyavel5688
    @rojajeyavel5688 10 месяцев назад +3

    தினம் ஒரு முறையாவது இந்த பாடலை கேட்டுவிடுவேன் .

  • @THANGAMANIKARUPPAIYA
    @THANGAMANIKARUPPAIYA 2 года назад +2

    வாழ்வியல் தத்துவத்தை எடுத்துரைக்கும் அருமையான பாடல்... பிறப்பு முதல் இறப்பு வரையான கிராமத்து வாழ்க்கை எம் கிராமத்தில் மிக சிறப்பாக காட்சியாக்கப்பட்டது. மண்ணிற்கு பெருமை சேர்த்த படக்குழுவினருக்கு நன்றி...

  • @indiravijayalakshmi7727
    @indiravijayalakshmi7727 2 года назад +5

    மனிதன் பிறக்கும் போதே மரணமும் பிறக்கிறது. மரணத்தின் சத்தியத்தை உணர்த்தும் கவிப்பேரரசரின் பாடல். கண்ணீர் உகுப்பதை கட்டுப்படுத்த முடியவில்லை.
    ‘கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை
    தரைதொடும் தாரைகள் அழுவதும் இல்லை’ ஆழமான வரிகள்.
    இறுதிக்காட்சியில் அம்மா எனும் கதறல் உயிர் கலங்கச் செய்கிறது. மனம் கனக்கிறது.

  • @prvelumaniprv8720
    @prvelumaniprv8720 2 года назад +3

    கவிப் பேரரசர்
    இந்த பாடலுக்குப் பிறகு
    கவிஞானி என்று
    அழைக்கப்பட வேண்டும்.
    கவிப்பேரரசரை பாராட்ட
    என்னிடம் வார்த்தைகள் இல்லை.
    குரல் கொடுத்த தம்பி விஜய் அருமை.
    TMS க்கு அருகில் வருகிறார்.
    வாழ்க கவிப் பேரரசர்....

  • @arumugamlaxmi7980
    @arumugamlaxmi7980 4 месяца назад +1

    இப்போதே இப்பாடலை கேட்டு விடுங்கள் இறந்த பிறகு பாடல் ஒலிக்கும் நாம் கேட்க முடியாதுஃ😭😭😭😭😭😭

  • @madhan9781
    @madhan9781 2 года назад +1

    Iyya kadavulae... Intha pattai neengathan eluthininga nu ippothan therinjuthu... 🙏🙏🙏 Intha padalai manithan kettu purinthu kondaal.. avan podugira aattam ellaam vaalum naatkalileye adangividum ayya 🙏🙏🙏 Unga paatham thottu vanangugiren 🙏

  • @thirunavukkarasua881
    @thirunavukkarasua881 2 года назад +13

    நாட்டுப்புற தேறல் வரிசையில் இது ஒரு மிகச் சிறந்த படைப்பு......

    • @powman1984
      @powman1984 Год назад

      நாட்டுப்புற தேடல் இல்லை ;
      " நாட்படு தேடல் ".

    • @davispackiaraja9228
      @davispackiaraja9228 Год назад

      ​@@powman1984நாட்படு தேடல் அல்ல நாட்படு தேறல்

  • @BALASUBRAMANI-zb1or
    @BALASUBRAMANI-zb1or 2 года назад +7

    ஜென்மம் நிறைந்தது பார்த்து கண்களும் நிறைந்தது கண்ணீரால் 😭😭😭😭

  • @rajagurukb
    @rajagurukb 2 года назад +1

    பிறப்பையும் இறப்பையும் தத்ரூபமாக காட்டிய காட்சியமைப்பு நெகிழவைக்கிறது.
    இவ்விரண்டையும் சமம் என ஏற்கும் இதயங்கொண்டோரைத் தவிர எஞ்சிய என்போன்றோரின் கண்கள் குளமாக மாறுவது தவிர்க்கமுடியாதது!!

  • @kasiramanv6070
    @kasiramanv6070 2 года назад +13

    மின் மயானங்களில் பாம்பே ஜெய்ஶ்ரீ குரலில் இந்த ஆழமான கருத்து நிறைந்த பாடலைக் கேட்டு நெகிழ்ந்ததுண்டு. இது கவிஞர் வைரமுத்து அவர்களின் வரிகள் என்று அப்போது தெரிந்திருக்கவில்லை ! 🙏🏼

    • @bharathialbin7686
      @bharathialbin7686 Год назад

      Sudha ragunathan

    • @powman1984
      @powman1984 Год назад +1

      அய்யா....!
      இது இந்தாளுடைய
      வரிகள் இல்லைங்க....
      3000 ஆண்டுகளுக்கும் முன்னரே
      கணியன் (வானியல் ஆய்வாளன்) பூங்குன்றனார் அவர்கள்
      அவருடைய‌ பாடலில்
      மிகத் தெளிவாகக் கூறி விட்டு சென்று விட்டார் வாழ்வியல் நியதியைப் பற்றி.
      அவருடைய‌ பாடலின் உட் கருத்தை
      காப்பி பண்ணி பாட்டு எழுதி வைத்துள்ளது இது.

