சிவனே என்ன ஆச்சரியம் இது ! சிலையை தட்டினால் வெண்கல ஓசை எப்படி? | Dinamalar Anmeegam | ShivaTemple

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் அருகே உள்ள மணிமங்கலத்தில் ரம்மியமான சூழலில் சிவன் குடிகொண்டிருக்கும் கோயில் உள்ளது.
    தர்மேஸ்வரர் கோயில் தாம்பரத்தில் இருந்து 10 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. சோழர் மற்றும் பல்லவர்களின் கட்டிட கலையில் கோயில் செதுக்கப்பட்டது. ஆயிரம் வருடங்கள் முன் கட்டப்பட்டு இருக்கலாம் என தொல்லியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
    காஞ்சிபுரத்தின் சில பகுதிகளை ஆட்சி செய்த பல்லவ மன்னன், ஒரு சிவ பக்தன். தான தர்மம் செய்வதில் சிறந்து விளங்கினான். அதை தொடர்ந்து சிவனுக்காக கோயில் எழுப்ப ஆசைப்பட்டான்.
    கோயிலை எங்கு கட்டுவது என யோசித்துக்கொண்டிருந்த நேரத்தில், சிவபெருமானே அடியார் வேடத்தில் வந்து மன்னரிடம் யாகசம் கேட்டார். அப்போது ஒரு இடத்தை காட்டி, இங்கு கோயில் கட்டு என சொல்லிவிட்டு சென்றார்.
    தான் நினைத்ததை எப்படி இவர் கூறினார், என மன்னர் ஆச்சரியப்பட்டார். அப்போது அடியாராக வந்த சிவன் மன்னருக்கு காட்சியளித்தார். இந்த தானத்தின் பெயராக சிவன், தர்மேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.
    மூலவர் சதுர வடிவத்தில் ஆவுடையாருடன் கஜபிருஷ்ட விமானத்தின் கீழ் காட்சி தருகிறார்.
    தர்மேஸ்வரர் என்ற பெயருக்கு ஏற்ப, அதர்மத்தை நீக்கி தர்மத்தை நிலை நாட்டுவார்.
    இந்த கோயிலின் ஸ்தல விருட்சம் சரக்கொன்றை மரம். 7-8ம் நூற்றாண்டில் நரசிம்ம பல்லவர், இரண்டாம் புலிகேசியுடன் போரிட்டு வென்ற இடமாக கூறப்படுகிறது.#ShivaTemple #kundrathur #Manimangalam #Kanchipuramtemple #Dinamalar

Комментарии • 10