கதை கேட்க வாங்க | ஜெயமோகன் - அறம் | சோற்றுக்கணக்கு | பவா செல்லதுரை | Bava Chelladurai

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • கதை கேட்க வாங்க - பவா செல்லதுரை
    ஜெயமோகன் அறம் தொகுப்பிலிருந்து “சோற்றுக்கணக்கு”
    Bava Chelladurai
    Kathai Ketkka Vanga
    Jeyamohan Aram
    #BavaChelladurai
    This video made exclusive for RUclips Viewers by Shruti.TV
    Follow us : shrutiwebtv
    Twitter id : shrutitv
    Website : www.shruti.tv
    Mail id : contact@shruti.tv
    WhatsApp : +91 9444689000

Комментарии • 432

  • @angavairani538
    @angavairani538 4 года назад +152

    சோற்றுக்கணக்கு...இதை படிப்பதைவிட நீங்கள் சொல்லுவது அவ்வளவு அழகு பவா.....இளமையில் வறுமை கொடிது...ஆனால் உங்களைப்பற்றி சொல்வதற்கு ஒரு ஆழமான அா்த்தமுள்ள கதை இருக்கு....உங்க மாமி மாதிாி யாரும் இருக்கமாட்டாங்க....பாய் போன்ற மனிதர்கள் இன்றளவும் உலகில் இருக்கிறாா்கள் ..இதயத்தை தொட்ட அழகான பதிவு..நன்றி பவா...🤝👌👏👍❣⚘

    • @16mallikeswari
      @16mallikeswari 4 года назад +2

      மிக அருமை

    • @singaporechettinadrecipes8792
      @singaporechettinadrecipes8792 4 года назад +2

      பவா கதை சொல்வதே உங்கள் வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டத்தான், ‘அறம்’ புத்தகம் அனைவராலும் வாசிக்கப்பட வேண்டிய புத்தகம், படித்துப் பாருங்கள்

    • @govindaswamyramaraj3036
      @govindaswamyramaraj3036 3 года назад

      R

    • @selvarajshana2628
      @selvarajshana2628 3 года назад +1

    • @gunaretnamleonis1971
      @gunaretnamleonis1971 3 года назад

      P

  • @murugadossdirector
    @murugadossdirector 4 года назад +139

    பாவா சார்... ஏற்கனவே “ சோற்றுக்கணக்கு” படித்திருந்தாலும் உங்கள் குரலில் மீண்டும் கேட்கும்போது அதே அழுத்தமும் அழுகையும் வருகிறது.

    • @sathiyanarayanankannan647
      @sathiyanarayanankannan647 4 года назад +3

      Enna Sir, ninga intha pakkam vanthutinga?

    • @lovetoday1219
      @lovetoday1219 4 года назад +6

      முருகதாஸ் சார் எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லை.சில வருடங்களுக்கு முன்பு நீங்கள் சொன்னதால் தான் அறம் புத்தகம் வாங்கிப் படித்தேன் அருமையான புத்தகம்...

    • @sanjayrajinikanth3214
      @sanjayrajinikanth3214 4 года назад +1

      100% unmai

    • @magilampoo4966
      @magilampoo4966 3 года назад

      உண்மை பாவ.சாரின் குரலில் கதை கேட்பது அலாதியான சுகம்.

    • @ardineshkumardinesh5524
      @ardineshkumardinesh5524 3 года назад

      @@sathiyanarayanankannan647 05

  • @valarmathy2251
    @valarmathy2251 4 года назад +43

    நீங்கள் சாப்பாட்டு பிரியரா பவா? குடும்பதோடு மலேசியா என் வீட்டுக்கு வாங்க. மனக்க மனக்க சமைத்து ..... சமையல் என்பதே எனக்கும் மிகவும் பிடித்த விஷியம்.

  • @saivijayakumar7188
    @saivijayakumar7188 Год назад +5

    அழுகை வருகிறது.அநேகமா கேட்ட எல்லோருமே அழிதிருப்பார்கள்.சம்பளத்தை கேட்ட அப்பாவின் வன்மம், கத்தேல் சாயபுவிடம் உங்களுக்கிருந்த புனிதமான அன்பும், அழுக்கான எதிர்மறை எண்ணமும், மிக யதார்த்தம்.நன்றி

  • @dhandapanithiyagarajan3902
    @dhandapanithiyagarajan3902 4 года назад +10

    மறக்க முடியாத கதை. அந்த கதையில் வரும் பாய் மனிதரல்ல. கடவுள்.

  • @yaavarumkeleer
    @yaavarumkeleer 11 месяцев назад +2

    Jayamohan great writer. Bava great story teller..