    • @kasiramanv6070
      @kasiramanv6070 Год назад +1

      @@powman1984 கருத்துக்கள் முன்பே கூறப்பட்டதாக இருக்கலாம். அவற்றை காலத்திற்கு தக்கவாறு புதுப்பித்து உரைப்பது, இன்னும் பலரிடம் அந்தக் கருத்தை எடுத்துச் செல்கிறது. 🙏🏾

    • @rathi.v
      @rathi.v Год назад

      பாடகி. உத்திரா உன்னிகிருஷ்ணன்.🙏🏻

    • @Bhuvanesh_Rajendran
      @Bhuvanesh_Rajendran Год назад

      ​@@rathi.vஇல்லை பாடியது சுதா ரகுநாதன்

  • @kulitalaimano5312
    @kulitalaimano5312 2 года назад +3

    மீண்டும் மீண்டும் பார்க்கிறேன்
    மனசு வலிக்குது
    மிதக்குது
    கலங்குது
    அமைதி பெறுகிறது

  • @vanithathangaraj4555
    @vanithathangaraj4555 2 года назад +7

    மனித வாழ்வின் இயல்புகளை கூற இதை விட சிறந்த பாடல் வேறு ஒன்றுமில்லை.பல குடும்பங்ளை இணைக்கும் பாலங்களாகவே பல மரணங்கள் இன்றும்.உறவுகளை இழந்து தவிக்கும் பலரின் மனங்களுக்கு ஆறுதலாக இப்பாடல் அமையும் என்பதில் ஐயமில்லை.

    • @powman1984
      @powman1984 Год назад

      அய்யா....!
      என்னது இதைக் காட்டிலும் சிறந்த பாடல்கள் எதுவுமில்லையா....?
      அட லூசுக் கூமுட்ட....
      இதற்கு முன்னர் சங்க கால தமிழ் இலக்கிய பாடல்களை படித்துள்ளாயா....?
      அல்லது
      மற்றவர்கள் படித்ததை காது கொடுத்து கேட்டுள்ளாயா....?
      3000 ஆண்டுகளுக்கும் முன்னரே
      கணியன் (வானியல் ஆய்வாளன்) பூங்குன்றனார் அவர்கள்
      அவருடைய‌ பாடலில்
      மிகத் தெளிவாகக் கூறி விட்டு சென்று விட்டார் வாழ்வியல் நியதியைப் பற்றி.
      அவருடைய‌ பாடலின் உட் கருத்தை
      காப்பி பண்ணி பாட்டு எழுதி வைத்துள்ளது இது.
      இந்த உண்மையை உணராமல் ஏதேதோ உளறிக்கிட்டு லூசுத்தனமாக...

  • @ramanathanm7130
    @ramanathanm7130 2 года назад +5

    கவிப்பேரரசரின் இந்தக் கவிதையைச் சில ஆண்டுகள் முன்னம் வாசித்த போது என்னுள் உண்டான வேதனை,சுதா ரகுநாதன் குரலில் இசைவடிவாய் கேட்ட போது பன்மடங்கு பல்கிப் பெருகியது.
    காட்சி வடிவில் கண்டபோது, எனை ஈன்று புறந்தந்த தாய் இன்றில்லாத துயரம் பன்மடங்கு பெருகி, விம்மி, விம்மி அழுது தீர்த்தேன்.
    இந்தக் காட்சிப்படுத்தலுக்கு சுதா அவர்களின் குரல் மெத்தப் பொருத்தமாக இருந்திருக்கும் என்பது எனது கருத்து. கவிப்பேரரசர் ஏற்றுக் கொள்வார் என்று நம்புகிறேன். எவர் மனதையும் புண்படுத்துதல் என் நோக்கமல்ல.

    • @dswaramanjari
      @dswaramanjari Год назад

      This song female version sung by #divyamohan not Sudha sir

    • @ramanathanm7130
      @ramanathanm7130 Год назад +1

      @@dswaramanjari Thank you for elucidating.

  • @நா.தேன்நிலவன்
    @நா.தேன்நிலவன் 2 года назад +1

    "ஜென்மம் நிறைந்தது"பாடலில்
    வாழ்வின் ஜனனத்தையும்;மரணத்தையும் பற்றிய வரிகளைக் கேட்கும்போதும்;அந்தக் காட்சிகளை பார்க்கின்ற போதும் நமக்குள்ளும் வாழ்வின் பிறப்பும்;இறப்பும் கண்முன்னே வந்து வந்து போகிறது !
    ஒரு மரணம் நிகழும் போது ஒரு பிறப்பு நிகழ்கிறது;பிறப்பின் கணக்கில் இறப்பு சரி செய்யப்படுகிறது.
    அதனை எங்கள் கவிப்பேரரசு வைரமுத்து அய்யா நீங்கள் சொல்லிச் சென்ற விதம் எங்களுக்குள் ஓர் பரவசம் !
    நாட்படு தேறல் நாயகனுக்கு மீண்டுமென் வணக்கமும்;அன்பும் 💐🙏

  • @mohanaparthipanparthipan8551
    @mohanaparthipanparthipan8551 2 года назад +3

    இந்தப் பாடலைக் கேட்கும்போது எனக்கு பயமாக இருக்கிறது😭

  • @babudhakshina8311
    @babudhakshina8311 3 месяца назад +1

    என்னுடைய மரணத்தில் இப்பாடல் ஒலிக்கப்பட வேண்டும் என்பதே என் அவா.........

