ஶ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமியை ஒட்டி ஓசூரில் நடைபெற்ற யாதவ சமுதாய பாரம்பரிய வினோத உறியடி நிகழ்ச்சி

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • ஶ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமியை ஒட்டி ஓசூரில் நடைபெற்ற யாதவ சமுதாய பாரம்பரிய வினோத உறியடி நிகழ்ச்சி. பங்கேற்று வீரத்தை வெளிப்படுத்திய இளைஞர்கள்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பாகலூர் சாலையில் அமைந்துள்ள பல நூறு ஆண்டு பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோவிலில் ஶ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
    இந்த திருக்கோயிலில் பல நூற்றாண்டுகளாக அந்தப் பகுதியில் வாழும் கொல்லப்பேட்டை, யாதவ சமுதாய மக்களின் பாரம்பரிய வினோத உறியடி நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடைபெற்றது.
    முன்னதாக திருக்கோவிலில் மூலவர் ஸ்ரீ வேணுகோபாலர் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்து அருள் பாலித்தார்.
    இதனையடுத்து, பிரம்மாண்ட சிறப்பு அலங்காரத்தில் இருந்த ராதா ருக்மணி சமேத ஸ்ரீ வேணுகோபாலர் பக்தர்களால் திருக்கோயிலின் வெளியே அமைக்கப்பட்ட மலர் பல்லக்கில் கொண்டு வந்து வைத்து சிறப்பு ஆராதனைகள் செய்தனர்.
    பின்னர் தென்னிந்தியாவில் பெண்ணை மணமுடிக்க ஆண்கள் தங்களது வீரத்தை வெளிப்படுத்தும் விதமாக ஏறுதழுவுதல், மஞ்சுவிரட்டு, காளை அடக்குதல், கவண் கல் தூக்குதல் போன்ற வீர விளையாட்டுகள் நடைபெறுவது இயல்பு.
    இதே போல யாதவ குலத்தில் உதித்த ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா வாழ்ந்த வடநாட்டில் அந்த காலங்களில் ஆண்களின் வீரத்தை வெளிப்படுத்தும் விதமாக வினோத உறி அடி திருவிழா நடத்துவது வழக்கம்.
    இதனையே பல நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஓசூர் பகுதியில் வாழும் யாதவ சமுதாய மக்கள் ஒவ்வொரு கிருஷ்ண ஜென்மாஷ்டமி அன்றும் வினோத உறியடி நிகழ்ச்சியை நடத்துவார்கள்.
    அந்த வகையில் திருக்கோயிலில் முன்பு மலர் பல்லக்கில் அமர்ந்த ஸ்ரீ ராதா ருக்மணி சமேத ஸ்ரீ வேணுகோபால உற்சவமூர்த்திகள் பார்த்தபடி, இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
    இதில் ஒரு மூட்டையில் ஏராளமான பொருட்களுடன் தேங்காய் உள்ளிட்ட பொருளுடன் கயிறு கட்டி அதனை ஊஞ்சல் போல இருபுறமும் உருட்டுவார்கள்.
    அப்போது, நான்கு புறத்திலிருந்தும் மஞ்சள் நீரை தொடர்ந்து பீச்சி ஊற்ற கையில் சவுக்கு கழியுடன் இளைஞர்கள் அந்த மூட்டையில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்க வேண்டும்.
    அவ்வாறு அடித்து நொறுக்கும் இளைஞர்களே வீரமிகுந்தவர்கள் என கருதப்படுவதுடன் இதில் இளைஞர்களுக்கு உற்சாகமூட்டும் விதமாக நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் ஆரவாரம் செய்தனர்.
    இவ்வாறு நடத்தப்படும் இந்த வினோத உறியடி நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கும் பங்கேற்பவர்களுக்கும் பல நன்மைகள் மற்றும் தெய்வ அருளும் கிடைக்கும் என்பது பாரம்பரிய நம்பிக்கையாகும்.
    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஏராளமான இளைஞர்கள் பாரம்பரிய மரபு மாறாமல் அவர்களது வீரத்தை வெளிப்படுத்தும் விதமாக அந்தத் தேங்காய் மூட்டையை உற்சாகத்துடன் அடித்து நொறுக்கினார்கள்.
    இதைத்தொடர்ந்து மலர் பல்லக்கில் எழுந்தருளிய உற்சவமூர்த்தி திருவீதி உலா வந்தார்.
    இதில் ஏராளமானோர் பங்கேற்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அருள் பெற்றனர்.

Комментарии •