  • @tsenthilkumar316
    @tsenthilkumar316 Год назад +2

    பவா ,,சார் என்று சொல்ல மனம் வர்வில்லை அப்பா,அண்ணன் என சொல்லத்தான் தோனுது,,40 வருடங்களுக்கு முன் மனிதரகள் எவ்வளவு வறுமையில் வாடி இருக்கிறார்கள் ,,அந்த பாய்
    கடவுளாகத்தான் தெரிகிறார்
    இவரை போல மனிதர்கள் இன்னும் சிலர் இருக்கிறார்கள்,இந்த கதையை கேட்ட எல்லோருமே அழாமல் இருக்க முடியாது
    வறுமையிலும் அறத்தோடு வாழ்ந்திருக்கிறார்கள்
    பவா அய்யாவுக்கு நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @santhosh39
    @santhosh39 4 года назад +2

    பவா அப்பா.... தினம் தினம் உங்கள் குரலில் ஒன்று, இரண்டு, மூன்று கதைகளை கேட்கிறேன்... கிரகிக்கிறேன்....
    ஆயிரம் முத்தங்களோடு உங்களை கட்டிகொள்கிறேன்.... 🙏
    ஊரடங்கு முடிந்ததும் திருவண்ணாமலைக்கு வருவேன்...
    அண்ணாமலையாரை யும் உங்களையும் நான் எப்போதும் பொறாமை கொள்ளும் வம்சி மானசியை கான ....
    ஷைலஜா அம்மாவின் கையால் சாப்பிட....

  • @kalaithaaioodagam5493
    @kalaithaaioodagam5493 4 года назад +15

    நீ்ங்களும் ஓர் ஆண் தாய்...தான் பவா...!
    நெகிழ்ச்சி....!

  • @aandalmahalakshmi99
    @aandalmahalakshmi99 2 года назад +10

    இந்த கதையய் கேட்கும் பொழுது கண்கள் கலங்குகிறது, மெய்சிலிர்க்கிறது . 🙏

  • @vijayakumarirajendran1933
    @vijayakumarirajendran1933 4 года назад +16

    வணக்கம் பவா.
    கதை படித்திருக்கிறேன்.
    வாசித்த *ருசி* யை க் காட்டிலும் நீங்கள் சொல்லி அதைச் சுவாசித்த ருசி அதீதம்.
    நன்றி பவா

  • @lawdharmasuresh1774
    @lawdharmasuresh1774 4 года назад +7

    மீண்டும் ஒரு நன்றி பவா இன்றைய சோற்றுக் கணக்கு பதிவிற்காக. நான் இன்று (29/05/2020) மதியம் திரு.துல்கர் சல்மான் மற்றும் திரு.திலகன் நடித்த USTAD Hotel என்ற மலையாளப் படம் பார்த்தேன். அந்த படத்தை தாங்களும் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். உணவு எவ்வாறு செய்வது என்பதில் அல்ல விஷயம், ஆனால் உணவு எதற்காக தயாரிக்கப்படவேண்டும், எப்படி பரிமாறப்படவேண்டும் என்பதுதான் முக்கியம் என்பதை தனது பேரனுக்கு திலகன் உணர்த்தியிருப்பார். அந்தப் படம் என்னை மிகவும் பாதித்தது. உணவுக்குப் பின் உள்ள அன்பு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தியது. நாம் வார்த்தைகளில் எல்லாவற்றையும் புரிந்து கொண்டு, நடைமுறையில் புறக்கணித்துச் செல்லும் அர்ப்ப மனிதன் தானே நானும். ஆனால் அந்தப்படம் பார்த்தவுடன், எனக்கு சோற்றுக் கணக்கு கதை ஞாபகம் வந்தது. இன்று அந்தப் படத்தை பார்த்து முடித்தவுடன், என் சகோதரியின் குழந்தைகளுக்கு சோற்றுக் கணக்கை நான் சொல்லிக் கொண்டிருந்தேன், அப்போது மணி இன்று மாலை 6. முடித்தவுடன் என் கணிணியை on செய்தவுடன், பவா அவர்களின் கதை உண்டா என்று youtubeஐ பார்க்கிறேன். அவர் கூறிய சோற்றுக் கணக்கு இதோ என் செவி முன்பு. நான் எனக்குத் தெரிந்த மொழியில் , என் சகோதரி குழந்தைகளிடம் சோற்றுக் கணக்கு சொன்ன அதே சமயத்தில்தான் பவா சொன்ன கதையும் RUclipsல் பதிவேற்றப்பட்டுள்ளது. என்ன ஒரு Coincidence, ஆனால் ஒன்று புரிகிறது. உனக்கு தேவையானதை நினைத்தாலே கிடைக்கும் என்பது இன்று உண்மையாகிறது. சோற்றுக் கணக்கு என்ற கதையில் கூறப்படுவது போல் நான் துரதிருஷ்டசாலி. சுத்த சைவம். ஆனால் , கதை படிக்கும் போதெல்லாம் சுவைத்தது. இன்று பவா மூலம் கேட்கும் போது, அளவளாவிய கருணை பொங்க என் இதயம் அனுமதிக்கும் என்ற நம்பிக்கையுடன் நான்.இப்படிக்கு, கே.சுரேஷ், வழக்கறிஞர்

    • @thanikesan.balasundaram7237
      @thanikesan.balasundaram7237 4 года назад

      அந்த படம் நிறைய பேருக்கு நான் பார்க்க சொல்லுகிறேன் அருமையான படம் உணவு ஏன் சமைக்க வேண்டும் எப்படி பரிமாற வேண்டும் என்பதை உணர்த்திய படம் ... நன்றிகள்

    • @jayashreeramnath6317
      @jayashreeramnath6317 4 года назад

      What a coincidence! I was narrating the very same story to my sister two days before when I was talking to her over phone

    • @jayashreeramnath6317
      @jayashreeramnath6317 4 года назад

      I am also a pure vegetarian. But I could read the story without any grudges

  • @veegeearr9437
    @veegeearr9437 4 года назад +17

    நெகிழ்ச்சியும் கண்ணீரும் கலந்து இந்த கதையை கேட்க கேட்க மனம் இளகி விடுகிறது அண்ணன் பவா அவர்கள் கதை சொல்ல சொல்ல திருவனந்தபுரத்து சாலை வீதியில் பயணிப்பது போன்ற ஒரு உணர்வு !