  • @chidambaranathan2917
    @chidambaranathan2917 2 года назад +4

    KaviPerarassu Ayya is a only Poet in Tamil Nadu,Who created Separate Language for Poem and Lyrics, KaviPerarassu Ayya Words are Highly Powerful, He is Incomparable Personality in Tamil Poetry Field, I like You Ayya, This Song is making me to Cray ,When my Mother Passed away, I Sung this Song my relatives were Cried, my Village Mudukkangulam People were Unable to Control their Tellings, Now also tears are freely Coming from my eyes by Dr. S. Chidambaranathan

  • @meenarani50
    @meenarani50 2 года назад +14

    பட்டினத்தார் பாடி வைத்த ஒட்டுமொத்த பாடல்களின் சாரம்சத்தையும் ஒரே பாட்டில் சொல்லிவிட்டார் கவிபேரரசு. இது காலத்துக்கும் அவர் பெயரை உச்சரிக்கும் என்பது உறுதி.

    • @powman1984
      @powman1984 Год назад

      அட லூசுக் கூமுட்ட....
      இதற்கும் முன்னர்
      சங்க கால
      தமிழ் இலக்கிய பாடல்களை படித்துள்ளாயா....?
      அல்லது
      மற்றவர்கள் படித்ததை
      காது கொடுத்து கேட்டுள்ளாயா....?
      3000 ஆண்டுகளுக்கும் முன்னரே
      கணியன் (வானியல் ஆய்வாளன்) பூங்குன்றனார் அவர்கள்
      அவருடைய‌ பாடலில்
      மிகத் தெளிவாகக் கூறி விட்டு சென்று விட்டார்
      " வாழ்வியல் நியதியைப் பற்றி ".
      அவருடைய‌ பாடலின் உட் கருத்தை
      காப்பி பண்ணி பாட்டு எழுதி வச்சுருக்குது இது.
      இந்த உண்மையை உணராமல் ஏதேதோ உளறிக்கிட்டு லூசுத்தனமாக...
      திருட்டுப் பயலுக்கு , பொம்பள பொறுக்கிக்கு புகழாரம் ஒரு கேடா...???

  • @ajayji8989
    @ajayji8989 2 года назад +6

    கோபத்தில் முடிவெடுப்பவர்கள் இந்தப் பாடலைக் கேட்டால் அவர்களின் முடிவுகள் மாறும்

  • @rajendrana3125
    @rajendrana3125 2 года назад +1

    கண்கலங்க வைத்து, தத்துவம் தந்த வரிகள்.. அதிலும் மதயானைக்கூட்டம் பட இயக்குனரின் காட்சி அமைப்பும் அருமை., நன்றிகள் ஐயா..

  • @manoraju7193
    @manoraju7193 2 года назад +1

    பொதுவாக மனிதன் தோன்றும் பொழுது தாலாட்டுப் பாடல் மறையும் போது ஒப்பாரிப் பாடல் என்ற வடிவம் இச்சமூகத்தில் கட்டமைக்கப் பட்டுள்ளது . கவிப்பேரரசு ஒப்பாரி வரிகளில் தாலாட்டாக மிக மிக மென்மையாக நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் சமத்துவமாக ஞானம் போதிக்கும் குருவாக இக் கடமையைச் செய்துள்ளார் . பட்டினத்தார் இதுபோன்றதொரு பாடலை தனது தாயின் இறப்பின் போது பாடியிருக்கிறார் . அதற்கு இணையான பாடலாக சில இடங்களில் அதைத் தாண்டியும் வரும் வார்த்தைகள் போற்றத் தக்கது . சென்றவர்களுக்கு நன்றி தெரிவித்துத் தொடங்கும் பாடல் வரிகள் அத்தோடு இங்கு வந்தோரையும் வாழ்த்துகிறார் . இப்பிரபஞ்சத்தில் பிறப்பும் இறப்பும் புதியதோ பழையதோ இல்லை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இயற்கையின் நியதிப்படிதான் நடக்கின்றது . பாசம் காட்டிய கண்களும் கட்டியணைத்த கைகளும் உலகைச் சுற்றும் கால்களும் இப்போது தீக்கு இரையாகி விட்டது தான் பார்த்த காட்சிகளை காற்றோடு போக மண்ணில் பிறந்து மண்ணுடன் சேர்க எலும்பு சதையினால் ஆன உருவம் அழிய அதன் நினைவின் எச்சங்கள் மட்டுமே மிஞ்சியிருப்பதாகக் கூறுகிறார் . மேலும் பிறப்பு இறப்பு இல்லாத நாட்களே இல்லை நினைவுகள் துன்பப்படுத்தும் அதனால் மறதி எனும் மாமருந்தால் மறந்திருப்போம் என்கிறார் . இயற்கை நிகழ்வுகளான ஆறு கடல் சென்று சேரும் போதும் மழைத்தாரை மண்ணில் வீழும் போதும் கலங்குவதில்லை நதி மழை விதியென்று எண்ணுவது போலன்றி மனிதன் மட்டும் மயங்குவது ஏன் என்று கேள்வி கேட்கிறார் . மரணத்தினால் சிலருடன் கொண்ட சச்சரவுகளால் கோபமும் அதனால் ஏற்படும் சாபமும் தீரும் . வேதம் காட்டாத ஞானத்தை மரணம் காட்டும் விதை வீழ செடி வந்து சேரும் அதனால் கலங்காதே என்று ஆறுதல் கூறுகிறார் .
    பூமிக்கு மனிதன் ஒவ்வொருவரும் யாத்திரை வந்தோம் . யாத்திரையின் முடிவில் நித்திரை கொள்கின்றோம் . நித்திரை இயற்கையின் ஏற்பாடு என்றபோதும் யாத்திரை தொடரத்தான் செய்யும் என்று நினைவு படுத்துகிறார் . தென்றலின் பூங்கரம் சூரியக் கீற்றொடு மழழையின் தேன்மொழி ஆகிய நிகழ்வுகள் இப்பூமியில் இயல்பாக உண்டாக்கும் உணர்வுகளில் மாண்டவர் நம்முடன் இருப்பர் அந் நினைவைப் போற்றுவோம் என்பதாகக் கூறி இறுதியாக அவர்களை வழியனுப்பும் போது இயற்கையுடன் இரண்டறக் கலந்து விடும் என்பதை மாண்டவர் சுவாசம் காற்றுடன், தூயவர் கண்ணொளி சூரியனுடன் , பொன்னுடல் ஐம்பூதங்களிலும் சேரட்டும் புண்ணியம் மட்டும் நம்முடன் தங்கட்டும் என்று நிறைவு செய்கிறார் .
    சித்தர்களும் ஞானிகளும் கூறிச் சென்ற வாழ்க்கைத் தத்துவங்களை இந்த ஒரு பாடலில் சுவைக்கும் கவி நடையில் அனைவரும் ஏற்றுக் கொள்ள அற்புதமாகத் தந்துள்ளார் கவிப்பேரரசு . வாழ்க்கையின் பூரணத்துவம் எவையென்று அடுக்கிக் கூறி அழுகையிலிருந்து இயற்கையின் நிகழ்வை ஏற்றுக் கொண்டு நிறைவான வாழ்வை நாமும் பெறுவோம் என்ற அறவுரையால் அனைத்து உயிர்க்கும் பிறப்பும் இறப்பும் ஒரே மாதிரி நிகழ்வு தான் என்பதை தெளிவு படுத்தியுள்ளார் .
    இப்பாடல் மயானங்களில் ஒலிக்கும் போது என்ன மனநிறைவு அடைந்துள்ளோமோ அது போன்று இதுவும் நிறைவைத் தரும் . காலங்கடந்தும் வாழ்வார் கவிப்பேரரசு என்பது திண்ணம் .
    அன்புடன்
    முனைவர் தேவாரம் இரா.மனோகரன்
    சின்னமனூர் . ..2.

  • @selvamk5628
    @selvamk5628 2 года назад +1

    கவிஞர் வைரமுத்து 7000க்கும் அதிகமான சினிமா பாடல்கள் எழுதியிருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் அவர் எழுதிய பாடல்களிலேயே உச்சம் என்று நான் கருதுவது இந்த ஜென்மம் நிறைந்தது பாடலைத்தான்.,இந்தப் பாட்டோட அருமை பெருமையை கவிஞரோட எதிரிகள் கூட மறுக்க மாடார்கள்.

  • @karthia6827
    @karthia6827 2 года назад +1

    நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை
    மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை இந்த வரியின் உண்மையை விளங்கிக் கொண்டால் மனதின் ஆதிக்கத்திலிருந்து விடுபடலாம். இது தற்கொலையைத் தடுக்கும் வரிகள்.

  • @rajendranpalani2656
    @rajendranpalani2656 Год назад

    ❤😮 கண்ணீர் கண்ணீர் கண்ணீர் முதல் கண்ணீர் துளியின் பிறப்பே தாயின் மறுபிறவி மறு கண்ணீர் துளியின் பிறப்பே தந்தையின் பிறப்பே இப்பாடலை எழுதியவருக்கும் பாடியவர்க்கும் நடித்தவர்களுக்கும் போட்டோகிராபர்களுக்கும்❤❤❤❤❤❤❤❤❤❤❤ இப்பாடலின் படத்தின் பெயர் என்ன நன்றி

  • @t.govindarajutheeko2734
    @t.govindarajutheeko2734 2 года назад +21

    ஒரு சொட்டு கண்ணீர் வடிக்காமல் இந்தப் பாடலோடு நாம் பயணிக்க முடியாது.
    இது மரணத்துக்கானப் பாடல் இல்லை.வாழ்க்கையைப் புரிந்து கொள்ள வேண்டியப் பாட்டு என்று கவிஞர் சொன்னது உண்மை.
    மனது பாராமாகும் போது
    இந்தப் பாட்டு மருந்தாகும்.
    பட்டினத்தார் சொல்லாத ஞானத்தை
    பாமரனுக்கும் சொல்லிவைத்தக்
    கவிப்பேரரசு அவர்களே
    இனிய
    நீங்கள்
    கவிஞானி என்றே
    அழைக்கப்படலாம்