    • @OTTJUNCTION-hy7bo
      @OTTJUNCTION-hy7bo 6 месяцев назад

      ஜெயமோகன் கதை Its not bavas story 29:22

  • @rajeswari3455
    @rajeswari3455 11 месяцев назад +1

    இது கதை அல்ல நிஜம் கண்கள் கலங்கியது பசியின் கொடுமையில் கொடுக்கும் உணவு தேவாமிர்தம் இந்த நிஜத்தை மிக அருமையாக கூறியதிற்குன நன்றி கனத்த கண்களுடன்

  • @balaaa4u
    @balaaa4u 4 года назад +5

    "சோற்றுக் கணக்கு" இதை முதன் முதலில் படித்த பிறகு மீண்டும் இரண்டாம் முறை எனக்கு படிக்க தோன்றவில்லை. காரணம் முதன் முறை படித்த போதே கண் கலங்கி, என் மனதில் நீண்ட தாக்கத்தை உண்டு பண்ணியது. ஒரு வாரம் வரை அந்த தாக்கம் நீடித்தது. மீண்டும் படித்தால் அது போன்ற தாக்கம் மீண்டும் ஏற்படாமல் மிகச் சாதாரணமாக இருந்துவிடுமோ என்று நான் மீண்டும் படித்ததில்லை. அது உங்கள் குரலில் கேட்பதற்க்காத் தானோ என்னவோ? அருமையான கதை சொல்லி நீங்கள்.....

  • @porchilaidhineshbabu6053
    @porchilaidhineshbabu6053 4 года назад +16

    Appa... Wonderful experience listening to u... Literally cried hearing this video.. புத்தகத்தை பிடுங்கி சென்ற மாமி மீது கூட ஏற்படும் அன்பிற்கு காரணம் தாயே வடிவான கத்தேல் சாஹிப் அவர்கள் கையால் சாப்பிட்ட உணவால் ஏற்பட்ட உணர்வாக மட்டுமே இருக்க முடியும்... வறுமையால் வேரறுக்க பட்டிருக்க வேண்டிய பல செடிகள் அவர் உணவால் செழித்து வளர்ந்து பலருக்கு நிழல் தரும் தருவாக உயர்ந்திருப்பார்கள்.... Thanks a million for ur sharings appa... Hats off to story telling and writing of Jayamohan Sir..

    • @porchilaidhineshbabu6053
      @porchilaidhineshbabu6053 3 года назад

      @Alpha Beta neraya neraya azhudiruken..... U will become more nourished human because of appa

  • @kkarthikkarthik2795
    @kkarthikkarthik2795 2 года назад +2

    ஐயா கதை சொல்லும் கதாநாயகன் நீங்கள்தான், அற்புதம், எனக்குக் கதைகள் கேட்க இன்பமே.

  • @sendhilbaluswami1844
    @sendhilbaluswami1844 6 месяцев назад +1

    செஞ்சோற்று கடன்கள் அடைத்து நன்றி தெரிவிக்கும் கதை --அருமையான பதிவு

  • @NEWDLESFOODINDUSTRIES
    @NEWDLESFOODINDUSTRIES Год назад +1

    பவா அண்ணா நான் கதை படிப்பதை காட்டிலும் கேட்பது அதிகம் பிடிக்கும் உங்களால்.....
    இந்த சோற்றுகணக்கில் கெட்டில் பாய்யை பார்க்கவேண்டும் போல் இருக்கிறது என் கண்களில் நீரோடு ❤❤❤❤❤

  • @nunthuthumi
    @nunthuthumi 4 года назад +5

    பவா அய்யா
    நீங்க சாகிப் கதாபாத்திரத்துக்கு
    மிக சரியாக பொருத்தமா இருப்பீங்க
    அறம் கதை தொகுப்பில்
    யானை டாக்டர்
    சோற்றுக்கணக்கு
    என் மனதை கலங்க வைத்த கதைகள்

  • @rajavarman73
    @rajavarman73 Год назад +1

    Baba sir.....genius...genius.....

  • @prabakaran3392
    @prabakaran3392 4 года назад +3

    பவா அண்ணா,நீங்கள் கதையை சொல்லி வந்த போது,அது ஜெயமோகனின் கதையா,அல்லது உங்களின் அனுபவத்தை சொல்கிறீர்களா என்று புரியவில்லை.காரணம் சொன்ன விதம்.கெத்தேல் சாயபு போன்ற மனிதர்களும் இதே நாட்டில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதே நம்ப முடியாத சேதியாகி விட்டது.இப்படிப்பட்ட உன்னத மனிதர்களைப் பற்றி பேசுகையில் நம் மன அசிங்கங்கள் கண்ணீரின் வழியே கரைந்து ஓடுவதை உணர முடிகிறது.வணங்குகிறேன்.நன்றிகள்.

  • @jaykay2488
    @jaykay2488 3 года назад +2

    நேற்று தான் இந்த புத்தகத்தை வாங்க எண்ணினேன். கிடைக்கவில்லை. ஒருவேளை அதை வாங்கி வாசித்திருந்தால் கூட, இந்த அளவுக்கு உணர்வு மேலிட உணர்ந்திருப்பேனா ? என்பது சந்தேகமே. 'தாயோலி' அழ அழ வச்சிட்டீயேயா ...( பலருக்கும் பலவித திட்டங்களையும், முடிவுகளையும், திருத்தங்களையும் ஏற்படுத்த செய்திருக்கும் என்றே நம்புகிறேன். அறம் ❤️ அன்பாக :-)

  • @Navasudeen
    @Navasudeen 2 года назад +6

    இந்த கதையை 15 முறை மேல் கேட்டு இருக்க பாவா ஐயா அவர்களின் உணர்வில் சொல்லும் கதை

  • @francismoto
    @francismoto 4 года назад +1

    பவா அய்யா, இம்முறை உங்கள் பேச்சில் அளவிற்கு அதிகமான உற்சாகம் தெரிகிறது. அருமையான கதை. இன்னும் சொல்லப்போனால் நான் உங்களை அந்த கெட்டெல் சாஹிப் கதாப்பாத்திரத்தில் கற்பனை செய்து கொண்டேன். சோறு போட்ட அந்த கைகளை வருநித்த விதம் சிலிர்க்க வைத்தது. எழுத்துகளின் மூலம் மறுபடியும் ,மறுபடியும் இப்படியும் சில மனிதர்கள் இருக்கின்றார்கள் என நமக்கு வெளிச்சம் போட்டு காட்டுகின்றனர். இக்கதையை படிக்க தூண்டியமைக்கு நன்றி பவா அய்யா. அன்பும் பாசமும்.

  • @lakshanapragan1663
    @lakshanapragan1663 9 месяцев назад +1

    எழுத்தாளர்.பாவா.செல்லதுறை.மேலும்.மதுராடராவல்ஸ்..டி.கே.பாலன்.சென்னை.இவர்களின்.விடயங்கள்.சொல்ல.நிறையிருக்கு.அவர்களின்.இளமைமைகாலத்தின்
    பசி.இவர்கள்.முதலநால்.பசிமுலுமையாகசாப்பிட்ட.ஓட்டல்கதைகதை.என்.மனதில்நீங்காயிடம்.பெற்றது.நானும்சிலநாட்கள்.இப்படித்தான்.சென்னையில்.இன்று.புகழுகுரியவர்கள்.இவர்கள்...ஆனால்நான்புகழப்படாதவன்

  • @LocalstarMohan777
    @LocalstarMohan777 3 года назад +3

    அய்யா கடவுளை நான் இதுவரை பார்த்தது இல்லை. என்ற வருத்தம் நீங்கிக் விட்டது ..👑 உங்களை போன்ற மனிதர்களால் என்றுமே கடவுள் இருக்கிறார்.

  • @jagadishkumar4521
    @jagadishkumar4521 Год назад +2

    மனதை உருக செய்துவிட்டிற்கள்

  • @xavierpeterwilliam6511
    @xavierpeterwilliam6511 11 месяцев назад +1

    சில நல்லவர்களால்தான்
    உலகம் வாழ்கிறது

  • @kamalarasan6090
    @kamalarasan6090 2 года назад +2

    Superb pa va 👌 👏

  • @sankardev8413
    @sankardev8413 4 года назад +8

    One of My favourite stories written by Jeyamohan sir .

  • @lablooties9823
    @lablooties9823 3 года назад +6

    காடு நான் படித்த மிக மிக ரசித்த நாவல் நல்ல மழை காலத்தில் படித்து பாருங்கள் நீங்கள் அந்த இடத்திலயே வாழ்வது போல் இருக்கும் 🙏🙏🙏🙏

  • @ongcsethu4641
    @ongcsethu4641 7 месяцев назад +1

    *#அருமையான கதை பாவா!
    தங்களுடைய செயல் மிகவு‌ம் போற்றதக்கது

  • @karimuthusasikumar7705
    @karimuthusasikumar7705 4 года назад +1

    இது வாசல் தான். இந்த கதையை படிங்க நிஜமா பசிக்கும் நிஜமா நிறையும்
    அறம் தமிழிலும் பிற மொழியில் மொழிமாற்றம் செய்யவேன்டிய புத்தகம்
    Thanks bava

  • @smv4568
    @smv4568 4 года назад +9

    Wow, this is fantastic story, already I read it before two years, I am not a reader of any kind of stories, but my brother insisted me to read it, after finishing reading this story I started to cry unknowingly. I think this story is one of the part of collection of stories written by jayamohan. Everyone must read at least this story alone if you tamil, main location is very near to my native ngl.