    • @powman1984
      @powman1984 Год назад

      இந்த பாடலின் உட் பொருளை
      3000 ஆண்டுகளுக்கும் முன்னரே
      கணியன் (வானியல் ஆய்வாளன்) பூங்குன்றனார் அவர்கள் அவருடைய‌ பாடலில் எழுதி வைத்து விட்டு
      சென்று விட்டார்.
      அவருடைய பாடலை
      காப்பி பண்ணிக் கிட்டு அலையுது இது.
      பட்டினத்தார் எப்படிப்பட்ட மனிதர் ...?
      அவருடன்
      இந்த கழிசடையை ஒப்பீடு செய்வதென்பது நியாயமா....???
      பின்னணிபாடகி சின்மயி யிடம் கேளுங்கள்
      இந்த கழிசடையின் உண்மை முகம் (பொம்பள பொறுக்கித் தனம்) புரியும்.

    • @suganyasampath9008
      @suganyasampath9008 Год назад

      வாழ்வியல் ஞானிகள் கூறிய அரும்பெரும் மெய்ப்பொருளை ஒவ்வொரு மனிதனுக்கும் விளக்கும் பாடல்.

      சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
      இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே
      ...
      கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
      நீர்வழிப் படூஉம் புணைபோல், ஆருயிர் - புறநானூறு ,கணியன் பூங்குன்றனார் .
      this song is one of the masterpieces of kaviperarasu Vairamuthu. But, not something which is not told by the legends Pattinathar , thaayumanavar , kaniyan poongundranaar

  • @royalfood3394
    @royalfood3394 2 года назад +152

    தற்கொலையைத் தடுத்துநிறுத்தும் சக்தி இப்பாடலுக்குள் இருக்கிறது. அதற்கு நானே ஒரு சாட்சி. ஆம் என் தவறான முடிவொன்றை இந்த பாட்டு தடுத்துவிட்டது. கவிஞர் வைரமுத்து என் நன்றிக்குரியவர்.

    • @narendhanapal7100
      @narendhanapal7100 2 года назад +2

      Ean Amma intha song ah kettirukalam.....ea Amma tharkolai pannni 4 naal tha aguthu 😭😭

    • @anandhis.a.619
      @anandhis.a.619 Год назад

      Tharkolai mudiva eppavume yosikathinga.

    • @jeyapandian1061
      @jeyapandian1061 Год назад

      ​@@narendhanapal7100don't feel brother

    • @veerapansiva1614
      @veerapansiva1614 Год назад +4

      உண்மை ஆனால் இது வள்ளலார் பாடல்

    • @Dhinesh454
      @Dhinesh454 Год назад +2

      வாழவே பிடிக்கவில்லையே இறைவா.‌
      அன்பு இல்லாத‌ மனைவியை ஏன் கொடுத்தாய்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @sundarimurugan5248
    @sundarimurugan5248 2 года назад

    ஜனனமும் மரணமும் இயற்கையின் இரட்டை பிறவிகள். ஓர் உயிர் ஜனித்தால் நிச்சயமாக ஒர் நாள் மரணிக்கும்.. மக்களே வாழும் பொழுதே மனிதத்தை மதியுங்கள். இருக்கும் பொழுது ஒருவரின் அருமை தெரியாத ஒருவன், அவர்கள் இறந்த பின்பு அழுது பயனில்லை.
    பாடல் மிகவும் உணர்வுப்பூர்வமாக உள்ளது.
    ஞானசுந்தரி - குயின் மீரா சர்வதேச பள்ளி, மதுரை.

  • @sushmoandhanapal
    @sushmoandhanapal 2 года назад +2

    அருமையான வரிகள் அருமையான இசை அருமையான காட்சியமைப்பு என ஒரு முழுமையான பாடல் இது

  • @jayakumar-jp2mj
    @jayakumar-jp2mj 2 года назад

    முதலில் என் மகனை இழந்தேன். அதன் விளைவாக பிறகு என் மனைவியையும் இழந்தேன். கடும் மன உளைச்சலில் நான் புலம்பித் திரிந்த போது என் நண்பர் ஒருவர் கவிஞர் வைரமுத்துவோட இந்த பாடலைக் கேளுங்க ஆறுதலாயிருக்கும்ன் னு அனுப்பி வச்சாரு. வேண்டா வெறுப்ப கேக்க ஆரம்பிச்சேன். ஆனா கேக்கக் கேக்க என் மனசு மரணம் பற்றிய உண்மைய தெரிஞ்சுக்கிருச்சு. இப்ப நான் கொஞ்சம் கொஞ்சமா என் மனைவி,மகன் இழப்பிலிருந்து மீண்டு என்னால முடிஞ்ச நல்ல காரியங்கள செய்யிறதுக்கும் மத்தவங்களுக்கு உதவுறதுக்கும் இந்தப் பாட்டு ஒரு முக்கிய காரணம்.