  • @thanikesan.balasundaram7237
    @thanikesan.balasundaram7237 4 года назад +36

    அய்யோ பவா இந்த கதையை படிச்சுட்டு இரண்டு மூன்று நாட்கள் பிரமை பிடித்து அலைந்தேன் மறுபடியும் ஞாபகப்படுத்த யதிற்கு நன்றிகள்.. வணங்கான் கதையும் சொல்லுங்கள்.. நூறு நாற்காலி

    • @prabhakaransivasubramanian5420
      @prabhakaransivasubramanian5420 4 года назад

      Enakkum

    • @sarsonsar0
      @sarsonsar0 4 года назад +2

      வணங்கான் மிகச்சிறந்த கதை.

    • @thanikesan.balasundaram7237
      @thanikesan.balasundaram7237 4 года назад +1

      @@sarsonsar0
      எனக்கு மிகவும் பிடிக்கும் மார்சல் நேசமணி யும் வருவார்

    • @malathibhaskaran5453
      @malathibhaskaran5453 3 года назад +1

      நூறு நாற்காலிகள் ரொம்ப bhadhichudu. ஆனால் எங்க office la class 1 officer....... Samugoogam.., Ella meetings la yum பணம் கரந்துடுவார். Yenna, அவங்களுக்கு ஒரு union irukku. Evlo லஞ்ச புகார் வந்தாலும் action எடுப்பதில்லை. இந்த 100 narkaaligalukku opposite ah irukke nu nenachupen. Indha பணத்தை வாங்கி யாரும் வாழ்கை la கடைசி வரை vuyarndhadha என் மனசுக்கு தோணல. ஆனால் லஞ்சம் ஒழியாது.

    • @ganganarayanan6433
      @ganganarayanan6433 Год назад

      Yes correct brother

  • @Edm310
    @Edm310 4 года назад +10

    As usual excellent narration..
    One time I wanted to tell this story "sotru kanakku" to my mom that day evening. I could not recall the name Kathel Saheb but after exercising the brain for 2 hrs I recalled the name without searching for it....
    What a story.... My mom was so emotional when I told the climax.. excellent climax..

  • @patchapulla4308
    @patchapulla4308 3 года назад

    சோற்றுக் கணக்கு கதையை இணையத்தில் இப்போது தான் ஐயா படித்தேன்.சில இடங்கள் கதையில் புரிய வில்லை. புரியவில்லை உடனே உங்கள் யூ டூ பில் சோற்றுக் கணக்கு கதை கேட்டேன் . மிகவும் சிறப்பு நீங்கள் கதை சொல்லிய விதம் எதையும் விடவில்லை.Excellent. Really you are a great story teller.

  • @azeezullahmohd9650
    @azeezullahmohd9650 3 года назад +2

    என் இளமையின் வருமையின் நினைவு 😒😒

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 3 года назад +1

    ஆமாம் பவா சார் எங்கள் திருச்சியில் சில கடைகள் உண்டு. திரு. காந்தி திரு. காமராஜர் அவர்கள் எல்லாம் சாப்பிட்ட திருவானைக்காவல் என்ற இடத்தில் பார்த்தசாரதி ஹோட்டல், சத்திரம் பேருந்து நிலையம் என்ற இடத்தில் மதுரா கபே மண்ணச்சநல்லூர் என்ற இடத்தில் பத்மா கபே என்று எனக்கே எனக்கு பிடித்த சைவ ஹோட்டல்கள் உண்டு. இவை அனைத்தும் cheap and best. இங்கு இருந்துக் கொண்டு ஷாயபு அவர்களை வணங்குகிறேன். எனக்கு அப்பா கிடையாது ஆனால் திருவனந்தபுரம் ஷாயபு அவர்களை இன்று முதல் அப்பாவாக ஏற்றுக் கொள்கிறேன். எப்பேர்ப்பட்ட மனிதர்

  • @rewindwithbalamuruganganes377
    @rewindwithbalamuruganganes377 3 года назад +1

    பல வருடம் முன்பு படித்து இருக்கிறேன்
    மீண்டும் உங்கள் குரலில் கேட்டதும் மகிழ்ச்சி பாவா ஜீ

  • @yaavarumkeleer
    @yaavarumkeleer 3 месяца назад

    ஜெயமோகன் மாபெரும் எழுத்தாளர். சோற்றுக் கணக்கு ஒரு கதை போதும் ஜெயமோகனின் திறமையை அறிய.

  • @vethaiyabalasubramanian
    @vethaiyabalasubramanian Год назад +1

    I heard this story with tears in my eyes. I was brought up by my mother under very poor and difficult conditions. Such a touching story with excellent narration.thank you Mr. Bava.

  • @KS-wj4bc
    @KS-wj4bc 3 года назад +2

    ஜெயமோகனுக்கு கிடைத்த ஒரு இறை தூதன் நீங்கள்.

  • @sathyatalks2943
    @sathyatalks2943 4 года назад

    நான் வெளியே எல்லார் பார்வைக்கும் முரடன், ஒட்டாதவன் அன்பில்லாதவன், அப்டி நடந்துக்குறேன், உள்ளுக்குள்ள நான் ரொம்ப. Sensitive ஒரு weak character, நான் ரொம்ப முரடனாவே இருக்கனும்னு தான் நினைக்கிறேன், நான் ஒரு sensitively weak இருக்கற ஆளுனு காட்டவே கூடாதுனு இருக்கேன், நீங்க தேர்ந்தெடுத்து சொல்ற கதைகள் என்னோட முயற்சிய உடைச்சிடுது, am getting more weak at the end of your story,

  • @arunkerr13
    @arunkerr13 4 года назад +4

    இந்த கதையை நான் கண்ணீருடன் படித்த நாள் நினைவுக்கு வருகிறது

  • @kregalatchoumyragava200
    @kregalatchoumyragava200 4 месяца назад

    Super sir, in this story touching my heart thank u so much sir.

  • @arunthathiravishankar2838
    @arunthathiravishankar2838 4 года назад

    அருமை பவா. உங்கள் பேச்சை கேட்ட பிறகுதான் அறம் புத்தகத்தை வாங்கினேன். சோற்றுகணக்கும், யானை டாக்டரும் படிக்கும் போது உங்கள் குரல் தான் காதில் ஒலித்தது. என் மகனும் உங்கள் பேச்சை கேட்டான். நன்றி பவா.

  • @rajeswarysubramonian1319
    @rajeswarysubramonian1319 Год назад +5

    சோற்றுக் கணக்கு கதை கேட்கும் போது என்னை அறியாமல் இதயம் கனத்து கண்களில் கண்ணீர் பெருகியது...

  • @ilailaya3414
    @ilailaya3414 4 года назад +1

    பசியை பற்றி பேசினாலே எனக்கு அழுகை வரும் ஐயா.
    இந்த கதையை படித்து பலமுறை அழுதிருக்கிறேன்.

  • @nandhininandhu672
    @nandhininandhu672 4 года назад +3

    I have no words 😶 Just teardrops in my eyes bhava it took me back to my oldd days oru vealai kari sooru😶🥺

  • @user-wu3id9fs3j
    @user-wu3id9fs3j 3 года назад

    வணக்கம் ஐயா உங்களுடைய சேற்று கணக்கு எனக்கு பிடித்து இருக்கு.நீங்கள் கதை சொல்லி நான் அதை கேட்ட போது என்னை என் தாய் கதை கூறி தூங்க வைத்தது ஞாபகம் வந்தது என் சிறு வயது ஞாபகங்களை எனக்கு தந்ததற்கு நன்றி ஐயா

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 Год назад

    இது போன்ற சம்பவம் என் வாழ்க்கையிலும் நடந்துள்ளது . கொடிது கொடிது வறுமை கொடிது
    அதனினும் கொடிது இளமையில் வறுமை .

  • @balajiraja4899
    @balajiraja4899 3 года назад +1

    Again tears

  • @saravanankr6289
    @saravanankr6289 4 года назад +1

    கதைகளில் வரும் நிழல்கள் உங்கள் சொல்லால் நிஜமாகிறது. நன்றி பவா சார்

  • @panneerselvamnamasivayam2315
    @panneerselvamnamasivayam2315 4 года назад +5

    Extra ordinary story and wonderful narration ,

  • @pandip6805
    @pandip6805 4 года назад

    Bava sir.
    Wonderful. நான் ஏற்கனவே மூன்று முறை படித்து இந்த கதை என் கல்லூரி நாட்களில் ஏற்பட்ட நான் அனுபவித்து நினைவு படுத்தியது. ஆனால் நான் படித்ததை விட தங்கள் கதை சொல்லுய வீதம் மீண்டும் என கண்களில் கண்ணீர் துளிகள் வந்துகொண்டே உள்ளது. இந்த கதையை தோழர் ஜீவா பாராட்டியுள்ளார். அதன் பிறகு நான் கதையை படித்தேன்.
    நன்றி பாவா அய்யா.

  • @subramoniankumarapillai9514
    @subramoniankumarapillai9514 3 года назад

    கதைகள் பல படித்திருந்தாலும்,கதைகளை நீங்கள் சொல்லி கேட்டது மகிழ்ச்சியான அனுபவம். நன்றி பவா.

  • @chinnasamy1481
    @chinnasamy1481 4 года назад +1

    கண்ணீர்விட்டுக் கேட்டேன் ஐயா.....
    உணர்ச்சிபபொங்க .....உணர்வுப்பூர்வமாக கதை சொன்னீங்க....நன்றிகள் பல....

  • @parithikarkki218
    @parithikarkki218 4 года назад +1

    ரொம்ப நாட்களுக்கு முன் படித்தது,மீண்டும் உங்கள் குரலில் அருமை!

  • @ersathishkumarannamalai1616
    @ersathishkumarannamalai1616 4 года назад

    பவா, இதயம் கணத்த இதயம் உள்ளது !உண்மையில் நீங்கள் ஒரு அருமையான கதைசொல்லி!!! நன்றி ஐயா!