  • @arivalagan1109
    @arivalagan1109 2 года назад +4

    This Song is my Favourite. Each line of this song brings tears to my eyes and Sweet memory of love one who left us.

  • @maheswaranmayathevar762
    @maheswaranmayathevar762 2 года назад +1

    ஐம்பூதங்களை உணரும் போதெல்லாம் என்னை நீங்கிச் சென்ற என் அன்னை என்னைத் தழுவுவதாக உணருகிறேன் ....
    இப்பாடலைக் கேட்ட பின்பு😰

  • @Maruthukavithaigal
    @Maruthukavithaigal 2 года назад +1

    அம்மா 😥😥
    நெஞ்சை சுட்ட வரிகள்

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan3477 6 месяцев назад

    Extraordinary song meaning full

  • @prabuthangam6123
    @prabuthangam6123 2 года назад +3

    ஆம் கண்ணதாசனுக்கு இணை கண்ணதாசன் தான் ...
    கவிப்பேரரசர் தத்துவமே தனித்துவம் அதனால் கவிப்பேரரசர் வேறு கண்ணதாசன் வேறு...
    ஆம் கவிஞர்களுக்கெள்ளம் கவிஞர் கவிப்பேரரசர் தான்...

  • @Naruto_XUZUMAKI790
    @Naruto_XUZUMAKI790 2 года назад +9

    கவிப்பேரரசு என்று
    உலகம் கொண்டாடுவதற்கு
    ஒரு சோறு பதம் இந்தப்பாடல்.
    இதை அழாமல்
    கண்ணுற்றவன்
    மனிதனில்லை.
    ஒரு கலை
    தன் சிறுபகுதியால்
    இந்த உலகத்தையே
    பண்படுத்த முடியுமா என்கிற
    மானுடக் கேள்விக்கு
    பதில் சொல்கிற பாடல்.
    உலக நாடுகள்
    இராணுவத்திற்கு
    ஒதுக்குகிற தொகையின்
    பெரும் பகுதி கலைக்குத் தான்
    ஒதுக்கப்பட வேண்டும் என்பதற்கு
    கட்டியங் கூறும் பாடல்.
    உம் கலை கண்டு
    உலக மாந்தர் சிந்தும்
    கண்ணீருக்கு முன்னால்
    உலகின் உட்ச விருதுகள்
    அற்பமானவை!
    போனவர் புண்ணியம்
    நம்முடன் சேர்க!
    சேரட்டும்!
    சேரும்!!
    வாழ்க
    கவிப்பேரரசு!
    வெல்க
    நாட்படுதேறல்!!

  • @dhineshselvam7721
    @dhineshselvam7721 2 года назад +1

    கண்கள் முழுவதும் கண்ணீராக....... நன்றி எங்கள் தமிழன் வைரமுத்து ஐயா அவர்களுக்கு..

  • @rajendranpoosamooper5739
    @rajendranpoosamooper5739 5 месяцев назад

    இந்த பாடலை கேட்கு ம்போது தான் யார் என்பதையே மறக்கச் செய்கிறது. இந்த குறுகிய நேரத்தில் பிறந்து வாழ்ந்து இரப்பது

  • @baskarv4195
    @baskarv4195 2 года назад

    கடல் சேரும் நதிகள் கலங்குவதில்லை தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை___இதயத்தில் பொறித்துக்கொள்ள வேண்டிய கவி (திரு)வாசகம் !

  • @ManiVaas
    @ManiVaas 2 года назад +3

    தமிழின் பொக்கிஷம் ஐயாவின் வரிகள், பெருமை கொள்வோம்

  • @vs2crafts0and1fun1tamil
    @vs2crafts0and1fun1tamil 2 года назад +17

    தூங்க போகும் போது இந்த பாடல் மனதுக்கு அமைதி தருகிறது ஐயா

  • @சேரன்மீடியா
    @சேரன்மீடியா 2 года назад +2

    அருமையான காட்சிகள் வடிவமைப்பு வாழ்த்துகள் விக்ரம் சுகுமாரன் அண்ணா

    • @ganeshbabu519
      @ganeshbabu519 Год назад

      வரிகள் வைரம்
      காட்சி படுத்தப்பட்டது குப்பை

  • @mathustalin
    @mathustalin 2 года назад +3

    சொல்ல வார்த்தைகள் இல்லை🥺 இன்று இசையருவியில் ஒருகனம் கரைந்துவிட்டேன்..🥺🥺

  • @magamathi941
    @magamathi941 Год назад +12

    கண்ணீர் வராமல் இந்த பாடலை கேட்க முடியாது.

  • @jothirathinam1056
    @jothirathinam1056 2 года назад

    வாழ்வில் நாம் செய்த
    இருவினை கணக்குகளின்
    இருப்புசீட்டு இறப்பு!
    என்பதனை அழுத்தமாக பதிவு செய்த கவிஞர் ஐயாவே.கண்ணீர் வரவழைத்து விட்டீர்.

  • @anbu190
    @anbu190 Год назад +1

    I burst out into tears when he cried out "AMMA" at the end 💔

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan3477 Год назад +2

    Excellent song and picturaisation

  • @thulasibala6691
    @thulasibala6691 Год назад

    Dis actress is so beautiful ❤. Love her very much

  • @gsridhar5105
    @gsridhar5105 5 месяцев назад

    Our tradition our practice our beliefs and faith of Hindus reflected in a nutshell in this song. Superb

  • @manoraju7193
    @manoraju7193 2 года назад +4

    அன்பு அண்ணனுக்கு வணக்கம் !
    இன்றைய பத்தாவது பாடல் ஜென்மம் நிறைந்தது . இப்பாடலினால் கவிப்பேரரசு இப்பூமியில் இறப்பு என்றதொரு நிகழ்வு இருக்கும் வரை நின்று நிலைத்திருப்பார் . அமரத்துவமான பாடல் நெஞ்சை ஆட்கொள்ளும் பாடல் . ஒவ்வொரு உயிரினமும் தனது வாழ்க்கையில் பிறப்பு என்ற நிகழ்வையும் இறப்பு என்ற நிறைவையும் பெறாமல் இருக்கவே முடியாது . அப்படிப்பட்ட வாழ்வின் எதார்த்தத்தை ஆண்டி முதல் அரசன் வரை செல்லும் இறுதிப் பயணத்தின் முடிவை முத்தாய்ப்பாக எழுதி பாடலாக்கி நிறைவாகச் செய்துள்ளார் . இக்கவிதை ஒலிவடிவில் பல ஆண்டுகளாக தமிழகத்தின் ஒவ்வொரு மயானத்திலும் பல நாடுகளிலும் இறுதிச் சடங்கின் போது ஒலிபரப்பப்படுகிறது . வழியனுப்ப வந்த அனைவரும் கேட்டு ஞானம் பெறும் வண்ணம் கேட்டுக் கொண்டுள்ளோம் . இன்று இவ்வரிகளை காட்சிப் படுத்தி வரிகளுக்கேற்ப வடிவமைத்து ஒளிப்பதிவு செய்துள்ளது அருமையான காட்சிப் பதிவு இறப்புக்காட்சி கண்ணில் நீரை வரச்செய்கிறது நடிப்பில் தாயும் மகனும் போட்டி போட்டு நடித்துள்ளனர் . இறப்புச் சடங்குகள் இறப்பு வீட்டில் நேரில் சென்று எடுத்தது போல அமைக்கப் பட்டுள்ளது சிறப்பு . இனியவன் இசையில் மாபெரும் பின்னணி பாடகர் ஜேசுதாஸின் மகன் விஜய் ஜேசுதாஸ் குரலில் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் சீரிய முறையில் அழகுற காட்சிப் படுத்தி வெளியாக்கியுள்ள கவிப்பேரரசு அவர்களுக்கு அன்பான நன்றி . ..1.
    முனைவர் இரா.மனோகரன் .
    சின்னமனூர்

  • @bhoopathiraja9797
    @bhoopathiraja9797 2 года назад +5

    Wow. Miracle Lines..A Song thatwould deeply touch everyones Soul.Thank u Vairamuthu Sir.Vijay Jesudass Voice Melting.

    • @powman1984
      @powman1984 Год назад

      Is it miracle....???
      " Sangam Priod " thamizh literatures are
      what If it's miracle....???
      Please must read the
      " Sangam Priod " thamizh literatures.
      Then write about this song.
      Is it miracle....???

  • @SengottaiyanSengottaiyan-kv2nr
    @SengottaiyanSengottaiyan-kv2nr 10 месяцев назад

    என் மகனை இழந்து தவிக்கிறேன் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது

  • @rameshthala242
    @rameshthala242 2 года назад

    தத்துவப் பாட்டுன்னா….கவியரசு கண்ணதாசனுக்கு ஒரு போனால் போகட்டும் போடா.கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு ‘ஜெனமம் நிறைந்தது சென்றவர் வாழ்க.

  • @ziprak
    @ziprak 2 года назад

    வைரமுத்து எழுதிய பாடல் பாடையில் போகும் போதும் ஒலிக்கும்....

  • @vpkumar981
    @vpkumar981 2 года назад +5

    *"ஜென்மம் நிறைந்து" ஒரு ஞானப் பாடல். தமிழன்பர்களால் புரிந்து கொள்ளப்பட்டதை ஞான பீடங்கள் புரிந்து கொண்டதா எனப் புரியவில்லை. நோபல் எல்லைகளைத் தாண்டிய ஞான வெளிப்பாடல் நாட்படு தேறல் வழி பரவட்டும். ஞானக் கவியே நின் திறன் கண்டு நாளும் வியப்பே. வணக்கத்திற்குரிய மகானே வணக்கம்.*