  • @prawintulsi
    @prawintulsi 4 года назад +19

    கெத்தெல் சாகிபின் மயிர் அடர்ந்த கைகளின் கருணை தாயின் முலைக்கு ஒப்பானது. முதல்முறை படித்தபோது கண்கள் பனித்த அதே வரிகள் ஒலிவடிவில் கேட்கும் போதும் கண்ணீர் சொரிய தவறவில்லை.

  • @noolsaalaram-7355
    @noolsaalaram-7355 4 года назад +10

    I felt like eating in the restaurant, though I am a vegetarian. Not for food was free, but the way it is described kindled me.

  • @sureshramalingam362
    @sureshramalingam362 2 года назад +1

    கதை கேட்கும் போது கண்ணீர் வருகின்றது....

  • @marimathivanan6874
    @marimathivanan6874 3 года назад

    கண்கள் குளம் ஆகிவிட்டது. இந்த கதை கேட்டதும். இதுபோல் நான் கேட்டது இல்லை என் வாழ்வில். மிக்க நன்றி ஐயா.

  • @shannantha
    @shannantha 4 года назад

    படிக்கும் போது வந்த அழுகை பார்க்கும் போதும் வருகிறது. அடுத்தவங்க வீட்டில் தங்கி படிப்பது போன்ற அனுபவம் பெரும்பாலோனோருக்கு வாய்க்கப்பட்டிருக்கும். எதோ தங்கி படிக்கும் போது அவர்கள் மேல் உருவாகிற வெறுப்பு பின்பு மாறிவிடும்.. சாப்பிட வழி இல்லாம படிப்பதல்லாம் ஒரு விதமான அனுபவம்.. எதோ படிப்பு மட்டும்தான் எல்லாத்தையும் மாற்றியது.. நன்றி பவா Sir..

  • @anantha47410
    @anantha47410 4 года назад

    அறம் சிறு கதையை விட எனக்கென்னவோ இந்தக் கதைதான் உயர்ந்ததாக நான் உணர்ந்தேன். இதைப் பற்றி வேறொரு பதிவிலும் குறிப்பிட்டுள்ளேன். மனதின் உணர்ச்சி மேலீட்டால், விம்மல்களுடனும், தொண்டை அடைப்புகளுடனும் கதையை முதல் தடவை படித்து முடித்தேன்.

  • @prabhuloganathan4489
    @prabhuloganathan4489 4 года назад +6

    அய்யா. இந்த கதையை கேட்டதும் எனது கண்களில் கண்ணீர் 😪

  • @senthilkumar6515
    @senthilkumar6515 2 года назад

    ஐயா"உங்கள் இனிய அன்பான பேச்சு மிக அருமை ஐயா நன்றி உங்கள் பணி தொடரனும்

  • @shanmugam7455
    @shanmugam7455 4 года назад

    பாவா எனது வயிறும் மனதும் நிறைந்து போனது என்றுமே நீங்கள் தோ்ந்தெடுதக்கும் கதைகள் கதைகள்மட்டுமல்ல.

  • @gochordsdesigner5244
    @gochordsdesigner5244 3 года назад +2

    When I started listening to your personal story, my eyes started to naturally shed tears :-)

  • @nicecharles8935
    @nicecharles8935 Год назад

    Excellent Bava sir so sweet your voice

  • @nlakshmibalasubramanian9346
    @nlakshmibalasubramanian9346 4 года назад

    உங்கள் வறுமை நிறைந்த இளமைக் காலம் என் கண்களில் நீர் வரவழைத்தது .மிக அருமையான பதிவு.நன்றி சார்

  • @maheshkumar7
    @maheshkumar7 4 года назад +4

    பவா அண்ணா, அழுகையும் ஆனந்தமும் ஒன்றாக என் கண்ணில் நீர்த்துளிகளாய். One of the best story from your voice. Literally lived in saalai street. Thanks a lot.

  • @vvignesh7523
    @vvignesh7523 4 года назад +34

    Ustad hotel பாடத்தையும் இந்த கதையோடு சேர்த்தே பார்க்க தோணுகிறது

    • @sudalaiventhan
      @sudalaiventhan 3 года назад +3

      உண்மை தான். கெத்தேல் சாஹிப் எப்படி இருப்பார் ன்னு கற்பனை பண்ணா, உஸ்தாத் ஹோட்டல் திலகன் தான் மனகண்ணின் முன்னால நிற்கிறார்.

    • @vidhyasagarv1167
      @vidhyasagarv1167 3 года назад +2

      Kareem ikka...🤗❣️💯

    • @kathiresansankarsubramania116
      @kathiresansankarsubramania116 3 года назад +1

      Yes !!

  • @kathirsengeni4220
    @kathirsengeni4220 4 года назад +2

    Thanks appa about your life experience

  • @anantha47410
    @anantha47410 4 года назад

    அற்புதம் பவா சார். உங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.இந்தக் கதையை 3,4 முறைகள் படித்திருக்கிறேன் தன்னைப் பற்றித்தான் இந்தக் கதையை ஜெயமோகன் எழுதியிருக்கிறார் என்று நம்பி வந்தேன். இப்போது நீங்களாக இருக்குமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இந்தக் கதையில் குறிப்பிடப் படும் கெத்தேல் சாகிபின் வசவு வார்த்தைகள் உட்பட நுட்பமான எல்லா சம்பவங்களையும ஒன்று விடாமல் எப்படித்தான் இவ்வளவு நினைவாற்றலுடன் சொல்லி முடித்தீர்களோ தெரியவில்லை. நீங்கள் ஒரு கிரேட் மேன் சார்.