    • @powman1984
      @powman1984 Год назад

      அட லூசுக் கூமுட்ட....
      இதற்கும் முன்னர்
      சங்க கால
      தமிழ் இலக்கிய பாடல்களை படித்துள்ளாயா....?
      அல்லது
      மற்றவர்கள் படித்ததை
      காது கொடுத்து கேட்டுள்ளாயா....?
      3000 ஆண்டுகளுக்கும் முன்னரே
      கணியன் (வானியல் ஆய்வாளன்) பூங்குன்றனார் அவர்கள்
      அவருடைய‌ பாடலில்
      மிகத் தெளிவாகக் கூறி விட்டு சென்று விட்டார்
      " வாழ்வியல் நியதியைப் பற்றி ".
      அவருடைய‌ பாடலின் உட் கருத்தை
      காப்பி பண்ணி பாட்டு எழுதி வச்சுருக்குது இது.
      இந்த உண்மையை உணராமல் ஏதேதோ உளறிக்கிட்டு லூசுத்தனமாக...
      இந்த லட்சணத்துல இதுக்கு
      ஞானபீட விருது ஒன்றுதான் கேடா....??
      போதாத குறைக்கு நோபல் வேறு தேவையா....???

  • @Vidhyachu
    @Vidhyachu Год назад

    எவ்ளோதடவ கேட்டாலும் மனசுகுள்ள இருக்கிற இழப்ப நெனச்சி கதறவிடற அவர்கள்!!!

  • @kalpanakarthiksomasekar1998
    @kalpanakarthiksomasekar1998 2 года назад

    The reality of death and birth is lyricised in an emotional way. I was emotionally touched and I shedded tears naturally even without viewing the video. This kind of strength is strongly imbibed with Kavingar Sir. He is the messenger of God ! He is the only representative of God . This song is a good evident! Vaazhga Kavingar!

  • @golden_ags
    @golden_ags 2 года назад +1

    என் மூக்கு ஒழுகும் அளவுக்கு ஜென்மம் நிறைந்தது என் கண்களில் கண்ணீர் நிறைந்தது....😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @revathirengarajan2012
    @revathirengarajan2012 2 года назад

    கண்மறைந்த என் தாயின் மடியை இப்பாடலில் ஸ்பரிசித்தேன்.அவளை தரிசித்தேன். பாடலை இன்னும் கொஞ்சம் அழுத்திக் கேட்டிருந்தால்,கண்ணீர் கண்ணைத் தாண்டி விண்ணில் தெறிக்கும் என்பதால் அதை உணவு போல் விழுங்கிக் கொண்டேன்.சிறிது சிறிதாக விழும் அக்கினித் துண்டுகள் உட்புகுந்து மனசை மிகவும் உரசிக் கிளறி, தாயின் நினைவுகளை வெளியிழுத்து வருகிறது..அழுகையில் எழுத்து விழவில்லை.ஆழச்சென்று மிக ஞானந்தரும் கருவி. ஆயினும் தங்கள் அனுமதியோடு இப்பாடலை என் தாய்க்குச் சமர்ப்பித்து, எனக்குத் தாயாக்கிக் கொள்வேன்.

  • @SATHISHKUMAR-ng8hn
    @SATHISHKUMAR-ng8hn 2 года назад

    Muthu muthai kanneer thuligal intha vaira Muthuvin varigalinal...

  • @sreeranganathannavaratnam6651
    @sreeranganathannavaratnam6651 2 года назад +5

    Entire Buddhism is explained in simple two lines. Naatpadutheral is tamil Festival. sreeranganathan Germany

  • @tamilmaranss8412
    @tamilmaranss8412 2 года назад

    Super my respect sir vickram sugumaaran &vairamuthu sir lyrics

  • @velrajvelrajvelrajnainar9248
    @velrajvelrajvelrajnainar9248 2 года назад

    நன்றி🙏🙏🙏

  • @vppmhtf1375
    @vppmhtf1375 2 года назад +1

    அருமையான பாடல்.........

  • @Neela-h8g
    @Neela-h8g 3 месяца назад

    Om nama shivaya 🙏

  • @selvanidhi4985
    @selvanidhi4985 2 года назад +1

    அருமையான பாடல் 👏

  • @thamburaj1682
    @thamburaj1682 2 года назад +1

    Super sir very good lyrics vaiamuthu sir and 🎤 super

  • @paramana1677
    @paramana1677 2 года назад

    இந்த பாட்டை முழுமையாகக் கேட்டால் வாழ்க்கை என்றால் என்ன என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.

  • @manivannan5456
    @manivannan5456 2 года назад +2

    அண்ணா, இப்போது எனக்கு கண்ணீர் மட்டுமே வருகிறது. எழுதச் சொற்கள் வரவில்லை. நாளை காலையில் தனியாக எழுதுகிறேன்.
    மணிவண்ணன் நங்கைநல்லூர்

  • @nandakumarnandakumar3283
    @nandakumarnandakumar3283 Год назад

    When my grandma was dead ,i wept in toilet with shedding lot tears...my grandma taught simplicity.i use to ride her to veepary by cycle to meet her relative.. Evening i will pickup her in my cycle...

  • @prasanthsekar9495
    @prasanthsekar9495 2 года назад +1

    Melting heart...

  • @baskarv4195
    @baskarv4195 2 года назад +1

    தேன்குரலோன் SPB அவர்களின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்களில் 90 விழுக்காட்டுக்கு மேல் நம் கவிப்பேரரசர் அவர்களின் பாடல்களே!