  • @puduhari1
    @puduhari1 4 года назад +2

    You made me cry bava anna....I thought you were born into a rich agri family. You story shows there is more to humanity than just money and ambition.

    • @puduhari1
      @puduhari1 4 года назад

      Oh boy, I thought this was your story....What a powerful story telling! I remember you saying you did BCom....even then until the end (when you showed the book pages) i believed this was your story.

  • @ashnas8063
    @ashnas8063 Год назад +1

    Magnetic voice bava..roughly i heard this story 50 times...

  • @k.s.sabarinathan4953
    @k.s.sabarinathan4953 4 года назад +2

    Great story , tears

  • @Sakthiiiii
    @Sakthiiiii Год назад

    Thanks for Sharing ❤

  • @prabukcspl4309
    @prabukcspl4309 4 года назад +1

    நீங்கள் கதை சொல்லும் விதம் அருமை

  • @santhakumariramasamy8036
    @santhakumariramasamy8036 8 месяцев назад

    Very nice story.

  • @shanawazethiris5812
    @shanawazethiris5812 4 месяца назад

    Great man Congrates sir

  • @mathiazhaganmunusamy3837
    @mathiazhaganmunusamy3837 4 года назад +8

    கஞ்சி ஊற்றிய கணக்கு ரூ.48. ஆனால் கறியும் மீனும் தந்த கணக்குக்கு பதினாராயிரம் ரூபாய் உண்டியலில் போட்டு அடைத்துவிடலாம். ஆனால் கஞ்சியே ஆனாலும் அது உறவு என்பதால் உறவாலேயேதான் அடைக்கமுடியும். தொகையால் அல்ல;
    ராமலக்ஷ்மி மனைவியானாள்.
    நல்ல கதையாடல். பவாவிற்கு நன்றி!!

  • @HYMACOOKING_1986
    @HYMACOOKING_1986 2 года назад +1

    Loves to hear again n again

  • @user-lc8yy1oo3x
    @user-lc8yy1oo3x 3 года назад

    ஐயா நீங்கள் சொல்லும் போது எனது இளமைகால வறுமை கண்முன் நின்றது

  • @ashaprakash8145
    @ashaprakash8145 4 года назад +1

    I have read this story long back. It brought tears to my eyes. Very beautiful story.

  • @ssaajjedd123sajeeth6
    @ssaajjedd123sajeeth6 3 года назад

    உங்கள் கதைகள் தான் இப்போதைய அன்னம் எனக்கு....

  • @user-qv2it3ew7l
    @user-qv2it3ew7l 4 года назад

    மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்பதற்கு சாட்சிகளாய் சிலர் சாகிப் மட்டுமல்ல நீங்களும் தான்

  • @shampathperiyathambi102
    @shampathperiyathambi102 Месяц назад

    தங்களை கதை கதையெல்லாம் வாழ்க்கை

  • @ayyappanbharathi1174
    @ayyappanbharathi1174 3 года назад

    நிகழ்வை இவ்வளவு அழகாகவும் அற்புதமாகவும் மனம் நெகிழ வைக்க உங்களால் மட்டுமே முடியும்

  • @georgefelixvedaraja3675
    @georgefelixvedaraja3675 4 года назад +3

    "Bava sir" i love you....

  • @mohanvasu729
    @mohanvasu729 2 года назад

    அருமை சார்.
    உங்களின் விவரிப்பு பிரமிக்க வைக்குது.
    பாயின் பாசம் அதிசயபடுத்துதூ.

  • @Vigneshsivalingam.
    @Vigneshsivalingam. 7 месяцев назад

    Thanks sir

  • @pandian3731
    @pandian3731 3 года назад

    Kutrauniarvin Vadivam indha Kathai....
    Nandri Bava

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 4 года назад

    கதை கேட்க வாங்க | ஜெயமோகன் - அறம் | சோற்றுக்கணக்கு | பவா செல்லதுரை | Bava Chelladurai - அருமையான உரை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு பவா செல்லதுரை

    • @mageshwarip6604
      @mageshwarip6604 2 месяца назад +1

      என்னுடைய கதையை அப்படியே,
      தோலுரித்து காட்டி
      வாழ்வின் ஞாபகங்கள் மறக்க முடியாதது.
      கண்களில் கண்ணீருடன்,
      நன்றி ஐயா
      .

  • @logavarsheni.sx-a8513
    @logavarsheni.sx-a8513 4 года назад +2

    Such a nice story

  • @muthup3648
    @muthup3648 4 года назад +1

    அறம். சோற்றுக்கணக்கு படிக்க வேண்டிய புத்தகம்

  • @bharathivendhan
    @bharathivendhan 4 года назад

    பவா உங்கள் குரலில் கதை கேட்கும் போது...இல்லை இல்லை உங்கள் குரலில் வாழ்க்கையை உணர்ந்தேன்